Monday, December 25, 2006

146. என்னம்மா கண்ணு.. ஆரம்பமாயாச்சு..


நேற்று திருவிளையாடல் ஆரம்பத்தை பார்த்தேன்.

படத்தை பற்றி விமர்சனம் எழுதப்போவதில்லை இம்முறை.. மாறாக ஒரு குட்டி பதிவுதான்.

விஜய், சத்யராஜ் மற்றும் சிம்பு பிரபல நடிகர்களின் சிறந்த படங்களின் ரீமேக் படங்களில் நடிக்க ஆசைன்னு வெளிப்படுத்திய இன்னேரத்தில்... அஜித் ஒரு படி மேலே போய் ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக் படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டார். ஆனால், இங்கு தனுஷ் சத்தம் இல்லாமலேயே மிஸ்டர் பாரத்தின் ரீமேக்கில் நடித்தே விட்டாருன்னுதான் சொல்லவேண்டும்.

இதை உருதிப்படுத்துவதைப்போல் என்னம்மா கண்ணு ரீமேக் பாடலும் அமைந்திருக்கிறது.

வில்லனிடமிருந்தே பணம் வாங்கி.. அவர் செய்யும் வியாபாரத்தையே துவக்கி.. குறுகிய காலத்தில் அவருக்கே போட்டியாக வந்து.. அவரை நிம்மதியாகவே விடாமல்.. டென்ஷனாக்கி.. கடைசியில் போட்டியின் காரணத்தை அறிந்து திருந்துவதுதான்.. இந்தக் கால மிஸ்டர் பாரத்தாக திரு என்கிற தனுஷ்.

திருவின் விளையாட்டின் ஆரம்பத்தைதான் திருவிளையாடல் ஆரம்பம்ன்னு வைத்திருக்கிறார்கள். இதில் குரு என்கிற பிரகாஷ்ராஜ் சத்யராஜைபோல் கெட்டவர் இல்லை. தன் தங்கையின் மேல் அதிகப்படியான பாசத்தை வைத்திருக்கும் அண்ணன் இவர். இவரின் மேல் தப்பே இல்லை.

ஷ்ரியாவுக்கு பாடல்களில் ஆடுவதும் படத்தின் முதல் பாதியின் காதல் காட்சியில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பாடல்களை வித்தியாசமாக படம் பிடித்துள்ளனர்.

இக்காலக் கட்டத்தில் வெளியான ஈ மற்றும் வெயில் போன்ற கனமான படங்களின் தாக்கத்திலிருந்து மீள இப்படிப் பட்ட காமெடி படம் நமக்கு நல்ல என்டெர்டைனாக அமையும். நீங்களும் படத்தை பார்த்து ரசியுங்கள்.
மட மடவென்று இரண்டு நாளில் 7 பதிவுகளை போட்டாச்சு. இன்னொரு 7 நாள் ப்ளாக்குக்கு வர முடியாத சூல்நிலை எனக்கு திரும்பவும் வரலாம். அப்படி வரமுடிந்தால், புதிய பதிவு கண்டிப்பாக போடுவேன். இல்லையேல், பதிவுக்கு நீங்களும் நானும் வேய்ட்தான் பண்ணனும்.. என்னை மன்னியுங்கள்.

20 Comments:

said...

பதிவுகள் போடும் வேகத்தில் என்னையும் மிஞ்சிட்டீங்க மை பிரண்ட்.. நான் இத்தனை பதிவுகளை எதிர்பார்க்கவே இல்லை பிரண்ட்

said...

நான் இன்னும் படத்தை பார்க்க வில்லை..ஆனால் நல்ல பொழுதுபோக்கு படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை பிரண்ட்

said...

//
மு.கார்த்திகேயன் said...
பதிவுகள் போடும் வேகத்தில் என்னையும் மிஞ்சிட்டீங்க மை பிரண்ட்.. நான் இத்தனை பதிவுகளை எதிர்பார்க்கவே இல்லை //

எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான் கார்த்திக். ஒரு வாரத்துக்கு ப்ளாக்குக்கு வர முடியாமல் போகலாம். அதான்.. ;-)

said...

//மு.கார்த்திகேயன் said...
நான் இன்னும் படத்தை பார்க்க வில்லை..
//

அப்போ படத்தை பார்த்துட்டு வந்து ஒன்னொரு கமெண்ட்ஸ் போட்டுடுங்க.. :-)

said...

