Tuesday, April 22, 2008

காப்பி வித் ஹர்ரிஸ் ஜெயராஜ்

போன பதிவில் சந்தோஷ் சுப்ரமணியம் பாடல் விமர்சனம் எழுதலாம்ன்னுதாங்க பதிவெழுத தொடங்கினேன். அது என்னமோ தெரியல வேற ஒரு ட்ராக் தேடி ஓடிடுச்சு. நோ ப்ராப்ளம். it's all in the game.

இன்னைக்கு நான் எழுத போற மேட்டர் நீங்க படிக்கும் முன்னே, இந்த இரண்டு க்ளிப்பிங்ஸும் பாருங்க.
இப்போ தெரிஞ்சிருக்கும் இன்று எதை பற்றி எழுத போறேன்னு. எப்பவும் தேவாதானுங்க கிங்! கிங் ஆஃப் காப்பி. காப்பி வித் அனுக்கே காப்பி கலக்கி தரும் அளவுக்கு இந்த மேட்டர்ல பி.எச்.டி எடுத்தவர். எல்லார் கண்ணும் தேவாவின் மேலே இருக்கும்போது மற்ற இசையமைப்பாளர்களின் காப்பியின் மேல் அவ்வளவு பிரியம் இருக்காது. அதனால், அவங்க அடிக்கிற காப்பியும் நம்ம கண்ணுக்கு தெரியாது. எங்கேயோ கேட்ட பாடல்ன்னு பாடிட்டு அடுத்த வேலை பார்க்க போயிடுவோம்.

ஹர்ரிஸ் - இசைப்புயலின் உருவாக்கத்தில் வந்தவர். அவரிடம் கீபோர்ட் வாசிப்பவராக இருந்து பின்னால்
இசையமைப்பாளராக மாறியவர். இவருடைய ஆரம்ப கால இசை வாழ்க்கையிலிருந்தே ஒரு சர்ச்சை இருந்துக்கொண்டேதான் இருக்கு. "ரஹ்மான்'ஸ் காப்பி"!!!! இவருடைய பல பாடல்களில் ரஹ்மானின் பாணியும் அவரிடமிருந்து திருடப்பட்ட இசைகளையும் புதையல் போல கண்டுபிடிக்கலாம். நெட்ல கொஞ்சம் அலசினால் ரஹ்மான்'ஸ் ரசிகர்களின் ஆதங்கம் வெள்ளம் போல புரண்டோடுவதை காணலாம்.

அவருடைய முதல் ப்ராஜெக்ட் மின்னலே மின்னல் வேகத்தில் வெளியாகததால் முதலில் மக்களை எட்டி பிடித்தது 12B பஸ்தான். "ச்சும்மா அருமையா பிண்ணியிருக்காரு மனுஷன்"ன்னு பலரும் பாராட்டும் விதத்தில் போட்டிருந்தார் டியூன். ஆடியோ சிடி/ கேசட்டுகள் அதுவரை எந்த படமும் சாதிக்காத வசூலையெல்லாம் தாண்டி சாதனை படைத்தது. நானே மிகவும் ரசித்து கேட்ட, இப்போதும் ரசிக்கும் பாடல்களில் 12Bயும் அடங்கும்.

ஆனால், ஒரு சில படங்கள் வெளியாகிய பிறகு அவருடைய இசை பேட்டர்ன் திரும்ப திரும்ப அதே இடத்துலேயே சுத்த ஆரம்பித்துவிட்டது. குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுறது போல அவருடைய இசையில் வெற்றிபெற்ற அதே பாடல் தோரணையில் புது படத்திலும் ஒரு பாடல் அமைந்துவிடும். எந்த பாடல்ன்னு பல பேருக்கு தெரியும். ஆனாலும் இங்கே நாங்க சொல்லுவோம்ல.

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?

-என்ற தத்துவ(!?!?) பாடல் மிகப் பெரிய வெற்றியடைந்த்தனால்

கொக்கு மீனை திங்குமா?
இல்ல மீனு கொக்கை முழுங்குமா?

