நீங்கள் சீனாவில் வசிக்கிறீரா?
உங்கள் பதில் ஆமாம் என்றால், உங்களுக்கு கிடைப்பது:
யூ டியூப் நோ! நோ!
யாஹூ நோ! நோ!
கூகில் நியூஸ் நோ! நோ!
பிபிசி வோர்ல்ட் நோ! நோ!
சி.என்.என் நோ! நோ!
குவார்டியன் நோ! நோ!
திரும்ப பாட்டு பாட ஆரம்பிச்சுட்டாடான்னு நீங்க நினைக்கிறதுக்குள்ளே மேட்டர் என்னன்னு சொல்லிடுறேனுங்க.
இந்த சீனா நாட்டுல இப்போதுள்ள நிலமை என்னன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். திபேத்திய மக்களின் போராட்டமும், சீன அரசாங்கத்தின் அராஜகமும் (அடடே, டைட்டல் நல்லா இருக்கே!) இப்போ அங்கே கட்டுக்கடங்காமல் நடந்துட்டு இருக்கு. பல நாடுகள் சீன அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டேதான் இருக்காங்க.. டலாய் லாமாவும் இந்த அராஜகத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூடிய விரைவில் பெய்ஜிங்கில் நடக்கப்போகும் ஒலிம்பிக்கை புறக்கணியுங்கள் என்று உலக மக்களை வேண்டிக்கொண்டிருக்கிறார்.
இந்த மாதிரி போராட்டம் நடக்குமிடத்தில் உண்மையான விபரங்கள் பத்திரிக்கைகளில் வராது. இது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும், உண்மையில் என்ன நடந்தது என்று மக்களுக்கு சொல்லுவதற்கு ஏதாவது ஒரு மீடியம் தேவைப்படும். அதிலும் எல்லா தரப்பு மக்களுக்கும், உலகத்தில் எல்லா இடத்திலும் இருக்கும் மக்களுக்கும் போய் சேர வேண்டுமென்றால் ஒரே ஒரு வழிதான் இருக்கு. இண்டெர்நெட்! அதுவும் எழுத்து வடிவத்தை விட வீடியோ நிரல்களாய் மக்களிடம் போய் சேரும்போது அதனுடைய பாதிப்பும் அதிகம்!
இந்த வகையில் யூ டியூப் ஒரு மிகப் பெரிய சாதனை! எந்த போராட்டத்தையும், மக்களின் கருத்துக்களையும் ஒரே இடத்தில் வீடியோவாய் பார்க்கலாம். சீனா-திபேத் பிரச்சனை பற்றியும் பல வீடியோக்கள் வெளியாக ஆரம்ப்பித்துவிட்டது. நாமெல்லாம் இதை பார்த்து திபேத் போராளிகளுக்கு ஆதரவு கொடுத்திடுவோம் என்று பயந்து சீனா என்ன செய்தது! யூ டியூப்பை சீனாவில் ப்லோக் பண்ணிடுச்சு. அதனால், இனி இந்த பிரச்சனையை பற்றி புது வீடியோக்களை இனி யூ டியூப்பில் காண முடியாது. கூகல், யாஹோ, பிபிசி போன்ற நியூஸ் சான்ற தளங்களிலும் உள்நாட்டு RSS-ஐ தடுத்துவிட்டது.
இதெல்லாம் செய்தால் செய்திகள் வெளியே கசியாது என்று தப்பு கணக்கு போட்டுவிட்டது சீனா! எம்.எம்.எஸ், ஈமெயில் மூலமாக வெளிநாட்டவருக்கு அனுப்பி அவரை அப்லோட் பண்ண சொல்லலாமே! நான் சொல்றது சரிதானே! ;-)
Tuesday, April 01, 2008
சீனா: யூ டியூப் நோ! நோ!
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
//.. டலாய் லாமாவும் இந்த அராஜகத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூடிய விரைவில் பெய்ஜிங்கில் நடக்கப்போகும் ஒலிம்பிக்கை புறக்கணியுங்கள் என்று உலக மக்களை வேண்டிக்கொண்டிருக்கிறார்//
ithu sariyaa? i remember readind he dint call for this :) hmm.. may be..
nalla post :)
sudhandhiratha thadukka aayiram vali irukalam. aana athai udaika 1001 vali irukkum :)
///செய்திகள் வெளியே கசியாது என்று தப்பு கணக்கு போட்டுவிட்டது சீனா! எம்.எம்.எஸ், ஈமெயில் மூலமாக வெளிநாட்டவருக்கு அனுப்பி அவரை அப்லோட் பண்ண சொல்லலாமே! நான் சொல்றதுசரிதானே! ;-)////
உங்களுக்கு எம்.எம்.எஸ் ஏதும் வந்திருக்கா?
