Thursday, August 07, 2008

நினைத்தாலே இனி(கச)க்கும் - 2

முதல் செமெஸ்டர்லதான் பொய் சொல்லத் தெரியாமல் சொல்லி டாக்டரை விரிவுரையாளராக்கி 3 நாள் எம்.சி எடுத்து லேப் இன்னொரு நாளில் செய்து அந்த செமெஸ்டரை முடித்தேன். இனி எப்போதுமே எம்.சி எடுக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக் கொண்டேன்.

காலங்கள் உருண்டோடின (காலத்துக்கு சக்கரங்கள் இருக்குன்னு என் டீச்சர் எனக்கு சொல்லியே தரலையே..). இரண்டாவது செமெஸ்டர் ஆரம்பமானது. இந்த தடவை முதல் வாரத்துலேயே என்னுடைய லேப் க்ரூப் (அதே எட்டாவது க்ரூப்தான்), லேப் தேதிகள் எல்லாமே குறித்து வைத்துக் கொண்டேன். இனி பாருங்க. "எப்படி கரேக்டா எல்லா லேப்லயும் அட்டெண்டண்ஸ் போடுறேன்"ன்னு நண்பர்களிடம் பெருமையா சொன்னேன்.

இந்த தடவை 6 லேப் செஷன் மட்டுமே. ஒன்றாவது லேப் முடிந்து இரண்டாவதும் முடித்து விட்டேன். மூன்றாவது லேப் செல்லும்முன், திரும்ப அதே க்ளீனிக்கின் வாசலில் போய் நின்றேன். இந்த தடவை என் கூட ஒன்னொரு தோழியும் நின்றிருந்தாள்.

அவளை வெளியேயே நிக்கச் சொல்லிட்டு உள்ளே வந்து "Doctor On Duty" பலகையில் யார் பெயர் போட்டிருக்கு என்று திருட்டுத்தனமா பார்த்தேன். அப்பாடா.. நல்ல வேளை. இன்னைக்கு அந்த டாக்ரர் லீவூ போல. யாரோ இன்னொரு அம்மணி டாக்டரா இருக்காங்க என்ற திருப்தியில் வெளியே சென்று என் தோழியை அழைத்தேன்.

கவுண்டரில் மெடிக்கல் கார்ட் எல்லாம் காட்டி அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிவிட்டு சோபாவில் அமர்ந்தோம். அப்போது அங்கே இருந்த தொலைக்காட்சியில் ஏதோ நல்ல படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. விருவிருப்பான காட்சி. அன்னார்ந்து தொலைக்காட்சியில் முழு கவனத்தையும் செலுத்திக்கொண்டிருந்தபோது என் முன்னே ஒருவர் வந்து நின்றார்.

ஆஹா.. ஆப்பு இன்னைக்கு கண்ஃபார்ம்தான்! என் முன்னாடி நிற்பவர் நான் முன்னாடி ஒரு நாள் பின்னாடி இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சபதம் எடுத்ததுக்கு காரணமானவர். ஒரு பக்கம் பக் என்று இருந்தாலும் நிலைமையை சரி செய்ய..

"அடடே டாக்டர்.. கூட் மார்னிங் டாக்டர். சௌக்கியமா?"

"என் சௌக்கியம் இருக்கட்டும். என்ன இந்த பக்கம்? யாரோ ஒருத்தவங்க இனி இந்த பக்கமே வர மாட்டேன்னு சபதம் போட்டுட்டு போனதால ஞாபகம்?"

"யாரு டாக்டர்? ரொம்ப வித்தியாசமான கேரக்டரா இருக்கே? எனக்கு அறிமுகப்படுத்துறீங்களா?"

" ம்ம்.. வாய் நீண்டுடுச்சு போல? உள்ளே வா.. ஒரு ஊசி போடுறேன். அப்போ தெரியும் யாரந்த கேரக்டர்ன்னு" என்று திரும்பி டாக்டர் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

"டாக்டர், டாக்டர். நில்லுங்க. அது ச்சும்மா தமாசுதான். நோ டென்ஷ்ன் ப்ளீஸ். இன்னைக்கு வேற ஒரு டாக்டர் பெயர் On Dutyல எழுதியிருக்கு? ஆனால், நீங்க வந்திருக்கீங்க?"

