Thursday, August 28, 2008

நல்ல படங்களை நாலு பேரு பார்க்கணும்ல. அதுக்குதான்!

ரொம்ப நாள் ஆச்சு நல்ல படம் பார்த்து! ஆனால், இன்று மூன்று படம்! நல்ல படங்களாய் பார்த்துவிட்ட திருப்தி. மூன்றும் மூன்று மொழி; வெவ்வேறு கருக்களை ஏந்தி நிற்க்கின்றன.

1- படம்: தாரே ஜமீன் பர்
இயக்கம்: அமீர்கான்
நடிகர்கள்: டர்ஷீல் சஃபாரி, அமீர்கான், தனய் சேடா, திஸ்கா சோப்ரா, விபின் ஷர்மா
இசை: ஷங்கர் - எஹ்சான் - லோய்


மூன்றாம் வகுப்பையே இரண்டு முறை படித்து திணறுகிறான் சிறுவன் இஷான். Dyslexia என்ற நோயால் புத்தகத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும், எண்களும் அவன் முன் நடனமாடுகின்றன. ஆனாலும் சிறுவனுக்கு அபார கற்பனாசக்தி இருக்கிறது. அழகாய், அறிவாய் படம் வரைகிறான். ஒவ்வொரு ஓவியத்திலும் உயிர் இருக்கின்றது. நேரம் எடுத்து மெதுவாய், பதறாமல் செய்ய வேண்டிய காரியம் நம்மில் எத்தனை பேரால் செய்ய முடியும்? ஆனால், இஷான் செய்கிறான். தன்னுடைய இயலாமையை மறைக்க இஷான் ஒவ்வொரு விஷயத்திலும் பிடிவாதம் பிடிக்கிறான். நடுத்தர குடும்பத்தின் பெற்றோர் (கண்டிப்பான அப்பா, அன்பான அம்மா, பாசமுள்ள அண்ணன்) தன் மகனின் நிலையை புரிந்துகொள்ள முடியாமல் பையனுக்கு டிசிப்ளின் முக்கியம் என்று நினைத்து போர்டிங் பள்ளியில் சேர்க்கின்றனர். இந்த நிலமையில்தான் தற்காலிக ஆசிரியராய் அப்பள்ளிக்கு வரும் அமீர்கான் இஷானை சந்திக்கிறார். இஷானின் நிலையை கண்டு அவன் பெற்றோரை சந்திக்கிறார். இஷானின் இன்னிலையின் நிஜ காரணத்தை கண்டறிந்து அவன் பெற்றோரிடமும் விளக்குகிறார். சிறுவன் மேல் அதிக கவனத்தை செலுத்தி ஒவ்வொன்றிலும் அதி சிரத்தை எடுத்து சொல்லிக்கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவனுள் உள்ளும் திறமை ஒரு பிரமிக்கவைக்கும் திறமை என்று வெளியுலகுக்கு (முக்கியமாக இஷானுக்கே) புரியவைக்கிறார். சிறுவனின் தாழ்வு மனப்பான்மையை போக்குகிறார்.

சிறுவன் இஷானின் நடிப்பில் இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பல இளம் கதாநாயகர்களிடம் கூட இல்லாத திறமை தெரிகிறது. படம் முழுக்க இவனையே சுற்றி வருவதால் இவனுடைய ஒவ்வொரு அசைவையும் நன்று கவனிக்க முடிகிறது. மற்ற கதாப்பாத்திரங்களும் பொருத்தமாய் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஓவர் ஆக்டிங்கோ, அல்லது இது ஒரு நடிப்பு என்று தெரியாதவாறு படு இயல்பாக இருக்கின்றது. அமீரின் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். வாழ்த்துக்கள் அமீர்! ஹீரோ ஒரு படத்துக்கு இயக்குனரானால் பெரும்பாலுமே அந்த படம் முழுக்க அவரது ஹீரோயிஸம்தான் மேலோங்கும். ஆனால், இதில் அமீர் மற்றவர்களைப்போல் ஒரு துணை நடிகராய் மட்டுமே வந்து போகிறார். இந்த படம் தமிழில் வால் நட்சத்திரம் என்று டப் ஆகப்போகிறது. கண்டிப்பாக சிறுவர்களும், முக்கியமாக பெற்றோர்களும் பார்க்க வேண்டிய அருமையான படம்.

2- படம்: ஹேப்பி டேய்ஸ்
இயக்கம்: சேகர் கம்முல்லா
நடிகர்கள்: வருண் சந்தேஷ், ராஹுல், நிகில், வம்சி கிருஷ்ணா, தாமன்னா, காயத்ரி ராவ், சோனியா, மோனாலி சவ்திரி
இசை: கிஷோர் சௌக்ஸி




ரொம்ப நாளாய் பார்க்க வேண்டும் என நினைத்த படம். ரெண்டு நாள் முன்புதான் சப்டைட்டிலுடன் படம் கையில் சிக்கியது. நாம் நிறைய நட்பு சம்பத்தப்பட்ட படங்களும், கல்லூரி வாழ்க்கை சம்பந்தப்பட்ட படங்களும் பார்த்திருப்போம். ஆனால், இதுவும் கண்டிப்பாக நாம் பார்த்து ரசிக்கும் படங்களின் வரிசையில் சேறும். படம் கல்லூரி அட்மிஷன் நாளில் ஆரம்பித்து கல்லூரி கடைசி நாளில் நண்பர்களின் பிரிவுடன் முடிகிறது. படத்தில் ஒரு சின்ன குறை என்னவென்றால் நண்பர்கள் கூட்டணியில் கடைசியில் அனைவரும் ஆளுக்கு ஒரு ஜோடியாய் முடிவதுதான். ஹீரோ சந்து - ஹீரோயின் மது, ராஜேஷ் - அப்பு, அர்ஜூன் - ஷ்ராவணி, ஷங்கர் - சங்கீதான்னு நண்பர்களுக்குள்ளேயே காதல் ஜோடிகளாகிக்கொண்டனர். நடுவில் ஒரு ஜோடிக்கு ஊடலென்றால் அந்த கேப்பை ஃபில் அப் பண்ணுவதுக்கு எவனாவது வந்து விடுகிறான். ஹ்ம்.. இது மட்டும்தான் கொஞ்சம் இடிக்குது. மற்றப்படி படம் அருமை. கல்லூரி நண்பர்களுடன் இந்த படத்தை பாருங்கள். அதன் ஆழம் அனுபவிப்பீர்கள்.

படத்தில் எனக்கு பிடித்த கேரக்டர் அர்ஜூன் @ டைசன். இண்ட்ரோ காட்சியிலேயே பையன் என்னமோ பண்ண போறான்னு தோணுச்சு. படம் முழுக்க ஏதாவது இண்ட்ரெஸ்டிங்கா செய்துக்கொண்டே இருக்கிறார். அவருடைய காதலும் அவர் ஷ்ராவணியை துரத்துவதும் நன்றாய் இருக்கின்றது. முக்கியமாய் ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் என எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் அர்ஜூன். ஹீரோ சந்து @ வருண் சந்தேஷ் கூட அந்தளவுக்கு பிரகாசிக்கவில்லை (இவர் சித்தார்த் க்லோன் என்பதால்தான் நான் இப்படி சொல்கிறேன் என்று யாரும் தப்பாய் நினைக்கப்படாது. படம் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் ;-)). அப்புறம் தாமன்னா. கல்லூரி படத்திலே பிரகாசித்த அளவு இதில் இல்லை என்றே சொல்லணும். பாடல்கள் அருமையாக இருக்கின்றது. அரேரே அரேரே, ஹேப்பி டேய்ஸ்,ஜில் ஜில் ஜிங்கா, ஓ மை ஃபிரண்ட் (அட என் பேருல ஒரு பாட்டு) எல்லாம் ரசிக்கும்படி இருக்கு (நாந்தான் பாடல் வரியையும் சப்டைட்டிலில் படித்தேன்ல).

