போன பதிவில் சந்தோஷ் சுப்ரமணியம் பாடல் விமர்சனம் எழுதலாம்ன்னுதாங்க பதிவெழுத தொடங்கினேன். அது என்னமோ தெரியல வேற ஒரு ட்ராக் தேடி ஓடிடுச்சு. நோ ப்ராப்ளம். it's all in the game.
இன்னைக்கு நான் எழுத போற மேட்டர் நீங்க படிக்கும் முன்னே, இந்த இரண்டு க்ளிப்பிங்ஸும் பாருங்க.
இப்போ தெரிஞ்சிருக்கும் இன்று எதை பற்றி எழுத போறேன்னு. எப்பவும் தேவாதானுங்க கிங்! கிங் ஆஃப் காப்பி. காப்பி வித் அனுக்கே காப்பி கலக்கி தரும் அளவுக்கு இந்த மேட்டர்ல பி.எச்.டி எடுத்தவர். எல்லார் கண்ணும் தேவாவின் மேலே இருக்கும்போது மற்ற இசையமைப்பாளர்களின் காப்பியின் மேல் அவ்வளவு பிரியம் இருக்காது. அதனால், அவங்க அடிக்கிற காப்பியும் நம்ம கண்ணுக்கு தெரியாது. எங்கேயோ கேட்ட பாடல்ன்னு பாடிட்டு அடுத்த வேலை பார்க்க போயிடுவோம்.
ஹர்ரிஸ் - இசைப்புயலின் உருவாக்கத்தில் வந்தவர். அவரிடம் கீபோர்ட் வாசிப்பவராக இருந்து பின்னால்
இசையமைப்பாளராக மாறியவர். இவருடைய ஆரம்ப கால இசை வாழ்க்கையிலிருந்தே ஒரு சர்ச்சை இருந்துக்கொண்டேதான் இருக்கு. "ரஹ்மான்'ஸ் காப்பி"!!!! இவருடைய பல பாடல்களில் ரஹ்மானின் பாணியும் அவரிடமிருந்து திருடப்பட்ட இசைகளையும் புதையல் போல கண்டுபிடிக்கலாம். நெட்ல கொஞ்சம் அலசினால் ரஹ்மான்'ஸ் ரசிகர்களின் ஆதங்கம் வெள்ளம் போல புரண்டோடுவதை காணலாம்.
அவருடைய முதல் ப்ராஜெக்ட் மின்னலே மின்னல் வேகத்தில் வெளியாகததால் முதலில் மக்களை எட்டி பிடித்தது 12B பஸ்தான். "ச்சும்மா அருமையா பிண்ணியிருக்காரு மனுஷன்"ன்னு பலரும் பாராட்டும் விதத்தில் போட்டிருந்தார் டியூன். ஆடியோ சிடி/ கேசட்டுகள் அதுவரை எந்த படமும் சாதிக்காத வசூலையெல்லாம் தாண்டி சாதனை படைத்தது. நானே மிகவும் ரசித்து கேட்ட, இப்போதும் ரசிக்கும் பாடல்களில் 12Bயும் அடங்கும்.
ஆனால், ஒரு சில படங்கள் வெளியாகிய பிறகு அவருடைய இசை பேட்டர்ன் திரும்ப திரும்ப அதே இடத்துலேயே சுத்த ஆரம்பித்துவிட்டது. குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுறது போல அவருடைய இசையில் வெற்றிபெற்ற அதே பாடல் தோரணையில் புது படத்திலும் ஒரு பாடல் அமைந்துவிடும். எந்த பாடல்ன்னு பல பேருக்கு தெரியும். ஆனாலும் இங்கே நாங்க சொல்லுவோம்ல.
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?
-என்ற தத்துவ(!?!?) பாடல் மிகப் பெரிய வெற்றியடைந்த்தனால்
கொக்கு மீனை திங்குமா?
இல்ல மீனு கொக்கை முழுங்குமா?
-என்று மேக்கப் போடப்பட்டு திரும்ப நமக்கே வந்து சேர்ந்திருக்கு. மக்களே, இங்கத்தான் நீங்க நல்லா கவனிக்கனும். ஒரு பாடல் வெற்றி பெருவதுக்கு காரணமே நாம்தான். நமக்கு அந்த பாடல் பிடித்ததானால் ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்ன்னு பல முறை கேட்டு வெற்றியடைய செய்தால் அதையே திரும்ப ஆடை மாற்றி மேக்கப் போட்டு நமக்கே அனுப்புறாங்க.. என்ன கொடுமை சரவணா இது!!!
இப்படி கேட்கும்போது எவ்வளவு வெறுப்பாக இருக்கும் தெரியுமா?
மத்தவங்க இசையை காப்பி அடித்து வெற்றி அடைந்தாயிற்று..
சொந்த இசையையே திருப்பி போட்டு அதுலேயும் ஓரளவு வெற்றி அடைந்தாயிற்று...
அடுத்து என்ன?
இங்கேயும் ஒரு மேட்டர் இருக்கு.. அதுக்கு முன்னே இதோ இந்த இரண்டு காட்சிகளை பாருங்க:
அடப்பாவிகளா! அடப்பாவிகளா! (விவேக் ஸ்டைலில்..)
எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே!
காப்பியடிக்க கூட ஐடியா கிடைக்காமல் அப்படியே போட்டுட்டாரே!!!!
சிலர் தன் வழி தனி வழின்னு போகும்போது சிலர் என் வழி திருட்டு வழின்னு போகிறார்களே! அவர்கள் இருக்கும் வரை இவர்களும் இருப்பார்கள்! இவர்கள் இருக்கும்வரை திருட்டு இசைகளும் சாகா வரம் பெற்று வாழும் என்பதில் ஐயமில்லை. :-P
Tuesday, April 22, 2008
காப்பி வித் ஹர்ரிஸ் ஜெயராஜ்
Posted by MyFriend at 5:17 PM 23 comments
Sunday, November 25, 2007
உன்னை சரணடைந்தேன்..
பிரசன்னாவின் குரல் இனிமையானது. காதல் வந்து (சரவணா), வெயிலோடு விளையாடி(வெயில்), ராதா காதல் வராதா (நான் அவன் இல்லை) என்ற பாடல்களை கேட்டவர்களுக்கு இவரின் குரலை கண்டிப்பாக பிடித்திருக்கும். கல்யாணி மட்டும் சும்மாவா? காலை அரும்பி (கனா கண்டேன்), சும்ம கிடந்த (தம்பி), கோழி குண்டு (எம்டன் மகன்), ஆசை கனவே (இம்சை அரசன்) , கடவுள் தந்த (மாயாவி) போன்ற பாடல்களையே அவர் குரலால் அழகு படுத்தியவர்.
பாடல்: உன்னை சரணடைந்தேன்
பாடகர்: பிரசன்னா, கல்யாணி
இசை: சபேஷ் - முரளி
படம்: தவமாய் தவமிருந்து

பெ: உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்..
என்னில் உறைந்திருந்தேன்..
உன்னுள்ளே நான் கரைந்தேன்
கண்கள் இமையை விட்டு என்னையே வந்து நிற்க..
ஸ்வாசம் காற்றை விட்டு உன்னையே தேடி செல்ல..
தாயாக மாறிப்போனாயே
வேறாக தாங்கி நின்றாயே
அயராது ஓடி வந்து
இசையாக நீ இருக்க
கண்ணிருடன் மாயத்திலே
காலமெல்லாம் உப்பைப்போல
உந்தனுள்ளே நானிருப்பேனே..
(உன்னை..)
ஆ: தினந்தோறும் சாமிக்கிட்ட
தீராத ஆயுள் கேட்பேன்
நீ பார்க்கும் பார்வைப்போல
பூவெல்லாம் பூக்க கேட்பேன்
நீ நடக்கும் நிலத்தினிலும்
நிம்மதி வளர்த்திடுவேன்
நீ அருந்தும் நீரினிலும்
தாய்மையை தந்திடுவேன்
உன் உலகத்தின் மீது நான் மழையாகுவேன்
உன் விருப்பங்கள் மீது நான் நதியாகுவேன்
ஆ: உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்..
என்னில் உறைந்திருந்தேன்..
உன்னுள்ளே நான் கரைந்தேன்
காதல் என்ற சொல்லில் காதலே இல்லையென்பேன்
வாழும் வாழ்க்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்
சொந்தங்கள் யாவும் ஆனாயே
சோகங்கள் ஆற்றி விட்டாயே
அடைக்காக்கும் தாய்க்குருவி
சிறகாகி நீ அணைக்க
முட்டைக்கூட்டில் ஓடுடைத்து
முட்டி மோதும் குஞ்சைப்போல
தினமும் புதிதாய் நானும் பிறப்பேனே..
இதே இசை வேறொரு வரியில்...
Saturday, October 27, 2007
காதல் ஒன்று அல்லவா?
