Friday, October 05, 2007

வாழ்க்கைப்பயணம் -2

"ஹோன்க் ஹோன்க்"

முன்னே வேகமாய் வந்துக்கொண்டிருந்தது ஒரு டாங்கர் லாரி.

"சந்தியா.. லாஆஆஆஆர்ர்ரீஈஈஈ" அஞ்சலி கத்தினாள்.


*********************************

இனி....

அஞ்சலியின் அலரலினால் மீண்ட சந்தியா சீக்கிரமாக அந்த நிலையை ஜீரணித்துக்கொண்டதுனால் இடது பக்கம் தன் காரை சட்டென திருப்பினாள்.

வினாடியில் நடக்கவிருந்த விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தன்ர் இருவரும்..

"என்னடா இப்படி ஓட்டுற காரை? என்ன யோசிச்சுட்டு இருக்க? இது சரிப்பட்டு வராது.. சாவியை கொடு. நான் ஓட்டுறேன்". அஞ்சலி கார் சாவியை வாங்கிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தாள்.

கார் இவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் வந்து சேர, சந்தியா தன் துணிகள் சிலவற்றை தன் பையில் எடுத்து வைத்துவிட்டு தன் ஊருக்கு புரப்பட்டாள்.

4 மணி நேர பிரயாணத்தில் அவள் குவாந்தானில் உள்ள தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். இரவு பத்து மணிக்கு மேல் தன் வீட்டு முன்னே ஒரு கார் சத்தம் கேட்டதும் வெளியே வந்து எட்டிப்பார்த்தார் ராஜகோபால்.

"என்னம்மா? திடீர்ன்னு வந்திருக்கே?"
அப்பா ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் கேட்டுக்கொண்டே கார் வரை வந்து அவளின் பையை தூக்கினார்.

சத்தம் கேட்டு வெளியே வந்த பாக்கியம் அம்மாள் தன் மகளை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் மகளை கட்டி அணைத்துக்கொண்டார்.

"உனக்கு கால் பண்ணி ஊருக்கு வர சொல்லணும்ன்னு நெனச்சிட்டே இருந்தேன். நீயே வந்துட்டே. எல்லாம் கடவுளின் செயல்தான்"

"என்னம்மா விஷயம்?" சந்தியா புதிருடன் கேட்டாள்.

"இரும்மா.. சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்"
அம்மா சொல்லிக்கொண்டே சமயலறையை நோக்கி நடந்தாள்.

"என்னப்பா? அம்மா என்னமோ புதிருடன் பேசுறாங்க? நீங்களாவது சொல்லுங்களேன்".

"சாப்பிட்டுவிட்டு பேசலாம்மா" அப்பா சமாதானம் படுத்தினார்.

"என்னங்க, அவ கிட்ட விஷயத்தை பட்டுன்னு போட்டு உடைக்க வேண்டியதுதானே?" அம்மா சமயல்க்கட்டிலிருந்து மூன்று தட்டுகளை எடுத்து வந்து மேஜையில் அடுக்கிக்கொண்டே சொன்னார்.

"இன்னைக்கு ஒருத்தவங்க உன்னை பெண் கேட்க வந்தாங்க. நாங்கள் விசாரிச்சிட்டோம். நல்ல குடும்பம். பையனையும் எங்களுக்கு புடிச்சிருக்கு. உனக்கு சம்மதம்ன்னா மேற்கொண்டு பேசலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்" அம்மா மூச்சு விடாமல் பேசினார்.

"இதுக்குதான்... நான் ஊர் பக்கமே வர்றதில்லை. வந்தாலே கல்யாணம் பேச்சை எடுக்காமல் இருக்கமாட்டீங்களே?"
தன் அறைக்குள் செல்ல முற்ப்பட்ட சந்தியாவை அப்பா நிறுத்தினார்.

"சந்தியா குட்டி, நீ இந்த வீட்டுல ஒரே பிள்ளைம்மா. உனக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணி வைத்து பேரக்குழந்தைகளை நெஞ்சுல போட்டு விளையாடுற ஆசை எங்களுக்கு இருக்காதாம்மா?" அப்பா மனவருத்ததுட்டன் பேசியது சந்தியாவுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"மூனாவது வீட்டு கனகா மகள் செல்விக்கு இப்போதான் 23 வயசு. அவளே திருமணம் செய்து 2 பிள்ளைங்க இருக்காங்க.. உன்னோடு படிச்ச பிள்ளைங்க எல்லாரும் கல்யாணம் பண்ணிட்டாங்க. உன்னோட கல்யாணம் பார்க்கத்தானே நாங்க இன்னும் உயிரை கையில புடிச்சிட்டு இருக்கோம்?"

