Thursday, October 04, 2007

வாழ்க்கைப்பயணம் -1

'இன்னேரம் ஸ்வாதி, அரவிந்த், சுமதி எல்லாருமே சந்தோஷமா இருப்பாங்க..'

அரவிந்த் weds ஸ்வாதி என்ற திருமண அழைப்பை தடவிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்தாள் சந்தியா.

'சரியாக 11 வருடம். 11 வருடம் காதலித்து இப்போது திருமண பந்தத்தில் இணைகிறார்கள். சுமதி மட்டும் என்னவாம்? அவளும் தனக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை அடுத்த வாரம் மணந்துக்கொள்ள போகிறாள்' என்று நினைத்துக்கொண்டே தன் புத்தகத்தின் நடுவில் மறைத்து வைத்திருந்த சுமதியின் திருமண அழைப்பை எடுத்தாள்.

'நண்பர்கள் அனைவரும் திருமணம், குடும்பம், பிள்ளைகள் என்று பல திசைகளை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும் அதே புள்ளியில் நகராமல் இருக்கிறேனே. ஏன் சந்தியா?'.. அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

"சந்தியா, வீட்டுக்கு கிளம்பலையா நீ?"

அஞ்சலியின் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்துப்பார்த்தாள் சந்தியா.

"சாரி, ரூம் கதவு தட்டினேன். உன்னிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. அறை கதவு திறந்து இருந்ததால் அப்படியே நுழைய வேண்டியதா போச்சு."

சந்தியா அவளின் கைக்கடிகாரத்தை பார்த்தாள். மணி ஆறாக பத்து நிமிடமே இருந்தது.

"நீ இப்போ கிளம்புறியா இல்லையா?"

"இதோ கிளம்பிட்டே இருக்கேன்." சட்டென்று இரண்டு அழைப்பிதழ்களையும் அவளின் மேஜை ட்ராவரில் போட்டு பூட்டிவிட்டு அவளின் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

சந்தியாவின் சிகப்பு நிற வீரா பார்க்கிங்கிலிருந்து வெளியாகி வேகமாக சென்றது. ஒரு சிக்னலில் கார் நின்றபோது,

"அஞ்சலி, இன்றைக்கு நான் ஊருக்கு கிளம்புறேன்"

சந்தியாவின் வார்த்தைகள் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சந்தியா ஒரு பிரபலமான கான்ஸ்ட்ராக்ஷன் கம்பெனியில் டிசைக்னராக பணி புரிகிறாள். சனி ஞாயிறுகளில் கூட அலுவலகத்துக்கு செல்வதும் புதிதாக ஏதாவது வடிவமைப்பதுமாக இருப்பவள். ஊருக்கு 2-3 மாதங்களுக்கு ஒரு முறைதான் செல்வாள். அதுவும் அஞ்சலியின் வற்புருத்தலின் பேரில்.

"ஏன் திடீர்ன்னு?" அஞ்சலி தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.

"என்னுடைய பள்ளி தோழர்கள் அரவிந்த் ஸ்வாதி திருமணம் இந்த வீக் எண்ட்."

"ஆஹா. கல்யாண சாப்பாடா? இங்கே கே.எல்-ல இருந்திருந்தால் நானும் உன் கூட ஒட்டிக்கிட்டு வந்திருப்பேன். ரொம்ப நாள் ஆச்சு கல்யாண சாப்பாடு சாப்பிட்டு" பரவசத்துடன் சொன்னாள் அஞ்சலி.

"கல்யாணம் இங்கேதான். பங்சாரில். இதுக்கு போகக்கூடாதென்பதுனாலத்தான் நான் ஊருக்கு போகிறேன் என்று சொல்லிட்டு இருக்கேன் அஞ்சலி"

"ஏண்டி? முன்னெல்லாம் எப்போ பார்த்தாலும் உன்னோட பால்ய சினேகிதர்களை பற்றிதானே பேசிட்டு இருப்பே? இப்போ என்ன வந்தது? எதுக்கு போக மாட்டேன்னு அடம் புடிக்கிற?"

