Monday, December 04, 2006

116. மாதவனே!!!

லவ்வர் போயாய் அலைபாயுதேயில் அறிமுகமான மாதவனுக்கு ரசிகர்களிடையே (முக்கியமா ரசிகைகள்) ரொம்பவே க்ரேஸ் இருந்துச்சு. சும்மாவா! அவரோட சிரிப்புக்கே அத்தனை பேரும் அடிமைன்னு சிலர் சொல்லிக்கிட்டு திரிஞ்சாங்க.

என்னோட சில நண்பர்கள் மாதவன் தன்னோட போய் ஃப்ரெண்ட் சொல்லிக்கிட்டாங்க. சிலர் ஒரு படி மேலே போய் மாதவன் தன்னோட கணவன்னும் சொன்னாங்க! இது கொஞ்சம் ஓவர்தான்..

எனக்கு மேட்டி(Maddy) மேலே அப்படிப்பட்ட க்ரேஸ் இல்லை. ஆனாலும், அவரோட படங்களை பார்க்கிறது தவறுவதில்லை. (நீதான் எல்லா படத்தையும் பார்ப்பாயே! என்னமோ படங்களை தேர்வு செய்து பார்க்கிற மாதிரி பேசுறன்னு நீங்க சொல்லுறது காதில விழுது).
சரி, எதுக்கு வெட்டி பேச்சு. சொல்ல வந்ததை சொல்லுன்னு சொல்றதும் என் காதில் விழுது.

நீங்க மாதவனுடைய படங்களை பார்தீங்கன்னா ஆரம்ப காலகட்டத்தில காதல் மற்றும் காமெடிதான் ரொம்ப செய்ஞ்சாரு. பார்த்தாலே பரவசம், மின்னலே மற்றும் டும் டும் டும் படங்களும் நன்றாகவே வரவேற்ப்பு பெற்றது.

அடுத்த வருடத்திலேயே ஹிந்திக்கு போனாரு. சாதாரணமாக தமிழிலிருந்து ஹிந்திக்கு போன ஹீரோக்கள் வெற்றி பெற்றதில்லை. இவருக்கும் அதே கதிதான்னு பேசிக்கிட்டாங்க. ஆனால், இவருக்கு தனக்குன்னு ஒரு சின்ன இடம் கிடைச்சிச்சு. ஹிந்தி நடிகைங்க முன்பெல்லாம் தமிழ் ஹீரோக்கூட நடிக்கிறதுன்னா அரவிந்த் சுவாமி கூட மட்டும்தான் நடிப்போம்ன்னு சொன்னவங்க, இப்போ மாதவனுடன் நடிக்க சம்மதம்ன்னு சொன்னாங்க..

மணிரத்னமும் எனக்கு ஒரு காலத்துல அரவிந்த் சுவாமி எப்படியோ.. அப்படிப்பட்ட இடத்துலதான் மாதவன் இப்போ இருக்கார்.. என்னுடைய கதைகளுக்கு பொருந்தும் இன்னொருவர் மாதவன்தான்ன்னு ஒரு பேட்டியில சொன்னாரு.. சொன்னது போலவே லவ்வர் போயை கோபமான இன்ஜீயராகவும் பாசமான அப்பாவாகவும் கண்ணத்தில் முத்தமிட்டாலிலும், ஒரு வில்லன் ரவுடியாக ஆயுத எழுத்திலும் காட்டினார்.

ரன் மூலமாக அக்க்ஷன் கதைகளத்திற்க்கு அடித்தலம் நாட்டினாலும், தம்பிதான் இவர் ஒரு ஆக்க்ஷன் ஹீரோன்னு பெயர் எடுத்து கொடுத்தது.

தம்பி வருவதற்க்கு முன்பும் பின்பும் இவர் ரொம்பவே அடங்கி இருந்தார் என்று சொல்லலாம். இவருடைய படங்கள் எதுவும் வெளியாகாததால், இவர் இருக்காரா இல்லையான்னு கூட சில சந்தேகங்கள் எழுந்தது சிலருக்கு.

