Wednesday, December 13, 2006

132. வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க!!

ராஜாத்தி ராஜ,
ராஜ மார்த்தாண்ட,
ராஜ கம்பீர,
ராஜ குலத்திலக..
வேட்டைய ராஜா
வர்றார்.. வர்றார்.. வர்றார்..

அந்த "வேட்டைய"ன்ற இடத்தில மலேசியான்னு போட்டுக்குங்க..

அவரு இவருதான்...

அரசரும்.. அரசியும்.. அவரகளது மனுடன்.


மலேசியாவுல 13 மாநிலங்கள் இருக்கு. அதில் 2 மட்டும் பிரிந்து தென்சீன கடலுக்கு வலது பக்கம் இருக்கின்றன..

அங்கே இருப்பவர்கள் ஆதிவாசின்னு சொல்லலாம். அவங்களுடைய கலை கலாச்சாரங்கள் இன்னும் பழைய பழய ஆதிவாச்த்தில் எப்படி இருந்தனரோ.. அப்படியேதான் இருக்கிறாங்க.. (இவர்களை பற்றி மட்டுமே ஒரு பதிவு போடலாம்..) :-))

மீதமுள்ள 10 மாநிலங்களில் உள்ள ஒரு விஷயத்தை பற்றிதான் இன்றைய பதிவு..

இந்த பத்து மாநிலத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அரசர்கள் இருப்பார்கள். இவர்கள் சுல்தான் எனப்படுவர்..

இவர்களில் ஒருவர் ஒவ்வொரு ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு மலேசியா நாட்டின் அரசராக இருப்பார்கள். (இவர்கள் ராஜாவாக இருந்தபோதிலும், நாட்டை ஆளுபவர் பிரதமரும் மந்திரு சபையும்தான்றது இன்னொரு கதை.)

இப்படி ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ராஜ சபையிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

நான் ஐந்தாம் படிவம் படிக்கும் போது.. அப்போதுதான் Physics தேர்வு எழுதிவிட்டு பரிட்சை ஹாலிலிருந்து வெளியே வந்தேன். என் நண்பன் ஒருவன் "நீங்களெல்லாம் பரிட்சை எழுதிக்கிட்டு இருந்தப்பொ ராஜா இறந்துட்டார். நாளைக்கு யார் யாருக்கு பரிட்சை இருக்கோ, அவங்க பரிட்சையெல்லாம் வேரொரு நாளைக்கு ஒத்தி வைக்குறாங்கன்னு ரேடியோல சொன்னாங்க"ன்னு சொன்னான்.

அப்போ நான் "ஏன் இவர் நேற்றே இறந்திருக்க கூடாது.. இன்னைக்கு பரிட்சை நமக்கு ஒத்தி வச்சிருப்பாங்களே.. இன்னும் டைம் எடுத்து படிச்சிருக்கலாமே"ன்னுதான் தோனிச்சு. (நீங்க என்னை திட்டுவது தெரியுது! என்ன பண்ண? அரசர்ங்கிறது எங்களுக்கு ஒரு பெரிய இஃபெக்ட்-ஆ (effect)இல்லை.. எல்லாமே பிரதமர் ஆட்சிதான்)

மறுநாள் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்தது. வெளியே போகமுடியாது. சரி, டீவி பார்க்கலாமுன்னு டீவியை திறந்தா எல்லா புரோக்ராமும் கேன்சல். அவர் இறந்ததை முன்னிட்டு அவருக்கு இறங்கல் தெரிவிக்க எந்த கேலிக்கை நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சியில் போட வில்லை.

அப்போதுதான் சிறிது வருத்தப்பட்டேன். "அடடே! இவர் இறந்திருக்ககூடாதே"ன்னு.. இப்போ அதை நினைச்சாலும் சிரிப்புதான் வருது.

அப்போது இறந்த அந்த அரசர் சிலாங்கூர் மாநில சுல்தான். ஒரு மாதத்துக்கு பிறகு பெர்லிஸ் ராஜா அரசராக நியமிக்கப்பட்டர். இது நடந்து நேற்றோடு 5 வருடம் பூர்த்தியானது.

இப்போது தேர்வானவர் திரங்கானு மாநில சுல்தான். இவருக்கு இப்போது 44 வயது மட்டுமே! 36 வயதில் தன் தந்தையிடமிருந்து திரங்கானு மாநிலத்தில் சுல்தானாக ஆகிய இவர் 11 வருட கால கட்டதிலேயே அரசராக அறியனையில் அமர்ந்துவிட்டார்.

இவர் நாட்டு அரசனனென்றால், மாநில சுல்தானக யார் இருப்பார்ன்னு கேட்குறீங்கலா? இதோ! இவர்தான்:


இவரின் பெயர்: தெங்கு முகமது இஸ்மாயில் சுல்தான் மிஜான் ஜைனால் அபிடின். வயது எட்டுதான். இவர்தான் திரங்கானு சுல்தான் (இப்போது அரசர்)-இன் மூத்த மகன்.


