திரும்பி பார்க்கிறேன்...
இன்று ஒரு புள்ளியில் நின்று கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன். எங்கெங்கோ நடந்து/ கடந்து வந்திருக்கிறேன். மை ஃபிரண்டின் உலகின் 200வது பதிவையும் தொட்டாச்சு. மார்ச் மாதம் 2006-இல் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டது இந்த வலைப்பூ.
மார்ச் 11-இல் ப்ளாக்கர்ன்னா என்னன்னு தெரிந்துக்கொள்வதுக்காகத்தான் ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன். 4 மாதம்.. சரியாக நாலே நாலு மாதம்தான்.. மூடும் விழாவையும் நடத்தாமலேயே போய்விட்டேன். ப்ளாக்கர்ல ஒரு அக்கவுண்ட் இருக்கிறது என்பதையே மறந்துட்டேன். தமிழ் கிறுக்கு எனக்கும் பிடித்திருந்ததால் இரண்டாவது திறப்புவிழாவும் கண்டேன் நான்.
அக்டோபர் 10-இல் தமிழில் எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது. 200 பதிவுகளில் அனேகமாக தமிழில் எழுதியது மட்டும் 100 இருக்கும்.
நான் எழுத ஆரம்பிச்சது தமிழில் எனக்கிருந்த தாகம்தான். எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க. தமிழ்ல எதை பார்த்தாலும் அதை படிப்பேன். ஒருத்தடவை நான் பேருந்துக்கு காத்திருந்தபோது ஒரு பேருந்து கண்ணாடி உள்ளே ஒரு போஸ்டர்… தமிழில்.. அதை நான் பார்க்கும்போது அந்த பேருந்து புரப்பட தயாராகிடுச்சு. அதை படித்தே தீரணும்ன்னு அந்த பேருந்துல ஏறி டிக்கெட் எடுத்து அந்த போஸ்டரை படித்துட்டுதான் இறங்கினேன்.
உங்க ஊரில் தமிழ் புத்தகம் கிடைக்காதான்னு கேட்டா, என்னோட பதில் இல்லைன்னுதான் சொல்வேன். நான் இருந்த இடத்தில் தமிழ் நாளிதழே கிடைக்காத போது புத்தகத்துக்கு எங்கே போவேன் நான்? அதுக்குதான் இப்படி பஸ்ல, ரோட்டுல, கீழே கிடக்குற எதுல தமிழை பார்த்தாலும் படிச்சுட்டு இருப்பேன்.
Basic தமிழ் மட்டுமே கற்றிருந்த எனக்கு ஒரு பதிவெழுதவே குதிரை கொம்பாக இருந்தது. இதை வச்சிக்கிட்டே இத்தனை பதிவெழுதியிருப்பது எனக்கே ஒரு பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுல ஏதாவது ஒரு பதிவாவது உங்களை கவர்ந்திருக்குமா இல்லையான்னு எனக்கே ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி இருந்தால் அது எதுன்னு நீங்கதான் சொல்ல வேண்டும்.
நான் இவ்வலையுலகில் கற்றதை விட பெற்றது அதிகம். கற்றது தமிழ்.. பெற்றது நண்பர்கள். ஈயடிச்சான் காப்பியிலிருந்து நண்பனான சூனியன் வரை கார்த்தியிலிருந்து லேட்டஸ்ட் ஃபிரண்ட் நிலா வரை எத்தனை எத்தனை நண்பர்கள்! என் நண்பர்களின் உலகத்தை அப்படியே வலது பக்கத்தில் பாருங்க.
உங்கள் ஒவ்வொருத்தரின் பற்றியும் இங்கே பேசவேண்டும் என்று ஆசைதான்.. ஆனால், அதைப்பற்றி எழுத வேண்டுமென்றால் அதுக்கே ஒரு தொடர் எழுத வேண்டும். இது கூடிய சீக்கிரமே வெளி வரும் என்று நினைக்கிறேன்.
இங்கே யார் யார் என்று சொல்லாமல் நான் அறிந்த சில நண்பர்களைப்பற்றி சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். எத்தனையோ நண்பர்கள்!
சங்கம், யூனியன், கும்மி என்று பல வகை க்ரூப். அதையும் மீறீ சில நட்பு. அவர்களில் சிலர் இணையத்திலிருந்து ஒரு படி மேலே போய் போனிலும் தொடர்பு வைத்துக்கொள்ளும் அளவு வளர்ந்துள்ளது. அதிலும் ஒரு சிலர் இன்னொரு படி மேலே இதயத்தின் பக்கத்திலும் இடம் பிடித்திருக்கீங்க.