-என்று மேக்கப் போடப்பட்டு திரும்ப நமக்கே வந்து சேர்ந்திருக்கு. மக்களே, இங்கத்தான் நீங்க நல்லா கவனிக்கனும். ஒரு பாடல் வெற்றி பெருவதுக்கு காரணமே நாம்தான். நமக்கு அந்த பாடல் பிடித்ததானால் ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்ன்னு பல முறை கேட்டு வெற்றியடைய செய்தால் அதையே திரும்ப ஆடை மாற்றி மேக்கப் போட்டு நமக்கே அனுப்புறாங்க.. என்ன கொடுமை சரவணா இது!!!

இப்படி கேட்கும்போது எவ்வளவு வெறுப்பாக இருக்கும் தெரியுமா?

மத்தவங்க இசையை காப்பி அடித்து வெற்றி அடைந்தாயிற்று..
சொந்த இசையையே திருப்பி போட்டு அதுலேயும் ஓரளவு வெற்றி அடைந்தாயிற்று...
அடுத்து என்ன?
இங்கேயும் ஒரு மேட்டர் இருக்கு.. அதுக்கு முன்னே இதோ இந்த இரண்டு காட்சிகளை பாருங்க:
அடப்பாவிகளா! அடப்பாவிகளா! (விவேக் ஸ்டைலில்..)
எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே!
காப்பியடிக்க கூட ஐடியா கிடைக்காமல் அப்படியே போட்டுட்டாரே!!!!

சிலர் தன் வழி தனி வழின்னு போகும்போது சிலர் என் வழி திருட்டு வழின்னு போகிறார்களே! அவர்கள் இருக்கும் வரை இவர்களும் இருப்பார்கள்! இவர்கள் இருக்கும்வரை திருட்டு இசைகளும் சாகா வரம் பெற்று வாழும் என்பதில் ஐயமில்லை. :-P

23 Comments:

said...

மீ த பர்ஸ்டு... :)

said...

//SanJai said...
மீ த பர்ஸ்டு... :)//
:)))

காப்பி

said...

ROFL! நல்லா சொல்லி இருக்கீங்க! ஸோ ட்ரூ! என்ன செய்ய...

said...

அந்த கடைசி இரண்டு... :( என்னத்த சொல்ல.

said...

என்னத்த சொல்லுறது? மனசு பொறுக்காம டீ(தீ) குளிச்சுடாதீங்க?

said...

அடப்பாவிகளா!!

said...

:)))

பல வருஷமா இதைத்தானே பண்றாரு..கேட்டா இன்ஸ்பிரேஷம்பாங்க...12-B, சாமுராய்க்கு பிறகு இவர் போட்ட எல்லா பாட்டுமே ஒரே மாதிரியா தான் இருக்கு..ஆனா அதுலயும் ஒரு சில நல்ல பாடல்கள் வந்துடுது...

ஒரே மாதிரி பாட்டு போடறது மட்டுமில்லாம ஒரே மாதிரி பாடற 4 பேரை புடிச்சுட்டு வந்து மூக்குல பாட வைப்பாரு...அந்த கொடுமை வேற :))

said...

எச்சூஸ் மி

said...

மே ஐ கம் இன்சைடு

said...

மீ த பத்து ... :)

said...

சினி ஃபீல்ட்ல இதெல்லாம் சகஜமம்மா

said...

//
சிலர் தன் வழி தனி வழின்னு போகும்போது சிலர் என் வழி திருட்டு வழின்னு போகிறார்களே! அவர்கள் இருக்கும் வரை இவர்களும் இருப்பார்கள்! இவர்கள் இருக்கும்வரை திருட்டு இசைகளும் சாகா வரம் பெற்று வாழும் என்பதில் ஐயமில்லை. :-P//

இதுதான் பஞ்ச் மெசேஜ்ம்பாங்களோ?
உண்மைதான்:)

said...

ennanga panradhu.. ellam copy adichu schoola pass panni irupaanga!

said...

