Wednesday, November 29, 2006

110. மௌனமே வார்த்தையாய்....

சிலருக்கு எப்போதுமே தனிமை பிடித்த விஷயம். மணிக்கணக்கில் தனிமையில் இருக்க விரும்புவார்கள்.

எதற்கு டஹ்னிமை? தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொள்கிற மாதிரி எதற்காக தீவு மாதிரி மற்றவர்களிடம் இருந்து துண்டித்துக் கொள்ள வேண்டும்?

கேள்விகளை இது மாத்ரியான தனிமை விரும்பிகளிடம் கேட்டால் இவைகளிடம் இருந்து உடனடியாக பதில் வராது. அமைதி காப்பார்கள். அந்த அமதிக்குப் பின்னால் ஓர் ஆழமான சோகம் இருக்கும். அது என்னவென்று அத்தனை சீக்கிரம் வெளிப்படுத்திவிட மாட்டார்கள்.

மற்றவர்களிடம் தங்களின் விஷயங்களை சொல்லும் போது அது வெளியரங்கமாகி இன்னும் விபரீதத்தை ஏற்ப்படுத்தும். அதன்பிறகு நாம் தவறாக விமர்சிக்கபடுவோம் என்கிற அவமானத்தை தவிர்க்கிற போக்கே பயத்துக்கு காரணம்.

சரி, மனம் விட்டுப்பேச ஒருவர் கூடவா இல்லாமல் போய்விட்டார்கள்? ருப்பார்கள். ஆனால், மனம் விட்டுப் பேகினால் தானே! பொதுவான விஷயம் பேசுவார்கள். நாட்டு நடப்பு பற்றிக் கூட அவ்வப்போது விசாரிப்பார்கள். அதே நேரம் தங்கள் விஷயம் என்று வரும்போது மட்டும் வாயை இறுக மூடிக் கொண்டு விடுவார்கள்.

ஒரு விஷயத்தை சரியா, தவறா என்று கணிப்பதில் ஏற்படுகிற குழப்பமே இவைகளின் விஷயங்களை இருட்டுக்குள் தள்ளி வைக்கின்றன. விடை வராத கணக்கை போட்டுப் போட்டுப் பார்த்து கால நேரத்தை வீணடிக்கிற மாதிரி தீர்க்கமுடியாத விஷயங்களை தங்களுக்குள்ளாக போட்டுப்போட்டு குழம்பிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களில் பலர் தங்கள் மனைவி, பிள்ளைகளிடம் கூட இது விஷயமாய் கலந்து பேச மாட்டார்கள்.

சிலர் இருக்கின்றனர். பேசினாலே வம்பு என்று நினைத்துக்கொள்கிற ரகம் இவர்கள். பல நேரங்களில் அமைதி விரும்பிகளாகவே இருந்து விடுவார்கள். ஆனால், இவைகளிடம் விஷயம் இருக்கும் எப்போது எங்கே பேச வேண்டுமோ அங்கே கட்டாயம் இவர்கள் குரல் நேரத்துக்கு ஒலிக்கும்.

இது நிச்சயமாக ஆபத்தில்லாத அமைதி. தேவயில்லாத நேரங்களில் எல்லாம் எதற்கு வீணாகப் பேசி பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற ரகமாக இவர்கள் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் மற்றவர்கள் பேசுவதை கேட்டுக் கொள்வார்கள். அதில் தங்கள் கருத்தை சொல்லாவிட்டாலும் அதில் உள்ள சாரம்சத்தை கிரகித்துக்கொண்டு விடுவார்கள். அது மட்டுமின்றி ஒருவர் அதிகம் பேசுவதால் எந்த மாதிரியான புதுபுது பிரச்சனைகளில் சிக்குகிறார்கள் என்பதையும் அவைகளால் சட்டென கிரகித்துக் கொண்டுவிட முடிகிறது.

சிலருக்கு நண்பர்கள் அமைய மாட்டார்கள். தவறிப்போய் அப்படி அமைந்தாலும் அதை ஸ்டெடி பண்ணிக்கொள்ளத் தவறி விடுவார்கள். இவர்கள் டேஸ்ட்டுக்கும் நண்பர்கள் டேஸ்ட்டுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அதனாலும் தனிமைப்படுத்தப்படும் இவர்கள் அதையும் நல்லதுக்குன்றே அடுத்துக் கொள்வார்கள். வீட்டில் இருந்து ஆபிஸ். ஆபிஸ் விட்டால் வீடு என்கிற உணர்வைக் கொண்டிருக்கிற பலரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான். கலகலப்பாக பேசுவது என்பது சிலருக்கு கைவந்த கலை. ஒரு வீட்டுக்குள் இப்படி கநவன் மனைவி இருவரில் ஒருவர் கலகலப்புப் பேர்வழியாகவும் அடுத்தவர் அமைதி விரும்பியாகவும் இருந்தால், வீட்டில் ஒரு வித அசாதாரணமைதி கிடு கொண்டிருக்கும். கலகலப்புக்கு மௌனம் ஆட்சி செய்கிற இடத்தில் பெரும்பாலும் வேலை இருக்காது.

4 Comments:

C.M.HANIFF said...

Nalla aaraichi , aamam neengal entha vagai ? ;)

said...

aaraichi irukkaddum.. Naan antha maunamaa irukkuravangga group thaan.. Naan intha pathivai ezhuthunathukku kaaranam en nanbarkar silar "Yen nee computer koodave time spent pannure? engga kooda time spent. ethukku silent-aa irukkure?"nnu kaeddaangga..

ithu avanggala makizhchi paduththurathukku maddumthaan.. hehe

said...

I am back :-)

என்ன திடீர்னு இப்படியொரு பதிவு மை பிரண்ட்.. ஆனா ரொம்ப நல்லா இருந்தது.. இப்படி பட்ட சில ஏதோ ஒரு காரணத்திற்க்காக குற்ற உணர்சி படைதவர்களாவோ இல்லை திசை மாறி போனவர்களாகவோ இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் மை பிரண்ட்

said...

என்ன இப்படி சொல்லிட்டீங்க கார்த்திக்? நானும் இந்த வகையை சேர்ந்தவள்தான். அப்போ நானும் கெட்ட வழியில் போக வாய்ப்பு இருக்கா?

நீங்க வந்துட்டீங்க.. அப்போ கண்டிப்பா இப்பவே உங்கள் ப்ளாக்கை விசிட் செய்யனும். என்ன புதிய பதிவுன்னு பார்க்கனும்.. ஹீஹீ..