3- படம்: சுப்ரமணியப்புரம்
இயக்கம்: சசிகுமார்
நடிகர்கள்: ஜெய், ஸ்வாதி, சசிகுமார், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி
இசை: ஜேம்ஸ் வஸந்த்


இந்த படத்துடைய விமர்சனம் தமிழ்மணத்துல ஏற்கனவே கிழி கிழின்னு கிழிச்சுட்டாங்க. அதனால் கதை பற்றி நான் ஒன்னும் சொல்ல விரும்பல. அதே கொலவெறி ஆயுதங்களுடன் ரத்த வெள்ளம். ஆனால், நடுநடுவில் காதல் படகு அழகாய் நீந்துகிறது. நடிகர்கள் தேர்வு மிகச்சரியாய் இருப்பதாய் எனக்கு தோன்றுகிறது. திரைக்கதையை அழகாய் தொகுத்திருக்கிறார் இயக்குனர் @ தயாரிப்பாளர் @ நடிகர் சசிகுமார். இயக்குனர் பாலா, அமீர் பேட்டர்ன் தெரிகிறது. பாடல்கள் அருமை. 80களில் நடக்கும் கதை என்பதால் படம் முழுக்க 80களில் பிரபலாமான பாடல்கள் படம் முழுக்க பிண்ணனியில் வருவது நல்ல முயற்சி.

இப்படிப்பட்ட ஒரு படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டுமென நண்பனிடம் டிக்கெட் வாங்க சொன்னால், சத்யம் என்ற மொக்கை படத்துக்கு டிக்கேட் வாங்கி வந்து, பிறகு அந்த மொக்கை படத்தை தியேட்டரில் பார்த்த கொடுமை இருக்கே! அப்பப்பா! இந்த மொக்கை படத்துக்கு நம்ம கவிதாயினி கூடிய சீக்கிரமே விமர்சனம் எழுதுவாராக.. ;-)

Thursday, August 14, 2008

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சீனா செய்த மோசடிகள்

பெய்ஜிங் 2008 நடத்திக்கொண்டிருக்கும் சீனா மற்றும் உண்மையான சீனா. நிறைய வித்தியாசம் இருக்குங்க.இந்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணியாக போறீங்களா? ஊரை பார்த்து இதுதான் சீனா என்று தப்பாக எடை போடாதீர்கள்! In China, Things are not always as they seem.

எல்லா ஒலிம்பிக் நகரங்களை போல சீனாவும் தனக்கு புது/ சூப்பரான இமேஜ் உருவாக்கிக்கொள்ள முயற்சி பண்ணியிருக்கின்றது. பிச்சைக்காரர்கள் வேறு மாநிலத்துக்கு புலம் பெயர்க்கப்பட்டார்கள். தலைநகத்தில் உள்ள தொழிற்சாலைகள் நகரத்துக்கு வெளியே இடம்பெயர்க்கட்டன (இதற்கு எவ்வளவு செலவு பண்ணியிருக்கிறார்கள் தெரியுமா?).

ஒலிம்பிக்காக ஒரு மாநிலத்தை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சீனா நாட்டையே சுத்தும் செய்தது சீனா அரசாங்கம். சாலைகளை சுத்தம் செய்து, புது சாலைகளை உருவாக்கி, பழுதடைந்து கிடந்த சமிக்ஞை விளக்குகளை சரிப்படுத்தி, சுத்தமாக துடைத்தெடுத்திருக்கின்றனர். சாலைகள் கண்ணாடிப்போல பளப்பளக்குதாம். சாலையோரங்களில் பூக்களும், தோட்டங்களும், மரங்களும் நடப்பட்டன. செடிகள் என்றால் சாதாரண செடிகள் இல்லை. எல்லா செடிகளிலும் பூக்கள் பூத்துக்குலுங்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டு முடியும்வரை இந்த செடிகளுக்கு, தோட்டங்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பேணிக்காக்க எக்கச்சக்க வேலையாட்களை நியமித்தது சீனா அரசாங்கம். எல்லா கட்டடங்களுக்கும், வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டன. பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமானப்பணிகள் அப்படியே இருந்தால் அசிங்கமாக காட்சியளிக்கும் என கருதி அவைகளுக்கும் வர்ணம் பூசி, சுத்தம் செய்தார்கள். சீனாவில் இன்னொரு பெரிய பிரச்சனை புகைமூட்டம். தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வரும் புகைமூட்டத்தினால் 10 அடி தள்ளியிருக்கும் பொருளும் மங்களாகத்தான் தெரியும் (முக்கியமாக பெய்ஜிங்கில்). செயற்கை மழை, அது இது என்று செய்து புகைமூட்டத்தை (சீனா முழுக்க) போக்கியிருக்கின்றன. ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் முன்னரே பெய்ஜிங்க் நகரில் நுழைய எந்த கார்களும் அனுமதிக்கபடவில்லை. ஆக மொத்தத்துல சீனா சீனாவாகவே இல்லை. என் மேனஜர் இரண்டு மாதத்துக்கு முன்னாடி சீனாவுக்கு போய் வந்தார். போய் வந்தவுடன் ஒரு நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுத்தமான காற்று இல்லாததால் வந்த வினை. அவருக்கு ஏற்கனவே நுரையீரலில் ஒரு சின்ன சிக்கல் இருந்தது. பிறகு 2 வாரத்துக்கு முன்னரும் சென்றிருந்தார். நம்பவே முடியாத அளவில் சீனா மாறியிருந்தது. தெளிந்த வானம், சுத்தமான இடம் என்று உருத்தெரியாமல் மாறியிருந்தது. அவர் காட்டிய படங்களை பார்க்கும்போதே புரிந்துவிட்டது சீனாவின் தந்திரம்!

இவையெல்லாம் தன் நாட்டிற்கு பாசிட்டிவ் இமேஜ் உருவாக்குறதுக்காகத்தான் சீனா செய்தது. தப்பே இல்லை! ஒரு விளையாட்டுக்காக ஒரு நாடே சுத்தம் செய்வது பெரிய விஷயம். அதுவும் இதற்காக மட்டுமே இவ்வளவு செலவு பண்ணியிருக்காங்களே. எந்த நாடு இவ்வளவு செலவு பண்ணும்?


ஆனால், இவையெல்லாம் தவிர்த்து ஒலிம்பிக் திறப்புவிழாவில் சீன அரசாங்கம் செய்த பொய்த்தனம் இருக்கே! உலக மக்கள் நாம் அனைவரையும் முட்டாள் ஆக்கிவிட்டது!!!!

பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் திறப்புவிழாவை கண்டு வியக்காத மக்களே இல்லை. யூடியூப்பில் ஒவ்வொரு வீடீயோக்கு கிடைத்த ஹிட்ஸை பார்த்தாலே தெரியும்! உலக மக்கள் பார்த்து மிகவும் வியந்த ஒரு நிகழ்வு வானவேடிக்கை. பல நாடுகள் அந்த வானவேடிக்கையை புகழ்ந்து தள்ளின. "இப்படி செய்வது மிகவும் கடினம். ஆனால் சீனா சிறிது தவறுமின்றி செய்தது" என்று பல பத்திரிக்கைகள் சொல்லியிருந்தன.

ஆனால், அந்த வானவேடிக்கைகளில் பாதி பொய்யானது. ஏற்கனவே வெடித்து அதை பதிவு செய்து திறப்புவிழா அன்று உண்மையான வானவேடிக்கைகளையும் போலியையும் கலந்திருக்கிறார்கள். பார்த்த நமக்கு எது உண்மையானது எது போலியானது என்று கூட கண்டுப்பிடிக்க முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறது! உண்மையில் அவர்கள் வெடிக்க வைத்திருந்து சில வானவேடிக்கைகள் வெடிக்காமல் செயலிழந்தும் இருந்திருக்கின்றன. அதையும் நாம் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தியானெந்மென் (Tiananmen) சதுரங்கத்திலிருந்து விளையாட்டரங்கத்துக்கு நகர்ந்த ராட்சச்ச சுவடுகள் கூட உண்மையானதில்லை. அது கணிணியால் உருவாக்கப்பட்ட பொய்யான வானவேடிக்கைதான்! They can do anything under the sky!

இதையும் தவிர்த்து இன்னும் பெரிய பொய்யை நம் தலையில் கட்டியிருக்கிறது சீனா!

திறப்புவிழாவில் அத்தனை மக்களின் மனதையும் கொள்ளைக்கொண்ட சிறுமி லின் மியோகே (Lin Miaoke). சிவப்பு நிற கவுனில் ரெட்டை வால் முடிக்கட்டி சிரித்த முகத்துடன் சீனாவின் தேசியகீதத்தை பாடினாள். மறுநாள் எல்லா நாளிதழிலும், தொலைக்காட்சிகளிலும் "The Rising Star of East" என்று வர்ணிக்கப்பட்டாள். அறுபுதமான குரல், நல்ல குரல்வளம், பெரிய பாடகியாய் வருவாள் என வர்ணிக்கப்பட்டாள். பல விளம்பரங்களில் நடிக்க கோறியும், பல இண்டர்வியூவில் பங்குப்பெறவும் அழைப்புகள் இச்சிறுமிக்கு வந்துக்கொண்டே இருக்கின்றது. ஆனால், அந்த சிறுமியை அதே பாடலை இப்போது பாடச் சொல்லுங்களேன் பார்ப்போம்!

உண்மையில் இந்த பாடலை பாடியவர் யங் பெய்யீ (Yang PeiYi) என்ற 7 வயது சிறுமி. சில ஒத்திகைகளிலும் பெய்யீயை உபயோகப்படுத்திவிட்டு, திறப்புவிழாவில் இன்னொரு பெண்ணை நிற்க வைத்திருக்கிறார்கள். ஏன்? என்று நாம் கேட்கும் காரமான கேள்விக்கு சீனா அரசாங்கமும் நிகழ்ச்சி நடத்துணர்களும் பதில் சொல்கிறார்கள்:

" பெய்யீ அழகாக இல்லை. பற்கள் சீராக இல்லை. நாங்கள் ஒரு நேர்த்தியான நாட்டின் இமேஜை பிரதிப்பலிக்க நினைக்கிறோம். இந்த இமேஜுக்கு பெய்யீயின் முகம் சரிவராது. அதனால்தான் மியோகோவை தேர்ந்தெடுத்தோம்"

அடப்பாவிமக்கா.. பெய்யீயும் உங்க நாட்டு பொண்ணுதான்! மியோகோவும் உங்க நாட்டு பொண்ணுதான்! அழகாய் இல்லைன்னா இவள் உங்க நட்டு பெண்ணாய் இருக்க முடியாதா? இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இவர்களையெல்லாம் நாடு கடத்திடுவீங்க போல?

அழகா முக்கியம்? அறிவு, திறமைதானே முக்கியம்! அதுவும் அறிவியல் மற்றும் எல்லா விஷயங்களிலும் முதன்மையில் நிற்கும் சீன நாட்டின் பேச்சா இது!!!!!

பெய்யீக்கு என்ன குறை? அவள் அழகாய்தானே இருக்கா? சின்ன பிள்ளைகள் எப்படி இருந்தாலும் அவர்கள் அழகுதான். cute-தான். அதற்காக அவளுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை இப்படியா முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பார்கள்?

உண்மை வெளியே தெரிந்ததில் பெய்யீக்கு ஒரு வகையில் நல்ல விஷயம்தான். ஆனால் மியோகோவின் நிலமை? infact, நிகழ்ச்சியில் அவள் பாடும் (நடிக்கும்)போது இன்னொரு பெண்ணின் குரலுக்கு தான் வாயசைக்கிறோம் என்று கூட தெரியாமல் இருந்திருக்கலாம்! அவள் பாடியது மற்றவர்களுக்கு கேட்காது என்ற உண்மை அவளிடமிருந்தே மறைக்கப்பட்டிருக்கலாம். நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்து இண்டர்வியூவில் கலந்துக்கொண்டபோது அவள் திறமைக்கு கிடைத்த பரிசென்று நினைத்திருக்கும் மியோகோ இனி எப்படி வெளியே தன் முகத்தை காட்டுவாள்? எல்லாரும் அவளை கேலி பண்ண மாட்டார்களா?

சீனா தன் இமேஜுக்காக மியோகோவை ஊறுகாயாக பயன்படுத்திக்கொண்டதென்று சொல்லலாமா?

ரக்ஷா பந்தன் வித் நமீதா



நமஸ்தே.. செய்தீகல் வாசிக்குது நமீஈஈத்தா.. (நமீதா தமிழ் பேசுறாங்கல்ல. இப்படிதானே இருக்கும்?)

இன்னீக்கி ரக்ஷா பந்தன். நான் சின்ன வயசு இருக்கு. எனக்கு ரொம்போ பாய் ஃபிரண்ட்ஸ்.. எல்லாரும் ஆல்வேய்ஸ் வித் மீ. பட் இன்னிக்கீ டே மட்டும் ஆல் மிஸ்ஸிங். எனக்கு ரொம்ப ஆசை இருக்குது. எல்லா பாய் ஃபிரண்ட்ஸுக்கும் ராக்கி கட்டணும்ன்னு ரொம்ப ஆசை இருக்குது.

என்ன பண்ண போகுதுன்னுன்னு ஒன்னுமே பிரியல. யெஸ்.. காட் இட். எனக்கு ப்ளாக் ஃபிரண்ட்ஸ் அதிகம் இருக்குது. ஒன்னுக்கு ஒன்னா பிடிச்சு கட்ட போகுது.. நோ நோ நோ நோ.. ராக்கி கட்ட போகுது. ஜாய்ன் மீ பீப்ஸ்.

*******************************************************************************
அம்பி

நமீதா: ஷோ மீ யூர் ஹேன்ட்

பல்லை இளித்துக்கொண்டே கையை நீட்டுகிறார்.

