Monday, December 25, 2006

144. உள்ளிருந்து அழுவது ஏன்?

இதற்கு முன் பாடல்களின் இசைக்கேட்ப நம் மன நிலை மாறுமென்று சொல்லியிருந்தேன்.

எனக்கும் அதே! அதே!

இன்பம் துன்பம் எல்லாவற்றிற்க்கும் உறுதுணை இந்த இசைதான். அதுவும் தமிழ் பாடல்கள்தான்.. ஆனாலும் நான் முன்பே சொல்லியிருந்தாற்போல், நான் முறையாக இசை பயிலவில்லை.
எல்லாம் நமக்கு கேள்வி ஞானம்தான்..

கவலையிருக்கும்போது நம்மை தேற்றிக்கொள்ள கண்களில் என்ன ஈரமோ, நெஞ்சோடு கலந்திடு பாடல்களை கேட்டு நாம் நம்மில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்து கவலையை மறக்கிறோம். அதே நேரத்தில், சில சமயங்களில் நாம் அழுந்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்திலும் இருப்போம். கவலை மனதில் வைத்துக்கொள்ளாமல் அழுது தீர்த்திடு... இல்லை அது உனக்குள் நாளடைவில் மன அழுத்தத்தை உருவாக்கிவிடும்ன்னு பெரியவர்கள் சொல்ல் நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா?

அதற்காகவே நான் ஒரு பாடலை கைவசம் வைத்துள்ளேன்.

ஒரு அருமையான படத்திலிருந்து அருமையான பாடல்.. ஓ மனமேன்னு ஹரிஸ் இசையமைக்க இதை பாடியவர் ஹரிஹரன்.

இந்த பாடலை நான் முதன் முதலில் கேட்கும்போதே என் மனதில் ஒரு வித ராசாயண மாற்றம். கண்கள் ஈரமாகுவதை உணர்ந்தேன். ஏனென்று புரியவில்லை..

உடனே ஒன்ஸ் மோர் போட்டேன் இந்த பாடலுக்கு. வரிகளை உற்று கவனித்தேன். புரிந்தது அந்த மாற்றம். அருமையான உண்மையான வரிகள்.. வலிகள்..

இருக்கும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தியது. அந்த காதல் வரியை தவிர..

//இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை..
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை..
இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வில் அங்கம்..//


இது நாம் வாழ்வில் கற்றுக்கொண்ட முதல் பாடம்.. இது நாம் குழந்தையாய் இருக்கும்போதே கற்றுக்கொண்ட பாடம். வாழ்க்கை ஒரு சக்கரம் என்று உணர்த்தும் வரிகள்.

அதுவே கவிதையாக, ஒரு உதாரணமும் கொடுக்கப்பட்டது இப்படி:
//நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்//


வரிகளுக்கேற்ற அந்த இசையும், ஹரிஹரனின் சிதுவேஷன் குரலும் பாடலுக்கு பலம். இதுவே என்னை கவர்ந்த சோகப் பாடல். என்னை அழவைக்கும் பாடல்.

நீங்களும் கேட்டு அழ, இந்த லிங்க்கை சொடுக்குங்கள்.
http://www.oosai.com/mail_sng_view.cfm?plyid=835

வரிகள் கீழே:

ஓ மனமே.. ஓ மனமே..
உள்ளிருந்து அழுவது யேன்?
ஓ மனமே.. ஓ மனமே..
சில்லு சில்லாய் உடைந்தது யேன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங் கற்களை எறிந்தது யார்?
(ஓ மனமே..)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி..
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குல் எறிந்தது காதலடி..
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கனுக்கள் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்..
துலைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரனமா?
(ஓ மனமே..)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை..
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை..
இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வில் அங்கம்..
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி..
வெற்றிக்கு அதுவே யேணியடி..
(ஓ மனமே..)

8 Comments:

said...

// இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வில் அங்கம்..
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்

எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் இது. மிகவும் பிடித்த பாடல் இது.

Thanks for Sharing

said...

//எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் இது. மிகவும் பிடித்த பாடல் இது.

Thanks for Sharing //

மிக்க மகிழ்ச்சி விக்கி.:-)

said...

அருமையான பாடல் இது.. என்னை எப்போதும் ஒரு அழகா அமைதிக்கு இட்டுச் செல்லும் பாடல் இது.. வரிகள் மிகச் சுலபமான வார்த்தைகளால் எழுதப்பட்டு அர்த்தம் அதிகம் பொதிந்ததாய் இருக்கிறது பிரண்ட்

said...

// மு.கார்த்திகேயன் said...
அருமையான பாடல் இது.. என்னை எப்போதும் ஒரு அழகா அமைதிக்கு இட்டுச் செல்லும் பாடல் இது.. வரிகள் மிகச் சுலபமான வார்த்தைகளால் எழுதப்பட்டு அர்த்தம் அதிகம் பொதிந்ததாய் இருக்கிறது பிரண்ட் //

அதனால்தான் என்னமோ நமக்கு இந்த சோகப் பாடலை ரொம்பவே பிடிச்சுருக்கு..

said...

Dear MYFRIEND
This is my favourite song too. My ring tone in my mobile..

//நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குல் எறிந்தது காதலடி..// powerful words.. கண்ணில் கண்ணீரை automaticஆக கொண்டுவந்திடும்..


//கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கனுக்கள் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்..//

அழகான வரிகள்..

இப்படி பாட்டு கேட்டு அழும் ஆட்கள் என்னைப்போல இந்த உலகில் யாரும் இல்லை என நினைத்திருந்தேன் உங்கள் பதிவு படிக்கும் முன்...


-- தீக்ஷ்

said...

//இப்படி பாட்டு கேட்டு அழும் ஆட்கள் என்னைப்போல இந்த உலகில் யாரும் இல்லை என நினைத்திருந்தேன் உங்கள் பதிவு படிக்கும் முன்... //

ஆஹா.. என்னைபோல்வே இன்னொருத்தவங்க.. வாங்க நம்மோட இணைய தீக்ஷ்..;-)

said...

//துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை..//
இந்த வரிகள்தாங்க கஷ்டத்துல இருக்கும் போது கேக்கனும். அதுவும் இந்த வரிகளுக்காக படம்மாக்கப்பட்ட விதமும், தனியறையில் அந்தப் பெண்ணை கண்ணீரோடு காட்டுகையில், அப்பா மனசுக்குள்ள அப்படி ஒரு வலிங்க. நாம் மட்டும்தான் உள்ளிருந்து அழுகிறேன்னு நெனச்சுட்டு இருந்தேங்க. வலையிலும் ஒரு ஆறுதல். நல்ல பதிவுங்க

said...

//நாம் மட்டும்தான் உள்ளிருந்து அழுகிறேன்னு நெனச்சுட்டு இருந்தேங்க.//

அஹா! இப்பத்தானே தெரியுது! நம்மளைபோல் நிறைய பேர் இங்கே உலாவிக்கிட்டு இருக்காங்கன்னு. உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்சி இளா. ;-)