ஒரு வாரமா எந்த பதிவும் போடாத போது என்னமோ நடந்துள்ளது மலேசியாவில்.. நம்ம நாடு மக்கள் சிலர் வெளிநாடுகளில் இருப்பவர்கள் இங்கே நடக்கும் விஷயங்களை பதிவாக போட சொல்லியிருந்தனர். ஆனால் மன்னிக்கவும்!! ஒரு வருத்தப் படும் விஷயம் ஒரு வாரமாக நடந்துள்ளது. ஆனால், இப்போதுதான் அதை பதிவாக போடுகிறேன்.
ஒரு வார காலமாய் தூறும் மழை காரணத்தினால் மலேசியாவில் 6 மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது.
1- ஜோகூர்
அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் இதுதான். கிட்ட்த்தட்ட 75 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் இறந்துள்ளனர். முஉவார், பொன்தியான், குலூவாங், ஜோகூர் பாரு, கோத்தா திங்கி மற்றும் செகாமாட் போன்ற இடங்கள் அதிகமாக பாதிப்புற்றது. 400 துயர் துடைப்பு இல்லங்களுக்கு மக்கள் மாற்றப்பட்டனர். இந்த இடங்களில் வெள்ளம் குறையும் தருவாயில் முவாரில் நிலமை இன்னும் மோசமாகவே இருக்கிறது. இதுக்கு காரணம் செகாமாட் அணையில் தண்ணீர் அபாரகர கட்டத்தில் இருப்பதும், எப்போதும் அதை தாண்டலாம் என்ற அச்சம்தான்.
2- மலாக்கா
ஜோகூரை அடுத்து அதிக பாதிப்பை ஏற்ப்படுத்திய மாநிலம் மலாக்காதான். ஒரு சின்ன மாநிலமாக இருந்தாலும், இதன் பல இடங்களில் தண்ணீர் புகுந்து விளையாடியுள்ளது. 30 மணி நேரமாய் தொடர்ந்து பெய்த அடை மழையால் பாத்து பெரெண்டாம் போன்ற இடங்களில் தண்ணீர் ஏறியதால், வெள்ளத்தின் அபாயத்தை குறைக்க டுரியான் துங்கால் அணை திறக்கப் பட்டும், ஒரு பலணும் கிட்ட வில்லை.
3- பகாங்
ரொம்பின், பெக்கான் மற்றும் குவாந்தான் போன்ற இடங்களும் இந்த வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க வில்லை. துயர் துடைப்பு இல்லங்களும், உதவியாளர்களும் விழிப்புணருடன் இருந்ததால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்.
4- நெகிரி செம்பிலான்
ஜோகூரில் வெள்ளமேறிய அன்றைக்கே நெகிரியிலும் வெள்ளமேறியது.. ஆனாலும் பெரும் பாதிப்பு ஏற்ப்படவில்லை
5&6- திரங்கானு & கிளாந்தான்
குவாலா திரங்கானு மற்றும் குவா மூசாங்கிலும் அடை மழையால் வெள்ளமேறியுளது.
ஒரு வாரமாக போத்துவரக்கு மற்றும் வேலைகள் எல்லாம் முடக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களும், சாலைகளும் பலத்த சேதமடந்துள்ளது. மக்களின் வீடுகளும் ரொம்பவே அவலை நிலையில் உள்ளன. வெள்ளம் குறையை துவங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தத்தம் வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
ஆனாலும், மலேசிய மக்களே நீங்கள் இன்னொரு இயற்க்கைப் பேரிடருக்கு இப்பவே ஆயத்தம் ஆகுங்கள். அடுத்த வாரம் இதே சூழல் திரும்பவும் நிகழாம்... அடை மழை பெய்யலாம். மத்திய மாந்லங்கள் இந்த தடவை பாதிப்பு அடையலாம் என்று கணித்திருக்கிறார்கள்.
ஆகவே குவாலா லும்பூர், சிலாங்கூர் மக்கள் இப்பவே முன்னேற்பாடு செய்வது நல்லது.
வருட கடைசியில் உலக முழுவதும் இப்படியொரு பேரிடர் நடப்பது வருத்த்தை அழிக்கிறது. டிசம்பர் 26 நிகழ்வுக்கு பிறகு, தண்ணீரால் மலேசியாவை அதிகம் பாதித்த பேரிடர் இதுதான்.. ஆனாலும் முன்னேற்பாடாக சில செய்து வைத்திருந்த்ததால் பல பல உயிர்களை காப்பாற்ற முடிந்தது..
இவ்வேளையில் சுனாமியில் இறந்த உயிர்களுக்கும், இந்த பேரிடரில் உயிரிழந்த உயிகளுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
.....................................
Monday, December 25, 2006
145. இன்னொரு இயற்கை பேரிடர் இங்கே...
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
இந்த இயற்கை தாக்கத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வர மலசியாவிற்காக ஆண்டவனை வேண்டுகிறேன்
// மு.கார்த்திகேயன் said...
இந்த இயற்கை தாக்கத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வர மலசியாவிற்காக ஆண்டவனை வேண்டுகிறேன்//
நன்றி. நானும் அதைதான் வேண்டுகிறேன்..
இங்கே!
செய்தியில் காட்டினார்கள்;உங்களைத்தான் நினைவு வந்தது.இயற்கை மிக கடுமையாக இருக்கிறது.பாதிக்கப் பட்டோர் விரைவில் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப இறையருள் புரிய வேண்டுகிறேன்.
யோகன் பாரிஸ்
// இங்கே!
செய்தியில் காட்டினார்கள்;உங்களைத்தான் நினைவு வந்தது.இயற்கை மிக கடுமையாக இருக்கிறது.பாதிக்கப் பட்டோர் விரைவில் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப இறையருள் புரிய வேண்டுகிறேன்.
யோகன் பாரிஸ் //
நேற்று இன்னும் சில இடங்களில் மழை பெய்த்ததால் சில இடங்களில் மீண்டும் வெள்ளம் ஏறியுள்ளது யோகன். :-(
Post a Comment