//அவருடைய முதல் ப்ராஜெக்ட் மின்னலே மின்னல் வேகத்தில் வெளியாகததால் முதலில் மக்களை எட்டி பிடித்தது 12B பஸ்தான். //


அப்ஜெக்க்ஷன் யுவர் ஆனர்

காப்பி ஹாரிஸின் முதல் புராஜெக்ட் "மஜ்னு", முதலில் வெளிவந்தது "மின்னலே"

இப்பல்லாம் காப்பி தான் பாஷன், நம்ம ஜெயம் ரவியை பாருங்களேன்.

said...

அடடா நீ சிபிஐல இருக்க வேண்டியவ மா! (காமெடி எல்லாம் ஒன்னும் இல்ல) :D


//அது என்னமோ தெரியல வேற ஒரு ட்ராக் தேடி ஓடிடுச்சு//

அப்படியா? நம்பிட்டோம். :P

said...

harris jeyaraj'da first padam Majnu.. not minnale

said...

ஏக் அட்டண்டண்ஸ்....அந்த கிளிப்பிங்ஸ் எல்லாம் பார்க்க முடியல...இங்க ஆபீஸ்லயும் அத எல்லாம் பிளாக் பண்ணி சீனா மாதிரி அராஜகம் பண்றாங்க... :-)

said...

ஆனா அந்த மேக்கப் மேட்டர் சூப்பர்.... :-)

Anonymous said...

hey உங்கள் ப்ளோக் ஐ படிக்க ரொம்ப சந்தோஷம் . நானும் ஹாரிஸ் ஜெயராஜ் ஓட ஒரு மேட்டர் ஐ பத்தி எழுதிருக்கேன் . இங்கு - நித்யா

Anonymous said...

///இப்படி கேட்கும்போது எவ்வளவு வெறுப்பாக இருக்கும் தெரியுமா?///யாரு கேக்க சொன்னா?

said...

//hey உங்கள் ப்ளோக் ஐ படிக்க ரொம்ப சந்தோஷம் . நானும் ஹாரிஸ் ஜெயராஜ் ஓட ஒரு மேட்டர் ஐ பத்தி எழுதிருக்கேன்//

பிளோக் “ஐ” -> அதென்னங்க பிளோக் ஐ? நாங்க மெட்ராஸ் ”ஐ” பத்திதான் கேள்விப்பட்டிருக்கோம்.இது அத விட பயங்கரமானதாயிருக்குமோ?P

ஹாரிஸ் ஜெயராஜ் ”ஓட”-> ஆஹா.. ஹாரிஸ் ஜெயராஜ்,படிச்சுப்புட்டு ”ஓடற” அளவு பதிவு எழுதறிங்களா?. நல்லா தொரத்தறிங்க மக்கா பதிவு எழுதி:))))))))

said...

lol


என்னைய வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே? :D :D

anyways , first thaba blogla tamil ezhuthirukken

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க

said...

ஏங்க உங்களுக்கு இந்த கொலவெறி...இது இன்னைக்கு நேத்தா நடக்குது... ஒரு பழைய பாடல்... 'என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்..வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்'

எம்.எஸ்.விஸ்வநாதன் 'பர் எலிஸி'இசையிலிருந்து தழுவி இசையமைத்ததுதான்.

விடுங்க...விடுங்க... இதெல்லாத்தையும் நாமும் இரசித்துக்கொண்டேதானே இருக்கோம்.

ஆனாலும் நல்ல முயற்சி..

கஜல் இசையை தழுவி ஷங்கர்-கணேஷ் இசையமைத்த "மேகமே மேகமே பால் நிலா தேயுதே" வாணி ஜெயராம் பாடிய பாடல் ரொம்பவே பிடிக்கும்.. ஆக தழுவல் தவறில்லை.. அடுத்தவர் கற்பனையை தனதென்று உரிமைகொள்ளாதவரை.