Thursday, August 14, 2008

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சீனா செய்த மோசடிகள்

பெய்ஜிங் 2008 நடத்திக்கொண்டிருக்கும் சீனா மற்றும் உண்மையான சீனா. நிறைய வித்தியாசம் இருக்குங்க.இந்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணியாக போறீங்களா? ஊரை பார்த்து இதுதான் சீனா என்று தப்பாக எடை போடாதீர்கள்! In China, Things are not always as they seem.

எல்லா ஒலிம்பிக் நகரங்களை போல சீனாவும் தனக்கு புது/ சூப்பரான இமேஜ் உருவாக்கிக்கொள்ள முயற்சி பண்ணியிருக்கின்றது. பிச்சைக்காரர்கள் வேறு மாநிலத்துக்கு புலம் பெயர்க்கப்பட்டார்கள். தலைநகத்தில் உள்ள தொழிற்சாலைகள் நகரத்துக்கு வெளியே இடம்பெயர்க்கட்டன (இதற்கு எவ்வளவு செலவு பண்ணியிருக்கிறார்கள் தெரியுமா?).

ஒலிம்பிக்காக ஒரு மாநிலத்தை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சீனா நாட்டையே சுத்தும் செய்தது சீனா அரசாங்கம். சாலைகளை சுத்தம் செய்து, புது சாலைகளை உருவாக்கி, பழுதடைந்து கிடந்த சமிக்ஞை விளக்குகளை சரிப்படுத்தி, சுத்தமாக துடைத்தெடுத்திருக்கின்றனர். சாலைகள் கண்ணாடிப்போல பளப்பளக்குதாம். சாலையோரங்களில் பூக்களும், தோட்டங்களும், மரங்களும் நடப்பட்டன. செடிகள் என்றால் சாதாரண செடிகள் இல்லை. எல்லா செடிகளிலும் பூக்கள் பூத்துக்குலுங்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டு முடியும்வரை இந்த செடிகளுக்கு, தோட்டங்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பேணிக்காக்க எக்கச்சக்க வேலையாட்களை நியமித்தது சீனா அரசாங்கம். எல்லா கட்டடங்களுக்கும், வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டன. பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமானப்பணிகள் அப்படியே இருந்தால் அசிங்கமாக காட்சியளிக்கும் என கருதி அவைகளுக்கும் வர்ணம் பூசி, சுத்தம் செய்தார்கள். சீனாவில் இன்னொரு பெரிய பிரச்சனை புகைமூட்டம். தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வரும் புகைமூட்டத்தினால் 10 அடி தள்ளியிருக்கும் பொருளும் மங்களாகத்தான் தெரியும் (முக்கியமாக பெய்ஜிங்கில்). செயற்கை மழை, அது இது என்று செய்து புகைமூட்டத்தை (சீனா முழுக்க) போக்கியிருக்கின்றன. ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் முன்னரே பெய்ஜிங்க் நகரில் நுழைய எந்த கார்களும் அனுமதிக்கபடவில்லை. ஆக மொத்தத்துல சீனா சீனாவாகவே இல்லை. என் மேனஜர் இரண்டு மாதத்துக்கு முன்னாடி சீனாவுக்கு போய் வந்தார். போய் வந்தவுடன் ஒரு நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுத்தமான காற்று இல்லாததால் வந்த வினை. அவருக்கு ஏற்கனவே நுரையீரலில் ஒரு சின்ன சிக்கல் இருந்தது. பிறகு 2 வாரத்துக்கு முன்னரும் சென்றிருந்தார். நம்பவே முடியாத அளவில் சீனா மாறியிருந்தது. தெளிந்த வானம், சுத்தமான இடம் என்று உருத்தெரியாமல் மாறியிருந்தது. அவர் காட்டிய படங்களை பார்க்கும்போதே புரிந்துவிட்டது சீனாவின் தந்திரம்!

இவையெல்லாம் தன் நாட்டிற்கு பாசிட்டிவ் இமேஜ் உருவாக்குறதுக்காகத்தான் சீனா செய்தது. தப்பே இல்லை! ஒரு விளையாட்டுக்காக ஒரு நாடே சுத்தம் செய்வது பெரிய விஷயம். அதுவும் இதற்காக மட்டுமே இவ்வளவு செலவு பண்ணியிருக்காங்களே. எந்த நாடு இவ்வளவு செலவு பண்ணும்?


