Sunday, November 12, 2006

பிரசாந்தின் பிரச்சனை என்ன?

1990-இல் தனது 17வது வயதிலேயே வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமாகி கலைமாமணி பட்டத்ஹ்தை பெற்றவர் பிரஷாந்த். தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று காதல் இளவரசன், Top Starன்னு அழக்கப்படுகிறார். இவரின் சினிமா வாழ்க்கையை மூன்றாக பிரிக்கலாம்.


1- கல்லூரி வாசலுக்கு முன்
2- கல்லூரி வாசலுக்கு பின்
3- கல்யாணத்துக்கு பின்

---------------------------------------------------------------------------------
1- கல்லூரி வாசலுக்கு முன்
சின்ன பையனாக அரும்பு மீசையுடன் அறிமுகமாகி பாலு மகேந்திரா, RK செல்வமணி, மணிரத்னம், மணிவண்ணன்னு பெயர்போன இயக்குனர்களின் படத்தில் நடித்தார். அதில் இவருக்கு மைல்கல்ன்னு சொன்னா வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, வண்ண வண்ண பூக்கள், திருடா திருடா மற்றும் ஆணழகன்தான்.வைகாசி பொறந்தாச்சில் அறிமுகமாகி வண்ண வண்ண பூக்களில் தனக்கென்று ஒரு பாணியை காட்டி, செம்பருத்தியில் தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்து, திருடா திருடாவில் மேலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து, ஆணழகனில் ஒரு பெண்ணாக மாறினார் இவர்.

மன்னவாக்கு பிறகு, அவரே தனக்கு சில மாறுதல்கள் தேவைன்னு முடிவுப்பன்னி இரண்டு வருடம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். டான்ஸ், கராத்தே, ஜிம், குதிரை சவாரி, பியானோன்னு எல்லா வித வித்தையும் கற்றுக்கொண்டார்.

2- கல்லூரி வாசலுக்கு பின்
அந்த இரண்டு வருட இடைவேளிக்கு பிறகு கிடைத்த வெற்றிதான் சங்கரின் ஜீன்ஸ். அதர்க்கு முன் கல்லூரி வாஸலை பற்றி பேச வேண்டும். யாருன்னே அடையாளம் தெரியாத அளவுக்கு உடம்பையும், முடியயியும், தாடியயியும் வளர்த்துக்கொண்டு அஜித்துடன் கேர்ந்த்து நடித்த படம் கல்லூரி வாசல். அப்போதெல்லாம் இரண்டு ஹீரோ கதையாக இருந்தாலும், கதை நன்றாக இருந்தாலிவர் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெறாவிட்டாலும், பிரஷாந்தின் அப்பியரன்ஸ் நன்றாக பேசப்பட்டது.

பிரஷாந்த் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் ஜீன்ஸ். பிரஷாந்துக்கு பெரிய செகண்ட் ஒபெனிங் கிடைத்து அப்போது இருந்த முக்கிய ஹீரொக்களில் ஒருவராக கருதப்பட்டார். பிறகு, வரிசையாக கண்ணேதிரே தோன்றினாள், காதல் கவிதை, ஜோடி, அப்புன்னு நிறைய படங்கள் நடித்தார்.இந்த கால கட்டத்தில் ரஜினிக்கு அடுத்து வெளிநாடுகளில் இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை இவருக்குத்தான் அதிகம். அப்போது வெளிநாட்டில் நிறைய கலைநிகழ்ச்சிகளை நடத்தினார்.2000-இற்க்கு மேல் வந்த படங்கள் நன்றாக ஓடாவிட்டாலும் கலைநிகழ்ச்சிகள் இவருக்கு புகழ் சேர்த்தன.

3- கல்யாணத்துக்கு பின்


இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு கல்யாணம் செய்துக்கொண்டார். திருமணம் செய்துக்கொண்ட அந்த நேரத்தில் நிறைய படங்கில் நடிப்பதில் ஒப்புக்கொண்டார். ஆனால், கூட்டி கழித்து பார்த்தால், ஜாம்பவான் மட்டும்தான் ஒப்புக்கொண்ட படத்தில் வெளியான் ஒரே படம். கிரஹலக்ஷ்மியை மணம்புரிந்த இவர் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்று நினைத்தவர், இப்போது தனக்கு ஓர் ஆண் குழந்தை இருந்தும், இவர் தனது மனைவியுடன் இல்லை.

அண்மையில் இவரது படங்கள் பல வெளிவராமலேயே இருக்கின்றன. அப்பலெ மீறி வந்த ஜாம்பவான் நன்றாக ஓடவில்லை. நடித்து வெளிவராமலும் பூசை மட்டும் போட்ட படங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் அடைக்களம், தகப்பன் சாமி, புலன் விசாரணை 2 நடித்து முடிந்தும் வெளிவராமல் மாட்டிக்கொண்டு முழிக்கின்றன. ரன்வே, போலிஸ் போன்ற பூசை போட்டவுடன் கிடப்பில் கிடக்கின்றன.


இதற்க்கு காரணம் என்ன? பிரசாந்துக்கு இன்றுவரை தயாரிப்பாளர்களிடம் பிரச்சனை கிடையாது. எந்த இயக்குனரிடமும் என் காட்சி இப்படி வரவேண்டும் அப்படி வரவேண்டும் என்று வற்புருத்தியதும் கிடையாது. எந்த நடிகைகளிடமும் கிசு கிசு கிடைஆஹு. ஹான் உண்டு தன் வேளையுண்டு என்று இருந்த பிரசாந்தின் பிரச்சனை என்ன? இவரை விட கிறமை குறைந்த பல நடிகர்கள் பலர் இன்று தமிழ் திரைக்கு வந்துவிட்டனர்.இவரது பிரச்சனையய் கண்டுபிடித்து இவரே மீண்டு வருவதுதான் சிறந்தது!!!!

4 Comments:

said...

first comment :-))

said...

நல்ல அலசல் மை பிரண்ட்.. ஒரு காலத்தில் சிறு தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளையாக இருந்த பிரசாந்த், இப்போ அதே மாதிரி பல நடிகர்கள் வந்ததால இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்..

இனிமேல் இதிலிருந்து மீள்வாரா என்பது கொஞ்சம் சந்தேகமே

said...

Karthikeyan Muthurajan said...
நல்ல அலசல் மை பிரண்ட்.. ஒரு காலத்தில் சிறு தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளையாக இருந்த பிரசாந்த், இப்போ அதே மாதிரி பல நடிகர்கள் வந்ததால இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்..

இனிமேல் இதிலிருந்து மீள்வாரா என்பது கொஞ்சம் சந்தேகமே


நிறைய பேர் வந்தாலும் போனாலும், இயக்குனர், தயாரிப்பாளர், சக நடிகர்களுக்கு தொல்லை கொடுக்காத, தொந்தரவு கொடுக்க விரும்பாத மிக சிலரில் பிரஷாந்தும் ஒருவர். ஆனால், இப்போது அவரே அவருக்கு பிரச்சனையாகிவிட்டார், கார்த்திக்..

chinatoday said...

சினேகா பின்னாடி சுத்துறது பிரசாந்த் இல்லாமால் வேற யார்? சினேகா பின்னாடி சுத்த ஆரம்பிச்சதில் இருந்து இந்த பொறுக்கிக்கு எல்லாமே இறங்கு முகம் தான். இனி மேலே வருவது கஷ்டம். நடக்காத காரியம்.