படம் பாத்துட்டேங்க மை பிரண்ட்.. படம் நல்ல பொழுதுபோக்கு அம்சம் நிரைஞ்சதா இருக்கு.. பிரகாஷ்ராஜும் தனுஷும் பேசிக்கொள்ளும் வசனங்கள் நல்லா இருக்கும்..

Anonymous said...

என் தோழி,

முந்தா நாள்தான் படம் பார்த்தேன். சுமாரான படம்தான் இல்லையா. எனக்கு படத்தில ரசிக்கிற மாதிரி இருந்த ஒரே விஷயம் தனுஷின் தம்பிதான். சரி க்யூட்டா இருக்கான்ல.

said...

//மு.கார்த்திகேயன் said...
படம் பாத்துட்டேங்க மை பிரண்ட்.. படம் நல்ல பொழுதுபோக்கு அம்சம் நிரைஞ்சதா இருக்கு.. பிரகாஷ்ராஜும் தனுஷும் பேசிக்கொள்ளும் வசனங்கள் நல்லா இருக்கும்.. //

இருந்தும் தனுஷ் கத்தி கத்தி பேசுகது எனக்கு பிடிக்கவில்லை கார்த்திக். :-(

said...

விமர்சனம் செய்யப் போவதில்லைன்னு விமர்சனம் போட்டிருக்கீங்க...

said...

// நான் said...
என் தோழி,

முந்தா நாள்தான் படம் பார்த்தேன். சுமாரான படம்தான் இல்லையா. எனக்கு படத்தில ரசிக்கிற மாதிரி இருந்த ஒரே விஷயம் தனுஷின் தம்பிதான். சரி க்யூட்டா இருக்கான்ல. //

ஆமாங்க.. குண்டா இருந்தாலும் அவன் கியூட்டா இருக்கான். இவன் சைல்ட் ஆர்டிஸ்ட்-ஆ ஒரு ரவுண்டு வருவான் என்று எதிர்ப்பார்க்கலாம்.. ;-)

said...

// ஜி said...
விமர்சனம் செய்யப் போவதில்லைன்னு விமர்சனம் போட்டிருக்கீங்க... //

ஹா ஹா.. என் விமர்சனம் இவ்வளவு சுருக்கமா எழுதமாட்டேன் ஜி. நிறைய விசயத்தை அலச வில்லை. ;-)

Anonymous said...

Tnx for the comments my friend ;)

said...

//C.M.HANIFF said...
Tnx for the comments my friend ;) //

ungke commentskkum Nandri Haniff

said...

//மட மடவென்று இரண்டு நாளில் 7 பதிவுகளை போட்டாச்சு. இன்னொரு 7 நாள் ப்ளாக்குக்கு வர முடியாத சூல்நிலை எனக்கு திரும்பவும் வரலாம். //

ஏங்க ஏதாவது வேண்டுதலா?:-))

கூடவே "சூல்நிலை" என்ற சொற்பிழையை "சூழ்நிலை" என்று மாற்றிவிடுங்க. சூல்நிலை என்பதற்கு ஆபாச அர்த்தம் கற்பிக்க தனுஷே வந்துடுவார்.

said...

//மட மடவென்று இரண்டு நாளில் 7 பதிவுகளை போட்டாச்சு. //

ஒரேயடியா ஏழு பதிவு போடனும்னு பத்து மலை முருகனை வேண்டினீங்களா? அப்படியென்ன வேண்டுதல்?

//இன்னொரு 7 நாள் ப்ளாக்குக்கு வர முடியாத சூல்நிலை எனக்கு திரும்பவும் வரலாம்.//

சூல்நிலை என்ற சொற்பிழையை சூழ்நிலை என்று மாற்றவும்.
இல்லாங்காட்டி சூல்நிலைக்கு தனுஷே வந்து ஆபாச அர்த்தம் கற்பிப்பார்.

said...

சாரிங்க பிரபா..

டைம் இல்லாத காரணத்தால் நீங்கள் எழுதிய கமெண்ட்ஸ் அப்ரூவ் பண்ண முடியவில்லை.

said...

//ஒரேயடியா ஏழு பதிவு போடனும்னு பத்து மலை முருகனை வேண்டினீங்களா? அப்படியென்ன வேண்டுதல்?//

எழுதும் போது மட்டுமில்லை.. எது செய்தாலும் கடவுளை மனதில் நினைச்சுட்டு செய்யுறதுதான் என் வழக்கம். அதுவும் நான் பத்துமலை தமிழ் பள்ளியில் படித்ததால், முருகன் என் அக்கத்திலேயே இருந்த ஃபீலிங். அதனால், மற்றவர்களை விட முருகன் மேலும், அவர் தந்தை சிவன் மேலும் பக்தி கொஞ்சம் அதிகம்தான்..

said...

