Thursday, December 14, 2006

135. சினிமா நியூஸ் 4

கொஞ்ச நாளா சினிமா நியூஸ் எழுதாதனால கை ரொம்ப அறிக்க ஆரம்பிச்சுடுச்சு.. அதான் திரும்பவும் எழுத ஆரம்பிச்சுட்டேன். நீங்கதான் கொஞ்சம் பொருத்துக்கனும். ஹீ ஹீ ஹீ..

"அகர முதல" மாதிரி முதல்ல "அ"ன்னு ஆரம்பிக்குற அசினைப் பற்றி.. போக்கிரி படத்துல குத்தாட்டம் போட்டுகிட்டிருந்த அசினின் காலில் ஆணி குத்தியதில் அம்மணி ஒரே கத்தல்.. இருந்தாலும் அவர் ஆட முயற்ச்சி செய்ய, பிரபுதேவா இது சரி வறாதுன்னு முடிவு செய்து, இதே பாடலில் ஷூட் செய்ய முடிவு செய்து, அசின், விஜய், ராஜு சுந்தரம் மற்றும் ஒளிபதிவாளரை மட்டும் அனுப்பி வைத்திருக்கிறார். பாரினில் ஷூட் செய்தால், க்லோக்ஸ் அப் காட்சிகளை தவிர்க்கலாம், அசினின் வழியையும் மறைக்கலாம்ங்கிறது பிரபுவின் ஐடியா.. அசினின் காலில் ஆணி ஏறியதைப்பற்றி விரிவாக இங்கே படிக்கவும்.

நாளைக்கு சென்னையில் நட்சத்திர திருவிழா. எல்லாம் நட்சத்திரங்களையும் காணலாம். நாளைக்குதானே சோனியா அகர்வால் திருமதி செல்வராகவனாகிறார்!! ஜோவை போல் இவரும் திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டாராம்.. இவர் செல்வாக்கு துணையா போஸ்ட் ப்ரோடக்ஷனில் இணையபோகிறாராம். நல்ல செய்திதான். தனுஷ் அப்பாவான பிறகுதான் அண்ணன் திருமண செய்வது, அவரின் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியை காட்டுகிறது. திருமணத்துக்கு பிறகு, இன்னும் நல்ல நல்ல படத்தை கொடுத்து முன்னேற நமது வாழ்த்டுக்கள். இவர் இப்போது டைரக்ட் செய்யும் படம் ஒரு தெலுங்கு படம். இதன் பிறகு, இது மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை சூர்யாவின் தம்பி கார்தியை வைத்து இயக்கப்போவது நாமெல்லாம் அறிந்ததே!

புதுமணதம்பதிகள் செல்வா-சோனியா


மற்ற செய்திகளுக்கு முன் ஒரு சின்ன இடைவேளை: இது இந்த மாதத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகர்களின் நிழற்படங்கள்

அருண் தன் மனைவியுடன்

மனோஜ் நந்தனாவுக்கு தாலி கட்டும்போதுரேணுகா மேனன் தன் அமேரிக்கா கணவருடன்காயத்ரி ரகுராம் தன் கணவருடன்


காமெடி வ(வெ)டிவேலு இம்சை அரசன் 23-ஆம் புலிகேசில அசத்தியிருந்தார். பிறகு தேசிய பறவையில் 9 வேடத்தில் நடித்தார். இப்போது திரும்பவும் ஹீரோவாக 4 வேடத்தில் இவர் நடிக்கும் படம் இந்திரலோகத்தில் நா அழகப்பன்". இதுவும் ஒரு காமெடி படம்தான். இதில் இவருக்கு 3 ஜோடி. அனேகமா ஷில்பா ஷெட்டிதான் இவரோட இணைந்து நடிக்கபோகிறார்..