ரஹ்மான் ரஹ்மான்தான்.. அழகிய தமிழ் மகன் பாடலைப்பற்றி நான் எழுதப்போவதாக நினைத்தால்.. சாரி,, நான் அதைப்பற்றி பேசப்போவதில்லை என்று முன்கூட்டியே எச்சரித்து விடுகிறேன். :-)))
ஷா ஜஹான் மும்தாஜின் காதல்
லைலா மஜ்னுவின் காதல்
உன் காதல் எந்தன் காதல் ஒன்றுதான்..
-என்றொலிக்கும் பாடலை கேட்டதுண்டா?
ஒரு சில மாதங்களுக்கு முன்பு உலக அதிசயங்களை தேர்ந்தெடுக்கு ஓட்டு நடைப்பெற்றபோது தாஜ்மஹாலின் பெருமையை எடுத்துக்காட்ட அமைக்கப்பட்ட பாடல்தான் One Love.
ரஹ்மானின் பொருத்தவரை உலகில் மூன்று அதிசயங்கள். அவை: தாஜ் மஹால், காதல், இசை..
மூன்றையும் ஒன்றினைத்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்:
இந்த பாடல் 6 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டது:
1- காதல் ஒன்று அல்லவா (தமிழ்)
2- Ek Mohabbat (ஹிந்தி)
3- ப்ரணயம் ஒன்னு அல்லோ (மலையாளம்)
4- ப்ரேமா ஒக்கதேகா (கன்னடா)
5- பாலோபாஷா ஏக் ஹொயே (பெங்காலி)
எந்த மொழியில் இருந்தால் என்ன? கருத்தும் காதலும் ஒன்றுதானே!
இதமான இசை, கேட்க கேட்க இனிமை தரும் குரல், அருமையான பாடல் வரிகள், அதற்கேற்ற காட்சியமைப்பு. தாராளமாக இன்னொரு சபாஷ் போடலாம் ரஹ்மானுக்கு..
பருவத் தென்றல் இல்லாது
யுகங்கள்தான் வழி சொல்லாது
காலத்தை வென்றிடுமே சில ஞாபகமே
அரியணைகள் அரசர்கள் எங்கே
வாள் வரைந்த எல்லைகள் எங்கே
எஞ்சுவதோ தென்றல் நீந்தும் பாடலே..
சிலர் பார்வைக்கு வாழ்வின் ஓர் அன்பே என்றால் இன்றானதே
சிலர் பார்வைக்கு வாழ்வின் உயில் செல்வம்தான் என்றானதே
காதல் கரைந்து நீ பார்த்தால்
தேகங்கள் சோகங்கள் தீர்க்கும் மேகம்தான் மேகம்தான்
காதல் அன்றோ
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இதயம் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இறைவன் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
ஹேய் காதல் ஒன்றல்லவா
ராதா கிருஷ்ணாவின் காதல்
ஆடாம் ஏவாளின் காதல்
ஹீரா ரஞ்சாவின் காதல்
ஒன்றுதான்
ஷா ஜஹான் மும்தாஜின் காதல்
லைலா மஜ்னுவின் காதல்
உன் காதல் எந்தன் காதன் ஒன்றுதான்
உன் காதலும் எந்தன் காதலும் ஒன்றுதான்
காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்
காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்
(ஜூம்ஜூம்..)
காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்..
யமுணைக்கும் உயிர் வாழ்த்தும் காதலே
உனை தாங்கும் தாயின் சலாம்..
Monday, October 08, 2007
இன்பம் கொட்டிக்கிடக்கிறதே..
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டிக்கிடக்கிறது. ஆனால், நாம் அந்த இன்பத்தை அள்ளாமல் துன்பங்களையும் சோகங்களையும் தேடி செல்கிறோம். ஏன் என்று கேட்டால், "துன்பத்தை தேடி அதனை என் வாழ்வினில் இருந்த அகற்றப்போகிறேன்" என்றூதான் பதில் வரும். ஆனால், அதை அகற்றுவதுக்கு தேடி கூடவே வைத்துக்கொள்கிறோம். துன்பங்கள் குட்டி போட்டு வட்டி போட்டு பெரியதாக வளர்ந்து நிக்கும். அப்போது, "அய்யோ.. எனக்கு மட்டும் எல்லாம் கஷ்டங்களாகவே வருகிறதே" என்று கவலை படுவது நியாயமா?
இனபத்தை தேடி பிடித்து அதனை அள்ளுவதுதான் புத்திசாலித்தனம். இதனை படித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் கிட்ட என் பிரார்த்தனைகள். :-)
பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்..
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டிக்கிடக்கிறது
நம்மை அழைக்கிறது
(பூவெல்லாம்..)
வானகம் தூரம் இல்லை
வங்கக்கடல் ஆழம் இல்லை
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே
சூரியனை வட்டமிட்டு தன்னைத்தானே சுற்றும் பூமி
நம்மை சுற்றி வருமே அந்த வானிலே
புது சந்தோஷம் எங்கே
புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில்தானடா
(செவ்வானம்..)
(பூவெல்லாம்..)
Posted by MyFriend at 8:26 PM 7 comments
Sunday, October 07, 2007
தொட்டா சிணுங்கி
உறவு, பகை, நட்பு, பந்தம், பாசம்.. எது எப்போது தோன்றும் எப்போது முறியும் என்று தெரியாத ஒரு சூழலில் வாழ்கிறோம் மனிதர்கள் ஆகிய நாம். தாய் மேல் மகன் கொண்ட பகை, மகன் மேல் தந்தை கொண்ட வெறுப்பு, அண்ணன்-தம்பி சண்டை, மாமியார்-மருமகள் யுத்தம், கணவன்-மனைவி ஊடல்.. இப்படி எத்தனை வகை வேண்டும்? அடுக்கிக்கொண்டே போகலாம்.
தொட்டதுக்கும் கோபம் நமக்கு பொத்துக்கொண்டு வருகிறது. மனம் ஒரு தொட்டா சிணுங்கிதானே நமக்கு? ஒருத்தடவை உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தாலும் உடைந்த கோடுகள் கண்டிப்பாக தெரியும். அதுபோலவே உறவும் பகையும். சண்டை போட்டு சமாதானம் ஆனாலும் மனதில் கீறிய தழும்புகள் நம் மனதை விட்டு நீங்குகிறதா?
மறப்போம் மன்னிப்போம் என்று நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? மனதை தொட்டு கேளுங்கள். உண்மை பல சமயங்களில் கசத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியது நாம்தான்.
அவ்வகைய பிரிவில் சேர்ந்த நான் ரசிக்கும் பாடல் ஒன்று:
மனமே தொட்டால் சிணுங்கிதானே
அதுவே தன்னால் மலரும் மானே
உறவோ என்னாலும் தீராது
பகையோ என்னாலும் வாராது
மனமே தொட்டால் சிணுங்கிதானே
தாய்பாலே விஷமாய் மாறுமா
தமிழ் தாயே நீ அதை கூறம்மா
பெற்ற தந்தை மீதே கோபமா
பிள்ளை கோபம் இங்கே ஞாயமா
தினந்தோறும் காலம் மாறுமே
தினந்தோறும் காலம் மாறுமே
இது பாவமோ இல்லை சாபமோ
சில காலம் தோன்றும் சோகமோ
(மனமே..)
நிழலே உன் பின்னால் நிலையில்லை
நிலவே இங்கு யாருக்கும் உறவு இல்லை
காற்றே தன் வழியது அறிந்ததில்லை
கட்லே தன் அலைகளை புரிந்ததில்லை
இதுதானே உலகின் நியதிய்டி
இதுதானே உலகின் நியதிய்டி
இது போலவே உந்த வாழ்விலே வந்த சோகம் நாலை மாறுமே
(மனமே..
Posted by MyFriend at 10:20 AM 6 comments
Saturday, October 06, 2007
உலகமே புதியதாய்..
ரொம்ப நாள் ஆச்சு எனக்கு பிடித்த பாடல்களை இங்கே எழுதி. அதான் திரும்பி வந்துட்டேன்ல. :-)
போன வருடம் வெளியாகிய படம் காதலே என் காதலே. இசையமைப்பாளர் ப்ரயோக் தமிழுக்கு புதியவர். ஆனால், இசைக்கு எதுக்கு மொழின்னு நிரூபித்திருக்கிறார். இந்த பாட்டில் முக்கிய தூண் அதில் வரும் வரிகள்.
