Tuesday, October 02, 2007

நூரினின் மரணம்.. யாருடைய தவறு?

எட்டு வயதே நிரம்பிய நூரின் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. அழகானவள்; இரண்டாவது வகுப்பு படிக்கும் அவள் படிப்பிலும் சுட்டி. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு மாலை வேளையில் வீட்டுக்கு அருகாமையிலுள்ள இரவு சந்தைக்கு போயிட்டு வர்றேன் அம்மா என்று போனவள் திரும்ப வீடு திரும்பவே இல்லை. பதறிப்போன பெற்றோர்கள் பக்கத்திலுள்ள எல்லா இடத்திலும் தேடிவிட்டு காவல் நிலையத்திலும் தன் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தனர்.

ஒரு மாதம் ஆகியும் ஒரு தகவலும் இல்லை. ஆனாலும், தங்கள் தேடும் முயற்சியை கைவிடாமல் நாடு முழுதும் தேடினார்கள். இணையம், ஈமெயிலில் கூட தன் மகளை காணவில்லை என்று புகைப்படத்துடன் அனுப்பினார்கள். பட்டி தொட்டிகளிலும் அவளைப்பற்றியே தகவல்கள் இருந்ததால், அவளை யாராவது எங்கே பார்த்திருந்தாலும் அவள் சுலபமாக கண்டுபிடிக்கும் படியாக எல்லாரும் அவளைப்பற்றியே கவலைப்பட்டு தேடிக்கொண்டிருந்தார்கள்.

பின்னர் செப்டம்பர் மாதம் ஒரு நாளில் பெட்டாலிங் ஜெயா கடை வீதி பகுதியில் ஒரு கடையின் முன்னால் ஒரு கனமான ஸ்போர்ட்ஸ் பேக் இருப்பதை அந்த கடை உரிமையாளர் திறந்து பார்த்த பொழுது ஒரு பெரிய அதிர்ச்சி! பெட்டிக்குள்ளே ஒரு சிறுமியின் பிணம். உடனே காவல் நிலையத்துக்கு தகவல் சொன்னார்.

நூரினின் பெற்றோர்கள் அடையாளம் காண அழைக்கப்பட்டனர். எல்லாரும் அந்த உயிரற்ற சிறுமி நூரினாய் இருக்க கூடாதென்று வேண்டிக்கொண்டிருந்தனர். "இவள் என் மகள் இல்ல. என் மகளுக்கு உள்ள ஒவ்வொரு அடையாளமும் நான் அறிவேன்" என்று அவள் தந்தை உறுதியாக சொல்ல டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை பாசிட்டிவ்வாக அமைய, காவல்துறை நூரினின் காணவில்லை கேஸை மூட முட்ப்பட்டனர். ஆனால், நூரின் குடும்பத்தினர் மறுப்பு சொல்ல இரண்டாவது டி.என்.ஏ பரிசோதனை ஏற்ப்பாடு பண்ணப்பட்டது. நூரினின் சகோதரிகளின் ரத்தத்தையும் எடுத்து பரிசோதித்து அவள் நூரினேதான் என்று மருத்துவ வட்டாரம் கூறியது.பல இன்னல்களுக்கு பிறகு அவளை நல்ல படியாக அடக்கமும் செய்தாயிற்று!

பலரும் அந்த சிறுமிக்காக கண் கலன்கினர். என்னையும் சேர்த்து! ஆனால், இந்த சிறுமியின் மரணம் என்பது யார் செய்த தவறு? யாரின் கவனக்குறைவு?

எட்டு வயது சிறுமி அவள் தனியே வெளியே போனது குற்றமா? இதுதான் குற்றம் என்று பார்த்தால் எந்த சிறுவர்களும் காலையில் 6-7 மணிக்கு எழுந்து தனியே பள்ளிக்கு நடந்து செல்ல முடியுமா?

பெற்றோர்களின் கவனக்குறைவா? தன்னோட மூன்று பிள்ளைகளின் பாதுக்காப்பை கவனிக்க தவறிட்டார் என்று இவர்களை கைக்காட்டுவது சரியா?

அந்த சிறுமியை ஒரு வெள்ளை வேனில் கடத்துவதை பார்த்த பொதுமக்கள் ஒன்னும் செய்யாமலிருந்தாங்களே! அவர்களின் சமுதாய அக்கறைதான் என்ன?

மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தபோது சரியான/ தீவிரமான நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையின் குற்றமா?

அவளை கண்டுபிடித்து 2 வாரங்கள் ஆகிறதே. இன்னும் சந்தேகப்பேரில் பிடித்து வைத்திருக்கிற அந்த நால்வரும்தான் குற்றம் புரிந்தவர்களா? டி.என்.ஏ பரிசோதனைக்கு பிறகு இவர்கள் இல்லை என்று விடுவிக்கப்பட்டுவிட்டனரே?