நமீதா: நான் ஒன்னு குடுக்குது, நீ கண்ணை மூடிக்குது

அம்பி: ம்ஹூம் மேடம். கண்னை மூடுனா உங்களை ஜொல்லு விடும் டைம் வேஸ்ட் ஆகிடுமே

நமீதா: நோ நோ நோ நோ.. அம்பி கண்ணை மூடுது. நமீதா கிஃப்ட் குடுக்குது.

அம்பி கண்ணை மூடின கேப்ல நமீதா ராக்கி கட்டிட்டு,

நமீதா: அண்ணா...

அம்பி: என்ன கொடும தங்காச்சி இது!!!! :-(

*******************************************************************************
அய்யனார்

நமீதா: வணக்கம்

அய்யனார்: தமிழக புயலே, என்னை பார்க்க வந்த தேவதையே. உனக்காக நான் சொல்லவா ஒரு கவிதை. கவிதையே கவிதையா இருக்கும்போது இன்னொரு கவிதை அவசியமா என்று குசும்பன் கேட்டாலும் நான் சொல்லியே தீருவேன்.

உன் பேச்சுக்கு
பூனைக்குட்டிகளின் முகங்களை
மனதில் தருவிக்கிறேன்
அவை உன் பேச்சின் மீது
இன்னும் வாஞ்சையைத் தூண்டுகின்றன
உன் கோபம்
எரிச்சல்
மகிழ்வு
சிரிப்பு
கிண்டல் அழுகை
என உணர்வுகளுக்கேற்றார்போல்
பூனைக்குட்டிகளின் முகங்கள்
வந்து வந்து போகின்றன
சொல்
நீயொரு பூனைக்குட்டியா?

அய்யனாரின் உரையை கேட்டு முடித்தவுடன் நமீதா பலமா கைத்தட்டி வாழ்த்து கூறுகிறார்

அய்யனார்: எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. சக வலைப்பதிவாளர்களே என்னை அடர்கானக புலி, பின்நவீனத்துவவாதி, எழுதுறது புரியவில்லை என்று சொல்வார்கள். ஆனால், உங்களுக்கோ என் கவிதை புரிந்து கைத்தட்டி வாழ்த்து சொல்கிறீர்கள். நன்றி.

நமீதா: இப்பிடி பிலோசாஃபி ரெயின் பொழிந்த உன்க்கு நான் கிஃப்ட் குடுக்கும். கை காட்டு

சடார்ன்னு பையிலிருந்த ராக்கி அய்யனார் கைக்கு தாவியது. கட்டி முடித்ததும்,

நமீதா: குசும்பு சொல்லிச்சு. உங்களுக்கு கவிதை ஆஹா ஓஹோன்னு சொல்லிச்சுன்னா, ரொம்ப ஹேப்பின்னு. அதான், எனக்கு பிடிச்சிருக்கு சொல்லிச்சு. அய்யனார் கை காமிச்சுச்சு. மீ ராக்கி கட்ட்டிச்சு! ;-)

அய்யனார்: நமீதா.. யூ டூ?

*****************************************************************************
மங்களூர் சிவா

சிவா: ஆஹா.. நமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈதாஆஆஆஆஆஆஆ....

நமீதா: வாயில ஈ.. ஈ எண்டர் ஆச்சு...

சிவா: து து து.. ஓக்கே. இப்போ ஓக்கே. என்ன விஷயமா நமீதா என்னை பார்க்க வந்திருக்கீங்க?

நமீதா: ஓவர் பில்ட் அப் பாடிக்கு நோட் கூட். (சிரிக்கிறார்) சிவாக்கு நமீதா ஒரு கிஃப்ட் குடுக்குது

சிவா: ம்ம்.. தாராளமா

தன் கண்ணத்தை காட்டுகிறார்.

நமீதா: ஹாஹாஹா.. இங்கே குடுக்கணும்னா சிவா ஹீரோ ஆகுது. விஜய், அஜித் மாதிரி ஆகுது. நமீதா குடுக்குது.

கண்ணத்தில் செல்லமா (கொஞ்சம் வேகமாகவே.. அது அறைதான்னு நான் சொல்லி தெரியணுமா என்ன?) தட்டுகிறார்.

சிவா: யாரும் பார்க்கல. மீசையில மண்ணு ஒட்டல..

நமீதா: வாட்?

சிவா: ஒன்னுமில்ல. குஜராத்தி மொழி கத்துக்கலாம்ன்னு இருக்கேன் நமீதா

நமீதா: தாட்ஸ் சோ ஸ்வீட் ஆஃப் யூ சிவா. உன்க்கு கையை நீட்டு

சிவா: நமீதாவுக்கக என் கை என்ன உயிரையே கொடுப்பேன்

சிவா கையை நீட்டிக்கிட்டே பகல் கனவு காணுகிறார். நமிதா வந்த வேலையை முடித்துட்டு சிவாவை கூப்பிடுறார்.

நமீதா: அண்ணா..

சிவா: நமீதா... வச்சிட்டியே ஆப்பு!!

*****************************************************************************
நிஜமா நல்லவன்

நமீதா: ஆர் யூ ட்ரூலி கூட் பெர்சன்?

நிஜமா நல்லவன்: என்னம்மா பேசுற? ஒன்னுமே புரியலையே!!! (சிவாஜி கணேசன் ஸ்டலில்..)

நமீதா: நிஜ்மா நல்வன்?

நிஜமா நல்லவன்: நாந்தான் நாந்தான்.. ஆஹா.. என்னை தேடி வந்திருக்கா நமீதா.. (மனதுக்குள்..) டேய் பாரதி, உனக்குள்ளேயும் ஏதோ இருந்திருக்குல்ல. ;-)

நமீதா: நான் உன்க்கு ஒரு கிஃப்ட் குடுக்குது..

நிஜமா நல்லவன்: நன்றி நன்றி.. டேய் ஆயில்யா, இங்கே பார்றா.. நமீதா எனக்கு பரிசு கொடுத்திருக்கா.

ஆயில்யன்: என்னது? என் கிட்ட காட்டு பார்ப்போம்.

கிஃப்ட்டை பார்த்து ஷாக் ஆகி,

ஆயில்யன்: நீ நிஜமாவே நல்லவனா? இல்லை நல்லவன்னு வேஷம் போடுறீயா? இல்ல எல்லாரும் சுலபமா ஏமாத்தி நீ ரொம்ப நல்லவண்டான்னு சர்டிபிகேட் கொடுத்துட்டாங்களா?

நிஜமா நல்லவன்: ஏன்?

ஆயில்யன்: இது என்னன்னு தெரியுதா?

நிஜமா நல்லவன்: ஏதோ கை செயின் மாதிரி இருக்கு

ஆயில்யன்: அடப்பாவி.. மஞ்ச கலர்ல ஒரு ராக்கி கட்டினா அது உனக்கு செயினா தெரியுதா? நமீதா உன்னை அவளுக்கு அண்ணனா ஆக்கிட்டு போயிட்டா...

நிஜமா நல்லவன்: அவ்வ்வ்வ்வ்... போனால் போகட்டும் போடா.. அவ்வ்வ்வ்......

*****************************
நேரம் பற்றாக்குறையினால் நமீதா நாலு பேருக்குதான் ராக்கி கட்டியிருக்காராம். மீதி நிறைய ராக்கி வச்சிருக்கிறார். பசங்களே ஜாக்கிறத்தை!!!!