முதல் தடவை கேட்டபொழுதே இந்த வரிகள் 100% எனக்கே எனக்காக எழுதியதுபோல ஒரு உணர்வு. அன்றிலிருந்து இன்று வரை எப்போதும் என் mp3 playerல என்னுடன் கூடவே இருக்கும் பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்துவிட்டது. நீங்களும் கேட்டுப்பாருங்கள். கூடவே பாட:
உலகமே புதியதாய் இன்று நானும் உணர்ந்தேனே
கதவினை திறந்து நான் புதிய வெளிச்சத்தை கண்டேன்
பனிக்குடம் உடைந்து நான் மீண்டும் மண்ணுக்குள் பிறந்தேன்
தோள்களில் வாழ்க்கையை சுமக்கவே துணிச்சல் தோண்றும்
காட்டிலே உள்ள மரத்துக்கு நீரை ஊற்றிட ஆளில்லை
உன்னையே நீ பார்த்துக்கொள் வாழ்க்கை என்பது வேறில்லை
உன் நிழல் உன்னை தொடருமே அது இருட்டிலே விட்டு விலகுமே
உண்மையில் நீ ஒருத்தன் தான் உன் துணையென்ற உண்மை விளங்குமே
பனிமூட்டமான பாதை நீ பயணிக்கும் வேளை
கண்ணோடு மறைந்த இடங்கள்
அருகில் சென்றால் தெரிந்துவிடும்
(உலகமே..)
தீயினை தொட்டு தெரிந்துக்கொள் மீண்டும் பயங்கள் தொடருமா
மலையிலே உள்ள அருவிகள் மண்ணில் விழுவதால் உடையுமா
இலைகளை கிளை உதிர்க்குமே அது மறுபடி மெல்ல துளிர்க்குமே
காயங்கள் கொஞ்சம் வலிக்குமே அதன் பாடங்கள் வெற்றி கொடுக்குமே
இந்த நாளும் உனது என்று நீ நினைத்திடும் பொழுது
கடிகார நேரம் எல்லாம் நீ சொன்னதை கேட்டுவிடும்..
(உலகமே..)
Posted by MyFriend at 10:52 AM 4 comments
Wednesday, October 03, 2007
நானா நீயா? - 2
"பாட்டுதான் இது பாட்டுதான்.. சூப்பர் பாட்டுதான்!"
இப்படி பாடுனவரு யாரும் இல்லைங்க.. சாட்சாட் அந்த இயக்குனரேதான்!
நேத்து நைட் என்ன நடந்துச்சு தெரியுமா?? "நீங்க" யாரும் வர்றாததுனால யாரோ ஒரு இசையமைப்பாளரை கூப்பிட்டு கம்போஸிங் செய்ய சொன்னார் இயக்குனர். அந்த இசையமைப்பாளர் இசை கம்போஸ் பண்றேன்னு சொல்லி ஆர்மோனியப்பெட்டியை ஒரு வழி பண்ணிட்டார்.. அப்போதுதான் தெரிஞ்சது அவர் இசையமைப்பாளர் இல்ல.. தஞ்சோங் ரம்பூத்தான்ல இருந்து (இந்தியாக்கு ஒரு கீழ்பாக்கம்ன்னா மலேசியாவுக்கு இது ஒரு தஞ்சோங் ரம்புத்தான்) தப்பி ஓடி வந்த பேஷண்ட்..
இயக்குனர் வேற வழியில்லாமல் கம்போஸ் பண்றேன்னு ஒரு பியானோவை தூக்கி வச்சு உட்கார்ந்தார்.. அப்போ ஒரு பாட்டு காற்றுல கலந்து வருது...
நானா இல்லை நீயா.. நானா இல்லை நீயா..
நானா நீயா நானா நீயா X 4
இவன் இவனும் எதையும் அறியாதவன்
நல்லவன் அப்பளசாமி பாவம் இவன்
என்ன இது பூமி யாரவன் குண்டோதரன்
ஆணவம் கூடாது சாமி
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
அதை அறியாமல் காலை விட்டு விட்டு
கொஞ்சம் திரும்பி பார்த்து
சிரித்து நீயும் கைகளால் தட்டு தட்டு
தட்டு தட்டு போடு ஆட்டம் போடு
நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்
கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்
ஏன் இந்த போட்டி சொல்வதுக்கெல்லாம் தலை ஆட்டி
வெளியே வஞ்சக பார்வை உள்ளெ விஷமாய் இருப்பது
இது பழகியது மருபடியும் முடிவாகும்..
ஏன் இது..
சொல் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
சொல் வேண்டாம் வேண்டாம்
வம்பு வேண்டாம் சண்டை வேண்டாம்
சொல் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் கோபம் வேண்டாம்
Don't Want It.. Don't Need It
வேண்டும் வேண்டும்
அன்பு வேண்டும் பண்பு வேண்டும்
சொல் வேண்டும்
வேண்டும் வேண்டும் பாசம் வேண்டும்
We Want It... We Need It..
சதி மேல் சதி இதுதான் கதி
வாழ்வினில் பாதி புரிந்தால் சரி
ஏன் ஏன் எதர்கிந்த போட்டி
பார் பார் ஆசை பேராசை
முடிந்ததை மறந்துவிடு
நல்ல வழி நீ உனக்கு தேடு
ஒரு மாட்டுக்கு ஒரு சூடு
நீ செய்வது தப்பு
இனி தேவை பாதுக்காப்பு
உனவில் உண்ட உப்பு
மீண்டும் மீண்டும் தப்பு
இனும் என்ன பண்ண
தப்பு மேலே தப்பு பண்ண
இல்லற வாழ்க்கை அல்ல சில்லறை வாழ்க்கை
சின்ன குழந்தை அல்ல
நான் இன்னும் எடுத்து சொல்ல
அரசன் அன்று கொல்வான்
இறைவன் நின்று கொல்வான்
இதை புரிந்தவன்
பிழைத்து கொல்வான் விழித்து கொல்வான்..
வெற்றியா இல்லை தோல்வியா..
நம் கைகளில் Forever
(வெற்றியா..) X 2
நானா இல்லை நீயா புயலா இடி மழையா
சரி தப்பு எது என்று அறியாமல்
காலை விட்டு முழிப்பது யார் என்று
(நானா...)
(வேண்டாம்..)
யோ யோ MC லோகா Together Vizz Da Blizz
அஹா Check It Out
Hyp Hyp.. Hyperkinetix
செல்வாக்கை விட சொல்வாக்கு முக்கியம்
Check Check Check Check It Out
நானா நீயா. நானா நீயா..
நானா நீயா. நானா நீயா..
நானா நீயா. நானா நீயா..
இயக்குனர் அசந்துட்டார் போங்க.. அவர் கேட்ட வரியில் அருமையா கம்போஸிங் ஆகியிருக்கு பாட்டு.. "யாரு.. இது யாரு.. அசத்திட்டு இருப்பவர் யாரு?"ன்னு அவர் வெளியே வந்து பார்த்தார்..
தலையில் திருப்பி போட்ட தொப்பி, கூலிங் க்லாஸ், கழுத்துல பட்டையா ஒரு சங்கிலி, பெரிய சட்டை. அதுக்கு மேலே ஒரு வெஸ்ட்.. ரெண்டு பேர் நுழையிற அளவுக்கு ஒரு ஜீன்ஸ் பேண்ட்னு அப்படியே ஹிப் ஹோப் ஸ்டைல்ல ரெண்டு பேர்...
இயக்குனர்: யாரய்யா நீங்க?
MC லோகா: MC லோகா from Hyp yp.. HYPERKINETIX..
கையை ஆட்டி ஆட்டி ஹிப் ஹோப் ஸ்டைல்ல ஒரு வணக்கத்தை சொல்ல..
இயக்குனர்: இந்த சின்ன பையன் யாரு?
Vizz: Vizz Da Blizz
இயக்குனர்: ஆஹா.. வெள்ளைகாரன் கணக்கா இங்கிலீசு பேசுறாரு துரை. இந்த பாட்டு பாடுனது நீங்கதானா?
பேசும்போதுதான் தெரிய வந்தது.. Vizzக்கு இப்போதுதான் 12 வயது. இப்பவே Rap நல்லா பண்றான். நன்றாகவே பாடும் திறனும் இருக்கு. cute-ஆவும் இருக்கான். உடனே அவருடைய "நானா நீயா?" என்கிற தெலிமூவீயில் இடம் பெறும் 8 பாடலுக்கு 4 பாடல் பாடும் வாய்ப்பை வழங்கிவிட்டார்.. MC லோகாவும் இந்த படத்துல பாடுறார்..
வேயிட் வேயிட்.. கதை இன்னும் முடியலை..அதுக்குள்ள கிளம்பினா எப்படி? இந்த படம் ஒரு காமெடி படம். 2 மணி நேரம் முழுக்க முழுக்க காமெடி வெலி வெலிக்க போகும்படம்.. மிஸ் பண்ணாமல் எல்லாரும் வந்து பார்க்கணும்ன்னு இயக்குனர் ஆசைப்படுறார்.. படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ள் நீங்க MC லோகாவும் Vizz-உம் பாடும் நானா நீயாவை பார்த்து ரசியுங்கள். :-)
பி.கு: இன்று மாலை ஒரு அழகான காதல் காவியம் உங்கள் அபிமான ப்ரௌஸரில்... காணதவறாதீர்கள். :-P
Tuesday, October 02, 2007
நானா நீயா..