என்னுடைய பதிவுகளில் உங்களுக்கு ஏதாவது வளர்ச்சி தெரிந்தால் அதுக்கு காரணம் நான் அல்ல. என்னுடைய பதிவுகளை இடைவிடாது படித்து இப்படி எழுதலாமே அப்படி எழுதலாமே என்று ஐடியா கொடுக்கும் என் நண்பர்கள்தான் காரனம். காமெடி எழுது கதை எழுது என்று சொல்லி அதுக்கும் இப்படி எழுதலாமே அப்படி எழுதலாமே என்று கற்று கொடுப்பதிலிருந்து எழுதி முடித்ததும் இந்த வார்த்தை தவறு, 'ன'க்கு பதிலா 'ண' என்று எழுத வேண்டும், இப்படி எழுதினால் இந்த வார்த்தையில் அர்த்தம் இப்படி ஆகிடும், இந்த மாதிரி ஸ்டைய்லில் எழுதலாமே என்று அவர்கள் கொடுத்த அறிவுரைதான் காரணம். இவ்வேளையில் அவர்கள் அனைவருக்கும் எனது கோடி நன்றிகள். இனியும் அப்படியே எனக்கு வழிக்காட்டணும். சரியா? ;-)
இது வரை எந்த ஒரு பதிவரையும் நேரில் நான் பார்த்ததில்லை. கண்டிப்பாக நேரில் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்குமளவு வளர்ந்திருக்கும் சில நட்பு. என் நலனிலும் சந்தோஷத்திலும் மிகவும் அக்கறை வைத்திருக்கும் அந்த சிலருக்கு நான் என்ன செய்ய போகிறேன்?
தமிழில் பெரிசாக எதுவும் சாதிக்கும் அளவு எனக்கு திறமை இல்லாவிட்டாலும், இதுவரை எழுதியதை விட இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று ஆசைகள் இருக்கு. நடக்குமா?? அதையும் பார்ப்போம். J
பி.கு 1: Double celebration என்னன்னு நான் சொல்லிட்டேன்
பி.கு 2: அதுல ஒரு குட் நியூஸ் G3 கலாய்த்தல் சங்கம் ஆரம்பிக்கறதுன்னு சிலர் தப்பா நெனச்சிட்டு இருந்திருப்பீங்க. அஸ்கு புஸ்கு.. எங்க அக்காவை நான் கலாய்க்கலாம். மத்தவங்க கலாய்க்கிறதுக்கு நானே சங்கம் ஆரம்பிப்பேனா?
பி.கு 3: ஆனால், மத்தவங்க அந்த சங்கம் ஆரம்பித்தால் கண்டிப்பாக எனக்கு லைஃப் டைம் அட்மிஷன் கொடுக்கணும். சரியா?
பி.கு 4: நிகழ்ச்சி முடிஞ்சிடுச்சு. அடுத்து என்ன? விருந்துதான். சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு G3 விருந்து வழங்குவார். ஷார்ஜா, துபாய் பக்கம் உள்ளவங்களுக்கு கோபி்யும் பேங்கலூரில் ராம் மற்றும் இம்சை அரசியும், அமெரிக்காவில் ஜி அண்ணணத்தேயும் விருந்து வழங்குவார்கள். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு இந்த சின்ன குழந்தையை வாழ்த்திட்டு போங்க. :-)
127 Comments:
முதலில் 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;-))))
\\"திரும்பி பார்க்கிறேன்"\\
கொஞ்சம் தள்ளி நில்லும்மா நாங்களும் பார்த்துக்குறோம் ;))
\\என் நலனிலும் சந்தோஷத்திலும் மிகவும் அக்கறை வைத்திருக்கும் அந்த சிலருக்கு நான் என்ன செய்ய போகிறேன்?\\
என்னை போல ஏழைகளுக்கு பணம் உதிவி செய்யுங்கள் அதுவே போதும் ;))
\\தமிழில் பெரிசாக எதுவும் சாதிக்கும் அளவு எனக்கு திறமை இல்லாவிட்டாலும், இதுவரை எழுதியதை விட இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று ஆசைகள் இருக்கு. நடக்குமா?? அதையும் பார்ப்போம். J\\
இப்படி சொல்லி சொல்லியே.... இப்போ எல்லாம் 5 போஸ்ட் போடுறிங்க...அதுவே ஒரு மிக பெரிய சேவை தானே.. ;)))
\\ பி.கு 2: அதுல ஒரு குட் நியூஸ் G3 கலாய்த்தல் சங்கம் ஆரம்பிக்கறதுன்னு சிலர் தப்பா நெனச்சிட்டு இருந்திருப்பீங்க. அஸ்கு புஸ்கு.. எங்க அக்காவை நான் கலாய்க்கலாம். மத்தவங்க கலாய்க்கிறதுக்கு நானே சங்கம் ஆரம்பிப்பேனா?\\
நீங்க ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்வங்க ;)))
//இப்படி எழுதலாமே அப்படி எழுதலாமே என்று ஐடியா கொடுக்கும் என் நண்பர்கள்தான் காரனம்.//
//'ன'க்கு பதிலா 'ண' என்று எழுத வேண்டும்,//
நானும் ஒரு காரணமாயிட்டேன். :))
அமெரிக்காவில் இருக்கும் ஜி அண்ணாத்தைக்கு விருந்து கொடுக்கணுமா?? அத கொஞ்சம் தெளிவா சொல்லு....