சந்தியாவால் மௌனத்தை தவிர வேறெதுவும் பதிலாக தர முடியவில்லை.

"அம்மா, எனக்கு யோசிக்கிறதுக்கு கொஞ்சம் டைம் வேணும் ப்ளீஸ்.." சொல்லிக்கொண்டே தன் அறையை நோக்கி நடந்தாள்.

"என்னவோம்மா.. இப்படி யோசிக்கிறேன்னு சொல்லி ஒரு நாள் கூட நீ உன் பதிலை சொன்னதில்லை. இந்த தடவையும் நாங்க டைம் தருகிறோம். யோசிச்சுட்டு சரின்னு சொன்னீன்னா அதுவே போதும்மா" அம்மா தன் மகள் இந்த தடவை சரின்னு சொல்வாள் என்றூ மிகவும் உறுதியோடு சொன்னார்.

அறை கதவை சாத்திவிட்டு மின்விசிறியை தட்டிவிட்டு கட்டிலில் படுத்தவள் சந்தியாவின் எண்ண ஓட்டத்தில் தியாகுதான் நின்றான். அப்படியே தூங்கிவிட்டாள் அவள். கனவில் அந்த நெடுஞ்சாலை தோன்றியது. அவன் இன்னமும் தன் காரில் ஏறாமல்தான் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சந்தியாவின் கார் அருகில் ஒரு நீல நிற வாஜா கார் வந்து நின்று ஹார்ன் அடித்தது. காரின் கதவும் திறக்கப்பட்டது. இனியும் தியாகுவின் வருகையை எதிர்ப்பார்த்து நிற்பது அர்த்தமில்லாத ஒன்று என்று அவளுக்கு தோணவே காரிலிருந்து இறங்கினாள்.. யாரோ கதவு தட்டியதில் அவள் கனவிலிருந்து முழித்தாள்.

எழுந்து கதவை திறந்தாள்.

"சாப்பிடாமலேயே படுத்திட்டியேம்மா. இந்தா.. இந்த பாலையாவது குடி." அம்மா பாசத்தோடு ஒரு க்ளாஸ் பாலோடு நின்றார்.

பாலை வாங்கிக்கொண்டு "அம்மா, என் மனசு மாறுவதுக்குள்ள நீங்க சொன்ன பையனையே பேசி முடிச்சிடுங்க" என்று சொல்லிவிட்டு திரும்ப அவள் அறை கதவை தாளிட்டுக்கொண்டாள்.

தியாகுவும் அந்த முகம் தெரியாத வாஜா ஓட்டுனரும் அவள் சிந்தனையில் தோன்றினார்கள். யோசிக்க யோசிக்க கொஞ்சம் கண் கலங்கி அப்படியே உறங்கிபோனாள். காலை ஒன்பது மணிக்கு குளிச்சிட்டு வெளியே வந்தவள் வீட்டில் இருக்கும் பரப்பரப்பை பார்த்து கொஞ்சம் ஆச்சர்யப்பட்டு தன் தாயிடம் கேட்டாள்..

"நீதானம்மா சீக்கிரமே பேசி முடிக்க சொன்னே! அதான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை இன்னைக்கே பொண்ணு பார்க்க வரசொல்லிட்டேன். மதியம் 2 மணிக்கு வர்றேன்னு சொல்லியிருக்காங்க" அம்மா மும்முரமாக வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்.

சந்தியா அஞ்சலிக்கு கால் பண்ணினாள்.

"The number you are calling is currently busy." என்று ஒரு இயந்திர பெண்ணின் குரல் கேட்கவே தன் செல்பேசியை கீழே வைத்தாள்.

நண்பகல் 12 மணிக்கெல்லாம் அம்மா ஒரு ஊதா கலர் சாரியை கொடுத்து "இதை கட்டும்மா. உனக்கு எடுப்பா இருக்கும்" என்றார்.

அவளும் அலங்காரம் பண்ணிக்கொண்டு கண்ணாடியின் முன் வந்து நின்றாள். கண்ணாடியில் தியாகுவின் முகம் தெரிய, தன் கண்களை கசக்கி மீண்டும் பார்த்தாள். மெது மெதுவாக தியாகுவின் உருவம் கண்ணாடியிலிருந்து மறைய ஆரம்பித்தது. வெகு விரைவில் இன்னொருத்ததுக்கு சொந்தமாகப்போகும் தன் மனதிலிருந்தும் தியாகுவின் நினைவுகள் மறைய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டினாள்.

"பெண்ணை அழைத்துவாம்மா" என்ற அப்பாவின் குரலை கேட்டு பக்கத்து வீட்டு செல்வி இவள் அறைக்கு வந்ததும் கண்ணில் தேங்கியிருந்த கண்ணீரை துடைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் சந்தியா. எல்லாருக்கும் வணக்கம் சொன்னாள்.

