Tuesday, October 09, 2007

பொண்ணுங்க எல்லாரும் கோவிலுக்கு போகணும்.. பையனுங்க எல்லாரும் ஷாப்பிங் போகணும்..

நேற்று காலையில் ஒரு நண்பன் ஒருவன் கால் பண்ணினான்.

நான்: ஹலோ! வாவ்.. என்ன ஒரு ஆச்சர்யம்! ஐயா காலங்காத்தாலேயே எழுந்திரிச்சிட்டாரு? என்ன விசேஷம்?

அவன்: ஏய்! இப்போ நீ எங்கே இருக்கே?

நான்: என்ன கேள்வி இது? ஆபிஸ்லதான்..

அவன்: லீவு போடுவியா இன்னைக்கு?

நான்: எதுக்கு?

அவன்: கோவிலுக்கு போகலாம் வா..

நான்: ஆஹா.. என் நண்பனுக்கு ஞானமெல்லாம் வந்துடுச்சு! காலையிலேயே கோவிலுக்கு போகணும்ன்னு கூப்பிடுறானே! பெருமையா இருக்கு!

அவன்: வா போகலாம்.. வா போகலாம்..

நான்: என்ன சூப்பர் ஸ்டார் வாங்க பழகலாம் வாங்க பழகலாம்ன்னு கூப்பிடுற மாதிரி கூப்பிடுற?

அவன்: அவர் பெரிய தல. இவரு சின்ன தல..

நான்: சின்ன தலயா? யாரை பத்தி பேசுற? அப்போ நீ சாமி கும்பிட போகல! அதானே?

அவன்: கோவிலுக்கு போகலாம்ன்னு சொன்னேன். சாமி கும்பிடத்தான் போறோம்ன்னு சொன்னேனா? பில்லா ஷூட்டிங் நடக்குது பத்துகேவ்ஸ் கோவில்ல. இன்னையோடு மூன்றாவது நாள் ஷூட்டிங். தல சூப்பரா நடிக்கிறாராம். அவரை பார்க்க போலாம் வான்னுதானே கூப்பிடுறேன்.

நான்: ஏண்டா! இது உனக்கே ஓவரா தெரியல? ஷூட்டிங் பார்க்க போறதுக்கு நான் லீவு போட்டுட்டு வரணுமா? ஹீரோவை பார்க்கறதுக்கு பொண்ணுங்கதானடா ஓடுவாங்க? நானே போகலை! உனக்கெதுக்குடா இதெல்லாம்? எனக்கு தெரிஞ்சு உன்னை போல பையனுங்க ஹீரோயினை பார்க்கத்தானே ஓடுவீங்க? நயந்தராதான் பத்துகேவ்ஸ்க்கு போகலையே! எதுக்கு உனக்கு இந்த ஆர்ப்பாட்டம்?

அவன்: நயந்தாராவும் ஷூட்டிங் பார்க்க வருவாங்கிற ஒரு நட்பாசைதான்..

நான்: ஒழுங்கா காலேஜுக்கு போகுற வழியை பாரு.. இப்போ போனை கட் பண்ணு!!!

அவ்வளவுதான்.. பையன் போனை கட் பண்ணிட்டான். காலேஜுக்கு போயிருப்பான்.. ஆனா...







இரவு 8 மணிக்கு திரும்ப அவனிடமிருந்து ஒரு கால்..

அவன்: ஹலோ...

நான்: என்னடா.. காலேஜ் போனியா?

அவன்: போகுற வழியில வண்டி பங்ச்சர். பத்துகேவ்ஸ்க்கு முன்னாடித்தான்.. வண்டியை மெக்கானிக் ஷாப்ல போட்டுட்டு ரிப்பேர் பண்ணி முடிக்கிற வரைக்கும் ஷூட்டிங் பார்த்தேன். அஜித் சூப்பரா ஆடுறார். பாட்டுக்கூட கேட்க ரொம்ப நல்லா இருக்கு.

நான்: அடப்பாவி! நான் அவ்வளவு சொல்லியும் நீ போயிருக்கே அங்கே!! :@@@@

அவன்: சரி அதை விடு.. நாளைக்கு லீவு போடுவியா நீ?

நான்: நாளைக்கு எதுக்கு நான் லீவு போடணும்?