இது வரைதான் காவல்துறையின் திறமையா?

சரி, மினிஸ்டர் என்ன சொல்றார் என்று பார்த்தால், அவரின் கருத்து என்ன தெரியுமா? "பெற்றோர் அவர்களின் மகளை சரியாக கவனிக்காததால்தான் மகள் கடத்தப்பட்டாள். அதனால் இவர்கள் மேல் ஒரு புகார் பதிவு அரசு தரப்பினர் செய்ய வேண்டும்" என்றூ சொல்கிறார்.

அப்படி என்றால் அரசாங்கம் மட்டும் பொது மக்களுக்கு முழு பாதுக்காப்பு வழங்கியுள்ளதா என்று கேட்டால் அதுக்கு அரசாங்கம் பேந்த பேந்த முளிக்க முடியுமே தவிர வேறெதுவும் சொல்ல இயலாது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வங்ஸா மாஜு LRT பக்கத்தில் ஒரு இளம் மலாய் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாளே! அது அந்த ஏரியாதானே! அப்போதிலிருந்தே அந்த இடத்தில் இரண்டு காவலாளிகளை நியமித்தார்களே! ஏன் இப்போது இல்லை?

இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், தவறு செய்தவர்கள் என்றும் அவர்களின் தப்பை ஒற்றுக்கொண்டதில்லை. அடுத்தவ்ரின் மேல் கைக்காட்டி தப்பித்துக்கொண்டேதான் இருக்கின்றனர். க்ரம் செய்தவர் நிம்மதியாக வெளியில் நடமாடுகின்றனர்..... என்ன உலகமடா சாமி!!!!!

14 Comments:

குசும்பன் said...

" என்ன உலகமடா சாமி!!!!!"

:(((((((((

maruthamooran said...

" என்ன உலகமடா சாமி!!!!!"
Repeat Repeat Repeat Repeat Repeat Repeat Repeat RepeatRepeat Repeat Repeat RepeatRepeat Repeat Repeat RepeatRepeat Repeat Repeat RepeatRepeat Repeat Repeat RepeatRepeat Repeat Repeat RepeatRepeat Repeat Repeat RepeatRepeat Repeat Repeat RepeatRepeat Repeat Repeat RepeatRepeat Repeat Repeat Repeat

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ பாவம் ... :(

Anonymous said...

யாரைச் சொல்லி என்ன பயன்!

நமது உறவுகளை, நமது உடமைகளை நாம் நாமே
பாதுகாத்து கொள்வதே கொள்வதே உத்தமம்.

கோபிநாத் said...

:-(((((((

வித்யா கலைவாணி said...

மலேசியாவில் கூட இதே கொடுமைதானா? நூருக்கு என்னுடைய அனுதாபங்கள்.

மங்களூர் சிவா said...

//
ஓ பாவம் ... :(

//
ரிப்பீட்

எல்லா ஊர்லயௌம் இதே எழவுதானா??

என்ன உலகமடா சாமி!!!!!"

parameswary namebley said...

இதை பற்றி ஒரு வாரத்திற்கு முன் நான் எழுதியது..

###################################
யாரைக் குற்றம் சொல்ல?

புத்தகங்கள் விநியோகிக்கும் ஒரு நிறுவன அலுவலகத்தின் வெளியே ஒரு பார்சல் இருப்பதை கண்ட அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், அது அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு வந்ததாக இருக்ககூடும் என நினைத்து விட்டுவிட்டனர். மதியம் அங்கு வந்த அந்த உரிமையாளர் அது தனக்கு வந்தது அல்ல என கூறி பிறகு சந்தேகத்தின் பேரில் அந்தப் பையை திறந்துப் பார்த்திருக்கிறார். அவருக்கு கடும் அதிர்ச்சி அந்த பையை திறக்கும் போதே இரண்டு கால்கள் அதுவும் ஒரு சிறுமியின் கால்கள் தெரிந்ததை கண்டு திடுக்கிட்ட உரிமையாளர் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

எட்டு வயதில் இருந்து பத்துவயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமியின் உடல்தான் அது.ஒரு மிருக காமுகனால் மானபங்கப்படுத்தி, துன்புறுத்திக் கொல்லப்பட்டு அந்த பையில் அடைக்கப்பட்ட ஒரு சிறுமியின் உடல்தான் அது. சமீபத்திய நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட செய்தி் இது.

மிருகத்தின் செயலைக் கண்டு அனைவரும் கோபப்பட்டனர், கொதித்தனர். இப்படி ஒருபுறமிருக்க, யார் அந்த சிறுமி? யார் பெற்ற மகளோ என அனைவர் மனதிலும் கேள்வி. அப்பொழுதுதான், அந்த சிறுமியின் உடலை அடையாளம் காண நூரி எனும் ஒரு சிறுமியின் பெற்றோர்கள் போலீசாரால் அழைக்கப்பட்டனர்.
யார் இந்த நூரி?

