Thursday, December 07, 2006

123. அலார்ம் க்லாக் (Alarm Clock)

நீங்க சின்ன பையனோ, வாலிபரோ, வயதானவரோ.. பள்ளி போரீங்களோ இல்லை வேலைக்கு போரீங்களோ! இல்லை வீட்டை கவனித்துக்கொள்ளும் அம்மணிகளோ!!! எல்லாருக்மே காலையில் அனுபவிக்கும் முதல் தொல்லை/ கஷ்டம் என்ன?

காலையில் தைமுக்கு எழுந்து பள்ளிக்கோ, ஆபிஸுக்கோ கிளம்புவதுதான். அதிலேயும் திருமணம் ஆன பெண்கள்ன்னா, இன்னும் சீக்கிரமா எழுந்திரிக்கனும்.. வீட்டு வேலை செய்துட்டு, காலை ப்ரேக்ஃபாஸ்ட் செய்து, பிள்ளைகளை கிளப்பிவிட்டு அவர்களும் வேலைக்கு கிளம்பனும்..

அப்பப்பா!!! இதை கேட்கும் போதே நமக்கு கண்ணை கட்டுது!!!!

எனக்கும் அப்படி பிரச்சனைகள் இருந்தது. எந்த கேம்பஸில் மாணவர்கள் இரவு சீக்கிரமா படுத்து காலையில் சீக்கிரமா எழுந்திரிக்கிறாங்க!!!! நான் மட்டும் என்ன விதி விலக்கா? ஆனால், இப்போ பிராக்டிக்கலுக்கு போகுறதுனால காலையில 6 மணிக்கெல்லாம் எழுந்திருக்கிறேன். நானே லேட்டா படுக்கனும்ன்னு நினைச்சாலும் என்னால், வெகு நேரம் முழிதிருக்க முடியலை.. எல்லாம், தைம்தேபல் போல பழக்கம் ஆயிடுச்சு.

அப்படி பழக்கம் ஆவாதவர்களுக்கு உற்ற துணை உங்கள் அலார்ம் க்ளோக்.. இப்படி கரெக்டா நாம் எழுந்திருக்க வேண்டிய நேரத்தில், நம்மை எழுப்பிவிடுகிறது இந்த மணி அடிக்கும் கடிகாரம். ஆனாலும், நம்மல்ல சிலர் அதை சினூஸ்(snooze) செய்து திரும்பவும் படுத்து தூங்கிடிடுகிறார்கள். இவர்களுகாகவே வந்திருக்கு சில கடிகாரம். அதில் முதல் பத்து இதோ!!!


10- ஏணி கடிகாரம்

இது உங்கள் தலையின் மேல் தொங்கப்பட்டிருக்கும். மணி அடித்ததும் அது கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற ஆரம்பித்துவிடும். நீங்கள் வேகமாக எழுந்து ஆஃப் செய்யலைன்னா, அதை ஆஃப் செய்ய உங்களுக்கு ஏணி தேவைப்படும்.



9- காலை பஜ்ஜல்(puzzle)

நீங்கள் இந்த puzzle-ஐ பூட்டி முடித்தால்தான், இது ஆஃப் ஆகும்.



8- சாபக் கடிகாரம்

இதனிடம் மணி என்னனு கேட்டால், இது பதில் சொலும். ஆனால், நீங்கள் கரெக்டான தைமுக்கு எழுந்திரிக்கலன்னா, இது உங்களுக்கு சாபம் விடும்.





7- புதிய தெக்னாலஜி

இதுக்கு வைபிரேட்டர் இருக்கு. 95ட்B அலார்ம். போலிஸ் கார்ல பூட்டியிருக்கும் அந்த சுத்தும் விளக்கு போருத்தியிருக்கப்பட்டிருக்கு. பீ கேர்புல்!!!



