Tuesday, August 05, 2008

நினைத்தாலே இனி(கச)க்கும் - 1

விக்னேஷ்வரனின் புதைந்த நினைவுகள் படித்த போது எனக்கும் கொசுவர்த்தி சுற்றிவிட்டது.

விக்னேஷ் ரொம்ப நல்லவர் போல. ச்சும்மா பதுங்கி பதுங்கி, அதுவும் ஒரே ஒரு எம்.சிதான் எடுத்திருக்கார். நானெல்லாம் கணக்கு வழக்கு இல்லாமல் ஒவ்வொரு செமெஸ்டருக்கும் ஒன்னுன்னு எடுத்துட்டு இருந்தேனாக்கும்.

என்ன கதை?-ன்னு கேட்குறீங்களா? அதை சொல்லத்தானே வந்திருக்கேன். என் பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நல்லாவே தெரியும் என் அபார(!!) ஞாபக சக்தியை பற்றி. என்னுடைய பொறியியல் கல்வியில் ஒரு செமெஸ்டருக்கு ஒரு 8-10 லேப் செஷன் இருக்கும். ஒரு வகுப்புக்கு ஒரு நாள்ன்னு ஒதுக்கியிருந்தா நான் யேனுங்க இப்படி பொந்தேங் (ponteng) / லீவு எடுக்க போறேன்? கூட்டாளிங்க லேப் போனால் என்னையும் மறக்காமல் கூட்டிட்டு ப்யிடுவாங்கல்ல. அல்லது atleast நம்மை ஞாபகமாவது பண்ணிடுவாங்க. பாசக்கார பயப்புள்ளைங்க. விரிவுரையாளர்களுக்கு அவங்க பெரிய மேதைன்னு நெனச்சிப்பாங்களோ? ( ஆமா ஆமா.. அவங்க மேதைதான்). ஆனா, ஒரு ரெண்டம் லிஸ்ட் ரெடி பண்ணி எங்களை எல்லாம் மிக்ஸ் பண்ணி ஒரு பட்டியல் ரெடி பண்ணி வச்சிருப்பார். அவங்க கணக்கு படி என் பெயர் 8-ஆவது க்ரூப்பில் இருந்திருக்கு. மொத்தம் ஒரு 52 க்ரூப் இருக்கும்.

முதல் செமெஸ்டர்ல, இப்படி ஒரு க்ரூப் இருக்கிறது கூட தெரியாத அப்பாவி(!!!)யா இருந்துட்டேன். என்னோட நிலமையை பாருங்க. அந்த செமெஸ்டர்ல முதல் லேப் செஷன் எங்க க்ரூப்க்குதான். 2-3 நாள் கழிச்சு ஒரு தோழன் வந்து என் கிட்ட கேட்டான்.

"லேப் எப்படி இருந்துச்சு? எனக்கு லேப் கேள்விக்கு பதில் கொடுக்கிறாயா?"

"லேப்-ஆ? அப்படின்னா?"

"உனக்குதான் 2 நாள் முன்னாடி இஞ்சினியரிங் லேப் இருந்துச்சே? போகலையா நீ?"

அப்புறம் அவனிடம் என்ன விஷயம் ஏது விஷயம்ன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். என்னோட க்ரூப் எட்டுன்னும் முதல் லேப் ரெண்டு நாள் முனனடியே முடிஞ்சிடுச்சு. சூப்பர்! முதல் லேப்க்கே சூப்பர் அட்டெண்டண்ஸ் போட்டாச்சு. இனி காலம் முழுசா இப்படித்தானோ? சரி, அடுத்து என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன். முதல் லேப்க்கே போகலைன்னா ஆப்பு ரொம்ப பெருசுன்னு சீனியர்ஸ் வேற சொன்னாங்க. அப்படி போகாமல் விட்டாலும் valid காரணம் இல்லைன்னா சான்ஸே இல்ல. valid காரணம் இருந்தாலும் மறுநாளே நான் என்னுடைய வராத காரணத்தை தெரிவித்திருக்கணும்ன்னு குண்டு இல்ல.. பெரிய பாம் தூக்கி போட்டாங்க.

என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கும்போது ஒருத்தன் கையில கட்டோடு என்னை பாஸ் பண்ணான். ஆஹா.. கடவுள் விட்ட வழி. In-campus க்ளீனிக்ல போய் தஞ்சம் அடைஞ்சிடலாம்ன்னு போனேன்.

