Tuesday, October 02, 2007

நானா நீயா..

நானா இல்லை நீயா.. நானா நீயா..

சண்டைக்கு கூப்பிடுறேன் என்று நினைக்கிறீர்களா.. இல்லை இல்லை.. மேலே (கீழே) படிங்க..

நீங்க ஒரு கவிஞர்! (சும்மா விளையாட்டுக்குதாங்க சொன்னேன். அதுக்குன்னு பேப்பரும் பேனாவும் ரெடி பண்ணீட்டீங்களே! படிக்கிற எங்கள் கண்ணுலதானே ரத்தக்கண்ணீர்தான் வரும்! ஹீஹீ).. சரி கதைக்கு வருவோம். நீங்க ஒரு கவிஞர் & இசையமைப்பாளர் என்று கற்பனை பண்ணிக்கோங்க.. ஒரு இயக்குனர் உங்க கிட்ட வந்து ஒரு சித்துவேஷனல் சாங் கம்போஸ் பண்ணி தர சொல்றார். இதுதான் அந்த சித்துவேஷன்:

இயக்குனர்: கதையோட ஹீரோ பெயர் அப்பளசாமி. அவருக்கு ஒரு காது கேளாத மனைவி. அவங்க பெயர் மங்களம். இவங்க ரெண்டு பேரும் புதுசா ஒரு வீட்டுக்கு குடி போறாங்க. இவங்களோட பக்கத்துவீட்டுக்காரர் குண்டோதரன் ஒரு பெரிய ரௌடி. இவரோட மனைவி பாக்கியம் ஒரு சினிமா பைத்தியம். குண்டோதரனுக்கு ஒரு விசித்திரமான குணம். அவர் பக்கத்து வீட்டுக்கு யாரும் குடிவந்தால் இவருக்கு பிடிக்காது. அவரோட அடியாள் (மலாயில பூடாக் என்று அழைக்கப்படும்) சங்கரனை வைத்து பல கஷ்டங்களை கொடுக்கிறாரு..

நீங்க: எதுக்கு இப்போ கதையில மலாய் பேரெல்லாம் அடிப்படுது? நான் இப்போ பாடல் எந்த மொழில எழுதுறது?

இயக்குனர்: வாயை மூடிக்கிட்டு கதையை கேளு. இல்லன்னா நான் வேற கவிஞரை தேட வேண்டியிருக்கும்.

இப்படியெல்லாம் நடந்துக்கிட்டு இருக்கிறதை அப்பளசாமிக்கும் குண்டோதரனுக்கும் தெரியாமலேயே ஒரு கும்பல் கண்காணிச்சுட்டு இருந்திருக்கு. அந்த கும்பல் யாரு, என்ன பண்ண போறாங்கன்னு சர்ப்ரைஸ்.. கதை அப்படியே சும்மா அதிருதுல்ல!!!!

நீங்க: ஃபுல் கதை தெரிஞ்சாதானே நான் இசையமைக்கிறதுக்கு வசதியா இருக்கும்? எனக்கே சர்ப்ப்ரஸா??

இயக்குனர்: உனக்கு கதை நான் சொல்லிட்டு இருக்கேன்.. ஆனா, அங்கே பாரு.. அதை இவங்க எல்லாரும் படிச்சுட்டு இருக்காங்க. நான் இப்போ முழு கதை சொன்னா அவங்களுக்கு தெரிஞ்சிடும்ல??

நீங்க: (மனசில்).. சகிக்கலை. :-(

இயக்குனர்: என்ன சவுண்டையே காணோம்?

நீங்க: நீங்க ரொம்ப ப்ரில்லியண்டா இருக்கிறதை பார்த்து பூரிச்சு போயிருக்கேன் சார்.

இயக்குனர்: சரி, எனக்கு முதல்ல தீம் சாங் போடு..

நீங்க: முதலை தீம் சாங்-ஆ? முதலைக்கெல்லாம் என்னால தீம் போட முடியாது.. என்னை விடுங்க..

இயக்குனர்: என்னமோ நான் பிடிச்சு வச்சிருக்கிற மாதிரியே விடுங்க விடுங்கன்னு நீங்க தமாஷ் பண்றீங்க. ஹீஹீ.. சரி.. இப்போ சீரியஸா பேசுவோம்.. எனக்கு இந்த கதைக்கு ஒரு தீம் சாங் வேணும். அதுல நல்ல நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லணும். படம் முழுசா பிட்டு பிட்டா ஆங்காங்கே வரும் இந்த பாட்டு.. ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. முக்கியமான ஒரு கண்டிஷன்.. இந்த பாட்டு தமிழ், மலாய், ஆங்கிலம்ன்னு மூன்று மொழியில் வரணும். முடியுமா?? முடியுமா? முடியுமா?

நீங்க: சார்..... எப்படி சார்? மூனு மொழியிலே ஒரே பாட்டா?

இயக்குனர்: முடியும். நான் ரெடி நீங்க ரெடியா??

பி.கு: இந்த "நீங்க"ங்கிறது படிக்கிற நீங்கதான். யாரால இந்த சித்துவேஷனுக்கு கவிதை எழுதி இசை கம்போஸ் பண்ண முடியும்? ட்ரை பண்ணுங்க. யாராலும் முடியலைன்னா, இந்த இயக்குனரே இந்த சித்துவேஷனுக்கு ஏத்த பாட்டு நாளைக்கு போடுறேன்னு அடம் பிடிக்கிறார். யாராவது என்னை காப்பாத்துங்கப்பா!!!!!!