நானா இல்லை நீயா.. நானா நீயா..
சண்டைக்கு கூப்பிடுறேன் என்று நினைக்கிறீர்களா.. இல்லை இல்லை.. மேலே (கீழே) படிங்க..
நீங்க ஒரு கவிஞர்! (சும்மா விளையாட்டுக்குதாங்க சொன்னேன். அதுக்குன்னு பேப்பரும் பேனாவும் ரெடி பண்ணீட்டீங்களே! படிக்கிற எங்கள் கண்ணுலதானே ரத்தக்கண்ணீர்தான் வரும்! ஹீஹீ).. சரி கதைக்கு வருவோம். நீங்க ஒரு கவிஞர் & இசையமைப்பாளர் என்று கற்பனை பண்ணிக்கோங்க.. ஒரு இயக்குனர் உங்க கிட்ட வந்து ஒரு சித்துவேஷனல் சாங் கம்போஸ் பண்ணி தர சொல்றார். இதுதான் அந்த சித்துவேஷன்:
இயக்குனர்: கதையோட ஹீரோ பெயர் அப்பளசாமி. அவருக்கு ஒரு காது கேளாத மனைவி. அவங்க பெயர் மங்களம். இவங்க ரெண்டு பேரும் புதுசா ஒரு வீட்டுக்கு குடி போறாங்க. இவங்களோட பக்கத்துவீட்டுக்காரர் குண்டோதரன் ஒரு பெரிய ரௌடி. இவரோட மனைவி பாக்கியம் ஒரு சினிமா பைத்தியம். குண்டோதரனுக்கு ஒரு விசித்திரமான குணம். அவர் பக்கத்து வீட்டுக்கு யாரும் குடிவந்தால் இவருக்கு பிடிக்காது. அவரோட அடியாள் (மலாயில பூடாக் என்று அழைக்கப்படும்) சங்கரனை வைத்து பல கஷ்டங்களை கொடுக்கிறாரு..
நீங்க: எதுக்கு இப்போ கதையில மலாய் பேரெல்லாம் அடிப்படுது? நான் இப்போ பாடல் எந்த மொழில எழுதுறது?
இயக்குனர்: வாயை மூடிக்கிட்டு கதையை கேளு. இல்லன்னா நான் வேற கவிஞரை தேட வேண்டியிருக்கும்.
இப்படியெல்லாம் நடந்துக்கிட்டு இருக்கிறதை அப்பளசாமிக்கும் குண்டோதரனுக்கும் தெரியாமலேயே ஒரு கும்பல் கண்காணிச்சுட்டு இருந்திருக்கு. அந்த கும்பல் யாரு, என்ன பண்ண போறாங்கன்னு சர்ப்ரைஸ்.. கதை அப்படியே சும்மா அதிருதுல்ல!!!!
நீங்க: ஃபுல் கதை தெரிஞ்சாதானே நான் இசையமைக்கிறதுக்கு வசதியா இருக்கும்? எனக்கே சர்ப்ப்ரஸா??
இயக்குனர்: உனக்கு கதை நான் சொல்லிட்டு இருக்கேன்.. ஆனா, அங்கே பாரு.. அதை இவங்க எல்லாரும் படிச்சுட்டு இருக்காங்க. நான் இப்போ முழு கதை சொன்னா அவங்களுக்கு தெரிஞ்சிடும்ல??
நீங்க: (மனசில்).. சகிக்கலை. :-(
இயக்குனர்: என்ன சவுண்டையே காணோம்?
நீங்க: நீங்க ரொம்ப ப்ரில்லியண்டா இருக்கிறதை பார்த்து பூரிச்சு போயிருக்கேன் சார்.
இயக்குனர்: சரி, எனக்கு முதல்ல தீம் சாங் போடு..
நீங்க: முதலை தீம் சாங்-ஆ? முதலைக்கெல்லாம் என்னால தீம் போட முடியாது.. என்னை விடுங்க..
இயக்குனர்: என்னமோ நான் பிடிச்சு வச்சிருக்கிற மாதிரியே விடுங்க விடுங்கன்னு நீங்க தமாஷ் பண்றீங்க. ஹீஹீ.. சரி.. இப்போ சீரியஸா பேசுவோம்.. எனக்கு இந்த கதைக்கு ஒரு தீம் சாங் வேணும். அதுல நல்ல நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லணும். படம் முழுசா பிட்டு பிட்டா ஆங்காங்கே வரும் இந்த பாட்டு.. ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. முக்கியமான ஒரு கண்டிஷன்.. இந்த பாட்டு தமிழ், மலாய், ஆங்கிலம்ன்னு மூன்று மொழியில் வரணும். முடியுமா?? முடியுமா? முடியுமா?
நீங்க: சார்..... எப்படி சார்? மூனு மொழியிலே ஒரே பாட்டா?
இயக்குனர்: முடியும். நான் ரெடி நீங்க ரெடியா??
பி.கு: இந்த "நீங்க"ங்கிறது படிக்கிற நீங்கதான். யாரால இந்த சித்துவேஷனுக்கு கவிதை எழுதி இசை கம்போஸ் பண்ண முடியும்? ட்ரை பண்ணுங்க. யாராலும் முடியலைன்னா, இந்த இயக்குனரே இந்த சித்துவேஷனுக்கு ஏத்த பாட்டு நாளைக்கு போடுறேன்னு அடம் பிடிக்கிறார். யாராவது என்னை காப்பாத்துங்கப்பா!!!!!!
Posted by MyFriend at 11:27 AM 18 comments
Sunday, March 25, 2007
172. சிவாஜி பாடல்கள் - எதுவரை உண்மை?
ஏப்ரல் 4 சிவாஜி ரிலீஸ் என்று AVM அறிவித்திருக்கும் இவ்வேளையில் 3 முழு பாடல்கள் இணையத்தில் பரவலாக வெளியிடப்பட்டுள்ளது சிவவஜி யூனிட்டுக்கு ஒரு அதிர்ச்சியூட்டக் கூடிய விஷயமே!
இதே நிலை சிவாஜியின் நிழற்படங்கள் வெளியாகியபோதும் நடந்தது. யார் அந்த கல்ப்ரீட் என்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த வியாழன் அன்று காலையில் வெளியானது திருடப்பட்ட 3 பாடல்கள்:
1- ஒரு குடை சன்லைக்ட
2- சஹானா சாரல்
3- வா ஜி சிவாஜி
வெளியிடப்பட்ட பாடல்களில் இரைச்சல் சத்தங்கள் இருப்பதை கவனிக்கவும். ஷூட்டீங் நடந்த செட்டில்தான் இவைகள் திருடப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
இறுதி கலவையின் தரம் கண்டிப்பாக இப்படி இருக்க வாய்ப்பில்லை, குறிப்பாக ஷேகி, ப்லேஸ் மற்றும் தான்வி பாடிய ஒரு குடை சன்லைக்ட் பாடல். இணையத்தில் வெளியான சஹானா சாரல் பாடலை பாடியது உதித் நாராயணன் மற்றும் சின்மாயி. ஆனால், ஒரிஜினல் ட்ராக்கில் பாடியிருப்பவர்கள் ரஹ்மானும் சின்மாயியும்தான்.
படத்தின் மற்ற பாடல்கள்:
1- டே லைக்ட் டுட் (Day Light Dude) - அமேரிக்க ரேப்பர்ஸ் பாடியிருக்கும் இந்த பாடல்தான் படத்தின் ஆரம்பப் பாடல்.
2- ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்ஸ் வாசிக்க ரஜினி பாடிய பாடல்
வெளியான பாடல்களே கேட்க அருமையாக இருக்கின்றன. இப்போது வெளியான இந்த விஷயங்கள் பாடல்களின் எதிர்பார்ப்பை இன்னும் கூடுதலாக தூண்டி விட்டிருக்கிறது. ரஹ்மான் இசையில் ஏப்ரல் 4-இல் வெளியாகவிருக்கும் சிவாஜிக்கு நான் வேய்ட்டிங். :-)
Source: IndiaGlitz
Posted by MyFriend at 3:00 PM 15 comments
Friday, February 16, 2007
164. உயிரை தொலைத்தவர் யார்? - பதில்
உயிரை தொலைத்தேன்..
அது உன்னில்தானோ..
இது நான் காணும் கனவோ நிஜமோ..
என்ற ஒரு பாடலை நேற்றைய இடுகையில் சேர்த்திருந்தேன்.
கேட்டவர்கள் எல்லாரும் பாடல் நல்லா இருக்குன்னு சொல்லியிருக்கீங்க..