\\பி.கு 4: நிகழ்ச்சி முடிஞ்சிடுச்சு. அடுத்து என்ன? விருந்துதான். சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு G3 விருந்து வழங்குவார். ஷார்ஜா, துபாய் பக்கம் உள்ளவங்களுக்கு கோபி்யும் பேங்கலூரில் ராம் மற்றும் இம்சை அரசியும், அமெரிக்காவில் ஜி அண்ணணத்தேயும் விருந்து வழங்குவார்கள். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு இந்த சின்ன குழந்தையை வாழ்த்திட்டு போங்க. :-)\\
ஆஹா...என்டா இன்னும் கட்டம் கட்டலியேன்னு பார்த்தேன்...ஆரம்பிச்சிட்டிங்களா ;)))
வாழ்த்துக்கள்.... இத்தனை நாள் வளர்ச்சிக்கும், இன்னும் வளரவும்...
பி.கு: வளரன்னு சொன்னது தமிழ் பதிவுலகத்துல ;)))
\\பி.கு 4: நிகழ்ச்சி முடிஞ்சிடுச்சு. அடுத்து என்ன? விருந்துதான். சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு G3 விருந்து வழங்குவார். \\
தெளிவா தான் சொல்லுறிங்களா...இது எல்லாம் நடக்குற விஷயமா!!!!!.. ;)))
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :))
விண்வெளி வீராங்கனை பத்தி எழுதினியே அது தான் டாப்பு! என்னை திரும்பி பார்க்க வைத்த பதிவு. :)
மலேசியாவுக்கு 2 டிக்கட் எடுத்து குடும்மா, நானும் உன் மன்னியும் வந்து உன்னை பாத்துட்டு போறோம். இன்னும் நயந்தாரா ஷூட்டிங்க நடக்குது இல்ல? இல்ல, என் பொது அறிவை வளர்த்துக்க சும்மா தான் கேட்டேன் :p
மேலும் பல வளர்ச்சிகள் அடைய மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.... ;))))
மறக்காம உன்னோட 'அருமை அண்ணா சித்து' படம் எல்லாம் போட்டு இருக்க பாத்யா? அங்க தான் நிக்கறா மை ஃபிரண்டு. :)))
வாழ்த்துகள் .:மைஃப்ரெண்ட்:.! ரொம்ப சந்தோஷமாயிருக்கு. நேத்திக்கு என்னவாயிருக்கும்னு யோசிட்டே போயிட்டேன்.
எனக்கு ரொம்பப் பிடிச்சது அந்த வடிவேலு-பின் லாடன் கார்ட்டூன்தான். :) சட்டென்று நினைவு வர்ர இன்னொன்று பேருந்தில் உங்களுடைய அண்ணன் பிள்ளைகளைக் கூட்டிவந்தது. பிறகு உங்களுடைய சிங்கை அனுபவங்கள். நினைவில் இருக்கிறதை மட்டுந்தான் சொல்றேன். ஒரு த்டவை எட்டிப்பார்த்தால் இன்னும் நிறைய வரலாம்.
மலேசிய இடுகைகளும் பிடித்தவை. மலாய் சொல்லித்தர்ரது பாதியிலயே இருக்குன்னும் சொல்லிக்கிறேன். ;)
வாழ்த்துகளுடன்,
மதி
நான் இன்னைக்கு இந்த அளவுக்கு இருக்கேன்னா அதுக்கு காரணம் எங்க அம்மா குடுத்த சத்து மாவு இல்லீங்க...சித்து மாவு தான்...சீ சீ..சித்து தான்...
200 பதிவு கண்ட ஆருயிர் தங்கையின் வெற்றிக்காகத் தொடர்ந்து உழைப்போம்.
அவுஸ்திரேலியாவிலும் கங்காருக் கால் பிரியாணிப் பொட்டலமும் காஜாங் சிக்கனும் பரிமாறப்பட இருக்கிகின்றது.
