Sunday, November 19, 2006

காட்டு தீ போல..

நேற்று பதிவுக்கும் சேர்த்து இன்னைக்கு ரெண்டு விஷயம் பதிவாய் போடுகிறேன். கீழே உள்ள படத்தை பெரிதாய் பார்க்க அதன் மேல் க்ளிக் செய்யவும்.இது சைவமா அசைவமா?அது மட்டும் இல்லை. ஒரு தேரை உள்ளே இருக்குன்னு தெரியாமல் பேக்கிங் செய்த இந்த கம்பெனியில், மற்ற பேக்கெட்டில் என்ன என்ன இருக்குமோ???நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சரி, இன்னைக்கு உள்ள இன்னொரு பதிவு என்னை பற்றி. ஞாபகம் வருதே!! ஞாபகம் வருதே!!!

என் பள்ளியில எனக்கு கொஞ்சம் power & popularity கூடதான். எனக்கு போதிக்காத, எனக்கு தெரியாத ஆசிரியர்களுக்கும் என்னை தெரியும்ன்னா பாருங்களேன்!

எனக்கே ஆச்சர்யமான ஒரு விஷயம்ன்னா, அப்போ நான் ஐந்தாம் படிவம் படிச்சுகிட்டு இருந்தேன். என்னோட additional mathematics ஆசிரியை பிரசவத்துக்காக இரண்டு மாத லீவு போட்டுட்டாங்க.
அவங்க இல்லாதபோது, நாங்க அந்த பாட பீரியட்டில் (period) ஆடாத ஆட்டம் ஒன்னா ரெண்டா?

எங்க அட்டகாசத்த தாங்காம, எங்க வகுப்புக்கு புதுசா ஒரு டீச்சரை நியமிச்சாங்க.. அவங்க தற்காலிக ஆசிரியர். அதுவும் அன்னைக்குதான் அவங்க அந்த பள்ளிக்கே வரும் முதல் நாள். எங்க Physics
டீச்சர் (ரொம்ப நல்ல டீச்சர்), முதல் நாள் எங்கள் சேட்டையை குறைச்சுக்க சொன்னதால், அவங்க வேண்டுகோளுக்கு கட்டுபட்டு அவங்களை ரேக்கிங் பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணினோம்..

அந்த டீச்சரும் புன்னகைத்தவாரே வகுப்புக்குள்ளே வந்தார். ரொம்ப இளமையாகவும் அழகாகவும் இருந்தார். 23-24 வயதுதான் ஒருக்கும் அவருக்கு.

சரி.. என்ன அந்த வியப்பான விஷயம்? சொல்லவே இல்லைன்னு நீங்க கேட்கிறது என் காதில் விழுகிறது..

ஒரு புது ஆசிரியர் வகுப்புக்குள்ளே வந்தால் அவங்க செய்யும் முதல் விஷயம், அவங்க புத்தகத்தை மேஜை மேலே வைத்துவிட்டு அவரை அறிமுகபடுத்துவார், இல்லையா?

இவர் அதை செய்யவில்லை.. அப்படி என்ன செய்தார்?

என்னோட வகுப்புல சீனர், மலாய், தமிழ்ன்னு மூனு இனத்தை சார்ந்தவர்களும் இருந்தார்கள். என்னுடைய வகுப்பு அறிவியல் பிரிவைக்கொண்ட அதுவும் முதல் வகுப்பாக இருந்ததாலேயும், என்னுடைய வகுப்புல சீனர்கள்தான் ஜாஸ்தி. இங்கு சீனர்கள்ன்னு சொன்னாலே நல்ல படிப்பவர்கள்ன்னுதான் பொருள். ஏன்னா ஒவ்வொரு வருஷமும் அவங்கதான் முதல்ல வருவாங்க.

எங்க batchலதான், தமிழ் மாணவர்கள் அறிவியல் பிரிவுல அதிகம்ன்னு சொல்லலாம். அப்போ, 6 தமிழ் மாணவிகளும் 2 தமிழ் மாணவர்களும் இருந்தோம். நான் பொதுவாவே வகுப்புல முன்னாடிதான் உட்காருவேன். எதுக்குன்னா, அப்பதானே வர்ர போர ஆசிரியர்களை நல்ல கலாய்க்க வசதியா இருக்கும்!! மற்ற என் தோழிகள் 5 பேரும் ஒன்னா உக்காருவாங்க..