ஆனால், இவையெல்லாம் தவிர்த்து ஒலிம்பிக் திறப்புவிழாவில் சீன அரசாங்கம் செய்த பொய்த்தனம் இருக்கே! உலக மக்கள் நாம் அனைவரையும் முட்டாள் ஆக்கிவிட்டது!!!!

பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் திறப்புவிழாவை கண்டு வியக்காத மக்களே இல்லை. யூடியூப்பில் ஒவ்வொரு வீடீயோக்கு கிடைத்த ஹிட்ஸை பார்த்தாலே தெரியும்! உலக மக்கள் பார்த்து மிகவும் வியந்த ஒரு நிகழ்வு வானவேடிக்கை. பல நாடுகள் அந்த வானவேடிக்கையை புகழ்ந்து தள்ளின. "இப்படி செய்வது மிகவும் கடினம். ஆனால் சீனா சிறிது தவறுமின்றி செய்தது" என்று பல பத்திரிக்கைகள் சொல்லியிருந்தன.

ஆனால், அந்த வானவேடிக்கைகளில் பாதி பொய்யானது. ஏற்கனவே வெடித்து அதை பதிவு செய்து திறப்புவிழா அன்று உண்மையான வானவேடிக்கைகளையும் போலியையும் கலந்திருக்கிறார்கள். பார்த்த நமக்கு எது உண்மையானது எது போலியானது என்று கூட கண்டுப்பிடிக்க முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறது! உண்மையில் அவர்கள் வெடிக்க வைத்திருந்து சில வானவேடிக்கைகள் வெடிக்காமல் செயலிழந்தும் இருந்திருக்கின்றன. அதையும் நாம் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தியானெந்மென் (Tiananmen) சதுரங்கத்திலிருந்து விளையாட்டரங்கத்துக்கு நகர்ந்த ராட்சச்ச சுவடுகள் கூட உண்மையானதில்லை. அது கணிணியால் உருவாக்கப்பட்ட பொய்யான வானவேடிக்கைதான்! They can do anything under the sky!

இதையும் தவிர்த்து இன்னும் பெரிய பொய்யை நம் தலையில் கட்டியிருக்கிறது சீனா!

திறப்புவிழாவில் அத்தனை மக்களின் மனதையும் கொள்ளைக்கொண்ட சிறுமி லின் மியோகே (Lin Miaoke). சிவப்பு நிற கவுனில் ரெட்டை வால் முடிக்கட்டி சிரித்த முகத்துடன் சீனாவின் தேசியகீதத்தை பாடினாள். மறுநாள் எல்லா நாளிதழிலும், தொலைக்காட்சிகளிலும் "The Rising Star of East" என்று வர்ணிக்கப்பட்டாள். அறுபுதமான குரல், நல்ல குரல்வளம், பெரிய பாடகியாய் வருவாள் என வர்ணிக்கப்பட்டாள். பல விளம்பரங்களில் நடிக்க கோறியும், பல இண்டர்வியூவில் பங்குப்பெறவும் அழைப்புகள் இச்சிறுமிக்கு வந்துக்கொண்டே இருக்கின்றது. ஆனால், அந்த சிறுமியை அதே பாடலை இப்போது பாடச் சொல்லுங்களேன் பார்ப்போம்!

உண்மையில் இந்த பாடலை பாடியவர் யங் பெய்யீ (Yang PeiYi) என்ற 7 வயது சிறுமி. சில ஒத்திகைகளிலும் பெய்யீயை உபயோகப்படுத்திவிட்டு, திறப்புவிழாவில் இன்னொரு பெண்ணை நிற்க வைத்திருக்கிறார்கள். ஏன்? என்று நாம் கேட்கும் காரமான கேள்விக்கு சீனா அரசாங்கமும் நிகழ்ச்சி நடத்துணர்களும் பதில் சொல்கிறார்கள்:

" பெய்யீ அழகாக இல்லை. பற்கள் சீராக இல்லை. நாங்கள் ஒரு நேர்த்தியான நாட்டின் இமேஜை பிரதிப்பலிக்க நினைக்கிறோம். இந்த இமேஜுக்கு பெய்யீயின் முகம் சரிவராது. அதனால்தான் மியோகோவை தேர்ந்தெடுத்தோம்"

அடப்பாவிமக்கா.. பெய்யீயும் உங்க நாட்டு பொண்ணுதான்! மியோகோவும் உங்க நாட்டு பொண்ணுதான்! அழகாய் இல்லைன்னா இவள் உங்க நட்டு பெண்ணாய் இருக்க முடியாதா? இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இவர்களையெல்லாம் நாடு கடத்திடுவீங்க போல?