திரும்பிப் பார்த்தால் முதுகு தாங்க தெரியுது :-(
அப்படியா...உங்க அம்மா வேற மாதிரி சொல்லுறாங்களே.....
kulanthai...24 hrs ku kooda aachu. ivalu neram wait panna vachathuku enaku extrava chocolate venum
நீ இன்னைக்கு இப்படி இருக்கே அப்படின்னா அதுக்கு காரணம்...வேற யாரும் இல்ல...நான் தான்..உனக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தேன்..ஆன எங்கள பத்தி ஒன்னுமே சொல்லவில்லை..
இல்ல நான் தான் காரணம்..இவங்களுக்கு மேட்டர் கிடைக்காட்டி...என்ன கீபோர்டல் நிறுத்திவிட்ருவாங்க..நான் தான்...டைப் பண்ணுவேன்...கதை கவிதை எல்லாமே நான்..தட்டுனது..
@கோபிநாத்:
//கொஞ்சம் தள்ளி நில்லும்மா நாங்களும் பார்த்துக்குறோம் ;))//
அதுக்கு இப்படி தள்ளிவிட்டுடுதான் பார்பீங்களா அண்ணா? :-P
//என்னை போல ஏழைகளுக்கு பணம் உதிவி செய்யுங்கள் அதுவே போதும் ;))//
நீங்க குசும்பன் கூட சேர்ந்து சேர்ந்து உங்களுக்கும் ரொம்ப குசும்பு வருதே? ;-)
//நீங்க ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்வங்க ;)))//
நன்றி. :-)
//ஆஹா...என்டா இன்னும் கட்டம் கட்டலியேன்னு பார்த்தேன்...ஆரம்பிச்சிட்டிங்களா ;)))//
கட்ட(ட)ம் கட்டுறதுக்கு ஏதாவது படிப்பு படிக்கணுமா? :-P
என் மேல பித்து பிடிச்சு..என்னைய மயக்க எழுதினதாலே...நான் தான் காரணம்..ஆனா நான் இப்படி எல்லார்க்கும் தெரிய டைரக்டர் சங்கர் தான் காரணம்...அப்ப..மை பிரண்டு இப்படி இருக்கு சங்கர் தான் காரணம்..
ஆமா...நான் கூட பெரிய பட்ஜெட்ல் ஒரு பதிவு போடுவேன்.அதுல இத நான் சொல்லுவேன்..
@ஜி:
//நானும் ஒரு காரணமாயிட்டேன். :))//
ஆமா.. கவிதையெல்லாம் எழுதுறது எப்படின்னு சொல்லி தர்றதும் நீங்கதானே.. :-)
//அமெரிக்காவில் இருக்கும் ஜி அண்ணாத்தைக்கு விருந்து கொடுக்கணுமா?? அத கொஞ்சம் தெளிவா சொல்லு....//
ஏற்கனவே நீங்க எனக்கு 2-3 ட்ரீட் கடன் வச்சிருக்கீங்க. இப்போ இன்னுன்னு கூடுதல் ஆகுது. :-)
இல்ல இல்ல நான் தான் காரணம்..கதவு மூடியிருக்கிறதாலே தான்..அம்மா அப்பாவிற்கு தெரியாமா, ஜிடாக்ல் அறிவு வளர்த்து எழுதியிருக்கு இந்த பிராண்டு...அப்ப நான் தான் காரணம்..
ஈரோடு சென்னையை சுற்றி உள்ள ஏரியாதானே? பாப்பாக்கு ரெண்டு பைவ்ஸ்டார் போதும்,
அப்பாதான் என்னென்னமோ வேணும்னு சொல்ராரு. எனக்கு அந்த பேர்லாம் புரில.
எதோ ஜானிவாக்கராமே, அப்டீன்னா என்ன?
இல்ல..என்னால தான் இப்படி..நினைச்ச நேரத்துக்கு பதிவு போட முடியுது....அப்ப நான் தான் காரணம்..
@அம்பி:
//200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :))//
நன்றி
//விண்வெளி வீராங்கனை பத்தி எழுதினியே அது தான் டாப்பு! என்னை திரும்பி பார்க்க வைத்த பதிவு. :)//
நீங்க அப்பவே திரும்பி பார்த்துட்டீங்களா? நான் இப்பத்தான் பார்க்கிறேன். ;-)
//இன்னும் நயந்தாரா ஷூட்டிங்க நடக்குது இல்ல? இல்ல, என் பொது அறிவை வளர்த்துக்க சும்மா தான் கேட்டேன் :p//
:-P பொது அறிவோடு கூடவே உங்க உடம்புல உருவாகுற காயங்களையும் வளரட்டுமாக. :-)))))
12:04 PM
இல்ல இல்ல நாங்க தான் காரணம்...இப்ப கூட எங்க மூலமா தான் இந்த பதிவு..