"இங்கே வாம்மா. இப்படி உட்காரு" என்று தன் பக்கத்தில் உட்கார அழைத்தாள் ஒரு 55-60 வயது நிரம்பிய பெண்மணி.

ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு, "சந்தியா உள்ளே போம்மா. பெரியவங்க பேச வேண்டியது எல்லாம் பேசணும்" என்று சொன்னதும் அவளும் தன் அறைக்கு போனாள். 'இதில் மாப்பிள்ளை யார்? எனக்கு அறிமுகமே படுத்தவில்லையே' என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

15 நிமிடங்கள் இருக்கும். அந்த பெண்மணி அறைக்கு வந்து, "உன்னை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கும்மா. சீக்கிரமே நீதான் எங்க வீட்டு மருமகள்" என்று சொல்லி நெத்தியில் முத்தமிட்டு கையில் ஒரு கவரை கொடுத்துவிட்டு வெளியேறினாள்.

'நான் இப்போது கண்டிப்பாக என் காரை விட்டு இறங்கி அப்பா பார்த்த மாப்பிள்ளையோட அந்த காரில் ஏறியே ஆகணும். ஆனால், என் மனதில் எந்த ஒரு சந்தோஷமும் இல்லையே? அஞ்சலி, அரவிந்த், ஸ்வாதி, சுமதி முகத்தில் இருந்த அந்த கல்யாண கலையும் என் முகத்தில் தென்படவில்லையே! பேசாமல் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லி இன்னைக்கே கே.எல்க்கு கிளம்பி போயிடலாமா?' என்று எழுந்தாள்.

கையில் இருந்த அந்த கவர் அவள் உள்ளங்கையை குத்தியபோதுதான் அந்த கவரின் ஞாபகம் வந்து அதை பிரித்தாள். உள்ளே ஒரு கடிதம்.

அன்புள்ள சந்தியாவுக்கு,

என் மேல் வைத்திருந்த காதலால்தானே இன்னும் திருமணம் பண்ணாமலேயே இருந்தாய்? 6 மாதத்துக்கு முன்பு நான் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியபோதுதான் அதை தெரிந்துக்கொண்டேன். நானே உன் முன் வந்து என் காதலை சொல்வதைவிட பெற்றோர்களால் நிச்சயிக்கப்படட்டுமே என்றுதான் என் பெற்றோர்களை பேச சொன்னேன். இத்தனை நாள் உன்னை காக்க வைத்ததுக்கு மன்னிக்கவும். உனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் என்றால் நானே உனக்கு கால் பண்ணுகிறேன்.

உன்னுடைய சம்மதத்துக்காக காத்திருக்கும்,
தியாகு

அந்த கடிதம் அவளுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்க அறையை விட்டு வெளியே வந்தாள்.

"அப்பா, வந்தவங்க எல்லாம் எங்கே?"

"அவங்க இப்போதான் கிளம்பிபோனாங்க. ஏன்ம்மா?"

"மாப்பிள்ளை பெயர்.. பெயர் என்ன?"

"ம்ம்.. தியாகராஜன். என்ன பொண்ணும்மா நீ? இன்னும் அவ்ர் பெயர் கூட கேட்டு தெரிஞ்சிக்காமல் இருக்கிற. உன்னோட போன் நம்பர் கொடுத்திருக்கிறேன். அனேகமா இன்னும் சில நேரத்துல உனக்கு கால் வரும்"

ராஜகோபால் சொல்லிமுடிக்கிறதுக்கும் சந்தியாவின் செல்பேசி அதிறவும் சரியாக இருந்தது.

"ஹலோ"

"ஹலோ சந்தியா. தியாகு ஹியர்.. ஒரு லிஃப்ட் கிடைக்குமா?"

அதே தியாகு. 6 வருடத்துக்கு முன்னே எனக்கு அறிமுகமான, என் நினைவில் இன்னமும் இருக்கிற தியாகுவேதான் என்று சந்தியாவின் மனம் சொல்ல சந்தோஷமாக செல்பேசியை திரும்ப காதில் வைத்தாள். பேச்சு பல மணி நேரம் வளர்ந்துக்கொண்டே போனது.
முற்றும்...

19 Comments:

said...

:)) Sandhosha endingkku oru thanks :))

Seri avanukku eppadi purinmjudhunnu sollavae illayae ;)

Kadha super.. guess panna koodiya ending :D

said...

:)))

ஆனாலும் முதல் பகுதில ஒரு த்ரில்ல கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு இப்படி சப்பையா முடிக்கிறதெல்லாம் நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்... :))

said...