கடந்த மாதம் இருபதாம் திகதி தனது வீட்டின் அருகில் உள்ள இரவு சந்தைக்கு தனியே சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டவர் தான் இந்த நூரி.
முதலில் அடையாளம் காண சென்ற நூரியின் பெற்றோர்கள் , அவ்வுடல் நூரி இல்லை என்று கூறியுள்ளனர்.


ஆனால் அவர்களின் அந்த நம்பிக்கை இன்று, நூலறுந்த பட்டம் போல அறுந்து போனது. மரபணு சோதனையில் அந்த உடல் நூரிதான் என உறுதியாக்கப் பட்டது.

முதலில் நம்பாத நூரியின் பெற்றோர்கள் , மரபணு சோதனைக்குப் பிறகு ஒருவாராக நம்பிக்கையடைந்து நூரியின் உடலைப் பெற்று தகனம் செய்தனர்.

இதுதான் இவ்வாரத்தில் இங்கு அனைவராலும் பரப்பரப்பாகப் பேசப்பட்ட செய்தி..

அதிர்ச்சி, கோபம், பரிதாபம் என இன்னும் ஜீரணிக்க முடியாமல் அனைவரும் வேதனையிலிருக்க, யார் மீது நாம் குறை சொல்ல முடியும்?

இது முதல் தடவையாக நடந்த சம்பவம் அல்ல. நூரி மூன்றாவது சிறுமி. இதே மாதிரி இரண்டு சிறுமிகள் ஏற்கனவே மானபங்கப்படுத்தப்பட்டு உயிரற்ற உடலகளாகத்தான் கிடைத்திருக்கிறார்கள்.

இரண்டு சம்பவங்கள் நடந்தும் இதை தடுக்க எதுவும் செய்ய இயலாமல் இருக்கும் போலீஸ் துறையை சார்ந்தவர்களையா? அரசாங்கத்தையா?


இல்லை, இப்படி வெறித்தனமாக சுத்தும் மிருகங்களையா?

அதுவுமில்லாமல், எட்டே வயது நிரம்பிய குழந்தையை தனியாக இரவு சந்தைக்கு அனுப்பிய அல்லது மகள் வெளியே தனியாக சென்றிருக்கிறாள் என அறியாமல் இருந்த இந்த பெற்றோர்களையா?

யாரை குறை சொல்ல முடியும்? ....
###################################
காலை ஆறு மணியானலும் சரி மாலை ஆறு மணியானாலும் சரி.. பிள்ளைகளை தனியே விடுவது சரியல்ல.. எந்நாடாயினும் சிறு பிள்ளைகளை தனியே விடுவது சரியல்ல...

TBCD said...

சமுக பதிவுகள் எழுத துவங்கியிருக்கீங்க...நல்ல தொடக்கம்..
மழுப்புவது என்பது எல்லா ஊர் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை...மலெசியா ம்ட்டும் என்ன விதிவிலக்கா என்ன..?

Dreamzz said...

hmm! ithellam paathutu summa irukaare antha kadavul thavaru.

innamum kadavul irukiraarnu nambikittu kaalathai waste panraangale avanga thappu

ippadi vaai kiliya pesitu, urupadiya sondha lifela onnum pannama irukome, namma thappu.

k4karthik said...


:(
:(
:(


காட்டாறு said...

மனதை கலங்கடித்துவிட்டது. நூரின் இந்நிலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிச்சாங்களா?

நாகை சிவா said...

:(

நிலைமை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி தான் உள்ளது. சட்டங்கள் மிக கடுமையாக்குவது தான் சரியாக இருக்கும்...

சேதுக்கரசி said...

மாலை 8 மணிக்குத் தனியே போகவிட்டிருக்க வேண்டாம்தான். இதுபோன்ற காரணங்களால் அமெரிக்காவில் பட்டப்பகலில் கூட சிறுகுழந்தைகளை (சிறுமிகளை மட்டுமல்ல, சிறுவர்களையும்தான்!) தனியே விடமுடியாது. அட நம் வீட்டு வாசலிலே கூடத் தனியாக விளையாட விடமுடியாது. அடுத்த வீட்டுக்குக்கூடத் தனியே அனுப்பமுடியாது. பள்ளிக்கூட பஸ் ஸ்டாப் 1 வீடு தள்ளி என்றாலும் தனியே விடமுடியாது, விட்டுவிட்டு வரவேண்டும், அழைத்துவரவேண்டும். சைக்கிளில் தனியே ஒரு round போய்வர விடமுடியாது. அதைவிடக் கொடுமை, இங்கே பிள்ளைகள் தங்கள் அறையிலிருந்தே காணாமல் போகின்றன, இரவு அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கும்போது!