இன்னைக்கு ஒரு நடிகரை பற்றி எழுதப்போறேன். இவர் இளங்கோவா அறிமுகமாகி மனோன்னு ஒரு பெண்ணை காதலித்தார். ஆனால், மனோ தன் நண்பரை காதலிப்பதை அறிந்ததுமே, காதலனாய் இருந்த இளங்கோ காவலனாய் மாறிட்டாரு..
அனேகமா எல்லாருமே கண்டுபிடிச்சிருப்பீங்க. முதல் படத்திலேயே நல்ல நடிகன்னு பேரெடுத்திருந்தார், Sri காந்த்...
கிழக்கு கடற்கரை சாலையையும் சேர்த்து 14 படங்கள் நடித்திருந்தார்.. ஆனால், வெற்றியை தொட்ட படங்கள் எத்தனை?
வெற்றி பெற்ற படங்கள்:
1- ரோஜா கூட்டம்
2- ஏப்ரல் மாதத்தில்
3- கனா கண்டேன்
மீதி 11?
காலேஜ் படித்துக்கொண்டிருந்த அக்காலத்திலேயே மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தார் இவர். "டிஷூம்" சசி இவரை பார்த்து, "என் படத்தில் நீ நடிக்கிறீயா?ன்னு கேட்டதும், சரின்னு சொல்லிட்டாரு.
பிறகு படிப்பை பாதியில் விட்டுட்டு இயக்குனரின் அலுவலகத்தில், நடிப்பை கற்றுக்கொண்டார். எப்போதும் "clean shave"வுடன் இருந்தவரை, சசிதான் "கொஞ்சம் தாடி வச்சுக்கோ! உனக்கு நல்லா இருக்கும்"ன்னு சொன்னார். ரோஜா கூட்டம் நன்றாக ஓடியது.
S.S. ஸ்டான்லி ஏப்ரல் மாதத்தில் நடிக்க அழைத்தார். தன் படிப்பு பாதியிலேயே நின்றதை நினைத்து, மீண்டும் காலேஜ் லைஃப் அனுபவிக்கனும்ன்னு இந்த படத்தை ஒப்பு கொண்டவர், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பிலேயே விபத்து ஏற்ப்பட்டது. ஒரு சில இடைவேளைக்கு பிறகு படம் தொடங்கும்போது, படத்து நாயகி சினேகாவின் கால் இன்னும் குணம் அடையவில்லை. அதனால், நாயகி படம் முழுதும் (ஏ நெஞ்சே பாடலை தவிர்த்து), உட்கார்ந்து கொண்டோ, நின்னு கொண்டோதான் இருந்தார். இந்த படம் முடிவதற்க்குள், Sri kanth சினேகாவுடன் காதல்ன்னு கிசுகிசுக்கப்பட்டார்..
படம் நன்றாக ஓடியதும், நிறைய இவக்குனர்கள் இவரை தேடி வந்தவண்ணமே இருந்தனர். 2003-இல் 3 படங்கள் நடித்தார். மனசெல்லாம், பார்த்தீபன் கனவு, ஜூத்.. மனசெல்லாம் படத்தில் இவர் சொல்லிக்கொல்லும்படி நன்றாகதான் நடித்தார் (ஃப்லாஷ்பேக் முடியும்வரை).. ஃப்லாஷ்பேக் முடிந்ததும் இவர் ஓவரா நடிச்சாரு. அப்படிப்பட்ட அந்த ரியாக்ஷன் அங்கே பொருந்தவில்லை. படமும் எடுப்படாமல், தோல்வி கண்டது.
பார்த்தீபன் கனவு வெற்றி படம். இதில், Sri Kanth கதாநாயகனுக்கு தரும் முன்னுரிமையை விட கதைகளமே முக்கியம்ன்னு நினைத்து, ஹீரோயின் பேஸ்ட் படத்தில் நடித்தார். பிறகு தான் அக்க்ஷன் ஹீரோ ஆகனும்ன்னு நடித்தது ஜூத். கதை எடுபடவில்லை.
யாரோ இவருக்கு அக்க்ஷன் பொருந்தவில்லை, இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவைன்னு சொன்னதால், போஸ் படத்துக்கு கடுமயான கொமாண்டோ பயிற்சி எடுத்துக்கொண்டார். சிலர் பாரட்டினார்கள். ஆனால், படம் தோல்வியைதான் சந்தித்தது. அதன் பிறகு வெளியான வர்ணஜாலமும் எந்த ஜாலத்தையும் காட்ட வில்லை.
கனா கண்டேன் இந்தியர்களின் குடிநீர் பிரச்சனை மையமாக வைத்து எடுத்த படம். இது வெற்றி பெற்றதும், இவருக்கு திரும்பவும் நம்பிக்கை வந்தது. வரிசையாக ஒரு நாள் ஒரு கனவு, பம்பர கண்ணாலே, மெர்கூரி பூக்கள், உயிர்னு நடித்தார். இப்போது வந்துள்ள படம் கிழக்கு கடற்கரை சாலை.
இதில், எது வெற்றி பெற்றது, எது இல்லைன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.
சரி, நான் ஏன் Sri Kanth-இ பற்றி இன்னைக்கு எழுதியிருக்கேன்னு நீங்கள் நினைக்கலாம். இதற்க்கு நான் நேற்று பார்த்த கிழக்கு கடற்கரை சாலைதான் காரணம். நான் இவ்வளவு எழுதியிருக்கேனென்றால், படம் எப்படியிருக்கும்ன்னு உங்க்ளால் யூகிக்க முடிகிறதா?
நாளை கி.க.சா-வின் விமர்சனம்.
அதுவரை உங்களிடமிருந்து விடை பெருவது,
உங்கள் .::MyFriend ::.
Monday, November 20, 2006
Sri Kanth
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
மை பிரண்ட், கி.க.சா பாத்து நீங்க எப்படிப்பட்ட கொடுமைய அனுபவிச்சு இருப்பீங்கன்னு புரியுது
உண்மைதான்.. நினைச்சு கூட பார்க்கலை. வீகென்ட்ல இப்படி ஒரு படம் பார்ப்பேன்னு..
Tnx for the news my friend, padam naan paarthen, aanal rasikavillai ;)
You are welcome Haniff..
Post a Comment