Thursday, December 14, 2006

134. கதயல்ல.. நிஜத்தின் மூன்றாம் பகுதி

கதையல்ல நிஜத்தின் மூன்றாவது பகுதி இது. ஒன்றையும் இரண்டையும் நீங்கள் இங்கே படிக்கலாம்.


அங்கே போனது நான் எனக்கு தேடி கொண்ட ஆப்புன்னு சொன்னேன் அல்லவா?


அன்றிலிருந்து அவர்கள் சேட்டை அதிகம் ஆனது..

அதில் சில இங்கே:

1- மின்சார கண்ணாவில் விஜய் உட்காரும்போது மோனிஷா அவர் நாற்காலியை இழுப்பது நினைவில் இருக்கிறதா? அதேபோல் எனக்கும் செய்தனர் (அப்போது இந்த படம் இன்னும் வெளிவராத காலம்). விஜய் அதை அறிந்து நாற்காலி உள்ளதைபோல் பாசாங்கு செய்வார். ஆனால், நான் கீழே விழுந்தேன்.

2- எழுதும்போது பென்சிலை தட்டிவிடுவது.. என்னால் குறிப்பிட்ட நேரத்தில் எழுதமுடியாமல் போய் ஆசிரியரிடம் திட்டு வாங்கியுள்ளேன்..

3- ஓவிய வகுப்பில் என்னுடைய ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு வகுப்பு நோட்டிஸ் போர்ட்டில் ஒட்டியிருந்தபோது, என் காதுபட அந்த ஓவியத்தை அசிங்க அசிங்கமாக திட்டியது.. அதை கேட்டு நான் அழுதது..

4- இடைவேளை நேரத்தில் நான் சாப்பிட வாங்கிய பொருளை கீழே தட்டிவிட்டு, எதுவும் தெரியாமல் நடந்துபோனது...

இப்படி பல சம்பவங்கள். மேலே உள்ளது சின்ன சேம்பில் மட்டுமே! ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பதிவு போட வேண்டாமேன்னு சுருக்கியது..
இந்த சேட்டைகள் 3 மாதங்களுக்கு தொடர்ந்தது. இவர்கள் செய்த சேட்டைகள் பலவற்றை நான் மறந்துவிட்டேன்.

அதற்க்கு காரணம் அந்த மூன்றாவது மாதத்தில் நடந்த சில சம்பவங்கள்..

மார்ச் மாதத்தில் எங்களுக்கு செமெஸ்டர் பரிட்சை வந்தது. அந்த வகுப்பில் என்னை மிகவும் துன்புறுத்திய அந்த பெண்தான் முதல் மாணவியாம். என்னை வந்து மிரட்டினாள். அவள்தான் இப்போதும் முதலாக வருவாள் என்று. அப்படி அவள் வந்தால், நான் அந்த வகுப்பை விட்டு வெளியாகனும். இதுதான் அந்த பந்தயம்.

"பந்தயத்துக்கு நான் தயார். நீ தயாரா? அப்படி நீ தோற்றால், நீ என்ன செய்ய போகிறாய்?"ன்னு நான் தைரியமாக கேட்டேன்.

நான் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு ரொம்பவே இருந்தது. அவள் என்னை விட்டு விலகி விடுவதாகவும், இனி என் விஷயத்தில் தலையிடமாட்டேன்னும் சொன்னாள்.

அப்பாடா.. ஒரு வழியா ஒரு பிரச்சனைக்கு கூடிய சீக்கிரத்தில் நல்ல வழி பிறக்கபோகிறதுன்னு மகிழ்ச்சியா இருந்தேன்..

அதன் பிறகு அந்த பெண் படிப்பதை பார்த்து நானே ஆச்சர்யப்பட்டேன்.. எந்த நேரமும் கயில் புத்தகத்தோடு இருந்தாள். படித்து கொண்டே இருந்தாள். சிலர் என்னை "வாப்பஸ் வாங்கிக்கோ! நீ ஜெயிப்பது கஷ்டம்"ன்னு சொன்னாங்க..

பரிட்சை வாரமும் வந்தது. நான் நன்றாகவே செய்தேன். அவளும் நன்றாகவே செய்திருப்பாள்ன்னு நம்பினேன்.. உள்ளுக்குள்ளே ஒரு சின்ன பயம். .. அவள் ஜெயித்துவிடுவாளோன்னு...

பரிட்சை முடிந்து அன்த சனிக்கிழமை.. ஒரு தாத்தா என் கடைக்கு வந்தார். அவர் தினமும் வருபவர்தான்.. ஆனால், எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால், அவருடன் வருவது அதே பெண்தான்.
அய்யோடா! இங்கேயுமா?
அவர் என்னை பார்த்து நலம் விசாரிக்கயில் அவளின் முகத்தில் கோபதில் சிவந்தது. அந்த வயோதிகரை ஏசினாள்.