"உனக்கு புரியாது. என்னோட படித்த, பழகிய எல்லா நண்பர்களுக்கும் திருமணம் ஆகி குடும்பம், பிள்ளைகள்னு இருக்காங்க. நான் மட்டும்தான் தனியா இருக்கேன். இப்போ நான் அங்கே போனா, ஏன் எதுக்கு இன்னும் கல்யாணம் பண்ணிக்கவில்லைன்னு கேட்ப்பாங்க.. இதுக்கெல்லம் நான் தனி தனியா விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது!"

அஞ்சலி சற்று நேரம் மௌனம் காத்தப்பின், "சரி பரவாயில்லை. விடு.. இந்த கல்யாண சாப்பாடு கிடைக்கலைன்னா என்ன. கூடிய சீக்கிரத்திலேயே நான் என்னோட சொந்த கல்யாண சாப்பாடுதான் சாப்பிடபோறேனே!" என்று ஒரு வித வெட்கத்துடன் சொன்னாள்.

சந்தியாவின் கவனம் ரோட்டிலிருந்து அஞ்சலி மேலே திரும்பியது.

"is It?"

"ம். காலையில்தான் டேட் கண்ஃபார்ம் பண்ணாங்க. நவம்பர் 30. உனக்கு சொல்லலாம்ன்னு காலையிலே கால் பண்ணேன். அம்மணிதான் என் கால் பிக்கப் பண்ணவே இல்லையே" என்று செல்லமாக கடிந்துக்கொண்டாள்.

"Congrats" என்ற ஒற்ற பதிலோடு சந்தியா திரும்ப அவளது கவனத்தை சாலையின் மேல் திருப்பினாள்.

"உனக்கு எப்போ கல்யாணம்?" திரும்ப அமைதியை கலைத்தாள் அஞ்சலி.

"கார்த்திக் ஓகேன்னு சொன்னா, இப்பவே என் கழுத்தை நீட்ட நான் தயார்"

"ஹேய்.. You naughty".. தன் வருங்கால கணவர் கார்த்திக்கை பற்றிதான் சந்தியா சொல்வதை அறிந்த அஞ்சலி சந்தியாவின் கையில் கிள்ளினாள்..

இருவரின் சிரிப்பிலும் அந்த காரே அதிரும் அளவு இருந்தது.

"ஹேய் சந்தியா.. Now I'm serious. நீ எப்போதுதான் உன்னுடைய இந்த தனிமையான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கபோறே? உனக்கு 30 வயது ஆச்சு. உன் அம்மா கால் பண்ணும்போதெல்லாம் இதையே சொல்லி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்"

".........."

"ஓ.. தியாகுதான் காரணமா?"

"இ.. இல்ல.."
அவள் மனம் ஆமாம் என்று சொல்வதுக்குள் வாய் இல்லை என்றது.

'தியாகு.. 6 வருடம் ஆச்சே! ஆனாலும் உன்னை என்னால் மறக்கமுடியவில்லையே. இந்த 6 வருடத்தில் ஒரு நாள் கூட உன்னை நினைக்காமல் இருந்ததில்லையே நான்! '

மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடி விளையாடின.

"பச்சை சிக்னல் விழுந்தாச்சுடா" என்று அஞ்சலி அவள் தோள் மீது கைவைத்தபோது மீண்டும் தன் கவனத்தை சாலையின் மேல் செலுத்தினாள் சந்தியா. நான்கு சக்கரங்களும் திரும்ப சுழல ஆரம்பித்தன.

ஒரு சிறு அமைதிக்கு பிறகு,

"தியாகு இல்லைன்னா, வேற என்ன காரணம்? தியாகு உன் வாழ்க்கையை விட்டு போய் 6 வருடங்கள் ஆச்சு. ஆறே மாதம்தான்! அதுவே உனக்குள் இப்படி ஒரு பாதிப்பா?"

