Sunday, October 07, 2007

தொட்டா சிணுங்கி

உறவு, பகை, நட்பு, பந்தம், பாசம்.. எது எப்போது தோன்றும் எப்போது முறியும் என்று தெரியாத ஒரு சூழலில் வாழ்கிறோம் மனிதர்கள் ஆகிய நாம். தாய் மேல் மகன் கொண்ட பகை, மகன் மேல் தந்தை கொண்ட வெறுப்பு, அண்ணன்-தம்பி சண்டை, மாமியார்-மருமகள் யுத்தம், கணவன்-மனைவி ஊடல்.. இப்படி எத்தனை வகை வேண்டும்? அடுக்கிக்கொண்டே போகலாம்.

தொட்டதுக்கும் கோபம் நமக்கு பொத்துக்கொண்டு வருகிறது. மனம் ஒரு தொட்டா சிணுங்கிதானே நமக்கு? ஒருத்தடவை உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தாலும் உடைந்த கோடுகள் கண்டிப்பாக தெரியும். அதுபோலவே உறவும் பகையும். சண்டை போட்டு சமாதானம் ஆனாலும் மனதில் கீறிய தழும்புகள் நம் மனதை விட்டு நீங்குகிறதா?

மறப்போம் மன்னிப்போம் என்று நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? மனதை தொட்டு கேளுங்கள். உண்மை பல சமயங்களில் கசத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியது நாம்தான்.

அவ்வகைய பிரிவில் சேர்ந்த நான் ரசிக்கும் பாடல் ஒன்று:



மனமே தொட்டால் சிணுங்கிதானே
அதுவே தன்னால் மலரும் மானே
உறவோ என்னாலும் தீராது
பகையோ என்னாலும் வாராது
மனமே தொட்டால் சிணுங்கிதானே

தாய்பாலே விஷமாய் மாறுமா
தமிழ் தாயே நீ அதை கூறம்மா
பெற்ற தந்தை மீதே கோபமா
பிள்ளை கோபம் இங்கே ஞாயமா
தினந்தோறும் காலம் மாறுமே
தினந்தோறும் காலம் மாறுமே
இது பாவமோ இல்லை சாபமோ
சில காலம் தோன்றும் சோகமோ
(மனமே..)

நிழலே உன் பின்னால் நிலையில்லை
நிலவே இங்கு யாருக்கும் உறவு இல்லை
காற்றே தன் வழியது அறிந்ததில்லை
கட்லே தன் அலைகளை புரிந்ததில்லை
இதுதானே உலகின் நியதிய்டி
இதுதானே உலகின் நியதிய்டி
இது போலவே உந்த வாழ்விலே வந்த சோகம் நாலை மாறுமே
(மனமே..

6 Comments:

said...

ஹரிஹரன் தி க்ரேட்

said...

வசூல்ராஜால

"காடு திறந்து கிடக்கின்றது"

ஹோம் தியேட்டர்ல இல்ல ஐ-பாட்ல கேளுங்க

said...

இந்தப் படத்துல மத்த எல்லாப் பாட்டை ரசிச்ச மாதிரி இந்தப் பாட்டை ரசிச்சது இல்லீங்க. உங்க விளக்கத்துக்கு அப்புறம் இப்போ இந்தப் பாட்டும் பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு.

said...

நல்ல பாடல்.. இனிமை....

//மறப்போம் மன்னிப்போம் என்று நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? //

மனிதர்கள் தானே நாம்... தெய்வ பிறவிகள் அல்லவே... மன்னிக்கலாம்... மன்னிக்கனும்... தப்பே இல்லை... ஆனா மறக்க கூடாது....

said...

பாட்டு மட்டும் கேக்கும் போது ஒன்னும் தெரில. ஆனா பாட்ட படிச்சுகிட்டே கேக்கும் போதுதான் பாட்டின் அருமை புரிய ஆரம்பிக்குது.
தாங்க்ஸ் ஆண்ட்டி.

இது அப்பா மகளை பாத்து பாடும் பாட்டா?வரிகளை பாத்தா அப்டிதான் தெரியுது

said...

//ஒருத்தடவை உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தாலும் உடைந்த கோடுகள் கண்டிப்பாக தெரியும். அதுபோலவே உறவும் பகையும். சண்டை போட்டு சமாதானம் ஆனாலும் மனதில் கீறிய தழும்புகள் நம் மனதை விட்டு நீங்குகிறதா? //
wow! nalla concept..
heh but sometimes it is better to ignore the fault lines... for our own good..