Wednesday, March 26, 2008

சந்தோஷ் சுப்ரமணியம் டவுன் டவுன்!

அழகான ஒரு குடும்பம்; பாசமான சகோதரர்கள்; அக்கறை காட்டும் பெற்றோர்கள்; கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள்; உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள அருமையான நண்பர்கள். எல்லாம் இருந்தும் ஒருவனுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. ஒரு பென்சில் கேட்டால் பார்கர் பேனாவை வாங்கிக் கொடுப்பார் தந்தை. மிதிவண்டி கேட்டால் மாருதி வண்டி வாங்கி தருவார். மிட்டாய் கேட்டால் உயர்ரக சாக்லேட் வாங்கி தருகிறார். மற்றவர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட தந்தை கிடைக்க மாட்டாரா என்று ஏங்கும் நிலையில் இவன் ஒருவன் எப்படி இந்த சூழ்நிலையிலுந்து தப்பிப்பது என்று யோசிக்கிறான். வாழ்க்கையில் தன் தொழில் மற்றும் வாழ்க்கை துணை; இவை இரண்டும் தானாகவே தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கிறான். தந்தை சொல் தட்டாத மகன் இவன். தன் லட்சியத்தை அடைகிறானா அல்லது அலட்சியப் படுத்தப்படுகிறானா? இதுதான் பொம்மை வீடாக (பொம்மரில்லு) தெலுங்கு சினிமாவில் அலங்கரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.

மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்கு படங்களை விஜய் ரீமேக் செய்து நல்ல பெயரை திருடிக்கொண்டிருப்பது போல் சித்தார்த் நடிக்கும் தெலுங்கு படங்களை அப்படியே காப்பியடித்து "ரீமேக்" ரவி பாஸ் மார்க் வாங்கிக்கொண்டிருக்கிறார். ஜெயம், M குமரன் S/O மகாலெட்சுமி மற்றும் சம்திங் சம்திங் மட்டுமே ரவியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளையும் நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது (மழை படம் விதிவிலக்கு). தமிழில் ஒரிஜினலாக தயாரிக்கப்பட்ட தாஸ், தீபாவளி மற்றும் இதயத்திருடன் எல்லாமே தோல்வியை தழுவிய காரணங்கள் என்னவென்று இப்போது புரிந்திருக்கும்.

அசல் படத்துக்கும் அண்ணன் ராஜாவின் படத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்னவோ?

ராஜாவின் இயக்கத்தில் வெளியாகும் எல்லா படங்களும் ஒரிஜினல் தெலுங்கு படத்தை அப்படியே 100% காப்பியடிக்கப்பட்டிருக்கும். படத்தின் ஹீரோவை தவிர்த்து (அதுக்குதான் தம்பி ரவி இருக்காரே) மற்ற அனைத்து நடிகர்களும் முடிந்த வரை அந்த அசல் படத்தில் நடித்த நடிகர்களையே நடிக்க வைக்க முயற்ச்சிப்பார்.. ஹீரோயின் உட்பட.

அப்படியே அந்த துணை நடிகர்கள் நடிக்க இயலவில்லையென்றால் அவர் என்ன செய்வார் தெரியுமா? அதே போல முகச்சாயல் கொண்ட நடிகர் நடிகைகளை தேடி கண்டுப்பிடிப்பார். சம்திங் சம்திங்கில் மல்லிகா, ரீச்சா பல்லோட், பிரபு எல்லாம் தெலுங்கில் நடித்த நடிகர்களின் முகச் சாயல் அல்லது உடலைமைப்புக்கு ஏற்ற வாரே அமைந்திருக்கும்.

அசல் படத்தை விட ரீமேக் படம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுக்கு அவருடைய அடுத்த ட்ரிக் ஒரு காலத்தில் மிக பிரபலாமாக இருந்த ஸ்டார் இப்போ வெள்ளித்திரையில் இல்லாதவரை நடிக்க வைக்க முயற்ச்சிப்பது. M குமரனில் நதியா; சந்தோஷ் சுப்ரமணியத்தில் கௌசல்யா.