"நான் எப்போதும் போலத்தானே இருக்கிறேன்?" வார்த்தைகளை தேடி தேடி பேசினாள் சந்தியா.

"உன்னோட நான் 8 வருடமா தங்குறேன். என் சந்தியா எப்படி இருந்தா, எப்படி இருக்கானு தெரியாதா எனக்கு? உன் முகத்தில் இருந்த பழைய சந்தோஷம் இப்போ இல்லையே!

அஞ்சலி சொல்வது உண்மைதான் என்று அறிந்து அமைதி காத்தாள் சந்தியா.

"ரேகா கூடத்தான் ஒரு பையனை காதலித்தாள்.. 3 வருடங்கள் சின்சியராக. அவள் காதல் தோல்வியடைந்த பிறகு அவள் உன்னை மாதிரியா இருந்தாள்? ஒரு வருடம் கழித்து சிவாவை மணக்கலையா? இப்போ 2 ஜூனியர் சிவாக்களோடு சந்தோஷமாதானே இருக்கா? அவளோட உன்னை கம்பேர் பண்ணா உன்னோடது சப்பை மேட்டர்தானே? உன்னோடது just one side love. உன்னுடைய காதலைக்கூட தியாகுவிடம் நீ சொல்லலை. அப்புறம் எப்படி அவர் திரும்பி வருவார் என்று காத்துக்கொண்டிருக்கிறாய்?"

சந்தியாவின் கார் நெடுஞ்சாலையில் நுழைந்தது.

"அஞ்சலி, என்னுடைய வாழ்க்கை இதோ இந்த நெடுஞ்சாலையில் நான் என் காரில் தனியாக செய்யும் பிரயாணம் போல.."

"புரியவில்லை சந்தியா"

"என் காரில் நான் ஒரு நீண்ட நெடுஞாலையில் வேகமாக பிரயாணம் செய்துக்கொண்டிருக்கிறேன். வழியில் பல ஆண்கள் லிஃப்ட் கேட்டபோது ஒரு தடவையும் நான் நிறுத்தவே இல்லை. ஆனால், அதே சாலையில் ஒரு புள்ளியில் தியாகு நிற்பதை பார்த்தபோது என்னையும் அறியாமல் என் கால்கள் ப்ரேக்கை அழுத்தியது. என் கார் அவர் முன் நின்னபோது அவர் என் வண்டியில் ஏறவில்லை. நானே அவருக்கு முன் சீட்டு கதவு திறந்துவிட்டபோதும் அவர் ஏறவே இல்லை"

"அப்படின்னா உன்னுடன் தன் பயணத்தை தொடர அவருக்கு விருப்பமில்லை என்றுதானே அர்த்தம்? நீ ஏன் உன்னுடைய அந்த காலியான சீட்டை லிஃப்ட் கேட்கும் மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது?"

"நானும் அப்படித்தான் நினைத்து என் காரை ஸ்டார்ட் பண்ணேன். எண்ணையை அழுத்த வேண்டிய என் கால் இன்னும் ப்ரேக்லேயேதான் இருக்கின்றது. தியாகுவின் முன் நிற்கும் என்னுடைய கார் அங்கிருந்து ஒரு இன்ச் கூட நகரவே இல்லை"

"நான் ஒன்னு சொன்னால் கேட்ப்பாயா சந்தியா?"

"சொல். முடிந்தால் முயற்ச்சிக்கிறேன்."

"உன்னுடைய கார்தான் அந்த இடத்தை விட்டு நகர மாட்டேங்குது என்று சொல்கிறாயே! நீ ஏன் அந்த காரை விட்டு இறங்கி வேறொரு காரில் லிஃப்ட் கேட்க கூடாது? உன்னுடன் பயணம் செய்ய வேறொருவர் விருப்பம் கொள்ளலாம் இல்லையா?"