மலேசியா நாட்டின் வரலாற்றிலேயே இவர்தான் இந்த சின்ன வயசிலேயே ஒரு மாநிலத்தை ஆளுகிறார்.

நேற்று இவர் இடைகால சுல்தான் பட்டத்தை தன் தந்தயிடமிருந்து பெற்றுக்கொண்டார். 8 வயது பையன் என்ன ஆட்சி செய்யபோகிறான்னு கேட்குறீங்கலா?

அதற்க்கு 3 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்திருக்கிறார் இவர் அப்பா. அந்த 3 பேர்: ராஜாவின் மூன்றாவது தம்பி, ராஜாவின் மாமா மற்றும் ஒரு அரச மந்திரி)

இன்று அப்பாவும் அம்மாவும் அரண்மனையில் அரசர் அரசியர் பதவியை பெற்று அரியணையில் உட்கார்ந்துட்டாங்க.

இன்னும் ஒரு 5 வருடத்துக்கு இவங்கதான் ராஜா - ராணி..

பதவி விலகி பெர்லிஸுக்கு திரும்பும் 12-வது ராஜா-ராணி

13 Comments:

said...

MY friend§
மிகச் சுவையான எனக்குப் பிடித்த தகவல்கள்!;நீங்கள் குறிப்பிட்டது போல் மலேசியப் பழங்குடி மக்கள் வாழ்வியல் நிறைய தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். மிக ஆர்வமானதும்; புதினமானதுமான விடயங்கள். கட்டாயம் "பூமி புத்திரா" எனும் சொல்லின் விளக்கத்தையும் தரவும்.
யோகன் பாரிஸ்

said...

யோகன்,

"பூமிபுத்ரா"வும் பழங்குடிவாசிகளும் வேறுபட்டவர்கள்.

பூமிபுத்ரா - மலாய்காரர்களை குறிக்கும்.. இவர்கள் கம்போங் () என சொல்லபடும் ஊர்களில் வாழ்ந்து, விவசாயத்தை நம்பி இருந்தவர்கள் (பிரிட்டீஷ் ஆட்சிக்கு முன்)

ஓராங் ஆஸ்லி - பழங்குடிவாசிகள். இப்போதும் காட்டில் வாழ்ந்து கொண்டு, வேட்டையாடியும், காட்டிலிருக்கும் தாவரங்களை பறித்தும் உணவாக்கிக்கொள்பவர்கள்

உங்களுக்கு தேவையானால், இவர்களை பற்றி, ஒரு சின்ன ரிசேர்ச் செய்து ஒரு பதிவாக ஒரு நாள் போடுகிறேன். ;)

johan-paris said...

My Friend
கட்டாயம் அதைச் செய்யவும். இச் சொல்லில் இந்தியத் தன்மையுண்டு....அதனாலே...இந்த ஆர்வம்
யோகன் பாரிஸ்

said...

கண்டிப்பாக யோகன்..

நீங்களும் உங்களுக்கு தெரிந்ததை (அதான் இந்திய தன்மைன்னு சொன்னீங்களே!) எழுதவும்..

நீங்கள் சொன்னதும், எனக்கும் அது என்ன தன்மைன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு! நன்றி யோகன்..

johan-paris said...

My Friend
பூமி=மண்; புத்ரா=மக்கள்;மைந்தர் எனும் பொருள்; நீங்கள் அறிந்திருப்பீர்கள்; எனவே!! இவர்களை "மண்ணின் மைந்தர்கள்" எனக் கூற நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும்;அதை தங்கள் பெற்றோரிடம்;ஆசிரியர்களிடம் கேட்டுக் கூறவும்.
அதுவும் இந்த இந்தியச் சொல் எப்படி?? வந்தது. என்பதை அறிய ஆவல்!!!
யோகன் பாரிஸ்

Anonymous said...

"/மீதமுள்ள 10 மாநிலங்களில் உள்ள ஒரு விஷயத்தை பற்றிதான் இன்றைய பதிவு..

இந்த பத்து மாநிலத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அரசர்கள் இருப்பார்கள். இவர்கள் சுல்தான் எனப்படுவர்../"

10 மாநிலங்கள் அல்ல 9 மட்டுமே...

"/ஓராங் ஆஸ்லி - பழங்குடிவாசிகள். இப்போதும் காட்டில் வாழ்ந்து கொண்டு, வேட்டையாடியும், காட்டிலிருக்கும் தாவரங்களை பறித்தும் உணவாக்கிக்கொள்பவர்கள்/"

சிலர் படித்து நல்ல நிலமைக்கு வந்து விட்டார்கள்.

எங்க இடத்தில்தான் மலேசியாவின் முதல் ஓராங் ஆஸ்லி(orang asli) மருத்துவர் இருக்கிறார்.


DR.sintok

said...

//johan-paris said...