நடிகர் நடிகை தேர்வு முடிந்துவிட்டது. அடுத்து டெக்னிகள் க்ரூஸ் (technical crew) தேர்வு. இது ரொம்பவும் சுலபம். புதுசாக ஒருவரை தேட தேவையில்லை. தெலுங்கு படத்தில் வேலை செய்த அத்தனை பேரையும் அல்லேக்கா தூக்கி மெட்ராஸ்க்கு கொண்டு வந்திடுவார். கேமராமேன்ல இருந்து, இசையமைப்பாளர் வரை அனைவரையும் அள்ளிக்கொண்டு வந்திடுவார்.

இசை என்றதும் இந்த துறையை பற்றியும் பேச வேண்டும். தெலுங்கில் இசையமைத்த இசையமைப்பாளரையே தூக்கிட்டு வந்துவிட்டதால் பாடல்களின் இசையில் ஒரு மாற்றமும் இருக்காது. படத்தில் ஒரு பாடலை தவிர்த்து மற்ற எல்லா பாடல்களும் அதே இசையில் இருக்கும். சம்திங் சம்திங்கில் கோழி வெடைக்கோழி பாடல் மட்டுமே அசல். அதே போல் சந்தோஷ் சுப்ரமணியத்தில் எப்படி இருந்த என் மனசு என்ற பாடல் மட்டுமே அசல். பாடல்களே மாறாமல் இருக்கும்போது பாடகர்கள் மட்டும் மாறிடுவாங்களா என்ன?

இவ்வளவு நேரம் சொன்ன மேட்டர்களாவது பரவாயில்லைங்க. இதெல்லாவற்றையும் விட இன்னொரு பெரிய ஒற்றுமை என்னன்னா படத்தில் வர்ற காஸ்டியூம்ஸ், அவர்களது ஆடைகள் கூட மாறாமல் இருப்பதுதான். அசலில் ஹீரோ என்ன உடை போட்டிருந்தாரோ, அதேப்போல உடை டிசைக்ன் செய்து தமிழில் ரவி அணிந்திருப்பார். படத்தின் கதாநாயகியும் கூட. ஒரே மாதிரி உடை படத்தின் கதைக்கு தேவையான ஒன்று என்று நீங்கள் நினைத்தால், இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகணும். அந்த உடையின் வர்ணம் கூடவா ஒன்றாக இருக்க வேண்டும்? இது என்ன சீருடையா? சம்திங் சம்திங் பாடலை பாருங்கள். கதாநாயகன்/நாயகியின் உடைகளை!

ரீமேக் பண்ணுவது தப்பில்லைங்க. நம்மில் சிலர் இன்னமும் பழைய படங்களை பார்ப்பதில்லை. கேட்டால் "நாங்க இந்த காலத்து தலைமுறை. கருப்பு வெள்ளை படங்கள் எல்லாம் ஒரு படமா?"ன்னு கேட்குறாங்க. நம்மில் பலருக்கு வேற்று மொழி புரியாததால் சப்டைட்டல் இல்லாத படங்களை பார்க்க இயலாது. என்னைப்போல் சிலர் சப்டைட்டல் இல்லாமலும் பார்த்து அவங்க அசைவை வைத்து இந்த டயலோக் பேசியிருக்கலாம் என யூகித்து படத்தை பார்ப்பவர்களும் இருக்காங்க. ஆனால், பழைய படங்களையும், வேற்று மொழி படங்களையும் ரீமேக் செய்வதால், நல்ல நல்ல கதைகள் மக்களிடம் போய் சேர்கிறது. ஆனால், 100% காப்பி & பேஸ்ட் பண்ணுவதால் என்ன புண்ணியம்? அதுக்கு அசல் படத்தை டப் பண்ணியிருக்கலாமே!