அவர் கூலாக பேசினார்:
"இது யாருன்னு தெரியலையா? தீபாவளிக்கு நம் வீட்டுக்கு வந்தாங்களே! புதுசா இன்கே கடை வச்சிருக்காங்கன்னு நான் உன் கிட்டே சொன்னேனே! அவங்க மகள்தான். அன்னைக்கு வீட்டுக்கு இந்த பிள்ளை வந்தபோது நீ பூலி பண்ணினே! ஆனால், 4 மாதத்துக்கு பிறகும் அதை ஞாபகம் வைத்திருக்கிறாயே!!"

எனக்கு அப்போதுதான் புரிந்தது. இந்த இடத்துக்கு மாறி வந்து நான் போன முதல் வீடு அந்த பெண்ணுடைய வீடுதான். ஆனால், எனக்கோ, அவளுக்கோ.. இரண்டு பேரும் அடையாளம் தெரியாமல் இவ்வளவு நாட்களாக இருந்திருக்கிரோம்.

பெற்றோர்கள் நண்பர்கள்.. பிள்ளைகள் எதிரி!!!

அவள் நடந்ததை தன் வீட்டாரிடம் சொல்லியிருக்காள் போல.. மறுநாள் அவளின் பெற்றோர் என் கடைக்கு வந்தனர்.

எங்களுக்குள் வளர வேண்டிய நட்பு தப்பான வழியில் கொழுந்துவிட்டு எறிவதை தண்ணீர் ஊற்றி அணைக்க அந்த நால்வரும் பேசி, எங்களுக்கு உண்மைகளை எடுத்துறைத்து, சமாதானம் பேசினார்கள்.

எப்படியோ என் மனமும் இறங்கியது. அவள் மனமும் இறங்கியது..
அடுத்த சீன் என்னனு கேட்குறீங்களா? மறுநாள் பள்ளிக்கு ஒன்றாய் சென்றதுதான். எங்களை பார்த்த அவளின் நண்பர்களுக்கு திகைப்பு.. (கண்ணேதிரே தோன்றினாள் படத்துல கரணும் பிரஷாந்தும் ஒன்றாய் பைக்குல போய் இறங்கியதை பார்த்து கரணின் நண்பர்கள் எப்படி திகத்தனரோ, அப்படியேதான்).. (ஆனாலும், அப்போது இந்த படம் வெளிவரவில்லை..)

நீங்கள் திட்டுவது புரியுது. அதனால், மற்றவை இன்னொரு நாளைக்கு.. இன்னொரு பதிவில் தொடரும்...

5 Comments:

c.m.haniff said...

Supera eshuti irukeenga my friend, continue ;)

said...

Ungka complimentkku NanRi Haniff..:-)

said...

அப்பா! நல்லவேளை நான் மலேசியால படிக்கல.... 7 வயசுலேயே எல்லாரும் டெரரிஸ்ட்டா இருக்காங்க?!?!?!

said...

//
நீங்கள் திட்டுவது புரியுது. அதனால், மற்றவை இன்னொரு நாளைக்கு.. இன்னொரு பதிவில் தொடரும்...
//
இன்னைக்கு வரை அடுத்த பதிவு வரலை
ஏன்????


//
ஜி said...
அப்பா! நல்லவேளை நான் மலேசியால படிக்கல.... 7 வயசுலேயே எல்லாரும் டெரரிஸ்ட்டா இருக்காங்க?!?!?!
//
ரிப்பீட்டேய்

இங்கல்லாம் 3 - 3 1/2 வயசுலயே ஸ்கூல்ல கொண்டுபோய் விட்டுடறாங்க.

நான் 1வது படிக்கும் போது 5 வயசு.

said...

//
நீங்கள் திட்டுவது புரியுது. அதனால், மற்றவை இன்னொரு நாளைக்கு.. இன்னொரு பதிவில் தொடரும்...
//
இன்னைக்கு வரை அடுத்த பதிவு வரலை
ஏன்????


//
ஜி said...
அப்பா! நல்லவேளை நான் மலேசியால படிக்கல.... 7 வயசுலேயே எல்லாரும் டெரரிஸ்ட்டா இருக்காங்க?!?!?!
//
ரிப்பீட்டேய்

இங்கல்லாம் 3 - 3 1/2 வயசுலயே ஸ்கூல்ல கொண்டுபோய் விட்டுடறாங்க.

நான் 1வது படிக்கும் போது 5 வயசு.