இந்த இடைவெளிக்கி 3 காரணங்கள் இருக்கின்றன.
1- படங்களை கவனமாக தேர்வு செய்து நடிப்பதனால்
2- தனக்கு குழந்தை பிறந்தவுடன் மும்பைக்கு சென்று தன் மனைவிக்கு உதவியாய் இருந்ததனால்
3- ஹிந்தி மற்றும் பெங்காலி மொழியிலும் நடிப்பதனால்

ரங் டே பசந்தியில் கெஸ்ட் ரோல் செய்த மாதவுனுக்கு நல்ல பெயர் பெற்று தந்தது. சொல்ல போனால், அவர்தான் அந்த படத்தின் திருப்பு முனையாக அமைந்தார். அந்த படத்துக்கு பிறகு மணிரத்னத்தின் குருவிலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இன்னொரு ஹிந்தி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இரண்டுமே நடித்து முடிந்து கூடிய சீக்கிரத்தில் வெளியீடு காண இருக்கிறது.

பெங்காலியில் ஒரு படமும் முடிந்து திரைகாணவிருக்கிறது.
தமிழில் இப்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது ரெண்டு. இதை தவிர்த்து 9 படங்கள் இவரது கையில் இருக்கிறது. அம்மாடியோவ்!!!

அப்போ 2008 வரை மாதவன் படங்களுக்கு பஞ்சமே இருக்காது. மாதவன் இது வரை காவல்துறை அதிகாரியாக நடித்தது இல்லை. இப்போது அந்த ஆசையும் நிறைவேர போகிறது.

ஹிந்தியில் ராம் கோபால் வர்மாவின் படங்களுக்கு தனி மார்க்கெட். அவரது இயக்கத்தில் ஒன்றும், அவருடைய மற்றொரு படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவிருக்கிறார். இந்த படம் ஒரு விருவிருப்பான திரில்லர் படம்.

சீமனுடன் தம்பியில் நடித்தபோது, மாதவனுடைய சின்சியாரிட்டி சீமானுக்கு பிடித்தது. அதனின் பரிசாக அவரின் இரண்டு படங்களுக்கு மாதவன்தான் நாயகன். அதில் ஒன்று காதல் தையாம். மாதவன் இதை அலைபாயுதே Part 2ன்னு சொல்லுறார்.

புது இயக்குனர் இருவர் படங்களிலும் இவர் நடிக்க ஒப்புகொண்டிருக்கிறார்.
மாதவனின் ரசிகர்களே! உங்களுக்கு நல்ல விருந்துகள் காத்திருக்கிறது. இனி இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது நீங்கள் மாதவனை பெரிய திரையில் கண்டு ரசிக்கலாம்.
(நான் மாதவனை பற்றி பேசியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். அடுத்து வருவது ரெண்டு... இல்லை இல்லை.. இரண்டின் விமர்சனம்)....

6 Comments:

c.m.haniff said...

Mathavanai nalla alasi irukeenga, tnx for the cinews ;)

said...

//c.m.haniff said...
Mathavanai nalla alasi irukeenga, tnx for the cinews ;) //

NanrinGka Haniff.. Naalaikku Rendu moviyaiyum alasiduren. hehehe!!!

said...

Hamma.. over analysis panni irukkeenga pola :)

Stills superb.. Kannukku super virundhu kudutheenga :D

said...

அடேயப்பா.. மாதவனை பற்றி இவ்வளவு நியுஸா..
மை பிரண்ட், சும்மா அலசி ஆராய்ந்து துவச்சு காயப் போட்டு இருக்கீங்க..

ரெண்டு விமர்சனத்த எதிர்பார்க்கிறேன்..மை பிரண்ட்

said...

//G3 said...
Hamma.. over analysis panni irukkeenga pola :)

Stills superb.. Kannukku super virundhu kudutheenga :D //

madhavanai patti innum konjam alasi irukkalaamonnu nenachchukiddu irukken. aanaal, neengga over analysisnnu solliddeenggale!!!

said...

//மு.கார்த்திகேயன் said...
அடேயப்பா.. மாதவனை பற்றி இவ்வளவு நியுஸா..
மை பிரண்ட், சும்மா அலசி ஆராய்ந்து துவச்சு காயப் போட்டு இருக்கீங்க..

ரெண்டு விமர்சனத்த எதிர்பார்க்கிறேன்..மை பிரண்ட் //

ரெண்டு விமர்சனம் இன்னும் பத்தே நிமிடத்தில் உங்களுக்காக.. !!!