ரீமேக் செய்வதன் முக்கிய நோக்கம் மக்களிடம் ரீச் ஆகாத கதையை (நல்ல கதை கரு கொண்ட படங்கள்) மக்களிடம் அதுவும் இப்போது உள்ள காலக்கட்டத்தில் நடந்திருந்தால் எப்படி இருக்கும் என எடுத்து கொடுத்தல்தான். ஆங்கில படம் தமிழில் ரீமேக் பண்ணும்போது, இந்தியாவில் இதே மாதிரி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என இயக்குனர் யோசித்து இயக்குவதுதான்.அங்கே இருக்கும் ஆனால் இங்கே இல்லாத ஒன்னை இருக்குன்னு சொன்னால் அது மக்களிடம் முழுமையா போய் சேராது. என்னடா இவன் ரீல் விடுறான் எனத்தான் மக்கள் எண்ணுவார்கள்! பழைய படங்களை ரீமேக் பண்ணும்போது அது இப்போது உள்ள காலக்கட்டத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என எண்ணி அதுக்கேற்ற மாதிரி திரைக்கதையை அமைப்பதில்தான் ஒரு இயக்குனரின் சாமர்த்தியம் அறிய முடியும். உதாரணத்துக்கு, பில்லா 2007 பழைய பில்லா கதைதான். ஆனால், டெக்னாலஜி மற்றும் பல அம்சங்கள் இப்போதுள்ள காலக்கட்டத்தில் மாறியுள்ளது. அதனையும் மாற்றினால்தான், படம் சிறப்பாக இருக்கும்.

ஒரே காலக்கட்டத்தில் வெளியாகிய வேற்று மொழி படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் பண்ணும்போது என்ன மாற்ற முடியும்? எல்லாமே ஒன்றுதானே? என்று கேட்கலாம். ஆனால், இதுதான் ஒரு இயக்குனரின் நிஜமான சேலேஞ் (challenge). எத்தனையோ விஷயங்கள் மாற்றலாம். கதை ஒன்றாக இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு வெரைட்டி கிடைக்கும். அசலை விட இது பெட்டர் என்ற பெயர் எடுப்பதே ஒரு ரீமேக் படத்தின் நிஜமான வெற்றி.

ஒரு இயக்குனர் அவர் சொந்த படத்தையே இன்னொரு மொழியில் ரீமேக் பண்ணும்போது பல மாறுதல்கள் செய்வார். அவர் செய்வது பெரும்பாலும் அசல் படத்தில் அவர் செய்த பிழைகளை திருத்தி மென்மேலும் மெருகேற்றுவார். இதுவே மற்றவரின் கதையை வாங்கி இன்னொரு இயக்குனர் ரீமேக் செய்யும்போது அவர் அதை சரியாக, ஆழமாக ஆய்வு செய்யவில்லையென்றால் அவருக்கு அந்த பிழைகள் தெரியாது. திருத்தவும் முடியாது. அப்படி திருத்தாமல் காப்பியடிக்கும் ஒரு படம் ஹிட்டாகி பெயர், புகழ் கிடைத்தால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி நிழைக்குமா? அதில் சந்தோஷம்தான் இருக்குமா? இது இன்னொருவரின் உழைப்பும், வேர்வையும் ஆச்சே!

100% ரீமேக்கை விட டப்பிங் படங்களுக்கு ஆதரவு போய் சேர்வது நல்லது என்பது என் கருத்து. உங்களுக்கு?

39 Comments:

said...

ம்ம்...இந்த பதிவின் கருத்தில் சிறிய சந்தேகம் எனக்கு...ரீமேக்கே தப்பா!? இல்ல சித்தார்த் நடிக்கும் படங்களை ரீமேக் செய்வது தப்பா!? ;)))

ஆனாலும் அண்ணனும் தம்பியும் கொஞ்சம் ஓவராக தான் பண்ணுறானுங்க ;)

said...

hm aamam jayam ravi & raja appadiye cut& pastedhan seikirargal.but idhai ellam vida sirandha comedy "pokiri"dhan.title mudhal anaithum copy.vijay romba over-aaga magesh bhabuvin manerism ellam copy seidhirupar(ex dialogue delivery in the very same way magesh speaks).ada magesh scene-la edathula mooku urunjuraro adhe idathula vijay-um adhai seira alavu copy :-))

sorry not able to type in tamil font as typing this from work place

said...