இவர்களை "மண்ணின் மைந்தர்கள்" எனக் கூற நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும்;அதை தங்கள் பெற்றோரிடம்;ஆசிரியர்களிடம் கேட்டுக் கூறவும்.//

நான் வரலாற்றுப்பாடத்தில் கவனம் செலுத்தாதது இப்போ எவ்வளவு தப்புன்னு தெரியுது. கூடிய சீக்கிரமே இதற்கு பதிலழிக்கிறேன்

said...

//Dr. sintok said..
10 மாநிலங்கள் அல்ல 9 மட்டுமே...//

திரும்பவும் கணக்கு செய்து பார்த்தேன். மொத்தம் 8 மாநிலத்தில் உள்ள சுல்தான்கள்தான் அரசர்களாக முடியும்.

1- நெகிரி செம்பிலான்
2- ஜோகூர்
3- சிலாங்கூர்
4- பேராக்
5- கெடா
6- கிளாந்தான்
7- திரங்கானு
8- பகாங்

உங்கள் திருத்ததுக்கு நன்றி.

//எங்க இடத்தில்தான் மலேசியாவின் முதல் ஓராங் ஆஸ்லி(ஒரன்க் அஸ்லி) மருத்துவர் இருக்கிறார்.//

அட.. நீங்க பகாங்கை சேர்ந்தவரா? நானும்தான்..

நான் சபா சரவாக்கில் உள்ள பழங்குடிவாசிகளை பற்றி சொன்னேன். சிலர் வாழ்க்கையை மாற்றி இருந்தாலும், பலர் இன்னும் அவர்களின் பழைய வாழ்க்கையை மாற்றவில்லை.

Anonymous said...

"/ திரும்பவும் கணக்கு செய்து பார்த்தேன். மொத்தம் 8 மாநிலத்தில் உள்ள சுல்தான்கள்தான் அரசர்களாக முடியும்.

1- நெகிரி செம்பிலான்
2- ஜோகூர்
3- சிலாங்கூர்
4- பேராக்
5- கெடா
6- கிளாந்தான்
7- திரங்கானு
8- பகாங் /"

என்னங்க perlis-ஐ காணூம். முன்னால் மாமன்னர் perlis-ஐ சேர்ந்தவர்தேனே? (Raja Perlis)

DR.sintok

said...

//என்னங்க perlis-ஐ காணூம். முன்னால் மாமன்னர் perlis-ஐ சேர்ந்தவர்தேனே? (Raja Perlis)

DR.sintok //

அய்யோ! ஆமாங்க.. ஒன்பதுதான்.. பெர்லிஸ்-ஐ எப்படி மிஸ் பண்ணுனேன்னு தெரியலை. அது ரொம்ப மேலே இருப்பதாலோ?

Anonymous said...

"/
johan-paris said...
My Friend
பூமி=மண்; புத்ரா=மக்கள்;மைந்தர் எனும் பொருள்; நீங்கள் அறிந்திருப்பீர்கள்; எனவே!! இவர்களை "மண்ணின் மைந்தர்கள்" எனக் கூற நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும்;அதை தங்கள் பெற்றோரிடம்;ஆசிரியர்களிடம் கேட்டுக் கூறவும்.
அதுவும் இந்த இந்தியச் சொல் எப்படி?? வந்தது. என்பதை அறிய ஆவல்!!!
யோகன் பாரிஸ்
/"

மலாய் பல கலவைகள் உள்ள மொழி, அதில் தமிழ், சீனம், ஆங்கிலம் , அராப் , சமஸ்கிருதம் ,மற்றும் பல மொழிகள் கலந்துள்ளான.

"பூமி=மண்; புத்ரா=மக்கள்;மைந்தர் " இது ஒரு சமஸ்கிருத மொழி. இங்கு புத்ர என்பது இளவரசன் என்பதயும் குறிக்கும்.பூமிபுத்ரா என்பது இந்த நாட்டின் மைந்தர்கள் அதாவது மலாய்காரர்கள். இந்த "பூமிபுத்ரா" பயன்பாட்டின் காரணம் இங்கு இருக்கும் தமிழ் மற்றும் சீனர்களிடம் இருந்து வேறுபடுத்தவே.அதாவது பல தலமுரையாக இங்கேயே பிறந்து வளர்ந்து இந்த நாட்டுக்கு உரமானாளும் தமிழ் மற்றும் சீனர் இந்த மண்ணின் அன்னியர்கள் என்று பிரித்து காட்டவே.DR.sintok

Anonymous said...

alamak.ada sultan baru ya?saya ini sekarang belajar dekat Singapura.Sebab itu lama tak update news Malaysia.Write more about Malaysian stuff and update me.You are writing very nicely.Keep up the good work.

said...

//துர்கா said...
alamak.ada sultan baru ya?saya ini sekarang belajar dekat Singapura.Sebab itu lama tak update news Malaysia.Write more about Malaysian stuff and update me.You are writing very nicely.Keep up the good work. //

Yes. will do it.;-)
Welcome to my world!
You will get more update Thurga.