Saturday, October 06, 2007

நட்பெனும் பெயரிலே

நேற்று..
நட்பெனும் பெயரிலே
கலந்தாய்
என்னுள்ளே..

இன்று..
நீ ஒரு மூலையில்
நான் ஒரு மூலையில்
அழுகையும் நினைவுகளும்
அதிகரித்தது நட்பின் ஆழத்தை…

நாளை
தொடருமா?
கேள்விக்குறி வளைந்து நிற்க,
உன் இறுகப் பற்றுதலில்
ஓடி மறைந்தன
ஒவ்வொரு வினாக்களும்…



Send this eCard !



என்னுடைய முதல் கவிதை (ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.. :-P)
Specially dedicating this to Asa, Usha & Printha. Miss you girls. :-((

நன்றி: ஜி

27 Comments:

ஜி said...

கவுஜ... அதுவும் நீங்களா???? வாழ்த்துக்கள்... உங்கள் நண்பர்களுக்கும் சேர்த்து... :)))

கோபிநாத் said...

ம்...கதை, கவிதைன்னு இப்ப எல்லாம் கலக்க ஆரம்பிச்சிட்டிங்க...;)))

எளிமையான, அழகான வரிகள்...நல்லாயிருக்கு.

வாழ்த்துக்கள் ;-)))

Anonymous said...

//கேள்விக்குறி வளைந்து நிற்க//

என்கிட்டே கொடுங்க! தட்டி நிமித்தி தரேன்!

Anonymous said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா!

இப்பவே கண்ணைக் கட்டுதே!

Anonymous said...

தெரியுமில்ல!

தமிழ்லே எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கவுஜை!

Anonymous said...

//ஓடி மறைந்தன
ஒவ்வொரு வினாக்களும்…
//

பிராப்பரா ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுங்க!

டிரேஸ் அவுட் பண்ணி பிடிச்சிடலாம்!

Anonymous said...

//நட்பெனும் பெயரிலே
கலந்தாய்
என்னுள்ளே//

எங்கே கலப்படம்? எங்கே கலப்படம்?

நாமக்கல் சிபி said...

//என்னுடைய முதல் கவிதை (ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.. :-P)
//

பின்னே கவுஜையைப் போய் எப்படிங்க கவிதைன்னு ஒத்துக்க முடியும்?

நாமக்கல் சிபி said...

//நட்பெனும் பெயரிலே
கலந்தாய்
என்னுள்ளே//

நட்பென்னும் பெயரிலே
கலாய்த்தாய்
என் பதிவினுள்ளே

இப்படி எழுதியிருந்தா நல்லா இருந்திருக்கும்!

:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மைபிரண்ட்!
மூளையை -மூலையெனவும், ஆளத்தை- ஆழத்தை எனவும் மாற்றவேண்டுமென நினைக்கிறேன்.

k4karthik said...

யூ டூ...!?

கவுஜ சூப்பரு...

ALIF AHAMED said...

நன்றி: ஜி !!!!

ALIF AHAMED said...

நேற்று..
நட்பெனும் பெயரிலே
கலந்தாய்
என்னுள்ளே..
///


சரி பாத்துகிட்டு சும்மா இருந்திங்களா...???

ALIF AHAMED said...

இன்று..
நீ ஒரு மூலையில்
நான் ஒரு மூலையில்
//
அழுகையும் நினைவுகளும்
அதிகரித்தது


ஒக்காத்து சீரியல் பாத்திங்களா...

ALIF AHAMED said...

நாளை
தொடருமா?
//

இந்த மாதிரி கவுஜ தொடர்ந்தா படிக்கிறவங்களுக்கு கஷ்டம் தான் :)

ALIF AHAMED said...

கேள்விக்குறி வளைந்து நிற்க,
//

வளைந்து நின்னாதான் கேள்விகுறி..

நேரா நின்னா அது ஆச்சரியகுறி !!!

:)

ALIF AHAMED said...

உன் இறுகப் பற்றுதலில்
ஓடி மறைந்தன
ஒவ்வொரு வினாக்களும்…
//

அப்புறம் என்னாத்துக்கு இம்புட்டு ஃபிளிங்க்ஸ்ஸ்ஸ்ஸு

ALIF AHAMED said...

என்னுடைய முதல் கவிதை
///

கவுஜயா நான் கூட உண்மையோனு நினைச்சிட்டேன்..:P

ALIF AHAMED said...

ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.. :-P)
//

பின்ன... ஒத்துகிற மாதிரியா இருக்கு இது..???

ALIF AHAMED said...

Specially dedicating this to Asa, Usha & Printha. Miss you girls. :-((
//

ஓ இவங்களுக்கா நான் கூட எனக்கோனு நினைச்சி....

ALIF AHAMED said...

நன்றி: ஜி
//

ஜி ஏன்ன்ய்யா ஒனக்கு இந்த வேண்டாத வேலை ஏற்க்கனவே கவுஜ படிச்சி ஒரு மார்க்கமா அலையிறேன் இதுல இப்படியெல்லாம் பண்ணகூடாது...

Dreamzz said...

ada, kavidhaiya? superu!

Unknown said...

//Specially dedicating this to Asa,
Usha & Printha. Miss you girls.//

அவங்க தப்பிச்சுட்டாங்க நாங்கதான் மாட்டிக்கிட்டோம்

அனுசுயா said...

என்னுடைய முதல் கவிதை

நல்ல வேளை கவிதைனு சொன்னீங்க இல்லீனா நாங்க என்னமோனு நினைச்சிருப்போம் :)

நாகை சிவா said...

:)))

கப்பி | Kappi said...

கவுஜ கவுஜ :)))

மங்களூர் சிவா said...

என்ன கொடுமை சரவணன் இது