Monday, December 18, 2006

139. ஜூன் போனால் ஜூலை காற்றே.. கண் பார்த்தால் காதல் காற்றே!!

ஜீவாவின் உன்னாலே உன்னாலே பாடல்கள் வெளியீடு கண்டுவிட்டது. நீங்கள் கேட்டுவிட்டீர்களா?

ஜீவா ஒரு ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகினால், அவர்களின் படங்கள் செதுக்கி வச்ச சிற்ப்பங்களை போல் இருக்கும்.. காட்சிகள் ஒவ்வொன்றும் ஓவியங்களாக இருக்கும். உதாரண்த்திற்க்கு PC ச்ரிராமின் வானம் வசப்படும், KV ஆனந்தின் கனா கண்டேன். அந்த வரிசையில் ஜீவா.

12B, உள்ளம் கேட்குமே..இரண்டிலுமே வெவ்வேறு கதைகளை கொடுத்தவர்.

12B-இல் ஒரு சில விநாடிகளால் ஒரு மனிதனுக்கு ஏற்ப்பட்ட மாற்றங்களை அழகாக படமாக்கினார். ஆனால், இந்த படம் மக்களிடம் முழுமையாக போய் சேரவில்லை. பலருக்கு இந்த கதை புரியவில்லை. (அ ஆ போல் இரண்டு கேரக்டருக்கும் வெவ்வேறு உடை கொடுத்திருந்தால் படத்தின் கதை சுலபமாக ரீச் ஆகியிருக்கலாம். :-P) ஆனாலும், 2001-ஆம் ஆண்டின் அதிகவிற்ப்பனையான ஆடியோ கேசட்/ சிடி 12Bதான்..

ஒரு இடைவேளைக்கு பிறகு இவரின் இரண்டாவது படைப்பாக வெளியிட்டது உள்ளம் கேட்குமே. இவர் அறிமுகப் படுத்திய ஷாமை இந்த படத்திலும் நடிக்க வைத்தார். அசின், பூஜா மற்றும் ஆர்யாவை அறிமுகப்படுத்தி, லைலாவையும் நடிக்க வைத்தார். ஒரு நட்பின் இலக்கணம்ன்னு கதைக்கரு சொன்னவர், படத்தை வெளியிட ஏனோ தாமதப்படுத்தினார். அசின், பூஜா, ஆர்யா மற்ற படங்களில் பூக் ஆகி, அந்த படங்கள் வெளியாகி இவர்கள் பரப்பாக பேசப் பட்ட நிலையில், இந்த படம் ரிலீஸ் ஆனது. பாடல்கள் ஏற்க்கனவே ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பு பெற்ற நிலையில், படத்தை பார்க்க ஆர்வமும் நிறையவே இருந்தது.

இவர் இவரை காதலிப்பாரோ? இல்லை அவர் இவரை காதலிப்பாரோ? அவர் இவரை வேண்டாம்ன்னு சொல்லிவிடுவாரோ? ஏன் இவர் அழுகிறார்? கதை இப்படி இருக்குமோ?ன்னு படத்தை பார்க்குமுன்னேயே நிரைய கேள்விகளை எழுப்பியது. படம் பார்த்தபோது இப்படியொரு படமா? ஆஹா! அருமை அருமை!ன்னு சொல்லவைத்த படம். நண்பனின் திருமணத்தில் கல்லூரி நண்பர்கள் ஒன்று கூடும்போது பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக கலைவது அந்த படத்தின் ஹைலய்ட். இதை பார்க்கும்போது நம் நண்பர்களை நினைவு கூர்ந்து நம்மையும் பின்னே எழுத்து செல்கிறது.. ஈன்த படம் ஓரளவு ஓடினாலும், ஹிட் ஆகாதது வருத்தமே! ஆனாலும், நம்மளை போல் இளைஞர்களை இந்த படம் ரொம்பவே கவர்ந்ததென்று சொல்லாம். எனக்கும்தான்..

இவரின் இந்த தச்-தான் என்னையும் கவர்ந்தது. அதனாலேயே இவர் ஜூலை காற்றில் படத்தை இயக்கபோகிறார்ன்னு நியூஸ் வந்ததிலிருந்தே வேய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். தமிழக வரிவிலக்குக்காக இந்த படமும் உன்னாலே உன்னாலேன்னு பெயர் மாற்றம் கண்டது.

படத்தின் நாயகனாக மும்பை மோடல் வினயையும், நாயகிகளாக கஜோலின் தங்கை தனிஷா முகர்ஜியும் சாதாவும் நடிக்கிறார்கள். வினயும் தனிஷாவும் - அசின், ஆர்யா, ஷாமைபோல் பிரபலம் ஆவார்கலா இல்லையான்றது படம் வெளியானபிரகுதான் தெரியும்.. ஆனாலும், ஜீவா இவர்களை அழகாக ஷெதுக்கியிருப்பார்ன்னு நான் நினைக்கிறேன்.

படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது.மொத்தம் 6 பாடல்கள்.

1- ஹலோ மிஸ் இம்சையே - GV பிரகாஷ், அனுஷ்கா
பிரகாஷ் வெளி இயக்குனரிடம் பாடிய முதல் பாடல். விருவிருப்பான பாடல்.