"ம்.. யாரு டூட்டில இருக்கா? யாரிடம் ஈசியா ஏமாத்தி எம்.சி வாங்கலாம்ன்னு பக்காவா ப்ளான் போட்டுதான் வந்திருக்கியா? On Duty வேற டாக்டர்தான். ஆனால், உன் கேஸ் மட்டும் நானே கவனிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். உன் டர்ன் வரும்போது உள்ளே வா."

வில்லத்தனமான சிரிப்பு என்று சொல்வார்களே. எனக்கு தெரிந்து நான் பார்த்த முதல் வில்லத்தனமான சிரிப்பு.. அதுவேதான்.

திரும்ப என் தோழியின் பக்கம் வந்து "இன்னைக்கு எம்.சி எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஆனால், எப்படியாவது எம்.சி வாங்கிடணும்ன்னு உறுதியா இருக்கேன். முடியுமா?"ன்னு தோழியிடம் கேட்டேன். அவள் "இன்னைக்கு முயற்சி தோல்விதான். கண்ஃபார்மா சொல்றேன்"ன்னு ஒரு குண்டை போட்டாள்.

எங்க டர்ன் வந்ததும் உள்ளே போனோம். On Duty டாக்டர் எதிர்த்தாப்புல உள்ள நாற்காலியில் நமக்கு வேண்டப்பட்ட டாக்டரும் உட்கார்ந்திருந்தார். நாங்க உள்ளே வந்ததும் எங்க டாக்டர் அவர் வேலையை ஆரம்பித்துட்டார்.

"டாக்டர், இந்த பொண்ணுக்கு என்ன சீக்குன்னு எனக்கு தெரியும். நீங்க ஒரு எம்.சி எழுதுங்க முதல்ல"

அந்த டாக்டர் கொஞ்சம் ஷாக் ஆன மாதிரிதான் இருந்துச்சு. ஆனாலும் திரும்ப சகஜ நிலைக்கு வந்து "ஓ.. உங்க பேஷண்டா? ஃபாலோ அப்க்கு வந்திருக்காளா? செக் பண்ணிடுவோம்ன்னு மெடிக்கல் கார்டில் பார்த்தாங்க."

கார்டை பார்த்துட்டு "ஒரு நோயும் இருக்கிற மாதிரி தெரியலையே. நீ வந்து என் பக்கத்துல உட்காரும்மா"ன்னு சொன்னாங்க.

நான் நமக்கு வேண்டிய டாக்டர் பக்கத்துல உள்ள நாற்காலியில் உட்கார்ந்தேன். என் தோழி On Duty டாக்டர் பக்கத்துல உட்காந்தாள்.

"டாக்டர், இந்த பொண்ணுக்குதான் உடம்பு சரியில்லை. முதல்ல ரெண்டு பேரையும் இடம் மாறி உட்கார சொல்லுங்க"ன்னு நம்ம டாக்டர் சொல்ல.. டாக்டர் மெடிக்கல் கார்டில் உள்ள பெயரை உற்சரித்து இது யாருன்னு கேட்க, என் தோழி அவள்தான் என்று சொல்ல.. நான் நம்ம டாக்டரை பார்க்க.. அவரும் என்னை பார்க்க... ஆஹா.. இந்த காட்சியை இன்னும் எந்த இயக்குனரும் தன்னோட படத்துல போடலையே.. அந்த அளவு சூப்பரானா காட்சி.

தோழியை டாக்டர் செக்-அப் செய்ததும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொல்லி ஒரு எம்.சியும் கொடுத்தார்.

ரெண்டு டாக்டருக்கும் "டா டா.. பை பை" சொல்லிட்டு வெளியே வரும்போது நம்ம டாக்டருக்கு ஸ்பெஷலா ஒரு "டா டா பை பை" சொன்னேன்.