\\ கோபிநாத் said...
ம்ம்...இந்த பதிவின் கருத்தில் சிறிய சந்தேகம் எனக்கு...ரீமேக்கே தப்பா!? இல்ல சித்தார்த் நடிக்கும் படங்களை ரீமேக் செய்வது தப்பா!? ;)))
//
வழிமொழிகிறேன்.. எத்தாம் பெரிய பதிவு.. அங்க அங்க விட்டு விட்டு படிச்சிட்டேன்ப்பா..

said...

---தெலுங்கில் நடித்த நடிகர்களின் முகச் சாயல் அல்லது உடலைமைப்புக்கு ஏற்ற வாரே அமைந்திருக்கும்.---

அட... ஆமா!

ஆனால், இந்தப் படத்தில் சித்தார்த் ஒல்லியாக, பயந்த சுபாவத்துக்கு பொருத்தமாக இருப்பார். ஜெனீலியாவுடன் ஜோடிப் பொருத்தமும் சரியாகவே இருக்கும்.

தமிழில் அடியாள் தோற்றத்துடன் ஆஜானுபாகுவாக இவர். பாடல் காட்சிகளைப் பார்த்தால் அண்ணன் - தங்கை போல் தெரிகிறது.

said...

ஹிஹி, இவ்ளோ திறனாய்வு செஞ்சு நீ பதிவு போட்டாலும் கரக்டா பாயிண்டை புடிச்சு இருக்கார் பாரு கோபி. :p

சந்தடி சாக்குல சித்து படமா வேற போட்டு தள்ளியாச்சு போலிருக்கே! நீ நடத்து மா! :))

said...

டப்பிங்க் படங்கள் பட்டய கிளப்புது. அதுலயும், காமடியா டயலாக் எழுதறாங்க பாரு, சூப்பர். :))

said...

இதெல்லாம் நம்மளைசிரிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள் :)

//(technical cruews)/
should be crews

said...

//இந்த பதிவின் கருத்தில் சிறிய சந்தேகம் எனக்கு...ரீமேக்கே தப்பா!? இல்ல சித்தார்த் நடிக்கும் படங்களை ரீமேக் செய்வது தப்பா!? ;)))//

repeatu sollikiren

said...

:))


இவனுங்க பொம்மரில்லு-வ எப்படியெல்லாம் சொதப்பப் போறாங்களோ!!!

said...

யக்கா .. நீங்க போக்கிரி பாக்கலையா? மகேஷ்பாபு போட்ட காச்ட்யூம்ஸ் அப்டியே துவைக்காமலே அண்ணன் விஜய் போட்டிருப்பார். அது கூட பரவால்ல.. ரெண்டுமே பிரபுதேவா படம்.

ஆனா இந்த ஜெயம் கம்பனி பசங்க ரொம்ப தான் பண்றானுங்க... டப்பிங் பண்ணி ரிலிஸ் பண்ண வேண்டியங்க எல்லாம் படம் புடிக்க வந்தா இதான் நெலமை.இவனுங்க படத்த எலலாம் திருட்டு விசிடில தான் பாக்கனும்.

said...

தீபாவளி தோல்விப்படம் என்பதை கடுமையாக வன்முறையாக கொடுமையாக ஆணித்தரமாக எதிர்க்கிறேன்.

பாவனா தோன்றி நடித்த அந்த படம் எங்க ஊர்ல 100 நாள் ஓடுச்சு.
இதெல்லாம் தெரியாம எப்படி நீங்க சொல்லலாம்.

said...

//இவனுங்க பொம்மரில்லு-வ எப்படியெல்லாம் சொதப்பப் போறாங்களோ!!!////

ரிப்பீட்டேய்!!!
பொம்மரிலு நான் பெரிதும் விரும்பி ரசித்த படம்!!
இந்த படத்தை என்ன மாதிரி சொதப்ப போகிறார்களோ என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது.

மத்தபடி நீங்க சொன்ன விஷயங்கள் எல்லவற்றிலும் 100% ஒத்து போகிறேன்.
கேமரா ஆங்கிள் கூட அப்படியே பழைய படம் மாதிரி பண்ணிட்டு எப்படி வெட்கம்கெட்ட தனமா டைரக்டர் என்று தன்னுடைய பெயரை போட்டுக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை!!
ஒரிஜினாலிடி இல்லாத காரணத்தாலேயே எனக்கு விஜயின் மேல் மரியாதையே வர மாட்டேன் என்கிறது.
:-)

sad!

said...