6- பின்னை தேடுங்கள்

அலார்மை ஆஃப் செய்ய நீங்கள் இதனின் பின்னை தேடி கண்டுபிடிக்க வேண்டும். இந்த மிஷனை முடிக்கும் வரை.. நீங்கள் தூங்க வாய்ப்பே இல்லை.





5- முட்டை - கோழி பிரச்சனை

அலார்ம் அடிக்க ஆரம்பித்ததும், கோழி உருவமுல்ல கடிகாரம் முட்டை இட ஆரம்பித்துவிடும். நீங்கள் எல்லா முட்டையும் கூடயில் போட்டால்தான், அலார்ம் ஆஃப் ஆகும்.



4- காமாண்டர் ஜோ

காமாண்டர் கத்தலை கேட்டு நீங்கள் கண்டிப்பாக எழுந்திருத்து விடுவீர்கள்.



3- சுற்றும் அலார்ம்

அலார்ம் அடித்ததும், இது உங்கள் அறை முழுதும் சுற்றி கொண்டிருக்கும். நீங்கள் அதை பிடித்து ஆஃப் செய்ய வேண்டும்





2- கபோம்

இது ஒரு போம் அலார்ம். இதனின் சத்தம் உங்கள் காலணியில் இருக்கும் எல்லாருமே கண்டிப்பாக எழுந்திரித்துவிடுவார்கள். ஹீ ஹீ ஹீ..



1- ஒளிந்திருக்கிறென் - கண்டுபிடி

இதுதான் இந்த கடிகாரங்களிலேயே முதல் இடத்தை பிடித்திருக்கும் அலார்ம். மணி அடிக்க துவங்கியதும், அது தரையில் இறங்கி ஏதவது ஒரு இடத்தில் உருண்டு போய் ஒளிந்துகொள்ளும். சீக்கிரமாக ஆஃப் செய்யாவிட்டல், இதை தேடி கண்டுபிடிப்பதற்காக நீங்கள் உங்கள் ஆபிஸில் லீவு போட நெரிடும்..

:-)

21 Comments:

ramya said...

nalla velai enga veetla ipadi alarm ellam vangala namma marketla varalangaradhu konjam sandhosha pada vendiya vishayam...or en gathi adho gathi..

MyFriend said...

//one among u said...
nalla velai enga veetla ipadi alarm ellam vangala namma marketla varalangaradhu konjam sandhosha pada vendiya vishayam...or en gathi adho gathi.. //

welcome to my blog 'One Among U'.

solla mudiyaathu. koodiya cheekkiramE ithu marketkku varalaam.. hehehe

Anonymous said...

Ungal alarm ethu ? ;)

நெல்லை சிவா said...

Friende,

Super-a irukku inthap pathivu. kalakkunga..vaazthukkal.

Unknown said...

Nice post :)

இராம்/Raam said...

இந்த மாதிரி அலாரம் கிளாக் மார்கெட்'க்கு வந்தா எனக்கு சொல்லி அனுப்புங்க... என்னைமாதிரி சுறுசுறுப்பானவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்...... :)

MyFriend said...

//c.m.haniff said...
Ungal alarm ethu ? ;) //

enakku en handphonil ulla arame pothum Haniff.. ;-)

MyFriend said...

//நெல்லை சிவா said...
Friende,

Super-a irukku inthap pathivu. kalakkunga..vaazthukkal.
//

Nandri Siva & Welcome to my World. ;-)

MyFriend said...

//தேவ் | Dev said...
Nice post :)
//

Thanks Dev. welcome to The World of MyFriend. :-)

MyFriend said...

//ராம் said...
இந்த மாதிரி அலாரம் கிளாக் மார்கெட்'க்கு வந்தா எனக்கு சொல்லி அனுப்புங்க... என்னைமாதிரி சுறுசுறுப்பானவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்...... :) //


உங்களுக்கு இந்த ஆலர்ம் க்லாக் வேணுமா? அப்படி மார்கேட்டில் வரலைன்னா, கூடிய சீக்கிரத்தில் நானே இந்த ஆராய்ச்சியில் இறங்கி நல்லதொரு அலார்ம் க்லாக் செய்து உங்களுக்கு விற்று விடுகிறேன். ;-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

my ; MY FREIND!