அவரோ என்னை பார்த்து பாராட்டி "இப்போல்லாம் நீ ரொம்ப பொறூப்பா இருக்கே. ஏற்கனவே நல்லா படிக்கிற பொண்ணு. தன்னோட வேலையே பெருசுன்னு மத்தவங்க நினைக்கிற இந்த காலக் கட்டத்துல தோழிக்கு உடம்பு சரியில்லைன்னதும் கூட வந்து உதவி செய்ததில் மனிதாபிமானம், நட்பு, பாசம் எல்லாமே உனக்கு அதிகம் இருக்கு. கீப் இட் அப்" என்றூ சொல்லி தன் கட்டை விரலை உயர்த்தினார்.

"டாக்டர், என்னை ரொம்ப புகழாதீங்க. எனக்கு வெட்கமா இருக்கு"ன்னு ஒரு பிட்டை போட்டு நாங்க ரெண்டு பேரும் அங்கே இருந்து எஸ்கேப் ஆகிட்டோம்.

க்ளீனிக் வெளியே வந்ததும்,

"பார்த்தீயா.. உனக்கு கண்டிப்பா எம்.சி வாங்கி கொடுத்துடுவேன்னு சொன்னேன்ல. ஒரு தடவைதான் ஏமாறுவேன். அதுல இருந்து நல்லா பாடத்தை கற்றுக்கொண்டு இன்னைக்கு உன்னை நடிக்க வச்சு எம்.சி வாங்க வச்சுட்டேன்" என்று தோழியிடம் சொன்னேன்.

"அந்த டாக்டர் வந்து அப்படி சொன்னதும் இன்னைக்கு எனக்கு எம்.சி கிடைக்கவே கிடைக்காதுன்னுதான் நினைச்சேன். நான் நடிக்கிறேன்னு கண்டு பிடிச்சிடுவாரோன்னு பயந்துட்டே இருந்தேன். ஆனால், அவர் நீதான் பேஷண்ட்ன்னு நெனச்சதால என் மேலே அவ்வளவு அக்கறை காட்டாததுனால இது நடிப்புன்னு கண்டுபிடிக்கல. எப்படியோ எனக்கு எம்.சி கிடைச்சுடுச்சு. நன்றி"ன்னு சொன்னாள்.

ம்ம்.. எம்.சி.. இரண்டாவது செமெஸ்டரில் எனக்கு நான் எடுத்துக்கலை. தோழிக்கு எடுத்துக் கொடுக்க உதவினேன். அப்படியே இரண்டாவது செமெஸ்டர் முடிந்தது.

ஆனால், இந்த எம்.சி எடுக்கிற பழக்கம் இன்னும் என்னை விட்டு போகவில்லை. மூனாவது செமெஸ்டர் வந்துட்டே இருக்கு.

[தொடரும்..]

10 Comments:

said...

Fuiyoo.........

said...

/
"இப்போல்லாம் நீ ரொம்ப பொறூப்பா இருக்கே. ஏற்கனவே நல்லா படிக்கிற பொண்ணு.
/
பதிவை எல்லாரும் புறக்கணிங்கப்பா

:)))))))))

said...

M.C. மொத்தமா குத்தகைக்கு எடுத்துடீங்க போல ...

said...

அந்த டாக்டர் குட் கேர்ள் ன்னும் சர்டிபிகேட்லாம் போட்டுத்தருவரா.. :)

said...

மீ த சிக்ஸ்த்!
:)

said...

//மங்களூர் சிவா said...
/
"இப்போல்லாம் நீ ரொம்ப பொறூப்பா இருக்கே. ஏற்கனவே நல்லா படிக்கிற பொண்ணு.
/
பதிவை எல்லாரும் புறக்கணிங்கப்பா

:)))))))))
//

ரிப்பீடேய்..ரிப்பீடேய்..ரிப்பீடேய்..

said...

//"டாக்டர், என்னை ரொம்ப புகழாதீங்க. எனக்கு வெட்கமா இருக்கு"//

யப்பா.. தாங்க முடியாலடா சாமி..

said...

/
M.Saravana Kumar said...

//"டாக்டர், என்னை ரொம்ப புகழாதீங்க. எனக்கு வெட்கமா இருக்கு"//

யப்பா.. தாங்க முடியாலடா சாமி..
/

ரிப்பீட்டு

said...

:)

said...

ஹ்ம்ம்ம்.. படிக்க நல்லா தான் இருக்கு.. ஆனா இதெல்லாம் எதோ படிக்கிற பசங்க சமாச்சாரமா இருக்கு..:)