நாளை மறுநாள் ராக்ஷா பந்தன். என்னுடைய வாழ்த்துக்களை எல்லா அண்ணன்களுக்கும் தெரிவித்துக்கொள்(ல்)கிறேன். ;-)

Monday, August 11, 2008

நஸ்கா (Nazca) ராட்சச கோடுகள்

உலகத்தில் இன்னும் தீர்வுக்காணாத/ முடியாத பல அதிசயங்களும் மர்மங்களும் ஆச்சர்யங்களும் தினம் தினம் நம்மை பிரமிக்க வைத்துக்கொண்டேதான் இருக்கின்றது. சில மர்மங்களுக்கு இப்படி இருக்குமோ என்று நாமே சில யூகங்களை உண்டாக்கிக்கொண்டு திருப்தியடைந்துக்கொள்கிறோம்.

நஸ்கா ராட்சச கோடுகள் (Nazca Lines) என்பதும் இன்று வரை மர்மங்களில் ஜொலிக்கும் ஒரு விஷயமாகவே இருந்துக்கொண்டிருக்கிறது. இதன் உருவாக்க ரகசியம் பற்றி பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. எந்த காலக்கட்டத்தில் யாரால் உருவாக்கப்பப்ட்டது? எப்படி இதை செய்தார்கள்? இந்த கோடுகள் உருவாக்கத்தின் பின்னனி மற்றும் நோக்கம்தான் என்ன? ம்ஹூம்.. ஒன்றுமே தெரியாத மர்மம்தான் இது.

பெரு நாட்டின் பம்பா மற்றும் நஸ்கா இடங்களில் இந்த கோடுகளை பார்க்கலாம். பெரு பட்டணத்திலிருந்து ஒரு 400 கிலோமீட்டர் தென்கிழக்கு நோக்கி போக வேண்டும். 450 கிலோமீட்டர் சதுர அளவில் இந்த கோடுகள் அமைந்திருக்கின்றன. அம்மாம்பெரிய கோடுகளா என்கிறீர்களா? ஆமாம். நீங்கள் இந்த இடத்தில் நின்று எங்கே அந்த கோடுகள் என்று தேடினால் கண்டு பிடிக்கவே முடியாது. இந்த கோடுகளையும், சித்திரங்களையும் பார்க்க வேண்டுமானால் உங்களுக்கு ஒரு சாட்டிலைட் அல்லது ஒரு விமானம் தேவைப்படும். கடலிலிருந்து 600 மீட்டர் உயரத்தில் நின்றால் மட்டுமே தெரியும். குறைந்த பட்சம் உங்களுக்கு கூகுல் ஏர்த் (Google Earth) இருந்தாலும் பரவாயில்லை. (ஆனால், தேடிக்கண்டு பிடிக்க உங்களுக்கு பொறுமை மிக அவசியம்).

[பெரு மற்றும் நஸ்கா நகரம்]

இந்த கோடுகள் 1920-ஆம் ஆண்டுகளில்தான் பேசப்பட ஆரம்பித்தது. இந்த காலக்கட்டத்தில்தான் அமேரிக்க கமர்ஷியல் விமானங்கள் நஸ்கா நகரை கடந்து போக ஆரம்பித்தன. அப்போதுதான் பயணிகளும், விமானிகளும் விமானத் தறையிரங்கும் தடங்கள் தெரிவதாக சொல்லியிருக்கின்றனர். ஆளே இல்லாத இடத்தில் யார் விமானத்தடங்களை அமைத்திருப்பார்கள்? இந்த கேள்விக்கு விடை கிடைக்கும்முன்னரே குரங்கு, பல்லி, எட்டுக்கால் பூச்சி என்று மிருகங்களின் ராட்சச ஓவியங்களையும் விமானப் பயணிகள் கண்டுள்ளனர்.

[விமானத் தடமாக தெரிந்த கோடுகள்]

புதுசா ஒன்று ஆச்சர்யம் கொடுக்கும் அளவு இருந்தால் விடுவார்களா நம் விஞ்ஞானிகள்? தொல்பொருள் நிபுணர்கள் கிளம்பிட்டாங்க பெரு நகருக்கு. என்னத்தான் அதிசயம் அங்கு காத்திருக்கு? எப்படி இதெல்லாம் வரைந்தார்கள்? ராட்சச மனிதர்கள், இயந்திரங்கள் கிடைக்குமா? எல்லா கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கும் என அதீத நம்பிக்கையில் பெட்டி கட்டி கிளம்பிட்டாங்க.

அவர்களின் ஆராய்ச்சி என்ன சொல்கின்றது என்றால், இந்த கோடுகள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. ஆனாலும் எந்த காலக்கட்டத்தில், எந்த இனத்தவரால், எதுக்காக என்று ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஏனென்றால், அந்த கோடுகளில் சிக்கலான ஆனால் நேர்த்தியான வேலைப்பாடுகள் தெரிந்தன. இந்த அளவுக்கு நேர்த்தியாய் செய்ய விஞ்ஞான வளர்ச்சி கண்டிப்பாக அந்த காலக்கட்டத்தில் இருந்திருக்காது. அவ்வளவு நேர்த்தியாகவும் ப்ராட்சச உருவத்திலும் எப்படி செய்ய முடிந்தது? ஆகாயத்திலிருந்து ஒருத்தவர் கவனித்து சொல்லியிருந்தால் கூட இந்த அளவுக்கு பரிப்பூர்ண ஓவியம் வரைவது கஷ்டமே! அப்படியென்றால், இவர்கள் ரோம், மெசோப்போதாமிய மக்களை விட அறிவாளிகளா? ஒரு துறுப்பு சீட்டு கூட கண்ணுக்கு கிடைக்கலையே. எதையும் எழுதி வைத்த மாதிரியும் இல்லையே?

[குரங்கு வடிவில் நஸ்கா கோடுகள்]

ஆனாலும், தொல்பொருள் நிபுணர்கள் இந்த நஸ்கா கோடுகளை கஹூவாச்சி (Cahuachi) என்ற ஆதிவாசிகளின் முன்னோர்கள் வரைந்திருக்கக்கூடும் என நம்புகிறார்கள். இவர்கள் நஸ்கா நகரின் சுற்றுப்புற இடங்களில் இன்னும் வசிக்கின்றனர். ஏன் இவர்கள்? கஹூவாச்சி மக்கள் வசிப்பிடத்தில் பழைய கோட்டையின் ஒரு பகுதி கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தவிர்த்து மம்மிகள் மற்றும் நஸ்கா கோடுகளின் சில படங்களின் கல்சுவடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த யூகம் தப்பாக இருக்கலாம் என்று நிபுணர்களே சொல்லியிருக்கார்கள். இது கஹூவாச்சி மக்களுக்கு பல நூற்றாண்டுகள் முன்னர் இருந்த ஒரு மக்கள் கூட்டத்தின் வேலைப்பாடுகளாய் இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், அவர்கள் யார்?

பல நூற்றாண்டுகள் முன்னர் உருவான இந்த ஓவியங்கள் / கோடுகள் இன்று வரை அப்படியே இருக்க காரணம் என்ன? நஸ்கா வட்டாரத்தின் இயல்பியலே இதற்கு முக்கிய காரணம். மழை இந்த இடத்தில் பெய்வது மிக மிக குறைவு. வருடத்துக்கு 20 நிமிடங்கள் மட்டுமே. உலகில் மிகக் குறைவான அளவில் மழை பெய்யும் இடங்களில் இதுவும் ஒன்று. நஸ்கா நிலம் கடினமான, கற்பாறைகளால் நிறைந்தவை. தூசு, குப்பை பறவாத நிலம் மற்றும் மிகக் குறைந்த அளவில் மழை; இதுவே வரைந்த கோடுகள் இன்று வரை கொஞ்சம் உருமாற மர்மத்தின் ரகசியம்.