அவன்: எனக்கு கம்பெனி கொடுக்கத்தான்.. நாளைக்கு நான் KLCCக்கு போகணும்.

நான்: ஏதாவது ப்ராஜெக்ட் ப்ரெசெண்டேஷனா? ப்ரிபேர் பண்ணிட்டியா?

அவன்: ப்ராஜெக்ட் ப்ரெசெண்டேஷனா? யாரு சொன்னா? நாளைக்கு ஷூட்டிங் KLCCலன்னு விஷ்ணூவர்த்தன் சொன்னாரு. நயந்தாரா ஷூட்டிங். அவளை பார்க்கத்தான் கூப்பிடுறேன்.

நான்: ஏண்டா! என்னை பார்க்க உனக்கு என்னவா தெரியுது? நான் காலையில அவ்வளவு சொல்லியும் நீ ஷூட்டிங் போனதும் இல்லாமல் திரும்ப என்னையே கூப்பிடுறீயா நீ?

அவன்: நீதானே ஒரு அருமையான தத்துவம் சொன்னே! அதைத்தான் ஃபாலோ பண்றேன்.

நான்: நானா? என்ன சொன்னேன்?

அவன்: பொண்ணுங்க எல்லாரும் கோவிலுக்கு போகணும் (அஜித்தை பார்க்க).. பையனுங்க எல்லாரும் ஷாப்பிங் போகணும் (நயந்தராவை பார்க்க)..ன்னு..

நான்: அடப்பாவி! நான் சொன்னதுக்கு இப்படி ஒரு மீனிங் டிரைவ் பண்ணி வச்சிருக்கியா நீ? :@@@@.. போன்ல அடிக்க முடியாதுன்னு தைரியமா உனக்கு? இப்பவே உன் அக்காவுக்கு கால் பண்றேன். கூட ரெண்டு அடி சேர்த்து தருவாங்க!!!!

அவன்: ஐயோ வேணாம்.. டாட்டா.. பை பை..

வச்சிட்டான் போனை.. அனேகமா இன்னைக்கு KLCC வளாகத்துலத்தான் சுத்திட்டு இருப்பான். யாராவது பார்த்தீங்கன்னா எனக்கு பதிலா ரெண்டு அடி சேர்த்து கொடுங்க அவனுக்கு!!!

பி.கு. 1: என்னை டென்ஷனாக்கி இந்த பதிவை எழுத காரணமாய் இருந்த அந்த நண்பன் பிரசாத்துக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

பி.கு. 2: நாளைக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட். Double celebration. எல்லாரும் விருந்துக்கு வந்துடுங்க. :-)

25 Comments:

said...

\\அவன்: பொண்ணுங்க எல்லாரும் கோவிலுக்கு போகணும் (அஜித்தை பார்க்க).. பையனுங்க எல்லாரும் ஷாப்பிங் போகணும் (நயந்தராவை பார்க்க)..ன்னு..\\

அருமையான தகவல்...அழ்ந்த கருத்துக்கள்.... ;)))

said...

\\பி.கு. 2: நாளைக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட். Double celebration. எல்லாரும் விருந்துக்கு வந்துடுங்க. :-)\\

நாளைக்கு நீங்க கோயிலுக்கு போக போறிங்களா.....;)))

said...

\\பி.கு. 2: நாளைக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட். Double celebration. எல்லாரும் விருந்துக்கு வந்துடுங்க. :-)\\

நான் கண்டுபிடிச்சிட்டேன்.....நாளைக்கு கண்டிப்பா வந்துட்டுங்க எல்லோரும்....;))))))))))

said...

//பி.கு. 2: நாளைக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட். Double celebration. எல்லாரும் விருந்துக்கு வந்துடுங்க. :-)//
நாளைக்கு என்ன??
அஜித் நயன்தாரா இரண்டு பேரும் சேர்ந்து எங்கேயாவது ஷூட்டிங் நடக்க போகுதா?? :-P

said...

//அருமையான தகவல்...அழ்ந்த கருத்துக்கள்.... ;)))//

Repeatu....

said...

//அருமையான தகவல்...ஆழ்ந்த கருத்துக்கள்.... தீர்ந்தது சந்தேகம், இந்த பிடி 1000 பொற்காசுகள். :p

நாளை நயன் படம் போடவும். உனக்கு புண்ணியமா போகும். :p

said...

