Wednesday, October 31, 2007

தமிழ் தெரியாதவர்களும் தமிழ் படிக்கலாம்..

நேற்று விளையாட்டாய் போட்ட ஒரு பதிவு.. இன்று இதன் மூலம் இன்னொரு அருமையான தகவல் கிடைத்திருக்கிறது..

தமிழில் எழுத தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் இங்கே டைப் செய்தால் தமிழில் சரியான எழுத்துக்களில் மாறுகிறது. ஆனாலும், தமிழ் படிக்கத்தெரியாதவர்கள் இன்னமும் இந்த தமிழ் பதிவுகளை படிக்க முடியாதே என்ற கவலை இருந்தது. ஏனென்றால் என்னுடைய பல நண்பர்களுக்கு தமிழ் படிக்க தெரியாது.

முன்பு அவர்களுடன் தங்கியிருக்கும்போது தினமும் எனக்கு பிடித்த பதிவுகளை படித்துக்காட்டுவேன். இப்போது நாங்கள் அனைவரும் ஒவ்வொரு திசையிலும் பிரிந்து போயிருந்தாலும் போன் போட்டு, "ஹேய், புதுசா ஏதாவது நல்ல/ நீ ரசிச்ச பதிவுகள் இருந்தால் படித்துக்காட்டேன்?" என்று அன்புக்கட்டளைகள் செல்பேசியின் மூலம் வந்த படியேதான் இருக்கின்றன.

நண்பர்களே, இனி உங்களுக்கு தமிழ் படிக்க தெரியலையே என்ற கவலையே வேண்டாம். உங்கள் தமிழ் வலைப்பூவை அப்படியே லத்தின் எழுத்தாக மொழிமாற்றம் செய்தால், நீங்கள் படிக்கலாமே!

இந்த சுட்டியை உங்கள் ப்ரௌஸரில் டைப் செய்யுங்கள்:
http://eemaata.com/indic2latin.php

"Convert a website" என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை எழுதுங்கள்.
உதாரணத்துக்கு: engineer2207.blogspot.com

அது உடனடியாக http://eemaata.com/indic2latin.php?link=engineer2207.blogspot.com -ஆக மாறிடும். இந்த சுட்டியை தட்டிப்பாருங்க.. :-)

அதுமட்டுமல்ல. நீங்கள் நேரடியாக "Transform Text" என்ற பெட்டியில் தமிழில் டைப் செய்து "Transform to Latin" என்ற பட்டனை க்ளிக்கினாலுல் லத்தின் பெட்டியினுள்ளே அந்த எழுத்துக்கள் வந்துவிடும்..

INTERESTING....

இனி, தமிழ் தெரியாதவர்களும் தமிழில் படிக்கலாம்... :-)

IndicUnicode என்ற எழுத்து இதற்கு வேண்டுமாம். அதை தர இறக்கம் செய்ய http://scripts.sil.org/cms/scripts/page.php?site_id=nrsi&item_id=Gentium_download

இந்த அருமையான தகவலை பகிர்ந்துக்கொண்ட நண்பர் நா.கணேசன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

23 Comments:

Baby Pavan said...

இனி, தமிழ் தெரியாதவர்களும் தமிழில் படிக்கலாம்... :-)

Thanks அக்கா

Baby Pavan said...

I have a confusion In my house my father talks to me in Tamil, my mother talks to me in Telegu, my brother talks to me in English, my baby sitter talks to me in Marati and the security and other people in our society talks to me in Hindi. Is there any software to translate and make me understand.

Anonymous said...

Thank you for the info. I think this will help many people. Excellent.

Rumya

Sanjai Gandhi said...

http://www.google.com/transliterate/indic/Tamil

இதையும் ட்ரை பன்னுங்க ஆண்டி.

மங்களூர் சிவா said...

//
~பொடியன்~ said...
http://www.google.com/transliterate/indic/Tamil

இதையும் ட்ரை பன்னுங்க ஆண்டி.
//
ஆமாங்க ஆண்ட்டி

ரிப்பீட்டேய்
:-))))))))))

Sanjai Gandhi said...

//ரிப்பீட்டேய்
:-))))))))))//

அது ரிப்பீட்டேய் இல்ல மாமோவ்...
வழிமொழிகிறேன்...

எங்க சொல்லுங்க பாப்போம்..
வழிமொழிகிறேன்.. :P

Sanjai Gandhi said...

//I have a confusion In my house my father talks to me in Tamil, my mother talks to me in Telegu, my brother talks to me in English, my baby sitter talks to me in Marati and the security and other people in our society talks to me in Hindi. Is there any software to translate and make me understand.//

ஹலோ.. ஹலோ தல.. மொதல்ல உங்க language புரிஞ்சிக்க அவங்க எல்லாரும் ஒரு சாப்ட்வேர் தேடிட்டு இருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா?

MyFriend said...

@Baby Pavan:

//இனி, தமிழ் தெரியாதவர்களும் தமிழில் படிக்கலாம்... :-)

Thanks அக்கா
//

வாங்க தம்பி.. சீக்கிரமே எழுந்திரிச்சிட்டீங்க போல இன்னைக்கு? :-) இப்படித்தான் இருக்கணும் செல்லம். :-)

//I have a confusion In my house my father talks to me in Tamil, my mother talks to me in Telegu, my brother talks to me in English, my baby sitter talks to me in Marati and the security and other people in our society talks to me in Hindi. Is there any software to translate and make me understand.//

அவங்க என்ன மொழி வேணும்னாலும் பேசிட்டு போட்டும் செல்லம். உலகிலேயே மிக அழகான மொழி உன்னை போல மழலை செல்லங்கள் பேசும் மொழிதானடா. நீ பேசுடா கண்ணா.. அக்கா கேட்குறேன். :-)

MyFriend said...