அழகா முக்கியம்? அறிவு, திறமைதானே முக்கியம்! அதுவும் அறிவியல் மற்றும் எல்லா விஷயங்களிலும் முதன்மையில் நிற்கும் சீன நாட்டின் பேச்சா இது!!!!!

பெய்யீக்கு என்ன குறை? அவள் அழகாய்தானே இருக்கா? சின்ன பிள்ளைகள் எப்படி இருந்தாலும் அவர்கள் அழகுதான். cute-தான். அதற்காக அவளுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை இப்படியா முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பார்கள்?

உண்மை வெளியே தெரிந்ததில் பெய்யீக்கு ஒரு வகையில் நல்ல விஷயம்தான். ஆனால் மியோகோவின் நிலமை? infact, நிகழ்ச்சியில் அவள் பாடும் (நடிக்கும்)போது இன்னொரு பெண்ணின் குரலுக்கு தான் வாயசைக்கிறோம் என்று கூட தெரியாமல் இருந்திருக்கலாம்! அவள் பாடியது மற்றவர்களுக்கு கேட்காது என்ற உண்மை அவளிடமிருந்தே மறைக்கப்பட்டிருக்கலாம். நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்து இண்டர்வியூவில் கலந்துக்கொண்டபோது அவள் திறமைக்கு கிடைத்த பரிசென்று நினைத்திருக்கும் மியோகோ இனி எப்படி வெளியே தன் முகத்தை காட்டுவாள்? எல்லாரும் அவளை கேலி பண்ண மாட்டார்களா?

சீனா தன் இமேஜுக்காக மியோகோவை ஊறுகாயாக பயன்படுத்திக்கொண்டதென்று சொல்லலாமா?

30 Comments:

said...

ஆதாரங்களை கச்சிதமா சொல்லி வைத்து விட்டீங்க.

உங்கள நான் லேடி விஜய்காந்த்துன்னு கூப்பிடலாமா?

said...

நான் கூட அந்த சிறுமை(மி)யை பார்த்து ஏமாந்துட்டேன்பா

Anonymous said...

i'm also into those things. care to give some advice?

said...

//கானா பிரபா said...
ஆதாரங்களை கச்சிதமா சொல்லி வைத்து விட்டீங்க.

உங்கள நான் லேடி விஜய்காந்த்துன்னு கூப்பிடலாமா?//


ரிப்பீட்டேய்...

said...

//national lottery said...
Baw ah, kasagad sa imo maghimo blog. Nalingaw gd ko basa.//

அடப்பாவிகளா...என்ன மொழிடா இது????

said...

யம்மாடியோவ் இவ்ளோ அக்கிரமம் பண்ணியிருக்காங்களா??????


:(



//கானா பிரபா said...
ஆதாரங்களை கச்சிதமா சொல்லி வைத்து விட்டீங்க.

உங்கள நான் லேடி விஜய்காந்த்துன்னு கூப்பிடலாமா?
//
சும்மா புட்டு புட்டு வைச்சுப்புட்டாங்க!

நான் கூப்பிடறேன் லேடி விசயகாந்துன்னே :))))

said...

சிறுமி லின் மியோகே மற்றும் யங் பெய்யி பற்றிப் படித்தேன்.அடடா ஒரு பதிவு தப்பித்து விட்டதே:) ஆனாலும் பரவாயில்லை.வான வேடிக்கையில் கூடப் பித்தலாட்டம் செய்ய முடியுமா? இந்த கூடுதல் செய்திக்காக பதிவு உங்களையே சாரும்.

said...
This comment has been removed by the author.
said...

நல்ல கட்டுரை. மேலும் முக்கியமாக பத்திரிகை சுதந்திரம் வாக்கு அளித்தது போல் இல்லை. அவர்கள் 2001'இல் ஒலிம்பிக் commitee கிட்ட முக்கியமா சொன்னது "no restriction on internet access". ஆனால் இப்போ நிறைய site'கள் are still blocked (திபெத், amnesty, etc) என்பதே நிஜம்.

said...