2- இளமை உல்லாசம் - கிரீஷ், ஷாலினி
2 நிமிட பாடல்தான். நிறைய வாத்தியங்கள் இல்லாமல் இயற்றிய பாடல். நட்பினை உணர்த்தும் பாடல். ஆனந்தம் (12B), பூ போல்(மின்னலே) ரகம்.

3- ஜூன் போனால் - கிரீஷ், அருண்
படத்தின் ஹைலைக்ட் பாடல். காதலில் நடந்த சில ஊடல்களை நினைத்து பாடிய பாடல். இதை கேட்கும்போது மஞ்சல் வெயில் (வேட்டையாடு விளையாடு) கேட்பதுபோல் எனக்கு தோன்றுகிறது.

4- முதல் நாள் இன்று - கே.கே, மகாலட்சுமி ஐயர்
ராங் டே பசந்தியில் ரூபரூ பாடலை கேட்டதுண்டா? பாடலின் ஆரம்பம் அதேபோலவே இருக்கு. ஆனாலும் இது ஒரு காதல் டூயட். பாடல் முழுதும் கீதாரின் இசையை பிண்ணனிய்ல் கொண்டது.

5- முதல் முதலாக - கார்த்திக், கிரீஷ், ஹரிணி
படத்தின் தீம் பாடல். கார்த்திக் பாடுகிறார் என்றால் சொல்லவே வேண்டாம். பாடல் அருமை. "முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே.." என்ற வரி பட முழுதும் ஒலிக்கும்ன்னு நினைக்கிறேன்.

6- வைகாசி நிலவே - ஹரிசரண், மதுசிரி
காதல் படத்துக்கு பிறகு ஹரியின் குரலுக்கு பொருத்தமாக அமைந்த பாடல் இது. ஆனாலும், மதுச்ரி வரிகளை தப்பு தப்பாக உச்சரிப்பது வருத்ததை அளிக்கிறது.

ஆகமொத்ததில், உள்ளம் கேட்குமே அளவுக்கு இல்லைன்னாலும், பாடல்கள் ரசிக்கிர வண்ணமே இருக்கிறது மகிழ்ச்சி.

10 Comments:

said...

நல்ல விமர்சனம் மை பிரண்ட்.. இப்போது தான் பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன்..

said...

தமிழ்மணத்தில் நிறைய பேரின் பதிவுகள் வெளிவருகிறது என்று உங்களுக்குத் தெரியும்.. தலைப்புகளை கொஞ்சம் ஈர்க்கும் வகையில் கொடுத்தால் எல்லோரும் சுலபமாக நம்ம பக்கத்துக்கு வருவார்கள் மை பிரண்ட்..

இது என் ஆலோசனை மை பிரண்ட்..

c.m.haniff said...

Tnx for the info ;)

said...

என்ன பிரண்ட், ஆபீசுல வேலை நொக்க பிடிப்பாங்க போல.. ஒரு பதிவையும் காணல..

இது சும்மா விசாரிப்பு மற்றும் வருகைப் பதிவு பின்னூட்டம் தான் பிரண்ட்

said...

Dear Friend,
Wish you a Merry Xmas and a blessed newyear ahead!
-Deeksh

said...

//மு.கார்த்திகேயன் said...
நல்ல விமர்சனம் மை பிரண்ட்.. இப்போது தான் பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. //

இந்த கமெண்ட்ஸுக்கு நான் ரிப்லை எழுதும்போது அனேகமாக பாடலே உங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும். ஹீ ஹீ ஹீ!!!

said...

//தலைப்புகளை கொஞ்சம் ஈர்க்கும் வகையில் கொடுத்தால் எல்லோரும் சுலபமாக நம்ம பக்கத்துக்கு வருவார்கள் மை பிரண்ட்..//

ஒவ்வொரு பதிவிலும் என்ன எழுதுவது என்பதே ஒரு பெரிய தலைவலி.

இதுல தலைப்பையும் சுவாரஸ்யமாய் வைக்கனும்னா, அதுக்கும் டைம் எடுக்குமெ. பரவாயில்லையா??

said...

//c.m.haniff said...
Tnx for the info ;) //

You are welcome Haniff :-)

said...

// மு.கார்த்திகேயன் said...
என்ன பிரண்ட், ஆபீசுல வேலை நொக்க பிடிப்பாங்க போல.. ஒரு பதிவையும் காணல..
//

உண்மைதான்.. கையில் 3 ப்ராஜெக்ட்.. 10-ஆம் தேதிக்குள் எல்லாவற்றையும் முடிக்கனுமே! அதுனாலேதான்.

என்னுடைய மேலதிகாரையும் குற்றம் சொல்லமுடியாது! பாவம் அவர் என்ன பன்னுவார்? நான் இல்லைன்னா எல்லவற்றையும் அவர் ஒருவர்தான் செய்ய வேண்டும். அவர் ஒருவர்தான் அங்கே இஞ்சினியர்..

said...

//Dear Friend,
Wish you a Merry Xmas and a blessed newyear ahead!
-Deeksh //

Merry Christmas & Happy New Year to You too Deeksh. ;-)
Thanks for visiting me even I'm not here. :-)