ஜி3 சொன்னதுதான்....

முடிவு யூகிக்கிற மாதிரி இருந்தது... :)) கதை நடை நல்லா இருந்தது... மலேசியா நடை எதுவுமே இல்லையே.... மலேசியாக்குன்னு தனியா ஸ்லேங் இல்லையோ??

said...

சொன்னா தப்ப நெனைச்சுகாதீங்க!!
ஆறு வருஷமா அந்த தியாகு என்ன ________________ பண்ணிட்டு இருந்தாரு??????

said...

@G3:

நன்றி ஹை. :-)

//Seri avanukku eppadi purinmjudhunnu sollavae illayae ;)
//

அது ரீடர்ஸ் எதாவது புது கதை கற்பனை பண்ணிக்கிட்டும்ன்னு விட்டுட்டேன். ;-)

//Kadha super.. guess panna koodiya ending :D//

ஸ்டார்டிங்லேயே ட்ரில்லர் எழுதமுடியுமா? இப்போதான் ஃப்ர்ஸ்ட் கியர் போட்டிருக்கேன். :-)

said...

@ஜி:

//மலேசியா நடை எதுவுமே இல்லையே.... மலேசியாக்குன்னு தனியா ஸ்லேங் இல்லையோ??//

இந்த நடை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமான்னு கேகுற அளவுக்கெல்லாம் இன்னும் நான் வளரைங்க. அதுவுமில்லாம மலேசியா ஸ்லேங்ல நான் எழுதினேனா, கண்டிப்பா உங்க யாருக்கும் புரியாது. :-)))))

said...

@CVR:

//சொன்னா தப்ப நெனைச்சுகாதீங்க!!
ஆறு வருஷமா அந்த தியாகு என்ன ________________ பண்ணிட்டு இருந்தாரு??????//

குட் கொஸ்டீன் விஞ்ஞானி அவர்களே..
இப்படித்தான் அறிவுபோர்வமா கேள்வி கேட்கணும்..
ஆனா இது நீங்க தியாகு கிட்ட கேட்க வேண்டிய கேள்வியாச்சே. :-)))))

said...

மகனே அந்த ஆளு மட்டும் என் கையில கிடைக்கட்டும்,பாத்துக்கறேன்.

said...

நல்ல பதிவு ரொம்ப சின்னதா இருக்கு

படிச்சிட்டு வந்து பின்னூட்டுகிறேன்

said...

ஹாய் குட் மார்னிங்

Anonymous said...

ஏங்க, அன்னிக்கு நாம பேசினப்ப அப்போ தான் ஆஸ்திரோலியாவில் இருந்து வர்ரீங்கனு சொன்னீங்க.
ஆனா இப்போ 6 மாதம் முன்பே வந்ததுட்டேன்னு சொல்லிட்டீங்க.

said...

//சாவியை கொடு. நான் ஓட்டுறேன்". அஞ்சலி கார் சாவியை வாங்கிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தாள்.//

அப்போ ஸ்டியரிங்னு ஒன்னு இருக்குமே அதெல்லாம் தேவையில்லையா?

சாவிய வச்சுகிட்டே கார் ஓட்டிரலாமா?

Anonymous said...

//பக்கத்து வீட்டு செல்வி //

செல்விக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

said...

சந்தோஷமான முடிவு ;))

நல்ல எழுத்து நடை :))

வாழ்த்துக்கள் :)

said...

/இந்த நடை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமான்னு கேகுற அளவுக்கெல்லாம் இன்னும் நான் வளரைங்க. அதுவுமில்லாம மலேசியா ஸ்லேங்ல நான் எழுதினேனா, கண்டிப்பா உங்க யாருக்கும் புரியாது. :-)))))//

ஹீக்கும்... இதுமட்டும் தெளிவா புரிஞ்சதா என்ன??? ஹி ஹி....


டாப் கியர்'லே வந்த கதையை ஸ்லோமோஷனிலே முடிச்சிட்டியே'க்கா..... :(

said...

Ji, CVR-ku repeatu :))

said...

எது எப்படியோ சந்தோஷமான முடிவு மகிழ்ச்சி..
மலாய் கிளாஸ் எடுத்துக்கிட்டு அந்த
ஸ்லாங்ல எழுதினா புரியாதுன்னு சொன்னா
எப்படி டீச்சர்.. போட்டுட்டு விளக்கமும் போட்டுட வேண்டியது தானே!!

said...

எதிர்பார்த்த முடிவே தான்.. அது சரி... தமிழ் சினிமா பாத்து தானே வளர்ந்து இருக்கோம்...

பட் நல்ல முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை...

Anonymous said...

sister kallakal story :D