@Rumya:

//
Thank you for the info. I think this will help many people. Excellent.

Rumya//

I hope too Rumya. :-)

MyFriend said...

@~பொடியன்~ :

//
http://www.google.com/transliterate/indic/Tamil

இதையும் ட்ரை பன்னுங்க ஆண்டி.//

பொடியா அங்கிள், இதுல இருந்து தெரியுது நீங்க என்னுடைய பழைய போஸ்ட் படிக்கலைன்னு. கொஞ்சம் அதையும் பாருங்க. :-))

////ரிப்பீட்டேய்
:-))))))))))//

அது ரிப்பீட்டேய் இல்ல மாமோவ்...
வழிமொழிகிறேன்...

எங்க சொல்லுங்க பாப்போம்..
வழிமொழிகிறேன்.. :P/

பரவால்லையே.. நல்லாவே தமிழ் பேசுறீங்க. தமிழ் வாத்தியாரா நீங்க அங்கிள்? :-)


//ஹலோ.. ஹலோ தல.. மொதல்ல உங்க language புரிஞ்சிக்க அவங்க எல்லாரும் ஒரு சாப்ட்வேர் தேடிட்டு இருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா?//

செல்ல தம்பிக்காக இதையும் தேடி கண்டுபிடிச்சு ஒரு பதிவா போட்டுட்டா போச்சு. சரிதானடா பவன் கண்ணா? :-)

MyFriend said...

//மங்களூர் சிவா said...
//
~பொடியன்~ said...
http://www.google.com/transliterate/indic/Tamil

இதையும் ட்ரை பன்னுங்க ஆண்டி.
//
ஆமாங்க ஆண்ட்டி

ரிப்பீட்டேய்
:-))))))))))
//

சிவாண்ணே, நீங்களுமா? :-))))

Divya said...

Thanks for the Info my dear friend!!!

Sanjai Gandhi said...

என்னது அங்கிளா? :((
ஒரு பொடிப் பையனை அங்கிள் என்று அழைத்து அவமதித்த குற்றத்திற்காக இந்த அத்தை பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்வரை ஓய மாட்டேன் எனக் கூறுவதுடன் மறவாமல் வன்மையாக கண்டித்தும் விடுகிறேன்..
அவ்வ்வ்வ்வ்வ்வ் :((

Sanjai Gandhi said...

சிவா மாமா.. சப்போர்ட்டேய்ய்ய்ய்...

MyFriend said...

@Divya:

//Thanks for the Info my dear friend!!!//

வாங்க திவ்யா. நன்றி. :-)

MyFriend said...

@~பொடியன்~:

//என்னது அங்கிளா? :((
ஒரு பொடிப் பையனை அங்கிள் என்று அழைத்து அவமதித்த குற்றத்திற்காக இந்த அத்தை பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்வரை ஓய மாட்டேன் எனக் கூறுவதுடன் மறவாமல் வன்மையாக கண்டித்தும் விடுகிறேன்..
அவ்வ்வ்வ்வ்வ்வ் :((//

ஹாஹாஹா.. நாங்க நம்பிட்டோம்ல. :-P

//~பொடியன்~ said...
சிவா மாமா.. சப்போர்ட்டேய்ய்ய்ய்...
//

சிவா மாமா ரிப்பீட்டேய் போட மட்டும்தான் வருவாரு. ;-)

மங்களூர் சிவா said...

//~பொடியன்~ said...
சிவா மாமா.. சப்போர்ட்டேய்ய்ய்ய்...
//
ஹலோ யார் இங்க பொடியன கலாய்க்கிறது.

கிர்ர்ர்ர்ர்ர்

மங்களூர் சிவா said...

@மை பிரண்ட்
//
சிவா மாமா ரிப்பீட்டேய் போட மட்டும்தான் வருவாரு. ;-)
//
இதெல்லாம் ரொம்ப........ ஓவர்

மங்களூர் சிவா said...

//
~பொடியன்~ said...
என்னது அங்கிளா? :((
ஒரு பொடிப் பையனை அங்கிள் என்று அழைத்து அவமதித்த குற்றத்திற்காக இந்த அத்தை பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்வரை ஓய மாட்டேன் எனக் கூறுவதுடன் மறவாமல் வன்மையாக கண்டித்தும் விடுகிறேன்..
அவ்வ்வ்வ்வ்வ்வ் :((
//
இங்க கலவரமே நடக்கும் என்பதை தெரிவித்து 'கொல்லு'கிறேன்

Sanjai Gandhi said...

//ஹலோ யார் இங்க பொடியன கலாய்க்கிறது.// அது..
மாமான்னா மாமாதான்.
யார்க்காச்சும் தைரியம் இருந்தா இப்போ வாங்க பாக்கலாம். :-P

நாகை சிவா said...

அட..

முயற்சி செய்து பாத்துட்டு சொல்லுறேன்..

அடே பலே னு மாறுதானு.. :)

Raji said...

Nice info :)

Anonymous said...

Thank you friend,
I was confused which to select which software among Tamil99,kamban,erkalappai,Azhagi etc.
now this is very simple and easy.