சூப்பர் பதிவு! அந்த இரு குழந்தைகளை பத்தி எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன்..நீங்களே எழுதிவிட்டீர்கள்!! :))

said...

காரணம் எதுவாக இருந்தாலும் ஒலிம்பிக் மூலம் சீன மக்களுக்கு பல கட்டமைப்பு வசதிகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. சீக்கிறமே இந்தியாவிற்கு ஒலிம்பிக் போட்டி நடத்த வாய்ப்பு கிடைக்கனும். :)

ஆனால் அந்த சிறுமிகள் விஷயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது சீனாவிற்கு மிகப் பெரும் கேவலம்.. ஒரு குழந்தையின் மனதை காயப் படுத்திவிட்டு அந்த நாடு என்ன சாதித்தாலும் அது அசிங்கம் தான். அந்த குட்டி பெண்ணுக்காக வருந்துகிறேன். :(

//செடிகள் என்றால் சாதாரண செடிகள் இல்லை. எல்லா செடிகளிலும் பூக்கள் பூத்துக்குலுங்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டன.//
செடிகள் கூட அரசாங்க ஆணையை ஏற்குமா? :))

said...

ஓ இத்தனை நடந்திருக்கா.. அழகு விசயம் கொடுமையானது.. வானவேடிக்கை போலி புரியல எனக்கு...

இன்னும் இந்தியாவில் ஏறக்குறைய இதே தான் நடக்க் இருக்கிறது.. காமன்வெல்த் போட்டிக்காக பிச்சைக்காரர்களை வெளியேற்றுவது.. அழகான தாழ்நிலைபேருந்துகள்.. ஏசி பஸ்கள் என்று ஊரின் நிறம் மாறிக்கொண்டிருக்கிறது...

said...

/
lotto online said...

i'm also into those things. care to give some advice?
/

/
//national lottery said...
Baw ah, kasagad sa imo maghimo blog. Nalingaw gd ko basa.//
/

ரிப்பீட்டு

said...

நல்ல பதிவு.

Anonymous said...

The Chinese Gymnasts: Age Questions Remain

http://www.time.com/time/world/article/0,8599,1832312,00.html?imw=Y

said...

அப்புறம் அவங்க ஜின்நாஸ்டிக்ஸ் அணியில் எல்லாரும் குழந்தைகளாமே. போதிய வயதில்லை என்றால் பங்கேற்க முடியாது என்பதால் அவர்கள் எல்லாருக்கும் 16 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டார்களாமே....

said...

ஹலோ அம்மணி... ஒலிம்பிக் நடத்துறதே வணிக நன்மைக்காகத்தான்... சுற்றுலா துறைல எவ்வளவு வருமானம் வரும்னு தெரியுமா?? அந்த ஊர சுத்தப்படுத்தியிருக்குறது நல்லதுதானே?? அது எப்படி மோசடில சேரும்?? நம்ம வீட்டுக்கு ஒருத்தர் வந்தா நம்ம வீட்ட சுத்தப்படுத்த மாட்டோமா?? அதேதானே அங்கேயும்??

அப்புறம் வானவேடிக்கை திரித்தல் எல்லாம் நேர்த்திக்காக எல்லாரும் செய்ற வேலைதான்... ஸோ... அதையும் மோசடினெல்லாம் சொல்ல முடியாது...

மூன்றாவது விசயம்... மோசடின்னு ஒத்துக் கொள்ள வேண்டியது.. அட்லீஸ்ட் அந்த குரலுக்கு சொந்தக்காரங்க வேற சிறுமின்னாவது சொல்லிருக்கனும்

கொத்ஸ் சொன்ன வயசு மேட்டர் பயங்கரமான மோசடி, உண்மையாயிருக்கும் பட்சத்தில்...

said...

ஆதாரங்களை கச்சிதமா சொல்லி வைத்து விட்டீங்க.
உங்கள நான் லேடி விஜய்காந்த்துன்னு கூப்பிடுவேன்

said...

ஜி சொன்னது போல் அந்த சிறுமி விஷய்த்தைத் தவிர மற்றவை மோசடி என்று சொல்ல இயலாது... இதெல்லாம் சகஜம் தான்

said...