துர்காதான் இது உள்ளூர் பாடல்ன்னு கண்டுப் பிடிச்சாங்க. அவங்களுக்கு தெரியாம இருக்குமா! அவரும் நம்மூர்வாசிதானே!
ஜி இருக்காரே! அவர் கூகல் கூகினாரோ இல்லை துர்கா கிட்ட கேட்டாரோன்னு தெரியலை.. ஆனால் பாடியவரை பற்றி சரியான தகவலை சொல்லியிருக்கார். அவருக்கு ஒரு பலத்த கைத்தட்டு! (1000 பொற்காசுகள் western union மூலமாக அனுப்பி வைக்கப் பட்டுவிட்டது.. கிடைச்சிருச்சா?)
தல வீட்டுக்கு போய் கேட்டுட்டு சொல்றேன்னாரு.. ஆனா, ஆளையே காணோம்..
சரி, இப்ப யார் இந்த பாடலை பாடினார்ன்னு பார்ப்போம்.. இவர் பெயர் திலீப் வர்மன்.
சசி, சுரேஸ், நெல்சன்.. இவங்க மூன்று பேர் சேர்ந்த குழு Rogkwave.. இவர்கள் 3 ஆல்பங்கள் வெளியிட்டனர்.
1- சுரேஸ் கிஃப்ட் (Suresh's Gift)
2- சங்கீத் (Sangeeth)
3- சங்கே முழங்கு (Sange Muzhangu)
நாலாவது ஆல்பத்தில் சுரேஷும் நெல்சனும் கலந்துக்கவில்லை.. மாறாக சசி தேடிய Replacement-தான் திலீப்..
ஆல்பத்தின் பெயர் நவீனம்.. ஆல்பம் ஹிட்டானது.. காரணம்? வேறு என்ன.. திலீப்பின் குரல்தான் காரணம்.. இந்த ஆல்பத்தில் இவர் பாடிய பாடல்களின் இரண்டையும் இங்கே இணைத்துள்ளேன்.
1- என்னில்
2- இரு கண்கள் (முழு பாடல் என்னிடம் இல்லை)
3- உயிரை
Powered by eSnips.com |
ஆனால், இந்த உயிரை தொலைத்தேன் பாடல் இந்த ஆல்பங்களில் வெளியானதல்ல.. இது மலேசிய தெலி மூவி (Tele Movie) காதல் வேண்டும் என்ற படத்தில் இடம் பெற்றது. திலீப் பாடியதே இதில் ப்லஸ் பொய்ண்ட் (Plus Point)..
இவருக்கு எனக்கு பிடித்த உன்னி கிருஷ்னன் குரல்.. அது இன்னொரு ப்லஸ்.. :-P
சரி.. இந்த பாடலின் வரி உங்களுக்கு வேண்டுமா? இதோ பிடிச்சிக்கோங்க:
உயிரை தொலைத்தேன்..
அது உன்னில்தானோ..
இது நான் காணும் கனவோ நிஜமோ..
மீண்டும் உன்னை காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே..
விழியில் விழுந்தால்.. ஆஆஆஆஆ..
என்னில் எனதாய் நானே இல்லை..
எண்ணம் முழுதும் நீதானே
என் கண்ணே..
(உயிரை..)
அன்பே உயிராய் தொடுவேன் உன்னை..
தாலாட்டுதே பார்வைகள்..
(அன்பே..)
உனை சேரும் நாளை..
தினம் ஏங்கினேனே..
நானிங்கு தனியாக அழுதேன்..
விடியும் வரை..
கனவின் நிலை..
உனதாய் இங்கு..
தினம் ஏங்குது..
மனம் உருகிடும்..
நிலை இது..
எந்தன் முதல் முதல் வரும்..
உயிர் காதலில்..
(உயிரை..)
நினைத்தால் இனிக்கும் இளமை நதியே..
உன்னோடு நான் மூழ்கினேன்..
(நினைத்தால்..)
தேடாத நிலையில்..
நோகாத வழியில்..
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்..
(விடியும்...)
(உயிரை..)
ஓஓஓஓஓ....
Posted by MyFriend at 9:06 PM 37 comments
Labels: பாடல்
163. உயிரை தொலைத்தேன்.
எப்போதுமே நான் ஒரு பாடலை பற்றி சொல்லும் முன், அதனை பாடியது யார், பாடல் வரி மற்றும் மற்ற சில குறிப்புகளை கொடுப்பேன்..
இன்றைக்கு இவைகள் இல்லை..
இது ஒரு அருமையான பாடல். ரொம்ப நாள் கழித்து எனக்கு இது mp3 வடிவத்தில் கிடைத்தது. கிடைத்ததிலிருந்து ஒரு 5 மணி நேரமாய் இந்த பாடலை மட்டும்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் பாருங்களேன்.
பாடலை கேட்டுவிட்டு, இந்த பாடலை பற்றி உங்களுடைய கருத்துக்களையும், பாடிய குரலைப் பற்றியும் சொல்லுங்களேன். முடிந்தால் பாடியவர் யாரென்றும் கண்டுபிடியுங்களேன்.
Posted by MyFriend at 4:31 AM 28 comments
Monday, February 12, 2007
161. நல்லவர் சொல்லை நாம் கேட்போம் தமிழா..
இதுவரை நான் இங்கு எழுதிய பாடல்கள் எல்லாமே சினிமா பாடல்கள்தான். இன்றைக்கு ஒரு வித்தியாசத்துக்கு ஒரு மலேசிய கலைஞசர்களின் பாடலை பற்றி சொல்லலாமே என்றுதான் இந்த பதிவு..
ஏற்கனவே மடை திறந்து என்ற பாடலை நிறைய பேர் கேட்டு மலேசிய கலைஞர்களின் திறமையை உணர்ந்துள்ளனர். இங்கெ இன்று நட்சத்திரமாய் வந்திருப்பது பூமெராங்-X (BoomerangX) என்னும் குழு. இவர்கள் ராப் இசை கலைஞசர்கள். தம்ழில் சரளமாய் பேச தெரியாவிட்டாலும் இவர்களின் பாடலில் நல்ல ஒரு கருத்து இருப்பதனாலேதான் இந்த பாடலை நான் இங்கே எழுதுகிறேன்..
தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் இங்கே பிரிட்டீஷ் காலத்தில் வரவைக்கப்பனர் தோட்டத் தொழிலுக்கு.. அன்றிலிருந்து தமிழர்களின் இடம் தோட்டங்கள்தான் என்று ஆகிவிட்டது.. 20 வருடத்துக்கு முன்பிலிருந்துதான் ஒவ்வொறு தமிழனாய் பட்டணத்துக்கு வர ஆரம்பித்தார்கள்... (இதை விடுங்கள்.. இதை பற்றி பின்பு ஒரு பதிவாய் போடுகிறேன்.)
இந்த பாடலில் அந்த வலியையும், கஷ்டங்களையும் சொல்லும் விதமே என்னை கவர்ந்தது.. இதில் மற்றொன்று எனக்கு பிடித்தது: அந்த பெண் குரல் (Featuring artiste: அலிண்டா) (வீடியோவில் தேவதை உடையில் இருப்பார்). இவர் வானவில் பாடல் திறன் போட்டியில் (2nd Season) முதன்மை நிலை வெற்றியாளர். இவர் தன் குரலை மாற்றி மாற்றி பாடும் வல்லமை படைத்தவர். 'மலேசிய பெண் SP பாலா' என்று சொன்னால் மிகையாகாது. இவர் கடைசி சுற்றில் பாடிய பாடல் என்ன என்று கேட்டால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள். அவ்வை சண்முகியில் சுஜாதாவும் கமலஹாசனும் சேர்ந்து பாடிய ருக்கு ருக்கு. இவர் இவருடைய குரலை இரண்டு மோடுலேஷனில் பாடியது அவ்வளவு அருமையாய் இருந்தது.
சரி இப்போது வீடியோ க்ளிப்பையும் அதனை தொடர்ந்து பாடல் வரியையும் பார்ப்போம்..
ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம்..
நாமெல்லாம் ஒரு ரத்தம்.. தெரியும்..
உலகம் பூரா நாம செதரிக்கெடக்கிறோம்..
4 பேரு சிரிக்கிறோம்..
4 பேரு அழுவுறோம்..
4 பேரு அழியிறோம்..
ஒருத்தன் ஞானியாவுறான்..
என்ன நடக்குது?
புரியுது.. புரியலை..
கிட்ட கொண்டுவா உன் கதை..
சொல்ல போறேன் பல கதை..
சொந்த கதை.. சொந்த கதை..
தாத்தா பாட்டி வந்த கதை..
இயற்கை மண்ம் வீசும் பால் பரக் காட்டுலே
வாழ்க்கை தேயும் செம்மண்ணின் ரோட்டுல..
அந்த பரம்பரை..மீண்டும் ஒரு முறை..
ஆள நினைப்பது என்ன குறை..
நல்லவர் சொல்லை நாம் கேட்போம்..