//ம்ம்...இந்த பதிவின் கருத்தில் சிறிய சந்தேகம் எனக்கு...ரீமேக்கே தப்பா!? இல்ல சித்தார்த் நடிக்கும் படங்களை ரீமேக் செய்வது தப்பா!? ;)))//

same blood!!!

said...

//100% ரீமேக்கை விட டப்பிங் படங்களுக்கு ஆதரவு போய் சேர்வது நல்லது என்பது என் கருத்து. உங்களுக்கு?//

100% agrees with you.

Saw BOMMARILU at Vishaka on its 100th day at Sangam Sarath Theatre. while seeing the movie itself I thought that film will definetely capture the attention of telugu-to-tamil remake movie makers. Anyhow, dubbing of the film would have certainly been more apt and a guaranteed success given the youthful charisma of Sidharth-Jenilia duo.

said...

இந்த பதிவை நான் கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன்...

இதுல போட்டிருக்குற தெலுகு படமெல்லாம் பிரைட்டா இருக்கு. தமிழ் படமெல்லாம் கொஞ்சம் டல்லா இருக்கு. இதுக்கு மேல என்ன வித்தியாசம் வேண்டும்?

said...

ராஜா ரீமேக் செய்த படங்களிலெல்லாம் கதாநாயகிகளை கூட மாற்ற மாட்டார். அவ்வளவு நல்லவர் ;)

said...

ரவிக்கு பதிலா தமிழ்ல சித்தார்த் நடிச்சிருந்தா இருந்தா இதே தலைப்புதான் வெச்சு இருப்பீங்களா?

பதிவ படிச்சுட்டு கடிக்க வரேன்

said...

//Collapse comments

கோபிநாத் said...
ம்ம்...இந்த பதிவின் கருத்தில் சிறிய சந்தேகம் எனக்கு...ரீமேக்கே தப்பா!? இல்ல சித்தார்த் நடிக்கும் படங்களை ரீமேக் செய்வது தப்பா!? ;)))
.//


ரீப்பிட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))

said...

@கோபிண்ணா:

ஹீஹீ.. இப்படி பப்ளிக்கா கேட்கப்படாதுண்ணா. :-P
-----------------------------------
@வருத்தப்படாத வாலிபன்:

ரவியை விட இன்னும் மோசமான நிலை கண்டிப்பா விஜய்க்குதான். எப்படித்தான் டாக்டர் பட்டமெல்லாம் கொடுத்தாங்களோ தெரியல. :-(
-----------------------------------
@முத்துக்கா:

கடைசி வரை பதிவு படிக்கலை போல. :-P
-----------------------------------
@பாபா:

ம்ம்.. அந்த கூத்தையும் பார்க்கத்தானே போறோம்.. :-(
----------------------------------
@அம்பிண்ணா:

இப்படி பட்ட போஸ்ட்ல படத்தை போட்டாத்தான் யாரும் படம் பார்க்காமல் போஸ்ட்டை ரசிச்சிட்டு போயிடுவாங்க.. ஹீஹீ

ஹாஹா.. டப்பிங் படத்தை பார்க்கும்போது அதுல வர்ற டயலோக் அந்த ரைமிங்கு ஏத்த மாதிரி வரணும்ன்னு போடுறது கேட்க உண்மையிலேயே காமெடிதான். ;-)

said...

@தினேஷ்:

திருத்திட்டேன்னா. :-)

ஆஹா.. நீங்களும் ரிப்பீட்டே போட்டுட்டீங்களா? ;-)
----------------------------------
@ அறிவுஜீவி:

கெடுத்துட்டாங்களே தலைவா... :-(
----------------------------------
@சஞ்சய்:

அண்ணே, தெலுங்கு போக்கிரி டைரக்டர் பிரபுதேவா இல்ல. அவர் பூரி ஜெகன்நாத். ஆனால், அச்சு அசல் அப்படியே மகேஷின் நடிப்பை ஃபாலோ பண்ண விஜயை என்னன்னு சொல்ல?
----------------------------------
@தம்பி:

ஆஹா.. பாவனான்னு எங்கேயாவது கூக்குரல் கேட்ட மாதிரி இருந்துச்சே! எங்கே? :-P

அது துபாய்ல 100 நாள் ஓடுனதுக்கு ஒரே ஒரு காரணம்தான். கதிரு கதிருன்னு (ரெண்டு பேர் இல்ல) ஒருத்தரு துபாய்ல இருந்துக்கிட்டு பட டிக்கேட்டு டப்பா நிறைய வாங்கி பார்த்தாராம். அவரு மத்த ஊருல எல்லாம் போய் பார்க்காததுனால, படம் வெளியாகிய மருநாளே பொட்டிக்குள்ள போச்சாம். :-P

said...

@விஞ்ஞானி:

நீங்க சொன்னது என்னைக்கு தப்பா ஆகியிருக்கு? நீங்க சொன்ன கருத்துக்கு நான் ஒரு ரிப்பீட்டேய் போட்டுக்கிறேன். :-)
-----------------------------------
@சவுண்ட் பார்ட்டி:

O+. நீங்களுமா? ;-)
-----------------------------------
@பாரதிய நவீன இளவரசன்:

ஆமாங்க. சித்து - ஜெனிலியா ஜோடி பின்னிட்டாங்க. ரவி என்ன செஞ்சிருக்காரோ! :-(
-----------------------------------
@வெட்டிண்ணே:

அண்ணே, தெலுங்கு படம் லைட் போட்டு எடுத்திருக்காங்க. தமிழ் படம் லைட் போடாமல் எடுத்திருக்காங்க போல.. அதான் ப்ரைட்டா இல்லாமல் போச்சுன்னு நினைக்கிறேன். எதுக்கும் சிவிஆர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குவோமா? ;-)

ஆமா ஆமா.. நீங்க ரெண்டு தடவை சைட் அடிக்கலாம்.. அதானே? :-))
----------------------------------
@விவசாயி:

ஹீஹீ.. இப்படியெல்லாம் கேட்டால் இப்படித்தான் தலைப்பு வைப்பேன் என்று பொய் சொல்லுவேனே. :-P

said...

ஹாஹா கலக்கல்

'நீ ஒஸ்தாவண்டே நா ஒத்தண்டேனா ' - தெலுங்குல பாத்துட்டு தமிழ்ல பாக்க சகிக்கலை

சித்தார்த்த பாத்துட்டு ஜெயம் ரவிய பாத்தா எருமை மாடு மாதிரி தெரியுது.


/
கோபிநாத் said...

ம்ம்...இந்த பதிவின் கருத்தில் சிறிய சந்தேகம் எனக்கு...ரீமேக்கே தப்பா!? இல்ல சித்தார்த் நடிக்கும் படங்களை ரீமேக் செய்வது தப்பா!? ;)))

ஆனாலும் அண்ணனும் தம்பியும் கொஞ்சம் ஓவராக தான் பண்ணுறானுங்க ;)
/

:)))))))))))))
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
கலக்கற கோபி

said...

/
SanJai said...

யக்கா .. நீங்க போக்கிரி பாக்கலையா? மகேஷ்பாபு போட்ட காச்ட்யூம்ஸ் அப்டியே துவைக்காமலே அண்ணன் விஜய் போட்டிருப்பார்.
/

தமிழ்லதான்பா ப்ரபு தேவா டைரக்சன்

அந்த க்ளைமாக்ஸ் சண்டைல அசின் இலியானா போட்டிருந்த அதே ரெட் ஸ்கர்ட் போட்டிருப்பா

அட்லீஸ்ட்................


















வேற காஸ்ட்யூம் போட்டிருக்கலாம்னு சொல்ல வந்தேன்

:(

said...

ராஜா அன்ட் கோ வ அடிச்சி தொவச்சி அலசி காயப்போட்டு இருக்கீங்க. அண்ணனும் தம்பியும் சேர்ந்து ரொம்பத்தான் படுத்துறாங்க.

said...