"இப்போதைக்கு இந்த காரை விட்டு இறங்குவதாய் எந்த எண்ணமும் எனக்கில்லை அஞ்சலி"

இருவருமே அமைதியானார்கள். அஞ்சலி இடதுபக்க கண்ணாடியின் வெளியே தன் பார்வையை திருப்பினாள். சந்தியாவோ திரும்ப தியாகுவின் நினைவலைகளில் கலந்தாள்.

"சந்தியா, அடுத்த வாரம் நான் ஆஸ்த்ரேலியாவுக்கு போறேன். அங்கே எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கு. இந்த சந்தர்ப்பம் கண்டிப்பாக நான் நழுவ விடமாட்டேன். இந்த கம்பெனியில நீதான் என் பெஸ்ட் ஃபிரண்ட். உன்கிட்ட மட்டும்தான் இதை பத்தி சொல்றேன்". தியாகு அவளிடம் பேசிய இந்த கடைசி வார்த்தைகள் இன்னும் அவள் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன.

'நான் அவரை காதலிக்கிறேன்னு அவர் கடைசி வரை அறியவே இல்லையே!'

"ஹோன்க் ஹோன்க்"

முன்னே வேகமாய் வந்துக்கொண்டிருந்தது ஒரு டாங்கர் லாரி.

"சந்தியா.. லாஆஆஆஆர்ர்ரீஈஈஈ" அஞ்சலி கண்ணை இருக்க மூடி காதை பொத்தி கத்தினாள்.

**இங்கே நாங்க தொடரும்ன்னு போடுவோம்ல... :-))**

(பயணம் ரும்..)

33 Comments:

MyFriend said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ..

G3, உங்களோட படத்தை எடுத்து இங்கே போட்டுடேண். நன்றி. :-)

மக்கா, என் கதை முயற்சி எப்படி இருக்கு? ;-)

TBCD said...

கதை நல்லா போகுது...வாழ்த்துகள்...நானெல்லாம்..புல் லோட்ல போறேன்..இல்லாயின்னா..உங்க ஹீரோயின கடத்தலாம்... :)))

Anonymous said...

நல்ல வேளை இடிச்சிருப்பேன்..வீட்டுல் சொல்லிட்டு வந்தீங்களா...

Anonymous said...

அட தியாகு நீங்களா....நீங்க எப்படி லாரி ஓட்டுறீங்க

Anonymous said...

ஆசுஸ்துறேலியா போனேன்...ஆனா மனசு அதுல ஒண்டல..இந்த தொழில் தான் ஒரு ஆதம திருப்தி இருக்கு

Anonymous said...

இப்போ எங்க போறீங்க...( என்னையயும்..கூட்டிட்டு போக கூடாதா..)

G3 said...

//மக்கா, என் கதை முயற்சி எப்படி இருக்கு? ;-)//

supera irukku :)
seri adutha part eppo release??


//G3, உங்களோட படத்தை எடுத்து இங்கே போட்டுடேண்//

Naanae adha imsai arasi kitta irundhu sutten :P

Anonymous said...

நீங்க சொன்னா எங்க வேனாலும் போலாம்..

Anonymous said...

அப்படியா வாங்க ஒரு வாழ்கைப் பயணம் போகலாம்..(அப்பாடி தலைப்பு வந்திடுச்சி..)

ஜே கே | J K said...

வந்துட்டேன்

ஜே கே | J K said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
மீ தி ஃபர்ஸ்ட்டூ..//

இப்படி வேற நடக்குதா?

//மக்கா, என் கதை முயற்சி எப்படி இருக்கு? ;-)//

இது கதையா?

இருங்க படிச்சுட்டு வந்து சொல்றேன்.

Anonymous said...

காடி சரியா ஒட்டத் தெரியாமா ஏன்..தான் வந்து என் பொழப்பைக் கெடுக்குறீங்க..( சீன மொழியில்...)