இல்ல நான் தான் காரணம்..நான் தான்..டேமேஜர் வராரா இல்லையான்னு தகவல் சொல்லுவேன்....அப்ப நான் தான் காரணம்..
நான் ஆபிஸ் பாய்க்கூட கடலை போடாமா விட்டு வச்சா தான்..அவன் இவங்களுக்கு உதவ முடியும்..அதுனாலே...நான் தான் காரணம்..
@மதி கந்தசாமி (Mathy Kandasamy):
//எனக்கு ரொம்பப் பிடிச்சது அந்த வடிவேலு-பின் லாடன் கார்ட்டூன்தான். :) //
நன்றி.
//சட்டென்று நினைவு வர்ர இன்னொன்று பேருந்தில் உங்களுடைய அண்ணன் பிள்ளைகளைக் கூட்டிவந்தது. பிறகு உங்களுடைய சிங்கை அனுபவங்கள். நினைவில் இருக்கிறதை மட்டுந்தான் சொல்றேன். ஒரு த்டவை எட்டிப்பார்த்தால் இன்னும் நிறைய வரலாம்.//
வாழ்த்துறேன் வாழ்த்துறேன் என்றூ சொல்லி இப்படி கவுத்துப்புட்டீங்களே அக்கா. இந்த பதிவெல்லாம் துர்கா அவளோட அரிச்சுவடில எழுதிய பதிவுகளாச்சே!!! :-(
//மலேசிய இடுகைகளும் பிடித்தவை. மலாய் சொல்லித்தர்ரது பாதியிலயே இருக்குன்னும் சொல்லிக்கிறேன். ;)//
ம்ம்.. தொடரணும். கூடிய சீக்கிரமே. :-)
//வாழ்த்துகளுடன்,
மதி//
நன்றி.
எல்லா பதிவும்..சூப்பர் வாழ்த்துக்கள்
கும்மிக்கு பதில் சொல்லாமா...போனா..ரத்தம் கக்கி பேதி ஆகுமாம்...பாத்துக்கோங்க.,..
@கானா பிரபா:
//200 பதிவு கண்ட ஆருயிர் தங்கையின் வெற்றிக்காகத் தொடர்ந்து உழைப்போம்.
அவுஸ்திரேலியாவிலும் கங்காருக் கால் பிரியாணிப் பொட்டலமும் காஜாங் சிக்கனும் பரிமாறப்பட இருக்கிகின்றது.//
பிரியாணி இன்னும் வந்து சேரவில்லை என்று வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அண்ணா....
//திரும்பிப் பார்த்தால் முதுகு தாங்க தெரியுது :-(//
நீங்க ஜிம்னாஸ்டிக் வீரரா? 180 டிக்ரி திரும்பிட்டீங்க போல? ;-)
வாழ்த்து(க்)கள் மை ஃப்ரெண்ட்.
கலக்கிக்கிட்டு இருக்கீங்க.
அப்படியே தொடர்ந்து இன்னும் கலக்குங்க:-)))
நல்ல பதிவு...சிறந்த முயற்சி...
நான் எல்லாம்..புல் அடிச்சே ஆட மாட்டேன்..நீங்க என்ன 200 இந்த ஆட்டமா...
@சினேகிதி :
//kulanthai...24 hrs ku kooda aachu. ivalu neram wait panna vachathuku enaku extrava chocolate venum//
அக்கா, நேத்தே 2 கிலோ சாக்லேட் அனுப்பிட்டேனே.. :-)
எங்க கட்டிங்..எங்க கட்டிங்...
"கலக்கிக்கிட்டு இருக்கீங்க.
அப்படியே தொடர்ந்து இன்னும் கலக்குங்க:-)))"
வாழ்த்துக்கள் மை பிரண்ட்!!!
@நிலா:
//அப்பாதான் என்னென்னமோ வேணும்னு சொல்ராரு. எனக்கு அந்த பேர்லாம் புரில.
எதோ ஜானிவாக்கராமே, அப்டீன்னா என்ன?//
ஐயோ தப்பு தப்பு. காதை பொத்திக்கோ செல்லம். :-))
@துளசி கோபால்:
//வாழ்த்து(க்)கள் மை ஃப்ரெண்ட்.
கலக்கிக்கிட்டு இருக்கீங்க.
அப்படியே தொடர்ந்து இன்னும் கலக்குங்க:-)))//
நன்றி டீச்சர். :-))
@குசும்பன்:
//"கலக்கிக்கிட்டு இருக்கீங்க.