நித்திரையால் எழும்பதானே! அலாம் கிளக் வேணும்!! அது தானே!!கஸ்டமாக இருக்கு!!!
சரி இப்படி மாரி மழை போல் பதிவு போட்டால்; எப்படிப் படிப்பது; பதிலிடுவது....எப்படிங்க ??இதெல்லாம் முடிகிறது.
யோகன் பாரிஸ்

MyFriend said...

//Johan-Paris said...
my ; MY FREIND!

சரி இப்படி மாரி மழை போல் பதிவு போட்டால்; எப்படிப் படிப்பது; பதிலிடுவது....எப்படிங்க ??இதெல்லாம் முடிகிறது.
யோகன் பாரிஸ் //

எப்போதோ போட்ட பதிவுகள் ஒன்று திரண்டு வந்ததால் அது மழையாய் மாறிவிட்டது யோகன். ;-)

நாடோடி said...

நான் இதை ஏற்கன்வே இந்த
தளத்தில் பார்த்துள்ளேன்.
நானும் இதை தமிழாக்கம் பண்ண எண்ணியிருந்தேன். என்னால் முடியவில்லை.

but good post. keep it up

MyFriend said...

//நாடோடி said...
நான் இதை ஏற்கன்வே இந்த
தளத்தில் பார்த்துள்ளேன்.
நானும் இதை தமிழாக்கம் பண்ண எண்ணியிருந்தேன். என்னால் முடியவில்லை.//

நாடோடி, அந்த லிங்க்-ஐ க்ளிக் செய்ய முடியவில்லை. இன்னொரு முறை போஸ்ட் செய்யுங்கள். நன்றி..

நாடோடி said...

http://srhpost.blogspot.com/2006/08/10-most-annoying-alarm-clocks.html

மேலேயுள்ளது.

MyFriend said...

யெஸ். இதே நியூஸ்தாங்க.. ஆனாலும் வேறொரு ப்ளாக்ல இருப்பது எனக்கு தெரியாது.. :-?

நாடோடி said...

இது ஒரு knowledge sharingதான். யாருமே சொல்லாத விசயத்தை சொல்ல முற்படுவது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் மொழிமாற்றம் செய்தீர்களே அதுதான் பெரிய விசயம்.

:))))))

MyFriend said...

// நாடோடி said...
இது ஒரு knowledge sharingதான். யாருமே சொல்லாத விசயத்தை சொல்ல முற்படுவது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் மொழிமாற்றம் செய்தீர்களே அதுதான் பெரிய விசயம்.
//

ஹா ஹா ஹா.. ஐஸ் கட்டி வச்சுட்டீங்களே!!! ஹீ ஹீ ஹீ...

Anonymous said...

Hi my friend,

WOW! nice alarm clocks. are they available in the market :-)
நான் காலேஜில் படிக்கும் போது அலார்ம் கிளாக்கை அலமாரியின் மேல் தட்டின் மேலே நாற்காலி போட்டு ஏறி வைத்துவிடுவேன். காலையில் எப்பிடியும் கஷ்டப்பட்டாவது ஏறி எடுக்கவேண்டும். இல்லையென்றால் கத்தியே உயிரை வாங்கிடும் :-p

பாலராஜன்கீதா said...

நான் உயிருள்ள ஒரு அலார்ம் க்ளாக்கைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன் என்று என் இனிய பாதி சொல்வார்கள்.
:-)

MyFriend said...

//நான் உயிருள்ள ஒரு அலார்ம் க்ளாக்கைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன் என்று என் இனிய பாதி சொல்வார்கள்.
:-)//

ஆஹா. இது உண்மைதான்..

பலர் வீட்டுல மனைவிதானே அலார்ம் க்லாக்.. ஹீ ஹீ..