டாக்டர் கிட்ட " டாக்டர் டாக்டர், எனக்கு 2-3 நாளா ஒரே தலை வழி.. தாங்கலை. என்னன்னு பாருங்க"

டாக்டரும் என்னன்னெனமோ செக் பண்ணிட்டு "எல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்கே?"ன்னு சொன்னார்..

"இல்ல டாக்டர். 2-3 நாளா ஒரே வலி."

டாக்டர் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு, "க்ளாஸ் இருக்கா இப்போ?"

"இல்லை டாக்டர்."

"சரி, மருந்து எழுதி தர்றேன். ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு. எல்லாம் சரி ஆயிடும்"

"டாக்டர்.. எம்.சி?"

"எம்.சியா? உனக்குதான் க்ளாஸ் இல்லைன்னு சொன்னியே?"

"2-3 நாளாவே வலின்னு சொன்னேனே.. 2 நாளுக்கு முன்னாடி வலின்னால லேப்க்கு போக முடியல. அதுக்குதான் எம்.சி வேணும்..."

"அப்படி வா வழிக்கு. எல்லாம் நார்மலா இருக்கும்போதே நெனச்சேன்."ன்னு சொல்லி ஒரு முறை முறைச்சார்.

"சாரி டாக்டர். உண்மையை சொல்லிடுறேன்"ன்னு எல்லாத்தையும் சொல்லி இனிமேல் இப்படியெல்லாம் பண்ண மாட்டேன். இதுக்கு மட்டும் கொடுத்துடுங்க. என் வாழ்க்கை பிரச்சனைன்னு வாயில வந்தது எல்லாத்தையும் போட்டு எப்படியோ அவரை கூல் பண்ணிட்டேன்.

"சரி, நான் கேட்குற கேள்விக்கு சரியா பதில் சொல்லு. உனக்கு நான் எம்.சி கொடுக்குறேன்"ன்னு சொல்லி இஞ்சினியரிங் mathematics-ல இருந்து ரெண்டு கேள்வியும், 2 physics கேள்வியும் கேட்டார்.

maths நமக்குதான் கை வந்த கலையாச்சே. அதுக்கு சரியான பதில் சொல்லிட்டு physicsல நீங்க theory கேட்குறீங்க. எனக்கு அது ஞாபகத்துல இல்ல. எனக்கு தெரிஞ்ச வேற ஒரு theory சொல்றேன்ன்னு விளக்கினேன்.

என்னோட பதிலில் அவருக்கு பூரண திருப்தி போல. "கூட். இந்தா உனது எம்.சி. இனிமேல் எம்.சி வேணும்ன்னு இந்த க்ளினிக் பக்கம் பார்க்க கூடாது. சரியா?"ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னார்.

என்ன ஆச்சர்யம்! 2-3 நாள் சீரியஸ் வலி மாதிரி அந்த எம்-சி எழுதி 3 நாள் எம்.சி போட்டிருந்தார். "டாக்டர், எனக்கு அந்த ஒரு நாளுக்கு மட்டும்தான் எம்.சி வேணும். நீங்க மூனு நாளுக்கு கொடுத்திருக்கீங்களே?"ன்னு கேட்டேன்.

அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். "2 நாள் முன்னாடி உனக்கு லேப்ன்னு சொல்ற. அப்படின்னா நேற்றே உன் எம்.சி நீ லேப்ல சப்மிட் பண்ணியிருக்கணும். அப்படி பண்ணலைன்னா அந்த எம்.சி expiredதான். நீ அந்த லேப் எப்போதுமே ரிப்லேஸ் பண்ண முடியாது. நல்லா படிக்கிற புள்ளையாட்டம் இருக்கே. நீ அந்த லேப் செய்யணும். 3 நாள் எம்.சின்னா நாளைக்கு காலையில இந்த எம்.சி சப்மிட் பண்ணாலும் ஏன்னு கேள்வி கேட்காமல் எடுத்துப்பாங்க. கூட் லக்". சொல்லிக்கொண்டே தன் கட்டை விரலை உயர்த்தினார்.

ஆஹா.. இப்படியும் ஒரு டாக்டரா?