நலமாய் வாழ வழி வகுப்போம்..
தலைவர் சொல்ல வழி நடப்போம்..
தாய் நாட்டினையே வாழ வைப்போம்..
தமிழன் என்று சொல்லடா..
தலை நிமிர்ந்து நீ நில்லடா..
கேட்க எல்லாம் நல்லா இருக்கு அண்ணே..
முதல் வந்து பாரு தோட்டத்து மண்ண..
தோட்டத்து மக்கள்க்கு ஒரு செய்தி.
நல்லது கேட்க இல்ல ஒரு நாதி..
மரம் வெட்ட போனா உயிர் பாதி..
மறந்து நீ போனா அதோ கதி..
தோட்ட தமிழா அது செய்தி..
கேட்கவா தமிழா அது நீதி..
பட்டணத்து வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்..
இருந்தும் உன் பிள்ளை உருப்படும்..
கெட்டது இல்லாமல் பட்டுபோக
மலக்காடு இருக்கு வேலைகாக..
மாச சம்பளம் உனக்கில்லை..
மாசம் கடைசி வரும் தொல்லை..
ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சிறந்து விளங்கினோம்..
ஆனால் இன்று தோட்டப்புறத்துல மாதச் சம்பளம் பிரச்சனை..
பட்டணத்துல படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத பிரச்சனை..
ஒரு சிலர் நல்லாயிருந்தாலும்..
பலர் வருமையில வாடும் அவலம் இன்னும் இருக்கவே செய்யுது..
வந்தவருக்கெல்லம் வாரி தந்த அந்த காலம்..
இனி மீண்டும் எப்போ மலரும்?
பசிக்கும் வயிற்றின் கொடுமைகளை..
நாம் பார்த்து வாழ கூடாது..
(பசிக்கும்..)
வதக்கும் மனிதன் இருந்தாலே..
இங்கு பறிக்கும் மனிதன் தோண்ரிடுவான்..
(நல்லவர்..)
மழையில வெயிலில நனைஞ்சோம்.. காஞ்சோம்..
ஓடா தேஞ்சோம்.. அது மிச்சம்..
வீட்டைக் கட்டி.. வாயைக் கட்டி..
உழைச்சி..
10 வட்டி..கடன் கட்டி..
அழிச்சி..
வாழ்நாள் பாட்டாளி..
வருமையோட கூட்டாளி..
ஒருநாள் தான்டா தீபாளி..
இதுதான் இங்கே என்றும் கதி..
அல்லும் பகலும் உழைப்பதற்க்கு..
கல்லும் முள்ளும் உனகெதற்கு?
இல்லும் முள்ளும் கிடைக்கிற்து..
தெளிவாய் செல்லு..
நீ வெல்லு..
நாட்டை கூட நீ வளர்த்த..
காட்டுகுள்ள இன்னும் கிடக்க..
(இயற்கை..)
(நல்லவர்..)
(நல்லவர்.. & தமிழன்..)
(தமிழன்..)
Posted by MyFriend at 4:10 AM 30 comments
Labels: பாடல்
Sunday, January 14, 2007
155. மேகமே.. நீ ஊர்சுற்றப் போவதெங்கே??
ஆண்களின் கனவுகள் லட்சியமானது..
பெண்களின் கனவுகள் ரகசியமானது..
இது ஒரு கவிஞர் எழுதிய வரி..
உண்மையிலேயே பெண்கள் நிறைய கனவுகள் காண்பார்கள். அவைகளை ரகசியமாக வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் பாடக்கூடிய பாடல்கள் நாம் சில படங்களில் பார்த்துள்ளோம்.
இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு பாடலைத்தான் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.
படத்தின் பெயர் வனம் வசப்படும். ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் முதன் முதலாக இயக்குனராகிய படம். நான் முன்பே சொல்லியதுபோல் ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகும்பொழுது, ஒவ்வொரு காட்சியும் கவிதையாக இருக்கும்.. அதேபோல்தான் இந்த படமும்..
ஒரு பணக்கார பெண், தனக்கென்ற சின்ன சின்ன கனவுகளை வைத்திருந்தாள். ஆசைப்பட்டவனையும் மணந்தாள். பாசமுள்ள கணவன், அன்பான மாமியார்-மாமனார்.. ஆனாலும், அந்த சந்தோஷமான சூழலில் அவள் வாழ முடியவில்லை. இரண்டு விடலை பசங்கள் அவளின் கற்பை சூரையாடினர். அதன் பிறகு அவளின் நிலை என்ன? விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டு போனதும் அங்கே என்ன நடந்தது? தன் கணவன் அதன் பிறகும் அவளை அன்புடன் கவனித்தானா? அவளால் அந்த சூழ்நிலையில் இருந்து அவளால் மீள முடிந்ததா?
நல்ல ஒரு கதையை கொடுத்த இயக்குனர்.. அருமையான ஒரு இசையமைப்பாளரையும் தேர்தெடுத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.. புற்று நோயால் அவதிப்பட்டுகொண்டிருந்த மகேஷ்தான் இசையமைப்பாளர். ஒவ்வொரு பாடல்களுக்கும் வித்தியாசமாக உருவம் கொடுத்திருந்தார்.
மேகமே மேகமே என்று ஆரம்பிக்கும் அந்த பெண்ணின் கனவை வார்த்தைகளாக கொண்டு வந்தவர் கவிபேரரசு வைரமுத்து. ஹரிணிதான் இந்த பாடலை பாடியவர். அவரின் குழந்தை தனமான அந்த குரல் இந்த பாடலுக்கு ரொம்பவும் பொருத்தமாக இருந்தது.
பாடலை நீங்கள் இங்கே கேட்கலாம்:
மேகமே மேகமே மேகமே..
(மேகமே...)
எனக்கென்று சாம்ராஜ்யம்.. எனக்கென்று ராஜாங்கம்..
(மேகமே...)
உடல் தேவை.. அது தீர்த்து..
Posted by MyFriend at 1:07 PM 5 comments
Monday, December 25, 2006
144. உள்ளிருந்து அழுவது ஏன்?
இதற்கு முன் பாடல்களின் இசைக்கேட்ப நம் மன நிலை மாறுமென்று சொல்லியிருந்தேன்.
எனக்கும் அதே! அதே!
இன்பம் துன்பம் எல்லாவற்றிற்க்கும் உறுதுணை இந்த இசைதான். அதுவும் தமிழ் பாடல்கள்தான்.. ஆனாலும் நான் முன்பே சொல்லியிருந்தாற்போல், நான் முறையாக இசை பயிலவில்லை.
எல்லாம் நமக்கு கேள்வி ஞானம்தான்..
கவலையிருக்கும்போது நம்மை தேற்றிக்கொள்ள கண்களில் என்ன ஈரமோ, நெஞ்சோடு கலந்திடு பாடல்களை கேட்டு நாம் நம்மில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்து கவலையை மறக்கிறோம். அதே நேரத்தில், சில சமயங்களில் நாம் அழுந்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்திலும் இருப்போம். கவலை மனதில் வைத்துக்கொள்ளாமல் அழுது தீர்த்திடு... இல்லை அது உனக்குள் நாளடைவில் மன அழுத்தத்தை உருவாக்கிவிடும்ன்னு பெரியவர்கள் சொல்ல் நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா?
அதற்காகவே நான் ஒரு பாடலை கைவசம் வைத்துள்ளேன்.
ஒரு அருமையான படத்திலிருந்து அருமையான பாடல்.. ஓ மனமேன்னு ஹரிஸ் இசையமைக்க இதை பாடியவர் ஹரிஹரன்.
இந்த பாடலை நான் முதன் முதலில் கேட்கும்போதே என் மனதில் ஒரு வித ராசாயண மாற்றம். கண்கள் ஈரமாகுவதை உணர்ந்தேன். ஏனென்று புரியவில்லை..
உடனே ஒன்ஸ் மோர் போட்டேன் இந்த பாடலுக்கு. வரிகளை உற்று கவனித்தேன். புரிந்தது அந்த மாற்றம். அருமையான உண்மையான வரிகள்.. வலிகள்..
இருக்கும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தியது. அந்த காதல் வரியை தவிர..
//இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை..
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை..
இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வில் அங்கம்..//
இது நாம் வாழ்வில் கற்றுக்கொண்ட முதல் பாடம்.. இது நாம் குழந்தையாய் இருக்கும்போதே கற்றுக்கொண்ட பாடம். வாழ்க்கை ஒரு சக்கரம் என்று உணர்த்தும் வரிகள்.
அதுவே கவிதையாக, ஒரு உதாரணமும் கொடுக்கப்பட்டது இப்படி:
//நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்//
வரிகளுக்கேற்ற அந்த இசையும், ஹரிஹரனின் சிதுவேஷன் குரலும் பாடலுக்கு பலம். இதுவே என்னை கவர்ந்த சோகப் பாடல். என்னை அழவைக்கும் பாடல்.