[ராட்சச வௌவால்]

இதை தவிர்த்து ஒவ்வொரு கோடுகளின் முனையிலும் இதனை வரைந்தவர்கள் ஒரு வெளிச்சமான வர்ணங்களின் இன்னொரு அடுக்கை கொடுத்திருக்கின்றனர். அதனால் எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் மிகவும் தெளிவாகவும் பிரகாசமாகவும் தெரியும். பல நூறு வருடங்கள் ஆனாலும் அழியாது.

[ஹும்மிங் பறவை]

[நஸ்கா கோடுகளில் பல ஓவியங்கள் இதில் தெரிகின்றது]

[திமிங்கிலம்]

இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட ஓவியங்கள் / கோடுகள்:

- எட்டுக்கால் பூச்சி (46 மீட்டர் நீளம்)
- குரங்கு (55 மீட்டர் நீளம்)
- ராட்சச வௌவால் (குவானோ பறவை) (280 மீட்டர் நீளம்)
- பல்லி (180 நீளம்)
- ஹும்மிங் பறவை (50 மீட்டர் நீளம்)
- திமிங்கிலம் (65 மீட்டர் நீளம்)
- Pelican (285 மீட்டர் நீளம்)

[நஸ்கா கோடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஓவியங்கள்]

References:
http://en.wikipedia.org/wiki/Nazca_lines
http://www.peru-explorer.com/nasca.htm
http://unmuseum.mus.pa.us/nazca.htm

Thursday, August 07, 2008

நினைத்தாலே இனி(கச)க்கும் - 2

முதல் செமெஸ்டர்லதான் பொய் சொல்லத் தெரியாமல் சொல்லி டாக்டரை விரிவுரையாளராக்கி 3 நாள் எம்.சி எடுத்து லேப் இன்னொரு நாளில் செய்து அந்த செமெஸ்டரை முடித்தேன். இனி எப்போதுமே எம்.சி எடுக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக் கொண்டேன்.

காலங்கள் உருண்டோடின (காலத்துக்கு சக்கரங்கள் இருக்குன்னு என் டீச்சர் எனக்கு சொல்லியே தரலையே..). இரண்டாவது செமெஸ்டர் ஆரம்பமானது. இந்த தடவை முதல் வாரத்துலேயே என்னுடைய லேப் க்ரூப் (அதே எட்டாவது க்ரூப்தான்), லேப் தேதிகள் எல்லாமே குறித்து வைத்துக் கொண்டேன். இனி பாருங்க. "எப்படி கரேக்டா எல்லா லேப்லயும் அட்டெண்டண்ஸ் போடுறேன்"ன்னு நண்பர்களிடம் பெருமையா சொன்னேன்.

இந்த தடவை 6 லேப் செஷன் மட்டுமே. ஒன்றாவது லேப் முடிந்து இரண்டாவதும் முடித்து விட்டேன். மூன்றாவது லேப் செல்லும்முன், திரும்ப அதே க்ளீனிக்கின் வாசலில் போய் நின்றேன். இந்த தடவை என் கூட ஒன்னொரு தோழியும் நின்றிருந்தாள்.

அவளை வெளியேயே நிக்கச் சொல்லிட்டு உள்ளே வந்து "Doctor On Duty" பலகையில் யார் பெயர் போட்டிருக்கு என்று திருட்டுத்தனமா பார்த்தேன். அப்பாடா.. நல்ல வேளை. இன்னைக்கு அந்த டாக்ரர் லீவூ போல. யாரோ இன்னொரு அம்மணி டாக்டரா இருக்காங்க என்ற திருப்தியில் வெளியே சென்று என் தோழியை அழைத்தேன்.

கவுண்டரில் மெடிக்கல் கார்ட் எல்லாம் காட்டி அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிவிட்டு சோபாவில் அமர்ந்தோம். அப்போது அங்கே இருந்த தொலைக்காட்சியில் ஏதோ நல்ல படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. விருவிருப்பான காட்சி. அன்னார்ந்து தொலைக்காட்சியில் முழு கவனத்தையும் செலுத்திக்கொண்டிருந்தபோது என் முன்னே ஒருவர் வந்து நின்றார்.

ஆஹா.. ஆப்பு இன்னைக்கு கண்ஃபார்ம்தான்! என் முன்னாடி நிற்பவர் நான் முன்னாடி ஒரு நாள் பின்னாடி இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சபதம் எடுத்ததுக்கு காரணமானவர். ஒரு பக்கம் பக் என்று இருந்தாலும் நிலைமையை சரி செய்ய..

"அடடே டாக்டர்.. கூட் மார்னிங் டாக்டர். சௌக்கியமா?"

"என் சௌக்கியம் இருக்கட்டும். என்ன இந்த பக்கம்? யாரோ ஒருத்தவங்க இனி இந்த பக்கமே வர மாட்டேன்னு சபதம் போட்டுட்டு போனதால ஞாபகம்?"

"யாரு டாக்டர்? ரொம்ப வித்தியாசமான கேரக்டரா இருக்கே? எனக்கு அறிமுகப்படுத்துறீங்களா?"

" ம்ம்.. வாய் நீண்டுடுச்சு போல? உள்ளே வா.. ஒரு ஊசி போடுறேன். அப்போ தெரியும் யாரந்த கேரக்டர்ன்னு" என்று திரும்பி டாக்டர் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

"டாக்டர், டாக்டர். நில்லுங்க. அது ச்சும்மா தமாசுதான். நோ டென்ஷ்ன் ப்ளீஸ். இன்னைக்கு வேற ஒரு டாக்டர் பெயர் On Dutyல எழுதியிருக்கு? ஆனால், நீங்க வந்திருக்கீங்க?"

"ம்.. யாரு டூட்டில இருக்கா? யாரிடம் ஈசியா ஏமாத்தி எம்.சி வாங்கலாம்ன்னு பக்காவா ப்ளான் போட்டுதான் வந்திருக்கியா? On Duty வேற டாக்டர்தான். ஆனால், உன் கேஸ் மட்டும் நானே கவனிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். உன் டர்ன் வரும்போது உள்ளே வா."

வில்லத்தனமான சிரிப்பு என்று சொல்வார்களே. எனக்கு தெரிந்து நான் பார்த்த முதல் வில்லத்தனமான சிரிப்பு.. அதுவேதான்.

திரும்ப என் தோழியின் பக்கம் வந்து "இன்னைக்கு எம்.சி எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஆனால், எப்படியாவது எம்.சி வாங்கிடணும்ன்னு உறுதியா இருக்கேன். முடியுமா?"ன்னு தோழியிடம் கேட்டேன். அவள் "இன்னைக்கு முயற்சி தோல்விதான். கண்ஃபார்மா சொல்றேன்"ன்னு ஒரு குண்டை போட்டாள்.

