Monday, November 13, 2006

உனக்காகத்தானே உயிர்வாழ்கிறேனே!!!

இன்னைக்கு சினிமா நியூஸ் எழுதப்போவதில்லை. மாறாக உங்களுக்காக ஒரு குறும்படம்.. ஹஹஹா..

என்னுடைய முந்தைய பதிவில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர் உன்னிகிருஷ்ணன் என்றும், மிக மிக பிடித்த பாடகி சுஜாதா என்றும் குறிப்பிட்டுள்ளேன்.இவர்கள் இரண்டு பேரும் இணைந்து பாடும் எல்லா பாடலும் மிக மிக பெரிய வெற்றியைதான் தரும். தனியாக பாடினாலே நூற்றுக்கு நூறை விட அதிகமாகவே புள்ளிகள் தர தயாராக இருக்கும் நாம், இவர்கள் சேர்ந்து பாடினால் பேனாவில் மை தீரும் அளவுக்கு புள்ளிகளை வாரி வாரி வளங்கினாலும், அது பத்தாது.

ஒரு சில இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் இணந்து பாடிய பாடல்தான் "உனக்காத்தானே உயிர்வாழ்கிறேனே".. படம்: நெஞ்சில் ஜில் ஜில். இந்த பாட்டு எனக்காகவே இவர்கள் பாடின மாதிரி ஒரே ஃபீலிங்.. ஹி ஹி ஹீ.

படத்தை எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து எனக்கே தாடி மீசையெல்லாம் வளர்ந்திடும் போலிருக்கு. அதான் நானே படத்துக்கு காட்சி செய்யலாம்ன்னு முடிவுபன்னிட்டேன்.

என்ன காட்சி போடலாம்ன்னு யோசிச்சப்ப பேரழகி அசினும் பேரழகன் சூர்யாவும்தான் பொருத்தம்ன்னு முடிவெடுத்தேன். கஜினியில் கலக்கிடாங்கல்ல.. (கொசுறு தகவல்: சூர்யாவும் அசினும் கௌதம் இயக்கும் உடல் பொருள் ஆவியில் இணைகின்றனர்)

அதுமட்டுமில்லை. என்னுடைய சீன, மலாய் நண்பர்களையும் இந்த படத்தை பார்க்க வைத்தேன். எல்லாரும் enjoy பன்னினாங்க. அந்த கதையை சுருக்கமாக சொல்ல சொல்லியும் சிலர் வற்புருத்தினாங்க. சோ, இதோ வந்துவிட்டது.. நீங்கள் கேட்ட படம், நான் தினமும் கேட்டு ரசிக்கும் பாடல்...

என்னுடைய முந்தைய கைவரிசைகளை பார்த்து ரசிக்க, கீழே க்ளிக் செய்யவும்:
1- பார்த்த முதல் நாளே (சூர்யா & திரிஷா)
2- ஒரு நொடி இரு நொடி (சூர்யா & அசின்)
3- கவிதையே தெரியுமா (சித்தார்த் & திரிஷா)

பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யவும். நன்றி!!!

2 Comments:

மு.கார்த்திகேயன் said...

நல்ல முயற்சி மை பிரண்ட்

MyFriend said...

Karthikeyan Muthurajan said...
நல்ல முயற்சி மை பிரண்ட்


நன்றி கார்த்திக்