Thursday, November 30, 2006

112. இது கதை இல்லை.. நிஜம்!!!

சேரன் ஆட்டோகிராப் மூலமா அவரோட காதல்களை நினைவு கூர்ந்தார்.. இப்போ தங்கர் பச்சன் தன்னோட பள்ளி கூடம் மூலமா என்னத்தை நினைவு கூர போகிறார்ன்னு தெரியலை.

ஆனால், எனக்கு என் பள்ளி கூட வாழ்க்கையை பின்னோக்கி யோசிச்சப்ப நான் ஒன்றை கண்டுப்பிடித்திருக்கிறேன். ஒரே அனுபவத்தை மூன்று முறை வேறு வேறு கால கட்டத்தில் நான் அனுபவித்ததுதான்..

என் பள்ளி வாழ்க்கையை மூன்றாக பிரிக்கலாம்..
1- ஆரம்ப பள்ளி காலம்: தமிழ் மீடியம் (6 வருடம்)
2- இடை நிலை பள்ளி காலம்: மலாய் மீடியம் (5 வருடம்)
3- உயர் கல்வி காலம்: ஆங்கில மீடியம் (5 வருடம்) --> இதை இன்னும் தாண்டவில்லை

மூன்று வெவ்வேறு காலத்தில் மூன்று வெவ்வேறு மீடியத்தில் படிக்க ஆரம்பித்த போதுதான் அந்த சம்பவங்கள் நடந்தன..

1- ஆரம்ப பள்ளி காலம்

மலேசியாவில் ஆரம்ப பள்ளி 7 வயதில் ஆரம்பமாகும். தமிழ், மலாய், ஆங்கிலம் என்று மூன்று மீடியத்தில் இது உள்ளது. நாம் எந்த இனத்தை சார்ந்திருந்தாலும், மூன்றில் ஏதாவது ஒன்றில் நாம் சேரலாம். இதில் நம் இனத்தவருக்குதான் advantage.. மலாய்காரர்கள் மலாய் பள்ளியில்தான் சேர்வார்கள். சீனர் மலாய் அல்லது சீன பள்ளியில் சேர்வார்கள். ஆனால், நம் இனத்தவர் தமிழ், அல்லது மலாய் அல்லது சீன மீடியத்திலும் சேர்வார்கள். இது நாம் பெருமை படும் ஒரு விஷயம்.

நான் தமிழ் பள்ளியில்தான் சேர்ந்தேன். தாய் மொழியை காக்க, நம் மொழியை நாம்தானே கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லி தற்பெருமை அடிக்கிறார்களே அதற்காக இல்லை. அப்படி நான் சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க. ஏன்னென்றால், அப்போ எனக்கு 7 வயதுதான். நான் அரட்டை அரங்கத்தில் அருமையாக பேசும் சின்ன பிள்ளைகள் போல் பேசும் வல்லமை படத்தவள் அல்ல.

வீட்டில் தமிழிலேயே பேசி பழகின எனக்கு அந்த முதல் வகுப்பு(காராக் ஆரம்ப தமிழ் பள்ளி) எனக்கு ஒரு அன்னியத்தை தர வில்லை. எல்லாருடனும் சகஜமாக பழகினேன். வகுப்பின் தலைவியும் நானே!! ஒரு வருடம் நன்றாக ஓடியது. ஒவ்வொரு நாளும் எப்போ காலையாகும்.. பள்ளிகூடம் போகனும்ன்னு ஆர்வமாய் இருந்தேன்.

நான் இரண்டாம் வகுப்பின் நுழைவதற்க்கு ஒரு மாதத்திற்க்கு முன் என் பெற்றோர் சிலாங்கூருக்கு மாற்றலாகி வந்தனர். நானும் அவர்களோடு வந்து பத்துமலை தமிழ் பள்ளியில் சேர்ந்தேன். (பத்துமலைன்னதும் உங்களுக்கு தொணுகிற விஷயம் தைபூசம்தானே! ஆமாம், இது முருகனின் தலம். அந்த மலையின் கீழே, கோவில் காம்பவுன்ட் உள்ளேதான் அந்த பள்ளி அமைந்திருந்தது).

என் பின்னால் ஒரு கூட்டமே நின்று தோல் கொடுத்த நண்பர்கள் அங்கே இல்லை. நான் ஒரு தனி மரம் அப்போது. என்னை என் தந்தை அந்த வகுப்புக்கு அழைத்து சென்றார். எல்லாருமே அனியம் எனக்கு!! என்னை ஒரு மாதிரியாய் பார்த்தார்கள். ஏனெனில், அவர்கள் அப்போது பகாங் என்ற ஊரை கேள்விப் பட்டதில்லை போலும். வகுப்பு மாணவர்கள் 6 க்ரூப்-ஆக பிரிக்கப் பட்டிருந்தனர். அந்த 6 க்ரூப்பும் தனி தனி க்ரூப்ன்னு அப்போ எனக்கு தெரியலை. ஒரு மேஜை காலியாக இருப்பதை பார்த்துட்டு என் அப்பா என்னை அங்கே உட்கார சொல்லிவிட்டு போய்விட்டார்.