எங்க டர்ன் வந்ததும் உள்ளே போனோம். On Duty டாக்டர் எதிர்த்தாப்புல உள்ள நாற்காலியில் நமக்கு வேண்டப்பட்ட டாக்டரும் உட்கார்ந்திருந்தார். நாங்க உள்ளே வந்ததும் எங்க டாக்டர் அவர் வேலையை ஆரம்பித்துட்டார்.

"டாக்டர், இந்த பொண்ணுக்கு என்ன சீக்குன்னு எனக்கு தெரியும். நீங்க ஒரு எம்.சி எழுதுங்க முதல்ல"

அந்த டாக்டர் கொஞ்சம் ஷாக் ஆன மாதிரிதான் இருந்துச்சு. ஆனாலும் திரும்ப சகஜ நிலைக்கு வந்து "ஓ.. உங்க பேஷண்டா? ஃபாலோ அப்க்கு வந்திருக்காளா? செக் பண்ணிடுவோம்ன்னு மெடிக்கல் கார்டில் பார்த்தாங்க."

கார்டை பார்த்துட்டு "ஒரு நோயும் இருக்கிற மாதிரி தெரியலையே. நீ வந்து என் பக்கத்துல உட்காரும்மா"ன்னு சொன்னாங்க.

நான் நமக்கு வேண்டிய டாக்டர் பக்கத்துல உள்ள நாற்காலியில் உட்கார்ந்தேன். என் தோழி On Duty டாக்டர் பக்கத்துல உட்காந்தாள்.

"டாக்டர், இந்த பொண்ணுக்குதான் உடம்பு சரியில்லை. முதல்ல ரெண்டு பேரையும் இடம் மாறி உட்கார சொல்லுங்க"ன்னு நம்ம டாக்டர் சொல்ல.. டாக்டர் மெடிக்கல் கார்டில் உள்ள பெயரை உற்சரித்து இது யாருன்னு கேட்க, என் தோழி அவள்தான் என்று சொல்ல.. நான் நம்ம டாக்டரை பார்க்க.. அவரும் என்னை பார்க்க... ஆஹா.. இந்த காட்சியை இன்னும் எந்த இயக்குனரும் தன்னோட படத்துல போடலையே.. அந்த அளவு சூப்பரானா காட்சி.

தோழியை டாக்டர் செக்-அப் செய்ததும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொல்லி ஒரு எம்.சியும் கொடுத்தார்.

ரெண்டு டாக்டருக்கும் "டா டா.. பை பை" சொல்லிட்டு வெளியே வரும்போது நம்ம டாக்டருக்கு ஸ்பெஷலா ஒரு "டா டா பை பை" சொன்னேன்.

அவரோ என்னை பார்த்து பாராட்டி "இப்போல்லாம் நீ ரொம்ப பொறூப்பா இருக்கே. ஏற்கனவே நல்லா படிக்கிற பொண்ணு. தன்னோட வேலையே பெருசுன்னு மத்தவங்க நினைக்கிற இந்த காலக் கட்டத்துல தோழிக்கு உடம்பு சரியில்லைன்னதும் கூட வந்து உதவி செய்ததில் மனிதாபிமானம், நட்பு, பாசம் எல்லாமே உனக்கு அதிகம் இருக்கு. கீப் இட் அப்" என்றூ சொல்லி தன் கட்டை விரலை உயர்த்தினார்.

"டாக்டர், என்னை ரொம்ப புகழாதீங்க. எனக்கு வெட்கமா இருக்கு"ன்னு ஒரு பிட்டை போட்டு நாங்க ரெண்டு பேரும் அங்கே இருந்து எஸ்கேப் ஆகிட்டோம்.

க்ளீனிக் வெளியே வந்ததும்,

"பார்த்தீயா.. உனக்கு கண்டிப்பா எம்.சி வாங்கி கொடுத்துடுவேன்னு சொன்னேன்ல. ஒரு தடவைதான் ஏமாறுவேன். அதுல இருந்து நல்லா பாடத்தை கற்றுக்கொண்டு இன்னைக்கு உன்னை நடிக்க வச்சு எம்.சி வாங்க வச்சுட்டேன்" என்று தோழியிடம் சொன்னேன்.

"அந்த டாக்டர் வந்து அப்படி சொன்னதும் இன்னைக்கு எனக்கு எம்.சி கிடைக்கவே கிடைக்காதுன்னுதான் நினைச்சேன். நான் நடிக்கிறேன்னு கண்டு பிடிச்சிடுவாரோன்னு பயந்துட்டே இருந்தேன். ஆனால், அவர் நீதான் பேஷண்ட்ன்னு நெனச்சதால என் மேலே அவ்வளவு அக்கறை காட்டாததுனால இது நடிப்புன்னு கண்டுபிடிக்கல. எப்படியோ எனக்கு எம்.சி கிடைச்சுடுச்சு. நன்றி"ன்னு சொன்னாள்.

ம்ம்.. எம்.சி.. இரண்டாவது செமெஸ்டரில் எனக்கு நான் எடுத்துக்கலை. தோழிக்கு எடுத்துக் கொடுக்க உதவினேன். அப்படியே இரண்டாவது செமெஸ்டர் முடிந்தது.

ஆனால், இந்த எம்.சி எடுக்கிற பழக்கம் இன்னும் என்னை விட்டு போகவில்லை. மூனாவது செமெஸ்டர் வந்துட்டே இருக்கு.

[தொடரும்..]

Tuesday, August 05, 2008

நினைத்தாலே இனி(கச)க்கும் - 1

விக்னேஷ்வரனின் புதைந்த நினைவுகள் படித்த போது எனக்கும் கொசுவர்த்தி சுற்றிவிட்டது.

விக்னேஷ் ரொம்ப நல்லவர் போல. ச்சும்மா பதுங்கி பதுங்கி, அதுவும் ஒரே ஒரு எம்.சிதான் எடுத்திருக்கார். நானெல்லாம் கணக்கு வழக்கு இல்லாமல் ஒவ்வொரு செமெஸ்டருக்கும் ஒன்னுன்னு எடுத்துட்டு இருந்தேனாக்கும்.

என்ன கதை?-ன்னு கேட்குறீங்களா? அதை சொல்லத்தானே வந்திருக்கேன். என் பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நல்லாவே தெரியும் என் அபார(!!) ஞாபக சக்தியை பற்றி. என்னுடைய பொறியியல் கல்வியில் ஒரு செமெஸ்டருக்கு ஒரு 8-10 லேப் செஷன் இருக்கும். ஒரு வகுப்புக்கு ஒரு நாள்ன்னு ஒதுக்கியிருந்தா நான் யேனுங்க இப்படி பொந்தேங் (ponteng) / லீவு எடுக்க போறேன்? கூட்டாளிங்க லேப் போனால் என்னையும் மறக்காமல் கூட்டிட்டு ப்யிடுவாங்கல்ல. அல்லது atleast நம்மை ஞாபகமாவது பண்ணிடுவாங்க. பாசக்கார பயப்புள்ளைங்க. விரிவுரையாளர்களுக்கு அவங்க பெரிய மேதைன்னு நெனச்சிப்பாங்களோ? ( ஆமா ஆமா.. அவங்க மேதைதான்). ஆனா, ஒரு ரெண்டம் லிஸ்ட் ரெடி பண்ணி எங்களை எல்லாம் மிக்ஸ் பண்ணி ஒரு பட்டியல் ரெடி பண்ணி வச்சிருப்பார். அவங்க கணக்கு படி என் பெயர் 8-ஆவது க்ரூப்பில் இருந்திருக்கு. மொத்தம் ஒரு 52 க்ரூப் இருக்கும்.