//எம்.எம்.எஸ், ஈமெயில் மூலமாக வெளிநாட்டவருக்கு அனுப்பி அவரை அப்லோட் பண்ண சொல்லலாமே! நான் சொல்றது சரிதானே! ;-)//
பெரியவங்க நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். :).. திபெத்தியர்கள் உலகின் எல்லா பகுதியிலுமே இருக்கிறார்கள். அவர்களுக்கு மெயில் அனுப்பியோ அல்லது வேறு விடியோ தளங்களில் அப்லோட் பண்ணியோ சீனாவின் அராஜகத்தை உலகரிய செய்யலாம்.
//எம்.எம்.எஸ், ஈமெயில் மூலமாக வெளிநாட்டவருக்கு அனுப்பி அவரை அப்லோட் பண்ண சொல்லலாமே! நான் சொல்றது சரிதானே! ;-)
ada ada, enna mollai enna moolai :)
youtube,yahoo dhaane block aachu, Blogsville notice board edhuku irukku, news spread panni vitta pochu
அடடா! உன் புத்திஷாலிதனத்தை எண்ணி சந்தோஷமடைகிறேன்.
ஆனா, எவனுக்கு எம்.எம்.ஸ் வந்ருக்கு?னு சர்வீஸ் ப்ரவைடர் மூலமா சப்ப மூக்கு அதிகாரிகள் தெரிந்து கொண்டு மேசேஜ் ரீசீவ் பண்ணிய ஆளை நல்லா கவனிப்பாங்க இல்ல. :))
சித்து எதேனும் சீன மொழி படத்துல நடிக்கறாரா? :D
உனக்கு சீன மொழியும் தெரியுமா? :)
பர்மாவில் ராணுவ அடக்குமுறை நடந்தபோது பொதுமக்கள் இதே போன்று MMS மூலமாக தகவல்களை வெளியிட்டனர் என்று கேள்வி பட்டிருக்கிறேன்!! :-)
புறாவின் காலில் செய்திக் கடிதத்தைக் கட்டி அனுப்புவோமா?
//இதெல்லாம் செய்தால் செய்திகள் வெளியே கசியாது என்று தப்பு கணக்கு போட்டுவிட்டது சீனா! //
அதானே.. நம்ம ஜடியா புயல்..ஃமைபிரண்டு இருக்கும்போது,சீனா எப்டி இப்டி தப்புக்கணக்கு போடலாம்???
//எம்.எம்.எஸ், ஈமெயில் மூலமாக வெளிநாட்டவருக்கு அனுப்பி அவரை அப்லோட் பண்ண சொல்லலாமே! நான் சொல்றது சரிதானே! ;-)//
சூப்பர் ஜடியா,,,:)))
திபேத் போராளி ஃமைபிரண்டு ..வாழ்க வாழ்க.,. (மலேஷியாவிலிருக்கும்...சீன ஏஜண்ட்டுகள் இதைக் கவனிக்கவும்).
//எம்.எம்.எஸ், ஈமெயில் மூலமாக வெளிநாட்டவருக்கு அனுப்பி அவரை அப்லோட் பண்ண சொல்லலாமே! நான் சொல்றது சரிதானே!//
என்னமா யோசிக்கிறாய்ங்கப்பா...
[சும்மா சொல்லப்படாது கொஞ்சம் இருக்குதுப்பா - அட அறிவ சொன்னேம்பா...:)))))]
enna solla. varuthamalikkum vishayam. நானும் புதுசா கடை திறந்து இருக்கேன் அப்படினு சொல்லிகிறேன்!
//உண்மையான விபரங்கள் பத்திரிக்கைகளில் வராது. இது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும், உண்மையில் என்ன நடந்தது என்று மக்களுக்கு சொல்லுவதற்கு ஏதாவது ஒரு மீடியம் தேவைப்படும்//
இது நம்ப நாட்டுக்கும் பொருந்தும்... அரசியல் எரிமலை அடக்கிக் கொண்டு கொதிக்கிறது. எவ்வளவு நாள் தாங்கும் என்று பார்ப்போம்...
Post a Comment