இதுவரை க்ளீனிக் அலல்து மருத்துவமனை பக்கம் வந்தாலே ஒன்னு யாராவது நண்பர் அல்லது உறவினரை பார்க்கத்தா போயிருந்தேன். அல்லது இந்த மாதிரி ஆபத்து அவசரத்துல எம்.சி எடுக்க மட்டுமே இந்த மருந்து வாடை இடத்தில் நுழைந்திருந்திருக்கிறேன். இனி நானே சீரியஸா இருந்தாலும் க்ளீனிக் / மருத்துவமனை பக்கம் வரவே கூடாது. முக்கியமாக எம்.சி எடுப்பது பற்றி நினக்கவே கூடாது என்று முடிவெடுத்தேன்.

ஆனால், முடிவு அடுத்த செமெஸ்டரே மாறும்ன்னு நான் கூட நெனச்சி பார்க்கலையே!

[தொடரும்.....]

எம்.சி: MC --> Medical Certification.
பொந்தேங் : Ponteng --> வகுப்புக்கு போகாமல் மட்டம் போடுவது

16 Comments:

said...

என்ன ரொம்ப நல்லவனு சொல்லிடாங்கப்பா....

said...

அதான் தவனைக்கு ஒன்னுனு சொல்லியாச்சுல... பிறகு என்ன கணக்கு வழக்கில்லாமல்... புலவரே உங்கள் பாடலில் பொருட்பிழை உள்ளது...

Anonymous said...

இவ்வளவு நல்லா டாக்டரா?நான் இந்த தடவை வசமா மாட்டிக்கிட்டேன்.பாவி பசங்க வீட்டுக்கு லெட்டர் அனுப்பி நான் கிளாஸ்க்கு மட்டம் போட்டுடேன்ன்னு போட்டு கொடுத்துட்டாங்க...வீட்டுல சங்குன்னு நான் சொல்லிதான் தெரியுனுமா??

Anonymous said...

//என் பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு //

நாங்க ரொம்ப பாவம் தானே........

:-)

Kathir.

Anonymous said...

//நல்லா படிக்கிற புள்ளையாட்டம் இருக்கே. நீ அந்த லேப் செய்யணும்//

இது நீங்களா போடற பிட்டு தானே...


Kathir

said...

கொசுவத்தியா..சுத்துங்க சுத்துங்க :))

said...

டாக்டரு நெம்ப நல்லவரு போல....
:)

said...

//"சாரி டாக்டர். உண்மையை சொல்லிடுறேன்"ன்னு எல்லாத்தையும் சொல்லி இனிமேல் இப்படியெல்லாம் பண்ண மாட்டேன். இதுக்கு மட்டும் கொடுத்துடுங்க.//

;)

said...

// Anonymous said...
//நல்லா படிக்கிற புள்ளையாட்டம் இருக்கே. நீ அந்த லேப் செய்யணும்//

இது நீங்களா போடற பிட்டு தானே...


Kathir//

ரிப்பீட்டேய்.. ;)

said...

//"சரி, நான் கேட்குற கேள்விக்கு சரியா பதில் சொல்லு. உனக்கு நான் எம்.சி கொடுக்குறேன்"ன்னு சொல்லி இஞ்சினியரிங் mathematics-ல இருந்து ரெண்டு கேள்வியும், 2 physics கேள்வியும் கேட்டார்.//

என்ன கொடூர புத்தி உள்ள டாக்டர்..

நீங்க வெளிநடப்பு செய்திருக்கணும்..

;)

said...

மை பிரெண்ட்.. பக்கத்தில் இருக்கும் குழந்தை யார்..?

சூப்பராக உள்ளது..

said...

ஓ இப்படி ஒரு மலரும் நினைவுகள் தொடருதா..இங்க.. :)

said...

/
விக்னேஷ் ரொம்ப நல்லவர் போல. ச்சும்மா பதுங்கி பதுங்கி, அதுவும் ஒரே ஒரு எம்.சிதான்
/

You mean Mc ????

said...

/
"டாக்டர்.. எம்.சி?"
/

இங்க எல்லாம் டாஸ்மாக்லதானே Mc கிடைக்கும் அங்கல்லாம் டாக்டரே விக்கிறாரா??????

கொக்க மக்கா

said...

/
நல்லா படிக்கிற புள்ளையாட்டம் இருக்கே.
/

இதெல்லாம் ரொம்பாஆஆஆஆ ஓவரு!!

:))

said...

/
முக்கியமாக எம்.சி எடுப்பது பற்றி நினக்கவே கூடாது என்று முடிவெடுத்தேன்.
/

வேற ப்ராண்டுக்கு மாறீட்டீங்களா????