Monday, November 27, 2006

108. சினிமா நியூஸ் 3

தசவதாரம் கதைபொப்படி இரண்டு அவதாரம் இறந்து விடுகிறது. மீதம் உள்ள எட்டு மட்டும்தான் கடைசி வரை வருமாம்.

பி. வாசு தன் மகன் ஷக்தியை நாயகனாக வைத்து இயக்கும் படம் தொட்டால் பூ மலரும். தவமாய் தவமிருந்து பட்ஸத்தில் தாத்தா வேடம் வரை நடித்த ராஜ் கிரண் இதில் தாத்தா வேடம் போடுகிறார்.

கூடல் நகர் படத்துக்காக சுமார் இருபது லட்சம் ரூபாய் செலவில் திண்டுக்கல்லில் கிராமம் போன்று தத்ரூபமாக செட் போட்டிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன். பரத், பாவனா நடிக்கும் இப்படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார்.

பொய் நாயகி விபலா ராமனுக்கு ஷூக்கள் மீது தனி பிரியம் அதிகமாம். இவர் ஷாப்பிங் போனால் முதலில் வாங்குவது ஷூதானாம். இவரிடம் சுமார் 200 ஷூக்கள் இருக்கிறதாம்.

இசைஞானி இளையராஜா தன்னுடைய அண்ணன் பாவலர் வரதராஜன் பெயரில் சிறந்த இலக்கியவாதிகளுக்கு வருடா வருடம் விருது கொடுக்கப் போகிறார். தமிழுக்காக 'இசைஞானி இளையராஜா இலக்கியப் பெருமன்றம்' என்ற அமைப்பை ஆரம்பிக்கிறார்.

சிவப்பதிகாரம் நாயகி மம்தா நல்ல குரல் வளம் கொண்டவர். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மலையாளத்தில் இரண்டு ஆல்பம் மற்றும் படத்தின் பிண்ணனி பேச ஆசைப்படுகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரி வித்யா பெயரில் சினிமா கலைஞர்களுக்கு விருது கொடுக்கலாம் என உத்தேசித்து வருகிறது தமிழக அரசு.

மன உலைச்சலால் அவதிப்படும் சினிமாக் கலைஞர்களுக்கு மன நல கவுன்சலிங் கொடுக்க போவதாக கூறி அடஹ்ற்கான பயிற்ச்சியும் எடுத்து வருகிறார் நடிகை ஸ்ரி பிரியா.

கட்சி வேலைகளுக்கு கொஞ்ச காலம் லீவு விட்டுருக்கிறார் கார்த்திக். தன் மகனை கதாநாயகனாக்கும் முயற்சியில் சொந்தப் படம் தயாரிக்கும் திட்டத்தில் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் இவர்.

கை வந்த கலை படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் பாண்டியராஜனின் மகன் பிரிதி. தற்சமயம் மச்சான் என்ற படத்தில் புதுக் கதாநாயகி மதுசந்தாவுடன் நடிக்கிறார்.

சகலகலாவல்லவன் என பெயர் எடுத்த விஜய டி. ராஜேந்தர், அவரின் படங்களில் மட்டுமே பாடி வந்தார். தற்போது பிற படங்களுக்கும் பாடுகிறார். இவரின் பாட்டுக்கு மக்களிடத்தில் கிரேஸ் இருப்பதால் சம்பளம் 30 ஆயிரம் வரை தருவதாகக் கூறி கோலிவுட் வாசிகள் அழக்கிறார்களாம். ஓரம்போ படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

தமிழ் - தெலுங்கு இரண்டு மொழிகளில் இயக்கவுள்ளார் விக்ரமன். இந்த படங்களுக்கு A.R. ரஹ்மான் இசையமைகிறார்.


சென்னை காதல் படத்துக்கு முதலில் விக்ரமன் வைத்த தலைப்பு சென்னை. வேறு ஒருவர் இந்தத் தலைப்பை முன்னதாகவே பதிவு செய்திருந்ததால் சென்னையோடு காதலை சேர்த்துவிட்டார்.

1 Comment:

Anonymous said...

Tnx for the cinews ;)