////கோபிநாத் said...
ம்ம்...இந்த பதிவின் கருத்தில் சிறிய சந்தேகம் எனக்கு...ரீமேக்கே தப்பா!? இல்ல சித்தார்த் நடிக்கும் படங்களை ரீமேக் செய்வது தப்பா!? ;)))////


?!?!?!?!?!?

said...

////100% ரீமேக்கை விட டப்பிங் படங்களுக்கு ஆதரவு போய் சேர்வது நல்லது என்பது என் கருத்து. உங்களுக்கு?////


உங்க கருத்தேதான்(ஆனாலும் ரீமேக் படம் பார்ப்போம்)

said...

//தம்பி said...
தீபாவளி தோல்விப்படம் என்பதை கடுமையாக வன்முறையாக கொடுமையாக ஆணித்தரமாக எதிர்க்கிறேன்.

பாவனா தோன்றி நடித்த அந்த படம் எங்க ஊர்ல 100 நாள் ஓடுச்சு.
இதெல்லாம் தெரியாம எப்படி நீங்க சொல்லலாம்.//

வழிமொழிகிறேன், எங்க ஊர்ல 200 நாள் (டிவிடியில்) ஓடிச்சு

தல கோபியின் சந்தேகம் தான் நமக்கும். சித்துவின் படங்கள் ரீமேக்குவது தப்பா?

said...

மைடியர் மார்த்தாண்டன் அப்படீன்னு ஒரு தமிழ் படம் வந்தது தெரியுமா. . .?

அந்தக் கதை தான் பொம்மரில்லு . . .

(பார் யுவர் இம்பர்மேஷன்)

said...

Yeah, My opinion is that Vijay and Jayam Ravi would do better justice and also more money if they dub Mahesh Babu's and Siddharth's movies respectively.

I saw Bommarilu in Telugu with Sub-T and loved the movie. Hope Ravi doesn't do the over acting (he did in SSUE) and spoil the character!

LKS

said...

மறுபடியும் சித்து

மறுபடியுமா முருங்கை மரம்?
ஃமைபிரண்டு???:P:P:P

எனக்கென்னவோ சித்து பையன் போட்டோ வித் திரிஷா பாத்தா ஏதோ பெண்ணுக்கு ஆண் வேஷம் போட்ட மாதிரி இருக்கு...

said...

இதே கருத்தை ராஜாவிடம் கேட்டபோது அவர் என்ன சொன்னார் தெரியுமா?? மக்கள் ரசித்து பெரும் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்யுற வேலை ரொம்ப கஷ்டமாம். ஜெயம், குமரன், உனக்கும் எனக்கும் போன்ற படங்கள் வெற்றி பெற்றதுக்கு காரணம் சூப்பரா ஹிட் ஆனா படத்தை தமிழ்ல எப்படி தான் எடுத்திருக்காங்கனு பார்க்க தான் மக்கள் வருவாங்க.

said...

//@சவுண்ட் பார்ட்டி:

O+. நீங்களுமா? ;-)//

அய்யோ, நிஜமாவேதான் :-)

said...

Apa kaphar! ...யக்கா ... உட்கார்ந்து யோசிப்பீங்களோ? மிகப் பெரிய ரிசர்ச் பண்ணி இருக்கீங்க.. இதுக்கு உருப்படியா வேற ரிசர்ச் பண்ணி இருந்து இருக்கலாம். ராஜா இதை தெரிந்து செய்தாரோ இல்லை அதுவே இயல்பாய் அமைந்ததோ தெரியலை.

said...

இருந்தாலும், இப்பிடி ஓவரா சித்தார்த்துக்கு ஓ போடக் கூடாது :) ரீமேக்கோ, டப்பிங்கோ...பாக்குற மாதிரி படம் எடுத்தா வரவேற்கலாம். சொதப்பினாதான் ஊத்திகிடுதே!

//மைடியர் மார்த்தாண்டன் அப்படீன்னு ஒரு தமிழ் படம் வந்தது தெரியுமா. . .?

அந்தக் கதை தான் பொம்மரில்லு . . .//

அப்போ, இந்த ரெண்டுக்கும் அப்பன், எடி மர்ஃபி நடிச்ச 'கமிங் டு அமெரிக்கா' :)

said...