நீங்களும் கேட்டு அழ, இந்த லிங்க்கை சொடுக்குங்கள்.
http://www.oosai.com/mail_sng_view.cfm?plyid=835
வரிகள் கீழே:
ஓ மனமே.. ஓ மனமே..
உள்ளிருந்து அழுவது யேன்?
ஓ மனமே.. ஓ மனமே..
சில்லு சில்லாய் உடைந்தது யேன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங் கற்களை எறிந்தது யார்?
(ஓ மனமே..)
மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி..
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குல் எறிந்தது காதலடி..
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கனுக்கள் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்..
துலைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரனமா?
(ஓ மனமே..)
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை..
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை..
இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வில் அங்கம்..
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி..
வெற்றிக்கு அதுவே யேணியடி..
(ஓ மனமே..)
Posted by MyFriend at 4:07 PM 8 comments
Monday, December 18, 2006
139. ஜூன் போனால் ஜூலை காற்றே.. கண் பார்த்தால் காதல் காற்றே!!
ஜீவாவின் உன்னாலே உன்னாலே பாடல்கள் வெளியீடு கண்டுவிட்டது. நீங்கள் கேட்டுவிட்டீர்களா?
ஜீவா ஒரு ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகினால், அவர்களின் படங்கள் செதுக்கி வச்ச சிற்ப்பங்களை போல் இருக்கும்.. காட்சிகள் ஒவ்வொன்றும் ஓவியங்களாக இருக்கும். உதாரண்த்திற்க்கு PC ச்ரிராமின் வானம் வசப்படும், KV ஆனந்தின் கனா கண்டேன். அந்த வரிசையில் ஜீவா.
12B, உள்ளம் கேட்குமே..இரண்டிலுமே வெவ்வேறு கதைகளை கொடுத்தவர்.
12B-இல் ஒரு சில விநாடிகளால் ஒரு மனிதனுக்கு ஏற்ப்பட்ட மாற்றங்களை அழகாக படமாக்கினார். ஆனால், இந்த படம் மக்களிடம் முழுமையாக போய் சேரவில்லை. பலருக்கு இந்த கதை புரியவில்லை. (அ ஆ போல் இரண்டு கேரக்டருக்கும் வெவ்வேறு உடை கொடுத்திருந்தால் படத்தின் கதை சுலபமாக ரீச் ஆகியிருக்கலாம். :-P) ஆனாலும், 2001-ஆம் ஆண்டின் அதிகவிற்ப்பனையான ஆடியோ கேசட்/ சிடி 12Bதான்..
ஒரு இடைவேளைக்கு பிறகு இவரின் இரண்டாவது படைப்பாக வெளியிட்டது உள்ளம் கேட்குமே. இவர் அறிமுகப் படுத்திய ஷாமை இந்த படத்திலும் நடிக்க வைத்தார். அசின், பூஜா மற்றும் ஆர்யாவை அறிமுகப்படுத்தி, லைலாவையும் நடிக்க வைத்தார். ஒரு நட்பின் இலக்கணம்ன்னு கதைக்கரு சொன்னவர், படத்தை வெளியிட ஏனோ தாமதப்படுத்தினார். அசின், பூஜா, ஆர்யா மற்ற படங்களில் பூக் ஆகி, அந்த படங்கள் வெளியாகி இவர்கள் பரப்பாக பேசப் பட்ட நிலையில், இந்த படம் ரிலீஸ் ஆனது. பாடல்கள் ஏற்க்கனவே ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பு பெற்ற நிலையில், படத்தை பார்க்க ஆர்வமும் நிறையவே இருந்தது.
இவர் இவரை காதலிப்பாரோ? இல்லை அவர் இவரை காதலிப்பாரோ? அவர் இவரை வேண்டாம்ன்னு சொல்லிவிடுவாரோ? ஏன் இவர் அழுகிறார்? கதை இப்படி இருக்குமோ?ன்னு படத்தை பார்க்குமுன்னேயே நிரைய கேள்விகளை எழுப்பியது. படம் பார்த்தபோது இப்படியொரு படமா? ஆஹா! அருமை அருமை!ன்னு சொல்லவைத்த படம். நண்பனின் திருமணத்தில் கல்லூரி நண்பர்கள் ஒன்று கூடும்போது பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக கலைவது அந்த படத்தின் ஹைலய்ட். இதை பார்க்கும்போது நம் நண்பர்களை நினைவு கூர்ந்து நம்மையும் பின்னே எழுத்து செல்கிறது.. ஈன்த படம் ஓரளவு ஓடினாலும், ஹிட் ஆகாதது வருத்தமே! ஆனாலும், நம்மளை போல் இளைஞர்களை இந்த படம் ரொம்பவே கவர்ந்ததென்று சொல்லாம். எனக்கும்தான்..
இவரின் இந்த தச்-தான் என்னையும் கவர்ந்தது. அதனாலேயே இவர் ஜூலை காற்றில் படத்தை இயக்கபோகிறார்ன்னு நியூஸ் வந்ததிலிருந்தே வேய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். தமிழக வரிவிலக்குக்காக இந்த படமும் உன்னாலே உன்னாலேன்னு பெயர் மாற்றம் கண்டது.
படத்தின் நாயகனாக மும்பை மோடல் வினயையும், நாயகிகளாக கஜோலின் தங்கை தனிஷா முகர்ஜியும் சாதாவும் நடிக்கிறார்கள். வினயும் தனிஷாவும் - அசின், ஆர்யா, ஷாமைபோல் பிரபலம் ஆவார்கலா இல்லையான்றது படம் வெளியானபிரகுதான் தெரியும்.. ஆனாலும், ஜீவா இவர்களை அழகாக ஷெதுக்கியிருப்பார்ன்னு நான் நினைக்கிறேன்.
படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது.மொத்தம் 6 பாடல்கள்.
1- ஹலோ மிஸ் இம்சையே - GV பிரகாஷ், அனுஷ்கா
பிரகாஷ் வெளி இயக்குனரிடம் பாடிய முதல் பாடல். விருவிருப்பான பாடல்.
2- இளமை உல்லாசம் - கிரீஷ், ஷாலினி
2 நிமிட பாடல்தான். நிறைய வாத்தியங்கள் இல்லாமல் இயற்றிய பாடல். நட்பினை உணர்த்தும் பாடல். ஆனந்தம் (12B), பூ போல்(மின்னலே) ரகம்.
3- ஜூன் போனால் - கிரீஷ், அருண்
படத்தின் ஹைலைக்ட் பாடல். காதலில் நடந்த சில ஊடல்களை நினைத்து பாடிய பாடல். இதை கேட்கும்போது மஞ்சல் வெயில் (வேட்டையாடு விளையாடு) கேட்பதுபோல் எனக்கு தோன்றுகிறது.
4- முதல் நாள் இன்று - கே.கே, மகாலட்சுமி ஐயர்
ராங் டே பசந்தியில் ரூபரூ பாடலை கேட்டதுண்டா? பாடலின் ஆரம்பம் அதேபோலவே இருக்கு. ஆனாலும் இது ஒரு காதல் டூயட். பாடல் முழுதும் கீதாரின் இசையை பிண்ணனிய்ல் கொண்டது.
5- முதல் முதலாக - கார்த்திக், கிரீஷ், ஹரிணி
படத்தின் தீம் பாடல். கார்த்திக் பாடுகிறார் என்றால் சொல்லவே வேண்டாம். பாடல் அருமை. "முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே.." என்ற வரி பட முழுதும் ஒலிக்கும்ன்னு நினைக்கிறேன்.
6- வைகாசி நிலவே - ஹரிசரண், மதுசிரி
காதல் படத்துக்கு பிறகு ஹரியின் குரலுக்கு பொருத்தமாக அமைந்த பாடல் இது. ஆனாலும், மதுச்ரி வரிகளை தப்பு தப்பாக உச்சரிப்பது வருத்ததை அளிக்கிறது.
ஆகமொத்ததில், உள்ளம் கேட்குமே அளவுக்கு இல்லைன்னாலும், பாடல்கள் ரசிக்கிர வண்ணமே இருக்கிறது மகிழ்ச்சி.
Posted by MyFriend at 9:39 AM 10 comments
Labels: பாடல்
Friday, December 15, 2006
137. கண்களில் என்ன ஈரமோ??
சிலர் வருத்ததுல இருக்கும்போது, யாராவது வந்து சமாதானம் படுத்தவேண்டும்ன்னு நினைப்பாங்க. மற்றவர்களிடம் தன் சோகங்களை பறிமாறிகொண்டால், தன்னிடம் இருக்கும் பாரம் இறக்கி வைக்கப்படுவதைபோல் உணர்வார்கள்..