Anonymous said...

ஏய்..சந்தியா...வண்டி ஓட்டும் போது தூங்காதே.அவன் மட்டும் வண்டிய சரியா ஒட்டலையின்னா..நமக்கு சங்கு தான்..

Anonymous said...

ஓ இது எல்லாம்..கணவா...? தூரத்திலே இன்னோரு லாரி வருதே அதுவும் கணவா..(தனக்குள்)

Anonymous said...

"சந்தியா.. லாஆஆஆஆர்ர்ரீஈஈஈ" அஞ்சலி கண்ணை இருக்க மூடி காதை பொத்தி கத்தினாள்.

MyFriend said...

அனானி, உங்க கதையே இங்கே சூப்பரா இருக்கு.. முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா இதையே கதையா போட்டிருக்கலாம். :-))))

MyFriend said...

//G3 said...

supera irukku :)
seri adutha part eppo release?? //

ரொம்ப எல்லாம் வேயிட் பண்ண சொல்ல மாட்டேன். நாளைக்கே ரிலீஸ். :-)

MyFriend said...

@J K :

////.:: மை ஃபிரண்ட் ::. said...
மீ தி ஃபர்ஸ்ட்டூ..//

இப்படி வேற நடக்குதா?//

இப்படி ஓடுது. :-)


//இது கதையா?

இருங்க படிச்சுட்டு வந்து சொல்றேன்.//

எனக்கேவா? ;-)

ஜே கே | J K said...

//(பயணம் வளரும்..)//

எங்க பயணம் தொடரும்.

டூ ஹாஸ்பிடல் ஒன்லி...

ஜே கே | J K said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...


எனக்கேவா? ;-)//

என்ன பண்ண?..:-)

ஜே கே | J K said...

டிராபிக் போலிஸ்: ஏய் பொண்ணுங்களா, டேய் பையா இங்க என்னா பண்ணுறீங்க.

அஞ்சலி: (மெதுவாக)சார், டிராபிக் மாமா, வேணாம் சார்னே வச்சுக்குவோம்.

அதாவது சார், இது சந்தியா இது தியாகு. 2 பேரும் ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கிறாங்க. அதான் கார லாரிக்கு அடியில ஃபார்க் பண்ணிட்டு பேசிட்டு இருக்கீங்க.

டி.போ: டேய் நீ தான் லாரி ஓட்டிட்டு வந்தியா?

தியாகு: அட போங்க ஸார். நாங்க எங்க ஓட்டிட்டு வந்தேன். லிப்டு கேட்டு வந்தேன்.

டி.போ: உனக்கு லிப்டு கேக்க வேற வண்டியே கிடைக்கலையா.

தி: ஏர்போர்ட்டுல இருந்து வெளில வந்ததும் இதான் கிடைச்சது, சந்தியாவ பாக்கனும்கிற அவசரத்துல வந்துட்டேன்.

டி.போ: எப்படி இப்படி பார்க் பண்ணுனீங்க.

தி: மொதல்ல நான் கூட யாரோனு தான் நினைச்சுட்டேன். பக்கத்துல வந்த போதுதான் நம்ம சந்தியா கார்னு தெரிஞ்சது. டக்னு டிரைவர உதைச்சு வெளில த்ள்ளிட்டு அப்படியே ரைட்டுல இழுத்துட்டேன்.

டி.போ: எப்படி இவதானு கண்டுபுடிச்ச?

தியாகு: நான் போனப்ப வச்சிருந்தா அதா ஓட்ட கார்.

டி.போ: ஏன் அப்படி பண்ணின?

தியாகு: இவ போயிட்டா இனி மண்டே தான் பாக்க முடியும்.
அப்புறம் கல்யாண சாப்பாடும் போயிடும். அதான்.. ஹி ஹி.