இப்படி கூடவா மோசடி செய்வாங்க:(

பதிவு நச்சுன்னு இருக்கு மை ஃப்ரண்ட், நல்லா எழுதியிருக்கிறீங்க!

Anonymous said...

பத்து வருடத்திற்கு முன் நம் நாட்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு பண்ணாத கூத்தா? நேரம் கிடைத்தால் புக்கிட் ஜாலில் அரங்கத்திற்குச் சென்றுப் பாருங்க... பராமரிப்பு இல்லாமல் காடாய் கிடக்கிறது...(ஒரு சில இடங்கள் மட்டும்) !
அப்புறம் அந்த சிறுமிகள் பற்றியது வருத்தமானதுதான்

said...

தேவையில்லா டென்ஷன் இது.

ஓலிம்பிக் பேரால் அந்த நாடு மேலும் முன்னேறுது.

இந்த மாதிரி ப்ரம்மாண்ட நிகழ்ச்சிகளில் லிப்-ஸிங்கிங் எல்லாம் சாதாரணம்.

said...

எனக்கு எரிச்சலூட்டிய ஒரே விஷயம், பத்து வயசு குழந்தைகளை 16 வயசாயிடுச்சுன்னு ஜிம்னாஸ்ட்டிக்ஸ் செய்ய வைக்கரது.

Anonymous said...

இப்படி கூடவா செய்வாங்க:(

நல்லா எழுதியிருக்கிறீங்க!

said...

olympickukaga mattumae pollutionai kuraithdhu kandikathakathu

Anonymous said...

//மியோகோ இனி எப்படி வெளியே தன் முகத்தை காட்டுவாள்? எல்லாரும் அவளை கேலி பண்ண மாட்டார்களா?//

பாவம் அந்த பெண்

said...

சில சீன நண்பர்களுடன் பழகிய அனுபவத்தால் ரெண்டு வார்த்தை,
1) சீனருக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான மேட்டர் பொதுதோற்றம்.
2) தாங்கள்தான் உலகிலேயே மிகவும் பண்பாடுடயவர்கள், மற்றவர் எல்லாம் காட்டான் கூட்டம் என்று அபரிமிதமான எண்ணம்

சீரழிந்த மன்னர் ஆட்சியும், பின்னர் ஆங்கிலேயரின் கீழ் பட்ட அடிமைத்தனமும் அவமானமும், பின்னர் சென்ற நூற்றாண்டின் வறட்டு கம்யுனிச கொள்கைகளால் வந்த ஏழ்மையும் பெரும்பாலான சீனருக்கு எப்படியாவது தங்களுக்கே உரிய அந்த முதல் இடத்தை பிடித்து உலக நாடுகள பிரம்மிப்படைய வைக்க வேண்டும் என்பது ஒரு மிக முக்கியமான விஷயம்.

இதனால் இந்தா டுபாகூர் மேட்டர் எல்லாம் அவர்களுக்கு நியாமாக தெரிகிறது. நன்கு படித்த, வெளிநாடு வாழ் சீனர் கூட இதை ( சீனத்தின் பிறப்புரிமையாகிய முதலிடம், அதற்காக செய்யும் எல்லா வேலையும் நியாயம்) நம்பிக்கை தாண்டி நிஜம் என்றே கருதுகிறார்கள். 'I dont beleive it, I know it' என்ற வாக்கியம் எனது சீன நபர்களிடம் இருந்து இது போன்ற டாபிக்குகளில் விவாதிக்கப்படும்போது வெளிப்படும் முதல் வாக்கியங்களில் ஒன்று!

Anonymous said...

உங்கள் பதிவு மேலும் பல வாசகர்களை சென்றடைய Tamilish.com தளத்தில் பகிரவும்

Anonymous said...

அடங்கொய்யால, பில் கிளிண்டங்ற ஒருத்தன் ஹைதராபாத் வந்தப்ப ஹைதராபாத் பிச்சைக்காரங்க்களையெல்லாம் என்னடா பண்ணுனிங்க? அத விடயா, சீனா செஞ்சிருச்சு?

said...

ஒலிம்பிக்கின் மறுபக்கத்தை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்! படித்து வியப்படைந்தேன்.