ஆனால், எனக்கு என்னுடைய பிரச்சனைகள் / சோகங்களை நானே தாங்கிகொள்ள வேண்டும்ன்னுதான் நினைக்கிறேன். பாடல்கள் / இசைகள் - அதிலிருக்கும் வரிகள் பல பல சமயங்களில் எனக்கு உருதுணையாக இருந்திருக்கு.
அழ வேண்டும்ன்னு நினைக்கிற நேரங்களிக் அழவைக்கும் பாடல்களை கேட்பதும், சிரிக்க வேண்டிய நேரத்தில் சந்தோஷமான பாடல்கள் கேட்பதும், அசைக்ன்மென்ட் கடைசி நாளில் / கடைசி நிமிடங்களில் செய்யும் போது விருவிருப்பான பாடல்களை கேட்பதும், அமைதியான நேரங்களில் மனதை தழுவும் சென்டிமென்ட் பாடல்களை கேட்பது என் வழக்கம்.. இதுக்காகவே ஒரு பெரிய டாதாபேஸ்(database) வச்சிருக்கேன். :-)
நான் கவலையில் இருக்கும்போது எனக்கு ஆறுதல் சொல்வதற்க்காக சில பாடல்கள் கேட்பேன் அதில் "கண்களில் என்ன ஈரமோ"ன்ற பாடலும் ஒன்று. உழவன் என்ற படத்துக்காக பாலசுப்ரமணியமும் சித்ராவும் பாடிய இந்த பாடலுக்கு இசையமத்தவர் ரஹ்மான்தான்.
இந்த பாடலை நீங்கள் இங்கே கேட்கலாம்: http://www.oosai.com/mail_sng_view.cfm?plyid=1100'
கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயைபோல்
உன்னை தாங்கவா?
(கண்களில்)
பெற்றவள் விட்டு போகலாம்
அன்னை பூமியும் விட்டு போகுமா?
தன்னுயிர் போல காப்பதில்
தாயும் நிலவும் ஒன்னுதான்..
இருக்கும் தாயை காத்திடு
மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு
புது கோலம் போடு
விதி வாசலில்
கலக்கம் ஏனையா?
(கண்களில்)
அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியதும் வார்த்தைதான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி
நின்ற ஓடம்தான்
கரையை சேர்ந்தது
கண்களில் இல்லை ஈரமே
நெஞ்ஜினில் இல்லை பாரமே
கைகளில் அதை வாங்கினாய்
ஒரு தாயை போல
என்னை தாங்கினாய்..
(கண்களில்)
இந்த பாடலின் இசையே நமது வலியில் பாதியை போக்கிவிடும்.. பலமான இசை இல்லாமல், மிகவும் குறைவான வாத்தியங்களை பயன் படுத்தியிருக்கிறார் ரஹ்மான். அதுவும் 1:28-இலிருந்து 1:43 நிமிடங்கள் வரை வரும் அந்த பியானோ இசை அருமை. (நான் இசையை பற்றி படிக்கவில்லை. ஏதாவது தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். இது நான் உணர்ந்த விஷயங்கள் மட்டுமே!)
// அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியதும் வார்த்தைதான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி
நின்ற ஓடம்தான்
கரையை சேர்ந்தது//
பாலா பாடிய இந்த வரிகள்தான் என்னை வருடிய சில வரிகள்ன்னு சொல்லலாம்.. அம்மம்மா.. அருமை அருமை!! அழுதுகொண்டிருந்தவனும் கூட அழுவதை நிருத்திவிடுவான்.
இந்த பாடலில் நீங்கள் கவனித்தீரானால், முதல் பாதியில் சித்ரா பாலாவுக்கு ஆறுதல் கூறுவார். அந்த ஆறுதலில் அவர் மாறி நான் கவலையை மறந்தேன் என்று இரண்டாம் பாதியில் பாடுவார். ச்ந்தோஷமான ஒரு சூழல் ஒருவாகிவிடும்..
இதே சாயலில் மூன்று வருடத்துக்கு முன் ஒரு பாடல் வெளியானது ஞாபகம் இருக்கிறதா? இதேபோல், அந்த பெண் சமாதானம் படுத்த, இரண்டாம் பாதியில் அந்த ஆண் கவலை தெளிந்து பாடுவார். இதுவும் ஒரு ஹிட் பாடல். எனக்கு மிகவும் கவர்ந்த பாடல்களில் இன்னொன்று. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
Posted by MyFriend at 10:07 AM 6 comments
Wednesday, November 22, 2006
103. கனா கண்டேனடா!!!!
நேற்று ஒரு சந்தோஷம் கலந்த கவலை கனவு..
சந்தோஷம் : உன்னி கிருஷ்ணன் என் கனவில் வந்து இசை விருந்து படைத்தது.
கவலை: சுஜாதாவுக்காக என்ன பாட்டு இதுன்னு ஒரு பதிவு எழுதி, அவருக்கு எழுதாமல் விட்டது.
ஏன் வம்பு? உன்னி மீண்டும் என் அடுத்த கனவில் வந்து வருத்தப்படுவதற்க்கு முன்பாகவே அவருக்காக என்ன பாட்டு இதுன்னு ஒரு பதிவு போட்டுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். சுஜுக்கு 5 பாடல் போட்ட நான் உன்னிக்கு 7 பாடல் போட்டு அவரை கூல் பண்ண் போறேன். ஹிஹிஹீ..
பாடல் 1
என் கனவுகளின் உருவங்களை..
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்..
பாடல் 2
பெண்களின் கனவுகள் ரகசியமானது..
ஆண்களின் கனவுகள் லட்சியமானது..
பாடல் 3
சொல்லாத சொல்லுக்கு பொருள் ஒன்றும் கிடையாது..
நான் கொண்ட னேசத்தின் நிறம் என்ன தெறியாது..
பாடல் 4
போதும் உந்தன் கால் சுவடு..
வாழும் அதில் எந்தன் மனது..
பாடல் 5
பூங்கிளி கைவரும் நாள் வருமா?
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா?
பாடல் 6
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்..
நீ வந்து தான் நீராடி போ..
பாடல் 7
பெண்னே நீ..
பாதி ஹிட்லரா?
மீதி பாதிதான் தெரசாவா?
படிக்கிற நீங்க இது எந்த பாடல்/படம்ன்னு கண்டுபிடிக்க முடியுமா?
pst: கார்த்திக், முந்தைய பதிவுல தைம் கிடைகாம பதில் எழுத முடியலன்னு சொன்னீங்க.. இப்ப முயற்ச்சி செய்ங்க..
இனிமேல், வாரம் ஒரு முறை இதுபோல் ஒரு குவீஸ் கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்க??
Posted by MyFriend at 9:25 AM 10 comments
Labels: பாடல்
Thursday, November 16, 2006
என்ன பாட்டு இது?
நாம் தினமும் பாடல்கள் கேட்கிறோம்..
அதிலே சில மனதில் அச்சடித்தது போல் மனதிலே பதிவாகிவிடும்;
சில எத்தனை தடவை கேட்டாலும் நினைவில் இருக்காது;
சில திரும்பவும் கேட்கவே கூடாதுன்னு நினைப்போம்;
சில பாடல்களின் வரி நமக்கே எழுதினது போல அனுபவிப்போம்;
இப்படி பல பல காரணங்கள் இருந்தும் நாம் கண்டிப்பா, அதுவும் தமிழ் பாட்டை கேட்போம்.. அதுனாலேதான் இன்னைக்கு இசை சம்பந்தப்பட்ட ஒரு பதிவுடன் வந்திருக்கிறேன்..
இங்கு கீழே நான் 5 பாடல்களின் வரிகளை எழுதியுள்ளேன். இந்த பாடல் வரிகள் எந்த பாடல்/படம் என்று உங்களால் கண்டுபிடிக்க இயலுமா?
பாடல் 1
உன்னை மழை என்பதா?
இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?
பாடல் 2
எனக்கென இருந்தது ஒரு மனசு..
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு..
பாடல் 3
சின்ன சின்ன கிண்ணம்..
ஊற்றி வைத்த வண்ணம்..
தூறிகையில் சேர்ந்தால்..
ஓவியங்கள் ஆகும்..
பாடல் 4
ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு..
கண்டுப்பிடிப்பது ஆண்களின் பொறுப்பு..
பாடல் 5
கடல் வண்ணம் வானின் வண்ணம் கரு வண்ணம்தானே..
கடல் வண்ணம் காணும்போது உனைக் கண்டேன் நானே..
ஐந்தே கேள்விகள்தான்..உங்களுக்கு ஒரு சின்ன க்ளு தருகிறேன்.. இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் பாடியவர் நம்ம சுஜாதாதான்!!! இந்த க்ளு உங்களுக்கு ரொம்பவே உதவியாய் இருக்கும்ன்னு நம்புகிறேன்..
Posted by MyFriend at 9:03 AM 7 comments
Labels: பாடல்