அப்பா, எப்படி பட்ட திறனாய்வு, தெலுங்கு படத்தை தமிழ்படுத்தும் போது கதாநாயகனை மட்டும் அப்படியே மாத்தி விட்டு தமிழ் நடிகரை (அதாங்க விஜய், ரவி) இவர்களுடைய உருவத்தை அப்படியே மாற்றி போட்டு விடும் தொழில்நுட்பம் இருப்பது இவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன், இருந்தால் இவர்களுக்கு வேலை இன்னும் சுலபம், அல்லவா? - நாகூர் இஸ்மாயில்

said...

யக்கா, என்ன ஒரு திறனாய்வு யன்னா ஒரு திறனாய்வு.. கலக்கல்..

//ம்ம்...இந்த பதிவின் கருத்தில் சிறிய சந்தேகம் எனக்கு...ரீமேக்கே தப்பா!? இல்ல சித்தார்த் நடிக்கும் படங்களை ரீமேக் செய்வது தப்பா!? ;)))//
ரிப்பீட்டு
ஜி டாக்குல நீங்க இல்லாத காரணத்துனால் இங்க இப்படி கேட்க வேண்டியாதாப்போச்சி.. :((

said...

சந்தோஷ் சுப்ரமணியம் படம் பார்த்தேன். யப்பா! என்னமா ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க! நீங்க சொன்னது நூறு சதவீதம் சரி. ராஜா மூணு படம் எடுத்திருந்தாலும் தன்னை டைரக்டர் என்று சொல்லிக்கவே கூடாது. விஜய் டிவில மதன் ராஜாவ பார்த்து ரீமேக் படம் எடுக்கறது அவ்வளவு சுலபம் கிடையாதுன்னு ராஜவ பரட்டுனதை என்னால தாங்க முடியல.

ராஜாவை பொறுத்த வரை அவர் சரக்கு அவ்வளோதான்னு நினைக்கிறேன். ஆனா இது ரொம்ப பேருக்கு தெரியாது. இப்போ வர தமிழ் படத்தையே ரொம்ப பேர் பார்க்கறதில்லை, போம்மரில்லுவ பார்த்தவங்க மிகச் சில பேர் தான் இருப்பாங்க. அதான் இவங்களுடைய பலம். என்னை கேட்டா 'அம்மா நானா ஒ தமிழ் அம்மை' ரவி தேஜா, 'நுவொஸ்டானண்டே நேநொத்தன்டானா' + 'பொம்மரில்லு' சித்தார்த் இவங்க நடிப்புல 50% தான் இருக்கும் ஜெயம் ரவியின் நடிப்பு.

ஆனா இவங்களை பொறுத்தவரை படம் ஓடுது. பேரும், புகழும், பணமும் கிடைக்குது. வேற என்ன வேணும் இவங்களுக்கு? நீங்க சொன்ன மாதிரி டப்பிங் படம் எடுத்தா ஒரு வாரம் கூட ஓடாது. நம்ம ஊர்ல டப்பிங்ல எவ்வளவு சீரியஸான படம் பார்த்தாலும் காமெடியா தான் இருக்கும். நல்ல படம் ஒரிஜினாலிட்டியோட வேணும்னா போயி பாலா, அமீர், பாலாஜி சக்திவேல் இவங்க படம் எல்லாம் பாருங்க.

Anonymous said...

tholi,though i cudnt read wat u wrote but by lookin at those pics,i know its all bout ravi n his bro remakin sidz movie.i suggest,u b producer(since u workin nw) n ill be d director n v remake ATTA in tamil(wit the original telugu actor),yenna naan sollerethe??hahahaha

said...

அமிதாப் இந்தியில் நடித்த பெரும் வெற்றி பெற்ற படங்களின் ரீமேக்கில் ரஜினி நடித்து பெயர் வாங்கியிருப்பார்.

மஜ்பூர் - நான் வாழவைப்பேன் (இதில் பிரான் - எனது அபிமான நடிகர் - நடித்த பாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார்)
டான் - பில்லா
தீவார் - தீ
திரிசூல் - மிஸ்டர் பாரத்

விஜய் ரஜினியை தான் பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன்.