முதல் செமெஸ்டர்ல, இப்படி ஒரு க்ரூப் இருக்கிறது கூட தெரியாத அப்பாவி(!!!)யா இருந்துட்டேன். என்னோட நிலமையை பாருங்க. அந்த செமெஸ்டர்ல முதல் லேப் செஷன் எங்க க்ரூப்க்குதான். 2-3 நாள் கழிச்சு ஒரு தோழன் வந்து என் கிட்ட கேட்டான்.

"லேப் எப்படி இருந்துச்சு? எனக்கு லேப் கேள்விக்கு பதில் கொடுக்கிறாயா?"

"லேப்-ஆ? அப்படின்னா?"

"உனக்குதான் 2 நாள் முன்னாடி இஞ்சினியரிங் லேப் இருந்துச்சே? போகலையா நீ?"

அப்புறம் அவனிடம் என்ன விஷயம் ஏது விஷயம்ன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். என்னோட க்ரூப் எட்டுன்னும் முதல் லேப் ரெண்டு நாள் முனனடியே முடிஞ்சிடுச்சு. சூப்பர்! முதல் லேப்க்கே சூப்பர் அட்டெண்டண்ஸ் போட்டாச்சு. இனி காலம் முழுசா இப்படித்தானோ? சரி, அடுத்து என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன். முதல் லேப்க்கே போகலைன்னா ஆப்பு ரொம்ப பெருசுன்னு சீனியர்ஸ் வேற சொன்னாங்க. அப்படி போகாமல் விட்டாலும் valid காரணம் இல்லைன்னா சான்ஸே இல்ல. valid காரணம் இருந்தாலும் மறுநாளே நான் என்னுடைய வராத காரணத்தை தெரிவித்திருக்கணும்ன்னு குண்டு இல்ல.. பெரிய பாம் தூக்கி போட்டாங்க.

என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கும்போது ஒருத்தன் கையில கட்டோடு என்னை பாஸ் பண்ணான். ஆஹா.. கடவுள் விட்ட வழி. In-campus க்ளீனிக்ல போய் தஞ்சம் அடைஞ்சிடலாம்ன்னு போனேன்.

டாக்டர் கிட்ட " டாக்டர் டாக்டர், எனக்கு 2-3 நாளா ஒரே தலை வழி.. தாங்கலை. என்னன்னு பாருங்க"

டாக்டரும் என்னன்னெனமோ செக் பண்ணிட்டு "எல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்கே?"ன்னு சொன்னார்..

"இல்ல டாக்டர். 2-3 நாளா ஒரே வலி."

டாக்டர் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு, "க்ளாஸ் இருக்கா இப்போ?"

"இல்லை டாக்டர்."

"சரி, மருந்து எழுதி தர்றேன். ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு. எல்லாம் சரி ஆயிடும்"

"டாக்டர்.. எம்.சி?"

"எம்.சியா? உனக்குதான் க்ளாஸ் இல்லைன்னு சொன்னியே?"

"2-3 நாளாவே வலின்னு சொன்னேனே.. 2 நாளுக்கு முன்னாடி வலின்னால லேப்க்கு போக முடியல. அதுக்குதான் எம்.சி வேணும்..."

"அப்படி வா வழிக்கு. எல்லாம் நார்மலா இருக்கும்போதே நெனச்சேன்."ன்னு சொல்லி ஒரு முறை முறைச்சார்.

"சாரி டாக்டர். உண்மையை சொல்லிடுறேன்"ன்னு எல்லாத்தையும் சொல்லி இனிமேல் இப்படியெல்லாம் பண்ண மாட்டேன். இதுக்கு மட்டும் கொடுத்துடுங்க. என் வாழ்க்கை பிரச்சனைன்னு வாயில வந்தது எல்லாத்தையும் போட்டு எப்படியோ அவரை கூல் பண்ணிட்டேன்.

"சரி, நான் கேட்குற கேள்விக்கு சரியா பதில் சொல்லு. உனக்கு நான் எம்.சி கொடுக்குறேன்"ன்னு சொல்லி இஞ்சினியரிங் mathematics-ல இருந்து ரெண்டு கேள்வியும், 2 physics கேள்வியும் கேட்டார்.

maths நமக்குதான் கை வந்த கலையாச்சே. அதுக்கு சரியான பதில் சொல்லிட்டு physicsல நீங்க theory கேட்குறீங்க. எனக்கு அது ஞாபகத்துல இல்ல. எனக்கு தெரிஞ்ச வேற ஒரு theory சொல்றேன்ன்னு விளக்கினேன்.

என்னோட பதிலில் அவருக்கு பூரண திருப்தி போல. "கூட். இந்தா உனது எம்.சி. இனிமேல் எம்.சி வேணும்ன்னு இந்த க்ளினிக் பக்கம் பார்க்க கூடாது. சரியா?"ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னார்.

என்ன ஆச்சர்யம்! 2-3 நாள் சீரியஸ் வலி மாதிரி அந்த எம்-சி எழுதி 3 நாள் எம்.சி போட்டிருந்தார். "டாக்டர், எனக்கு அந்த ஒரு நாளுக்கு மட்டும்தான் எம்.சி வேணும். நீங்க மூனு நாளுக்கு கொடுத்திருக்கீங்களே?"ன்னு கேட்டேன்.

அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். "2 நாள் முன்னாடி உனக்கு லேப்ன்னு சொல்ற. அப்படின்னா நேற்றே உன் எம்.சி நீ லேப்ல சப்மிட் பண்ணியிருக்கணும். அப்படி பண்ணலைன்னா அந்த எம்.சி expiredதான். நீ அந்த லேப் எப்போதுமே ரிப்லேஸ் பண்ண முடியாது. நல்லா படிக்கிற புள்ளையாட்டம் இருக்கே. நீ அந்த லேப் செய்யணும். 3 நாள் எம்.சின்னா நாளைக்கு காலையில இந்த எம்.சி சப்மிட் பண்ணாலும் ஏன்னு கேள்வி கேட்காமல் எடுத்துப்பாங்க. கூட் லக்". சொல்லிக்கொண்டே தன் கட்டை விரலை உயர்த்தினார்.

ஆஹா.. இப்படியும் ஒரு டாக்டரா?

இதுவரை க்ளீனிக் அலல்து மருத்துவமனை பக்கம் வந்தாலே ஒன்னு யாராவது நண்பர் அல்லது உறவினரை பார்க்கத்தா போயிருந்தேன். அல்லது இந்த மாதிரி ஆபத்து அவசரத்துல எம்.சி எடுக்க மட்டுமே இந்த மருந்து வாடை இடத்தில் நுழைந்திருந்திருக்கிறேன். இனி நானே சீரியஸா இருந்தாலும் க்ளீனிக் / மருத்துவமனை பக்கம் வரவே கூடாது. முக்கியமாக எம்.சி எடுப்பது பற்றி நினக்கவே கூடாது என்று முடிவெடுத்தேன்.

ஆனால், முடிவு அடுத்த செமெஸ்டரே மாறும்ன்னு நான் கூட நெனச்சி பார்க்கலையே!

[தொடரும்.....]

எம்.சி: MC --> Medical Certification.
பொந்தேங் : Ponteng --> வகுப்புக்கு போகாமல் மட்டம் போடுவது