சில நாட்களுக்கு முன் சரிதா செல்வி நாடகத்தில் நடிக்க போவதில்லைன்னு முடிவெடுத்தார். இப்ப அவரே நடிக்கனும்ன்னு நினைச்சகூட அவர் நடிக்க முடியாது.. 500 எபிசோட்லை தொடபோகும் இந்த மெகா சீரியல் டிசம்பர் 29-இல் ஒரு முடிவை நாடுகிறது.. அப்பாடான்னு பெரு மூச்சி விடுவதற்க்குல், ராதிகா சொன்ன அடுத்த வார்த்தை: "புது வருடத்திலிருந்து ரடான் டிவி ஒரு புதிய மெகா தொடருடன் உங்களை சந்திக்கும்"

ஜீவாவுடன் ஹரிஸ் ஜெயராஜ் கைகோர்த்த படங்களின் பாடல்கள் மெகா ஹிட். 12பி, உள்ளம் கேட்குமே.. இரண்டுமே கேட்க கேட்க சலிக்காத பாடல்களை கொடுத்தது. இந்த ஹிட் உன்னாலே உன்னாலே (ஜூலை காற்றில்)-லிலும் தொடரும்ன்னு நினைக்கிறேன். பாடல்கள் இந்த மாதம் வெளியிடப்படுகிறது. இதில் புதுமுகம் வினய் ஹீரோவாக நடிக்க, இரண்டு கதாநாயகிகள் சதா மற்றும் கஜோலின் தங்கை தனிஷா நடிக்கிறார்கள். டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரமும் இந்த படத்தில் நடிக்கிறார். ஜீவா ஒவ்வொரு படத்திலும் அறிமுகப்படுத்தும் ஹீரோ ஹீரோயின்கள் அவர் அடுத்த படத்தை எடுக்கும் முன் பிரபலமாகிவிடுவர். உதாரணத்திற்கு ஷாம், அசின் மற்றும் ஆர்யா. வினயும் தனிஷாவும் பிரபலமாகுவார்களா?

7 Comments:

c.m.haniff said...

tnx for the cinews ;)

said...

You are welcome Haniff..

said...

testing

said...

அசத்து அசத்துன்னு அசத்துறீங்க மை பிரண்ட்..

ஒவ்வொரு சினிமா நியுஸ் நான் போட நினச்சது.. ஆனா ஆபீஸ்ல தலைக்கு மேல வேலை.. இந்தப் பக்கம் அந்தப் பக்கம்னு திரும்ப முடியல..

சீக்கிரம் நானும் சிட்டுக்குருவியோட உங்க போட்டிக்கு வர்றேன்

படங்கள் எல்லாம் போட்டு பின்றீங்க போங்க

said...

நீங்க இதைவிட நல்ல எழுதுவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஃப்ரீயா இருக்கும்போது உங்க சிட்டுகுருவியை கூட்டிகிட்டு வந்து அதே நீயூசை விருவிருப்பா போட்டுருங்க..

ஆமாங்க.. எனக்கும் தலைக்கு மேலே நிறைய வேலை. அதான் எப்போதும் போல பதிவை போட முடியலை. :-(

johan-paris said...

My friend
எனக்கு இந்த சினிமாச் செய்திகளில் அவ்வளவு ஈடுபாடில்லை. எனினும் இல்லறம் புகும் இவர்கள் படங்கள் பார்த்துச் சந்தோசமே!!!!மிக பிரகாசமான ஒளியில் திருமணபந்தத்தில் இணையுமிவர்கள்;சில சில்லறைப் பிரச்சனைகளால் இதே பிரகாசம் முன் நிற்பது; நினைவுக்கு வருகிறது; எல்லாத் தரப்பிலும் இந்தப் பிரிவுகள் இருக்கும் போதும்;;;;இதன் பிரகாசம்;;;;;அதுவும் செய்தியாகத் தீனிபோடுவது;;;கவலையே!!
மற்றும் படி அவர்களும் நல்லா இருக்கட்டும்;
யோகன் பாரிஸ்

said...

//மிக பிரகாசமான ஒளியில் திருமணபந்தத்தில் இணையுமிவர்கள்;சில சில்லறைப் பிரச்சனைகளால் இதே பிரகாசம் முன் நிற்பது; நினைவுக்கு வருகிறது;//

உண்மைதான். தற்கொலை, விவாகாரத்துன்னு இறையவே நடக்குது இந்த தமிழ் சினிமாவில்.

பிரசாந்த், சுவர்ணமால்யான்னு பலர் திருமணம் இப்படி பிரச்சனைகளில் இருப்பது வருத்தப்பட கூட்ய விஷயமே! இந்த இளம்ஜோடிகள் இந்த விஷயங்களை பார்த்து தங்கள் வாழ்க்கையில் இப்படி நடக்காமல் தவிர்க்க வகை செய்யவேண்டும்..