Friday, November 17, 2006

கூடி கும்மியடிக்க..

நேற்று எழுதிய என்ன பாட்டு இது பதிவுல கேட்ட கேள்விக்கு "Mr. Anonymous 1" 3 கேள்விக்கு கரெக்ட்டா பதில் சொல்லிட்டார். மற்ற ரெண்டுக்கும் 5 மணிக்கு க்ளு தருகிறேன்னு சொல்லி பிறகு கொடுத்தேன். ஆனால், அதன் பிறகு யாரும் முயற்ச்சி செய்யவில்லை.
இதுதான் பதில்கள்:
1- என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா (உன்னை நினைத்து)
2- எங்கே அந்த வெண்ணிலா ( வருஷமெல்லாம் வசந்தம்)
3- பாடவா பாடவா (லிட்டில் ஜான்)
4- ரா ரா ரா ராஜகுமாரா (என்னவளே)
5- தில்லானா தில்லானா (முத்து)

3 பதிலை சரியாக சொன்ன Mr. Anonymous 1-க்கு வாழ்த்துக்கள்!!
-----------------------------------------------------------------------------
சினிமா நியூஸ் 2

சினிமா நியூஸ் ஒன்னுக்கும் ரெண்டுக்கும் பத்து நாலு கேப் விட்டாச்சு. இனிமேல், நீண்ட கேப் விடாமல் எழுதிடுறேன்..

இன்னைக்கு சினிமா நியூஸ் ஆரம்பிக்கும் முன்னே ஒரு குட் நியூஸ். சித்தார்த், ஜெனிலியா நடித்த பொம்மரிலு படம் நேற்றோடு 100 நாட்கள் ஓடிவிட்டது. இன்னமும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்ப்பு இருக்குது. இந்த படக்குழுவினர் இப்போது துபாய், ஆஸ்திரேலியாவில் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடிகொண்டிருக்கின்றனர். வாழ்த்துக்கள்!

நம்ம ஹரிஸ் ஜெயராஜ் தெலுங்குல ஒரு கலக்கு கலக்கிகிட்டு இருக்காரு. மகேஷ் பாபு, திரிஷா நடிச்ச சைனிகுடு படத்துல உள்ள ரெண்டு பாடல்கள் தான் தாப் தென் வரிஸையில முதல் ரெண்டு இடத்துல இருக்கு. இதுதான் இவரது நேரடி முதல் தெலுங்கு படம்.

மகேஷ் பாபுன்னதும் எனக்கு ஞாபகம் வருவது விஜய்தான். தெலுங்குல மகேஷ் நடிக்கிற அத்தனை வெற்றி படங்களையும் தமிழில் உரிமை வாங்கி, ரீமேக் செய்யிரவர் விஜய். சேம்பிலுக்கு ரெண்டு சொல்லனும்ன்னா கில்லி, ஆதி. இப்போ விஜய் நடிச்சிகிட்டு இருக்கும் போக்கிரியும் ம்கேஷ்யுடைய படம்தான். கூடிய சீக்கிரதுல சைனிகுடு படத்தின் உரிமையையும் வாங்கிடுவாரு போல. (கொசுறு: தரணி இயக்குதுல வந்த பங்காரம் டெலுங்கு படம் தமிழில் அவர் ரீமேக் செய்கிறார். விஜயும் திரிஷாவும் ஜோடி சேர்ராங்க..)

அப்படி இப்படின்னு ஏதோ ஒரு வழியா தங்கர் பச்சனுடைய பிரச்சனைகள் தெளிவாகி, தன்னுடைய பள்ளிகூடம் ஆரம்பிக்க போகிறர். அட, எப்ப இவர் ஸ்கூல் கட்டுனார்ன்னு கேட்காதிங்க. இவர் அடுத்து இயக்கும் படத்தின் பெயர்தான் இது. ஹீரொ நரேன். ஹீரோயின் சினேகா. கூடவே இவரும் இயக்குனர் சீமானும் நடிக்கிறாங்க.

படம் நடிக்க வாய்ப்பு கிடைக்காத ஹீரோக்கள் சொந்த நிறுவனம் ஆரம்பிச்சு அதில் நடிப்பது வழக்கம். இப்போ இந்த லிஸ்ட்ல புதுசா சேர்ந்திருப்பவர் தனுஷ். A.D பிச்சர்ஸ்ன்னு ஆரம்பிச்சு தில்லாலங்கடின்னு படத்துக்கு பேர் வச்சு தயாரித்து நடிக்க போறாரு.

மாமனார் சூப்பர் ஸ்டாரு அனிமேஷன்னுல வந்து சின்ன பிள்ளைங்கல கவர போறாரு. பெரிய பட்ஜட்டுல எடுக்கபோர இந்த படத்துக்கு அனிமேஷன் செய்யப்போறது ரஜினியின் கடைக்குட்டி சௌந்தர்யாதான்.. சௌந்தர்யா, மாமாவையே தயாரிக்க சொல்லுங்களேன்!!

கடைசியா இங்க SJ சூர்யாவை கொஞ்சம் பார்ப்போம். வாலி, குஷின்னு இயக்குனவரு, எப்போ தமிழ் சினிமாவில் நடிகனா ஆனாரோ, அப்போதிருந்து அவர் செய்யுற சில்மிஷங்கள் இன்னொம் கொஞ்சம் ஓவரா ஆகிடுச்சு. நியூ, அ ஆ, கள்வனின் காதலி.. மூன்றிலுமே இசை சூப்பர். ஆனால், படத்தில் வரும் சில காட்சிகளையும், வசனங்களையும் பார்த்தால், சென்சார் போர்ட் ஒழுங்கா வேலை செய்யவில்லையோன்னு சந்தேகமா இருக்கு. திருமகன் படத்திம் ஸ்டில்களை பார்த்தால், இது அந்த வகையை சேராத படம் மாதிரி தெரியுது. ஆனல், இப்போ பூஜை போட்டிருக்கும் வியாபாரியை பார்த்தல், இரண்டு படத்துக்கும் சேர்த்து கவர்ச்சியையும் ஆபாசத்தையும் இங்கே வழங்கிடுவார் போலிருக்கு. சும்மாவா!! வாழ மீனு, இடுப்பாட்டும் பொன்னு, கேடி பொன்னுன்னு மூனு பேரு இருக்காங்களே.. கூடி கும்மியடிகிறதுக்கு!!!!

3 Comments:

C.M.HANIFF said...

Tnx for the ciNEws ;)

said...

kalaachalaana cine news my friend..

Sorry..konjam work ovar..athu thaan unga cine game maranthutten..

said...

You are welcome Haniff..

Nandri Karthik.. paravaayillai, next game-il kalanthukkungga!!!