அப்படியே தொடர்ந்து இன்னும் கலக்குங்க:-)))"
வாழ்த்துக்கள் மை பிரண்ட்!!!//
நன்றி குசும்பா. :-)
@அனானி:
பதிவை படிக்காமலேயே கும்மி மழை பொழிந்த அந்த அனானி நண்பருக்கு (நான் யாருன்னு கண்டுபுடிச்சுட்டேனே!) எனது நன்றிகள். :-)))))
நான் அவனில்லை..நான் அவனில்லை... நான் அவனில்லை..
நான் இவன் இல்லை..நான் இவன் இல்லை..நான் இவன் இல்லை..
x
ஆமா இவர் அவரு இல்லை..எனக்கு மட்டும் தான் தெரியும்..
எவ அவ....எனக்கும் தெரியும்...இவரு அவரு இல்லை...
அவரா இவரு..
திரும்பி பாருங்க
சட்டுனு திரும்பி நேரா பாருங்க
இல்லைனா கழுத்து சுளுக்கிக்க போவுது.
என்னடா மொக்கை மராத்தான் நடந்ததேன்னு பாத்தேன் 200 அடிக்கத்தானா அது?!
வாழ்த்துக்கள்
தொல்ஸா இது...?
ஆமா ஆணி கம்மி...அதுனால தான் இப்படி ஆகிவிட்டார்
ஓட்டக பிரியாணி தின்னதாலே இப்படி வேகமா அடிக்கிறார்
கண்டுபிடிச்சிட்டீங்களா....? ண்டுபிடிச்சிட்டீங்களா....? டுபிடிச்சிட்டீங்களா....?பிடிச்சிட்டீங்களா....? டிச்சிட்டீங்களா....? ச்சிட்டீங்களா....?
சிட்டீங்களா....?
ட்டீங்களா....?
டீங்களா....?
ங்களா....?
களா....?
ளா....?
....?
...?
..?
.?
?
குண்டு பல்பு நான் தான் கண்டுபிடிச்சேன்
அனானிய நான் கண்டுபிடிக்கல...
தண்ணிப் போட்டாலும் என் வீட்ட நான் தெளிவா கண்டுபிடிப்பேன்
ஆமா ...நான்ன்னு சொல்லு பக்கத்து வீட்டுக்காரம்மாவ விரட்டினத நான் சொல்ல மாட்டேன்...
நான் தான் அனுவக் கண்டுபிடிச்சேன்..
அப்ப "அனு"குண்டு..?
யாராச்சும் வாங்க..தனியா இருக்க போரடிக்குது...
நான் யாரையும் அடிக்க மாட்டேன்..என்ன தான் சில பேரு பதிவெழுதி அடிப்பாங்க...ஆனா ஒனர் அப்படி இல்லை...
200 posts eh??
wow!! congrats!!
தனியா அடிச்சாலும்..ஒரு நல்ல நம்பர்ல தான் நிறுத்தனுமிங்கிறது என் கொள்கை..
Thirumbi paakara foto supppperrr!!
நான் தூங்கப்போறேன்..வந்து உங்களுக்கு படம் எடுக்கச் சொல்லத் தாரேன்...
வாழ்த்துக்கள். மைபிரண்ட் தங்காச்சி..
அடிச்சு ஆடூறீங்களே.... ஒன் இயரா ம்.. சீனியர் நீங்க.. :)
சிவரா இவரு...சீ சீ..அவர இவரு...
இன்னும் ஆறு வேணும்....வாங்க வாங்க சீக்கிரம்..
நான் வேனுமின்னா வரவா...ஆனா நான் கடைசி பந்துல தான் சிக்சர் அடிப்பேன்..
நான் ஏதுவும் செய்யனும்மா
தள்ளிப் போங்க காமிரா ஆங்கிள் மறைக்குது...
சூடானுக்கு யாரு வந்து விருந்து தருவா?
வாழ்த்துக்கள் 200 க்கு :)
எனக்கு கும்மி மட்டும் தான் தெரியும்..
அச்சிச்சோ....75 டான்ஸ் மாஸ்டருக்கா...முடியவே முடியாது...
யாரைய்யா...புலிய எல்லாம்..உள்ளே விட்டது...தள்ளி போக சொல்லுய்யா..
வாழ்த்துகள்....
நீங்க நல்லா எழுதியிருக்கீங்கன்னு என்னால சொல்ல முடியாட்டி போனாலும், சுமாரா எழுதியிருக்கீங்க அப்படின்னு எவனாச்சும் சொன்னா..என் தொடைதட்டி நான் சொல்லுவே...நீங்க கொஞ்சம் நல்லாவே எழுதுறீங்க...ஆங்...ஆங்...நீங்க நல்லவங்களா...கெட்டவங்களா...
தமிழ் மூன்றெழுத்து..