//சூல்நிலை என்ற சொற்பிழையை சூழ்நிலை என்று மாற்றவும்.
இல்லாங்காட்டி சூல்நிலைக்கு தனுஷே வந்து ஆபாச அர்த்தம் கற்பிப்பார். //

எனக்கு ரெண்டு கமெண்ட்ஸ் போட்டதற்க்கும், என்னால் உடனே அப்ரூவ் பண்ண முடியாமல் போனதுக்கும்தான், உங்களுக்காக 3 பதில் கமெண்ட்ஸ் போட்டிருக்கிறேந்.

தமிழ் பள்ளியில் 6 வருடம் படித்தேன். அதன் பிறகு 10 வருடத்துக்கு தமிழில் நான் பேசினாலும், படித்தாலும்.. எழுத சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. நண்பர்களும் தமிழ் படித்தவர்கள் இல்லை. தமிழை விரும்பிய நான் ஒரு கட்டத்தில், தமிழில் என் இடிவெளி அதிகமாவதை உணர்ந்தேன்.

அதை சரி செய்ய என்ன வழி என்று யோசிக்கும்போதுதான், தமிழில் ப்ளாக் எழுதுவதை எதேச்சையாக பார்த்தேன். எதுவும் பழக்கதில் இல்லையென்றால் சுலபமாக மறந்துவிடுவோமே! அதனால்தான் என் தமிழில் நிறைய பிழைகள். இன்னொன்று தமிzஇல் தைப் செய்யும்போது typing error வேறு.

உங்களைபோல் உள்ளவர்கள்தான் அடியேனுக்கு வழிக்காட்டியாய் இருந்து என் எழுத்து பிழைக்கும், என்னும் சிறப்பாக எழுதவும் உதவவேண்டும்.

இன்று கற்று கொண்டது "சூழ்நிலை".. இதுபோல், அப்பப்போது அடியேனை குட்டி திருத்தவும். :-)

said...

ஸ்னோ ஃப்லேக்:

உங்கள் பின்னூட்டத்தை பிரசுரிக்க வேண்டாம் ன்று கேட்டுக்கொண்டதால், அதை பிரசுரிக்கவில்லை..

ஆனாலும் என் ப்ளாகை தேடி வந்து படித்து ஆதரவு கொடுத்து வாழ்த்தியதுக்கு நன்றி. :-) உங்களுக்கு என் னிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ;-)

said...

தங்களுக்கும் தங்கள் உற்றார் உறவினருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
பிரபாவின் பின்னூட்டத்தில் தங்கள் தமிழார்வம் கண்டேன்.உண்மையில் பெருமையாக இருக்கிறது.சிறு தவறுகள் தான் உள்ளன .அவையும் அனுபவத்திலும்;பயிற்சியிலும் சரியாகிவிடும். பதிவிடும் போது என் மின் அஞ்சலுக்கு ஓர் அறிவித்தல் போடவும். மூளைக்குப் பரீட்சை தவிர ஏனையவற்றை வாசிப்பேன்.
நம் நட்ட்புத் தொடரட்டும்.
யோகன் பாரிஸ்

said...

// தங்களுக்கும் தங்கள் உற்றார் உறவினருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
பிரபாவின் பின்னூட்டத்தில் தங்கள் தமிழார்வம் கண்டேன்.உண்மையில் பெருமையாக இருக்கிறது.சிறு தவறுகள் தான் உள்ளன .அவையும் அனுபவத்திலும்;பயிற்சியிலும் சரியாகிவிடும். பதிவிடும் போது என் மின் அஞ்சலுக்கு ஓர் அறிவித்தல் போடவும். மூளைக்குப் பரீட்சை தவிர ஏனையவற்றை வாசிப்பேன்.
நம் நட்ட்புத் தொடரட்டும்.
யோகன் பாரிஸ் //

நன்றி யோகன். உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சரிங்க. பதிவை எழுதும்போது உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். நீங்கள் உங்கள் பின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்புங்கள். என் மின்னஞ்சல் முகவரி என்னுடைய ப்ரோஃபைலில் இருக்கிறது. ;-)