கொஞ்ச நேரத்தில் ஒருவன் வந்தான்.

"ஏய்.. எந்திரி!!!" என்று சத்தம் போட்டான். நான் ஏன் என்று அமைதியாக கேட்டேன்.

"இது என் இடம். உன்னை போன்றவர்கள் அதோ அங்கேதான் உட்காரவேண்டும்" என்று சொல்லி ஒரு இடத்தை காட்டினான். என் புத்தகப்பையை கீழே போட்டான்.

அப்போது அவன் என்ன சொல்ல வந்தான்.. ஏன் நான் அங்கு போய் உட்கார வேண்டும்ன்னு சொன்னான்? என்னகு ஒன்றும் புரியவில்லை. ஏண்டா இந்த பள்ளிக்கு வந்தோம்! என் அப்பா அம்மா இங்கு மாறி வந்தார்கள்ன்னு அவங்க மேல் கொஞ்சம் கோபம் வந்தது.

நானும் அவன் சுட்டி காட்டிய இடத்தில் போய் அமர்ந்தேன். அங்கே ஏர்கனவே இரண்டு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால், அங்கே இருந்ததோ 6 மேஜைகள். நானும் இங்கே உட்காரலாமா?"ன்னு கேட்டு அந்த இரண்டு பேர் உட்கார்ந்து இடத்தில் உட்காராமல் கொஞ்சம் தள்ளீயே உட்கார்ந்தேன். ஏன் வம்பு?

நான் உட்கார்ந்ததும் அந்த இரண்டு பேரும் (ஒரு பருமனான பையன்; ஒரு குள்ளமான மாணவி) குசுகுசுன்னு பேசினாங்க.. என்னை பற்றிதான் பேசுறாங்கன்னு எனக்கு நல்லா தெரிஞ்சது..
ஒரு முறை அந்த வகுப்பை உட்கார்ந்த இடத்திலிருந்தே சுற்றும் முற்றும் பார்த்தேன். சிலர் என்னை பார்த்துட்டு அவங்களுக்குளேயே பேசிக்கிட்டாங்க. சிலர் அவர்களோட நண்பர்களுடன் பேசி சிரிசுட்டு இருந்தாங்க. வகுப்பாசிரியர் மாணவர்களின் பெற்றோர்களிடம் ரெஜிஸ்திரேஷன் செய்து பணம் வாங்கி கொண்டிருந்தார்..

கொஞ்ச நேரத்தில் அந்த குண்டு பையனும் குட்டை பெண்ணும் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துட்டு என்னை பற்றி விசாரிச்சார்கள். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொன்னேன். ஆனால், அவர்கள் என் அப்பா அம்மா பேரைக் கேட்டுவிட்டு என் முன்னாடியே கிண்டல் செய்தார்கள். எனக்கு மூக்கின் மேலே கோபம் வந்தது. அதுவரை நான் யாரையும் அடித்தைல்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட நிலையில் நான் என்னாலும் இருந்ததில்லை. அன்று வந்தது. பக்கத்தில் கல் இருந்தால், அதை தூக்கி அந்த குண்டன் தலையில் போடனும் போல இருந்தது. பளார்ன்னு அந்த குட்டச்சிய அறையனும் போல இருந்தது.

இடத்தை விட்டு எழுந்தேன். இரண்டு பேரும் என்னை பார்த்து திகைத்தனர். நான் அடுத்த செயல் செய்யும் முன் என் பேரை யாரோ கூப்பிட்டு திகைத்தேன்.

பதிவு ரொம்ப நீளமாக ஆயிடுச்சு. சோ, இந்த பதிவை தொடரும்ன்னு போட்டு முடிச்சுடுறேன்.. இன்னொறு பதிவுல தொடருகிறேன். :-D

8 Comments:

said...

first attendance..next padichittu comment :-))

said...

hi
this was an nice post. keep writing. am eager to read more on your schooling. Havent visited your country but have read a lot on it.
cheers
deekshanya

said...

//மு.கார்த்திகேயன் said...
first attendance..next padichittu comment :-)) //

Neenggathan eppothum absent podaame attendance podureengga.. hehehe..

said...

//Deekshanya said...
hi
this was an nice post. keep writing. am eager to read more on your schooling. Havent visited your country but have read a lot on it.
cheers
deekshanya //

First, welcome to my blog..
Second, thanks for your compliments. ;-)
Will write more.:-)

Anonymous said...

My friendin autograph, nalla eshuti irukeenga, continue ;)

said...

;)

said...

என்னை என் பள்ளிக்கூட காலத்துக்கு இட்டுச் சென்றது உங்களின் பள்ளிக்கூட மலரும் நினைவுகள் மை பிரண்ட்..

உங்களின் எழுதும் திறன் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது..வாழ்த்துக்கள் மைபிரண்ட்

said...

உங்க பாரட்டுக்கு மிக்க நன்றி.. இப்படிப்பட்ட வாழ்த்துக்கள்தான் என் எழுதும் திறனை வளர்கிறது.. :)