அன்னா மூன்றெழுத்து
அழகு மூன்றெழுத்து
மணம் மூன்றெழ்த்து.
இப்ப நான் எதுக்குச் சொன்னேன்...மன்னிகனும்..வயசாயிடுச்சி...உடன் பிறப்புக்களே...இந்த பதிவு நல்ல பதிவு...இதை சில நாட்டியக்காரிகளும், கோமாளிகளும் வாசிக்கலாம்...தமிழ் தப்புன்னா என்னவென்று புரிந்துக்கொள்ள....
என் ரத்தத்தின் ரத்தமான மை ஃபிரண்டுக்கு வாழ்த்துக்கள்
எவன்டாவன்..எதுக்கு வாழ்த்து சொல்லுறோமின்னு பார்த்துச் சொல்லுங்கடா....ஸ்டார்ட் மீஜிக்...ஓ ஸ்டார்ட் ஆகி ஓடிட்டு இருக்கா..இதெல்லாம் பதிவுலகிலே சாதரணமப்பா.....அப்படியே ஒரு ஓரமா 1000 பதிவு போடறவரைக்கு வாழ்த்துக்கள்...(சித்துவ பார்த்து...ஏம்பா நீயேல்லாம்...இந்த பச்ச சட்டைய விடவே மாட்டியா..)
அண்ணே...அண்ணே...எதுக்கண்ணே..வாழ்த்துறீங்க...
டேய் கோமுட்டி தலையா...நீயெல்லாம்..ஒரு கடுதாசி எழுதினா அதுலா அட்ரசிலே நூறு குழப்படி பண்ணுவே...இங்க..ஊருக்கே ஃபிரண்டாகி...200 பதிவு போட்டிருக்காங்ளாம்..இதெல்லாம்..பாராட்டி வைக்கனும்டா....
அப்படியான்னே....யக்கா வாழ்த்துக்கள் அக்கா...
என்ன குசும்பன் பக்கத்திலே கும்மியடிக்க கூப்பிட்டாக, அபி அப்பா பதிவுலே கும்மி அடிக்க கூப்பிட்டாக...இதையெல்லாம் விட்டுட்டு..இங்க வாழ்த்துகள் சொல்ல வந்தேன்...இந்தா..ஏ...இந்தா..வாழ்த்துக்கள்...
ஏன்டா செல்லம்...மாமனுக்கு எப்ப கஞ்சி ஊத்தப் போறே....என்ன கடிச்சி திங்கிற மாதிரியே பாக்குறீயே....இந்த நாய் சேகர் சொல்லுறான்..வாழ்த்துக்கள்...பாத்துக்கோங்க...என் மாமன் பொண்ணு மூத்த பதிவர்..! மூத்த பதிவர்...! மூத்தப் பதிவர் !
ஹைய் ஹைய் ஹைய்
அடப்பாவிகளா...ஒரு வருசத்திலே மூத்தப் பதிவராடா...விளங்குவிங்களாடா..உங்களுக்கெல்லாம்..நூறு டோண்டு வந்தாலும்..திருத்தவே முடியாதடா...
ஆமா யாரு இது தெலுங்கு பட ஹீரோயின் மாதிரி நிக்கிறது....என்னாது..சித்துவ கல்யாணம் பண்ணப் போறீங்களா...அடிப்பாவிகளா...பதிவுஎழுதுங்கன்னா..ஹிரோக்களுக்கு பதியம் போடுறீங்களா..உங்களயெல்லாம்...1000 மாலன் வந்தாலும் திருத்தவே முடியாது...
happy 200 yakka.next 1000 varaikum vara ennoda best wishes :D
அய்யோ பாவம்....அவங்கள விட்டுறுங்க...
ஆமா இங்க பெரிய கவர்னர்..சிபாரிசு வேறயா..எனக்கு மை ஃபிரண்டத் தெரியும்....
அப்படியா.....
ஆமா அங்களுக்குத் தான் என்னைய தெரியாது...
என் வாழ்த்துக்களும்
டேய் நான் எங்க வேண்டுமானாலும் இருப்பேன்டா..இப்போதைக்கு இரண்டு வடிவத்திலே இருக்கிறேன்டா
அப்படியா....எங்க ஆத்தா இருக்கீங்க...
மாரியாத்தா யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்...கண்ணா என் பேரச் சொன்னா..எழுந்து நின்னுடும் "புல்"லும்
வாழ்த்துக்கள் மை ஃபிரண்ட்.. மேன்மேலும் பதிவுலகில் சிறக்க வாழ்த்துக்கள்..
எனக்கு தெரியாது..நான் இன்னும்..உள்ளயே இருக்கேன்..