19 Comments:

said...

யப்பா இப்பவே கண்ணை கட்டுதே சாமி ;-((

said...

அட சிச்சுவேஷன கூட சித்துவேஷன்னு சித்துவ கூப்பிட்டு சொல்லனுமா?

said...

இப்டி ஒரு பிட்ட போட்டாதான் உங்க மலாய் க்ளாஸ் ஒழுங்கா நடக்கும்னு எழுதியிருக்கயா? அவ்ளோ சீக்கிரம் படிச்சிடுவோமா என்ன ? :)

said...

இப்ப எதுக்கு இப்டி ஒரு 'மெகா மொக்கை' போஸ்ட்??

யப்பா இப்பவே கண்ணை கட்டுதே சாமி ;-((

said...

"யாராவது என்னை காப்பாத்துங்கப்பா!!!!!!"


காப்பாத்த வரும் புண்ணியவான்களே கூடவே என்னையும் சேர்த்து காப்பாத்துங்கப்பா!!!

said...

"இயக்குனர்: வாயை மூடிக்கிட்டு கதையை கேளு. இல்லன்னா நான் வேற கவிஞரை தேட வேண்டியிருக்கும்."

எனக்கு தெரிஞ்சு ஒரு கவிஞர் இருக்கிறார், அவர் பேரை சொன்னா இயக்குனர் மூக்கை பஞ்சு வச்சு மூடவேண்டி இருக்கும் பரவாயில்லையா?

(கவிஞர் யார் கரிட்டா சொல்லுங்க பார்ப்போம்!!!:)

said...

"முழுசா பிட்டு பிட்டா ஆங்காங்கே வரும்"

:(((((

:))))))))))))

:(((((

:))))))))))

said...

"இயக்குனர்: என்ன சவுண்டையே காணோம்?"


ஊஊஊஊஊஊஊ (சங்கு ஊதும் சவுண்ட்)

டிங் டிங் டிங் (சாவு மணி அடிக்கும் சத்தம்)


(இந்த பதிவை படிச்ச நாலு பேர தூக்கிட்டு போகும் பொழுது வரும் சவுண்டுதான் இது)

said...

"கோபிநாத் said...
யப்பா இப்பவே கண்ணை கட்டுதே சாமி ;-(("


கோபி நீ புண்ணியம் செஞ்சவன் போல சாமி உன் கண்ணை கட்டி போஸ்ட படிக்கவிடாம செஞ்சுட்டு போல,,, ஆனா என் கண்ணை இந்த போஸ்ட் படிக்க வச்சு குத்திட்டுய்யா!!!
அவ்வ்வ்வ்வ்

said...

"இந்த பாட்டு தமிழ், மலாய், ஆங்கிலம்ன்னு மூன்று மொழியில் வரணும். முடியுமா?? முடியுமா? முடியுமா?"

இத படிக்கும் பொழுது இனி இந்த பக்கம் வருவீயா? வருவீயா? வருவீயா?ன்னு நீங்க காதுக்கிட்ட கேட்பது போல் இருந்துச்சு...:)))

said...

//குசும்பன் said...
"இந்த பாட்டு தமிழ், மலாய், ஆங்கிலம்ன்னு மூன்று மொழியில் வரணும். முடியுமா?? முடியுமா? முடியுமா?"

இத படிக்கும் பொழுது இனி இந்த பக்கம் வருவீயா? வருவீயா? வருவீயா?ன்னு நீங்க காதுக்கிட்ட கேட்பது போல் இருந்துச்சு...:)))

// சூப்பர்ப் ரிப்பீட்டேய் :) :) :)

Anonymous said...

:p akka ellarum paavam...

said...

/குசும்பன் said...

"இந்த பாட்டு தமிழ், மலாய், ஆங்கிலம்ன்னு மூன்று மொழியில் வரணும். முடியுமா?? முடியுமா? முடியுமா?"

இத படிக்கும் பொழுது இனி இந்த பக்கம் வருவீயா? வருவீயா? வருவீயா?ன்னு நீங்க காதுக்கிட்ட கேட்பது போல் இருந்துச்சு...:)))//ஹா ஹா ஹா.... சூப்பரு.... :)

said...

ஹீஹீஹீ... நானா நீயா பார்ட் 2 நாளைக்கு உங்களை நாடி வரும். ;-)

said...

அடுத்த சித்துவேசன்...ஒரு நன்பிக்கு தூக்கம் வரலையாம்...அவங்களுக்கு தூக்கம் வர மேண்டரின், கொக்கின் மொழிய கொஞ்சம் கலந்து, தமிழ் தூவி, மலாய் துப்பி பாட்டு வேணும் ..சரியா..

said...

:(((

said...

ஆத்தா மலேஷியா மாரியாத்தா
உனக்கே இது ஓவராத் தெரியலை.
என்ன புடலங்காய் சித்து[ச்சு] வேஷன் அதுக்கு சாங்கு?
இதுல பார்ட் 2 வேறயா?

said...

//அட சிச்சுவேஷன கூட சித்துவேஷன்னு சித்துவ கூப்பிட்டு சொல்லனுமா?//

//"முழுசா பிட்டு பிட்டா ஆங்காங்கே வரும்"

:(((((

:))))))))))))
//
repeatu!

said...

நமக்கு கவுஜு னாலே அலர்ஜி... இதுல இது வேறையா....

என்னமோ போங்க....