(போலிஸ் தலையில் அடித்துக்கொண்டு வண்டியை சுற்றி வரைகிறார். இவர்கள் மூவரும் போலிஸ் வண்டியில் ஏறி டாட்டா சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். சந்தியா தியாகுவை பார்த்த சந்தோசத்தில் வாயடைத்துபோய் பேசாமல் இருந்தாள். எப்படியோ மூவருக்கும் நாளை கல்யாண சாப்பாடு. ஃபுல் கட்டு கட்டுவாங்க...)

இராம்/Raam said...

யக்கோவ்,

அடுத்த பார்ட் எப்போ??? :)

ambi said...

கதை நல்லா போகுது. 2 பேர் மட்டுமே இல்லாம இன்னும் கொஞ்சம் ஆளுகளை கதைக்கு உள்ள கொண்டு வாம்மா மின்னல். :)


//Naanae adha imsai arasi kitta irundhu sutten //

@my friend, அதானே! ஜி3 யக்கா ரேஞ்சு தெரியாம பேசறீங்க நீங்க.

கோபிநாத் said...

\மக்கா, என் கதை முயற்சி எப்படி இருக்கு? ;-)\\

நல்லாயிருக்கு... ;))

MyFriend said...

@JK:

வாவ்.. என் கதையை விட நீங்க பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் கதை சூப்பரோ சூப்பர்..
:-)
இந்த கதை செகண்ட் பாகம் நீங்க அல்லது TBCD எழுதுவது பெட்டர்ன்னூ தோணுது. உங்க அளவுக்கு எழுதியிருக்கேனான்னுஎனக்கே ஒரு டவுட்டு. :-(

MyFriend said...

//இராம்/Raam said...
யக்கோவ்,

அடுத்த பார்ட் எப்போ??? :)
//

பெரியண்ணா,

நாளைக்கு. :-)

MyFriend said...

//ambi said...
கதை நல்லா போகுது. 2 பேர் மட்டுமே இல்லாம இன்னும் கொஞ்சம் ஆளுகளை கதைக்கு உள்ள கொண்டு வாம்மா மின்னல். :)//

நாளைக்கு வருவாங்க இன்னும் ரெண்டு பேர். ;-)


////Naanae adha imsai arasi kitta irundhu sutten //

@my friend, அதானே! ஜி3 யக்கா ரேஞ்சு தெரியாம பேசறீங்க நீங்க.//

ஆமாண்ணே.. அவங்க கஷ்டப்பட்டு தேடினதுன்னு நெனச்சு தெரியாத்தனமா டாங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டேன். :-(

CVR said...

Super!!

the narration and flow etc have come out really nicely!!
the plot also looks promising!!

eagerly awaiting the next part!! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காவியம்ன்னு போட்டுட்டு போனதடவை ஏமாத்தினமாதிரி இருக்குமோன்னு நினைச்சேன்..
ஆனா அட்டகாசம்பா... கதை.
நிஜமாவே நான் அடுத்த பார்டுக்கு இப்பவே இருந்து வெயிட் பன்ணறேன்.

ஜி said...

:)) kathaikku
:(( climaxkku

MyFriend said...

//CVR said...
Super!!

the narration and flow etc have come out really nicely!!
the plot also looks promising!!

eagerly awaiting the next part!! :-)//

நன்றி புரட்சி விஞ்ஞானி அவர்களே. :-)

MyFriend said...

//முத்துலெட்சுமி said...
காவியம்ன்னு போட்டுட்டு போனதடவை ஏமாத்தினமாதிரி இருக்குமோன்னு நினைச்சேன்..
ஆனா அட்டகாசம்பா... கதை.
நிஜமாவே நான் அடுத்த பார்டுக்கு இப்பவே இருந்து வெயிட் பன்ணறேன்.
//

பயந்து ஓடும்போதே நெனச்சேன். ;-)

MyFriend said...

//ஜி said...
:)) kathaikku
:(( climaxkku
//

க்ளைமேக்ஸ் அவ்வளோ கேவலமா இருக்கா? :-(