ஊருக்கு கிளம்பியாச்சா??
100
100 நான் அடிப்பேனா..
//ஊருக்கு கிளம்பியாச்சா??//
actually வேற ஒரு ப்ளாக்குக்கு கமேண்ட் போட போய் அது இதுல வந்து சேர்ந்து இங்கே 100 அடிக்க வச்சுடுச்சு..
TBCD better luck next time. ;-)
இது கள்ளாட்டை ஓத்துக்க முடியாது...
தண்ணிக் குடிச்சவன் நானு...பேரு அவனுக்கா....
//*.:: மை ஃபிரண்ட் ::. said...
TBCD better luck next time. ;-)*//
யாரோ என் பேர சொன்னா மாதிரி இருந்திச்சே....நான் அப்பாவி...என்ன ஏன் வம்புக்கிழுக்கிறீங்க...
//ABCD has left a new comment on your post "திரும்பி பார்க்கிறேன்":
யாரோ என் பேர சொன்னா மாதிரி இருந்திச்சே....நான் அப்பாவி...என்ன ஏன் வம்புக்கிழுக்கிறீங்க...
//
கண்ஃபார்ம்ட்.. நீங்கதான்! ;-)
ஹாய் ஃப்ரெண்ட்,
200 க்கு வாழ்த்துக்கள். மேலும் இது போல பலரையும் கலாய்க்கவும் கலக்கவும் என் வாழ்த்துக்கள்.
அது சரி திரும்பி பாத்தா நீங்களா இல்ல மலேசியாவா? எது தெரியும்?
ஆமா நீங்க பாட்டுக்கு ராம்கிட்டயோ இல்ல இம்சை கிட்டயோ போய் சாப்டுகோங்கன்னு சொல்லிட்டீங்க, அவங்களுக்கு என்னை தெரியுமா? இல்லன்னா ரெகம்ண்டேசன் ப்ளீஸ்.
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;-)
ungaloda comedy sense is very good..
கண்ஃபார்ம் எல்லாம்..நான் தான் பண்ணுவேன்..அதுக்கு கொஞ்சம் செலவு ஆகும்...பிளட் டெஸ்ட், டீஎன் ஏ டெஸ்ட் பண்ணனும்..
அதெல்லாம்..வேண்டாம்..என் கிட்ட சொன்னா நான் சொல்லிடுவேன்..
அப்ப யாரு இங்க கும்முறது....
அட இது தெரியாதா..200 சிறப்பா கொண்டாட...தனக்குத் தானே திட்டத்திலே..பிண்ணுட்டம் போட்டுக்கிட்டு....யாருன்னு வேற ஒரு கேள்வி...என்ன அராஜகமா இருக்கு..
அட கண்டுப்பிடிச்சிட்டீங்களா...மத்தவங்க பதிவுல நான் கும்மினா யாருமே கண்டுப்பிடிக்க முடியாது...என் பதிவிலே கண்டுப்பிடிச்சிட்டீங்களே...
ஜிஸ்டரு,
வாழ்த்துக்கள்....... :)
/பேங்கலூரில் ராம் மற்றும் இம்சை அரசியும், அமெரிக்காவில் ஜி அண்ணணத்தேயும் விருந்து வழங்குவார்கள். //
அதுசரி எங்களுக்கு யாரு டீரிட் கொடுப்பா??? :)
அனு
உங்கிட்ட பேசின பழகின எல்லாருக்கும் டிஃபால்டா வரும் வார்த்தை இதான் " நல்ல பொண்ணு"
பதிவு எழுத்து என்பதெல்லாம் விட நட்பு ன்னு பாக்கும்போது யூ த ஃப்ஸ்ட் :)
வாழ்த்துக்கள்!!! கலக்குங்க :)
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!
இன்ன்னொரு தபா!!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... கோட்டை விட்டுட்டனே. இப்ப துர்கா வந்து கேக்கிற கேள்விக்கும் பதில் சொல்லணுமே. ;)
அப்ப மலேசிய விண்வெளி வீராங்கனை வனஜா பத்தி எழுதினது நீங்க. எழுதுறப்பவே ஒரு குழப்பம் இருந்தது. ஒரு தடவை எட்டிப்பார்த்துட்டு எழுதியிருக்கலாம். ஹ்ம்ம்ம்.. எனிவே. கீழ விழுந்தும் மீசைல மண் ஒட்டலைன்னு ஹிஹி..
-மதி
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
200க்கு வாழ்த்துக்கள்...
கும்மி செம் காமெடி...
vallthukkal.
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
Better late than never...
CONGRATS..
KEEP ROCKING !!!
டேய் இன்னுமாடா இதுல கும்மிட்டு இருக்கீங்க...
Post a Comment