அட பாவி சித்துவுல இருந்து இப்போ அஜீத்துக்கு மாறிட்டயா ?

said...

//அருமையான தகவல்...அழ்ந்த கருத்துக்கள்.... ;)))//

கோபிண்ணே, ஜிண்ணே, அம்பிண்ணே.. உங்களுக்கும் அடி பத்தலை போலிருக்கு.. :-))))

said...

@கோபிநாத் :

//நான் கண்டுபிடிச்சிட்டேன்.....நாளைக்கு கண்டிப்பா வந்துட்டுங்க எல்லோரும்....;))))))))))
//

ரெண்டுமேவா? எனந்துன்னு சொல்லுங்க பார்ப்போம்? ;-)

said...

@CVR :

//நாளைக்கு என்ன??
அஜித் நயன்தாரா இரண்டு பேரும் சேர்ந்து எங்கேயாவது ஷூட்டிங் நடக்க போகுதா?? :-P//

அதெல்லாம் நடந்து முடிஞ்சாச்சு விஞ்ஞானி அவர்களே. ;-)

said...

@ambi:

//
நாளை நயன் படம் போடவும். உனக்கு புண்ணியமா போகும். :p
//

வேணாம்..நாட்டமை வந்து போடுவார் படத்தை.. ;-))))

said...

சித்துவ எப்ப விடுறீங்கள்? இல்லாட்டா டைவர்ஸ் பண்ணிட்டிங்கிளோ :-) ஆமா நாளைக்கு என்ன விசேசம் ?

சின்னப்பசங்களுக்கு நல்ல தத்துவம் சொல்லிக்குடுக்காம இப்பிடியா கோயிலுக்கும் மோலுக்கும் அலைய விடுவீங்கள்.

said...

//அருமையான தகவல்...அழ்ந்த கருத்துக்கள்.... ;)))//

Repeatu....

said...

//
நாளை நயன் படம் போடவும். உனக்கு புண்ணியமா போகும். :p
//

இதுக்கு ரிப்பீட் மட்டுமல்ல

ஒரு சின்ன கரெக்சன்

"கோடி புண்ணியமா போகும்"

said...

நயன் தாரா படம் போடாதை வன்மையாக கண்டிப்பதோடு மட்டும் இல்லாமல் இந்த பதிவில் இருந்து வெளிநடப்பும் செய்கிறேன்...

நாளை பதிவுல் சந்திப்போம்

said...

நாகை சிவா said...
நயன் தாரா படம் போடாதை வன்மையாக கண்டிப்பதோடு மட்டும் இல்லாமல் இந்த பதிவில் இருந்து வெளிநடப்பும் செய்கிறேன்...

நாளை பதிவுல் சந்திப்போம்"/////

எங்க மண்ணின் மைந்தன் சொன்னதுக்கு ஒரு ரிப்பிட்டேய்

said...

/குசும்பன் said...

நாகை சிவா said...
நயன் தாரா படம் போடாதை வன்மையாக கண்டிப்பதோடு மட்டும் இல்லாமல் இந்த பதிவில் இருந்து வெளிநடப்பும் செய்கிறேன்...

நாளை பதிவுல் சந்திப்போம்"/////

எங்க மண்ணின் மைந்தன் சொன்னதுக்கு ஒரு ரிப்பிட்டேய்//


நானும் ரீப்பிட்டே போட்டுக்கிறேன்... :)

said...

மை பிரண்ட்!
" நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாமங்கே பொசியுமாம்"
ஏதோ தலையை பார்க்க போய்; கோவிலில் நிற்பதால் அந்தப் புண்ணியம் கிட்டட்டும்.
கோவிலுக்குப் போங்கோ

said...

ROFL! nalla paiyan!

said...

:))))))))))))

said...

சே, பசங்க கோயிலுக்கு கூப்பிட்டா போவனும். காரணம் எல்லாம் கேட்கப்பிடாது.

said...

//நாளைக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட். Double celebration. எல்லாரும் விருந்துக்கு வந்துடுங்க. :-)//

விருந்துல எனக்கு எதுனா மிச்ச மீதி வைங்கப்பா...

said...

\\பி.கு. 2: நாளைக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட். Double celebration. எல்லாரும் விருந்துக்கு வந்துடுங்க. :-)\\

51+148=???


:))

said...

:)

said...

ஹையா நாந்தான் 25 வது ஆளா