இந்த புது டீச்சர் வந்ததும் வராததுமாக என் தோழிகள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு போய், என் பெயரை சொல்லி.. உங்களில் யார்ன்னு கேட்டாங்க..

என் தோழிகள் என்னை திரும்பி பார்க்க.. நான் அவர்கள் இடத்துக்கு போக.. என்னன்ன்னு கேட்க்க.. அவங்களும் அதை சொல்ல.. எனக்கு ஆச்சர்யாம இருந்தது.

நான் முன்ன பின்ன அவங்களை பார்த்தது கிடையாது. பிறகு எப்படி என்னை தெரியும்? சரி என்ன விஷயம்ன்னு தெரிவதற்க்கு முன், நிலமையை சரி செய்வோம்ன்னு,

நான் "டீச்சர், அந்த பொண்ணு இனனிக்கு லீவு"ன்னு சொன்னேன்.
அவங்க பதிலுக்கு "அந்த பொண்ணு பள்ளிக்கு லீவு போட்டதே இல்லையே!"ன்னு திரும்பி சொன்னாங்க..

எனக்கு என் நண்பர்களுக்கும் ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. எப்படியோ சமாளிச்சு "நான்" அங்கே இல்லைன்னு நம்பிட்டாங்க..

பிறகு பாடம் போதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. நல்லதான் போதிச்சாங்க.. ஆனால், நானும் சில நண்பர்களும் சேர்ந்து எங்க சுட்டி தனத்தை ஆரம்பிச்சிட்டோம்.. அவங்க சொல்லி தரும் ஒவ்வொன்னுக்கும் எடக்கு மடக்கா கேள்வியை கேட்டோம். அவங்களுக்கு பதில் சொல்ல தெரியாமல் முளிக்க.. "டீச்சர், வீட்டுல போய் home work செய்துட்டு, நாளைக்கு பதில் சொல்லுங்க"ன்னு சொன்னோம்.

அவங்களும் சரின்னு சொன்னாங்க.. பிறகு அன்னைகே நான்தான் அவங்க தேடின ஆள்ன்னு மற்ற டீச்சர்கள் மூலமாக தெரிஞ்சுகிட்டாங்க.

வந்து என்னிடம் கேட்டாங்க.. நான் "தெரியாத ஒருத்தங்க கிட்ட பேசகூடாது! எதுவும் வாங்க கூடதுன்னு அம்மா சொல்லியிருகாங்க"ன்னு சொன்னேன். அவங்க அதுக்கு சிரிச்சாங்க..

என்னை எதுக்கு தேடுனீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவங்க சொன்ன பதில் அனக்கு சிரிப்பத்தான் கொடுத்துச்சு. அவங்க சொன்னது:
"நீ கணித மேதையாமே! Additional Mathematicsல 100% வாங்கினியாமே! சில நேரம் டீச்சருக்கே தெரியாத கணக்கை நீ செய்வாயாமே! நீ வகுப்புல இருக்கும்போது, நான் ஏதாவது பிழையாய் போதிச்சால், என்னை தனியாக வந்து பார்த்து என்ன தப்புன்னு சொல்லு. எல்லார் முன்னுக்கும் சொல்லிடாதே! எனக்கு அவமானமாக போயிடும்".

பிறகுதான் தெரிஞ்சது.. ஏன் எல்லா ஆசிரியருக்கும் என்னை பற்றி தெரிஞ்சிருக்குன்னு! உண்மயில் ஆசிரியர்க்கு செய்ய தெரியாத கணக்கை நான் செய்யவில்லை.. எப்போதும் மாணவர்கள் பரிட்ச்சையில் பதிலளிக்காத சில chapter-களை டீச்சர் வகுப்புல சொல்லி கொடுத்தாலும் யாரும் கேட்க்க மாட்டாங்க. அதுனால, அவங்க அதை படிச்சு கொடுக்க மாட்டாங்க. அது நாளடைவில அவ்ங்க மறந்துடுவாங்க..

நான் அதைதான் செய்வேன். எனக்கு சொல்லி கொடுங்கன்னு அடம் பிடித்தேன்! அவங்க வீட்டுல போய் படித்துட்டு வந்து சொல்லி கொடுக்குறேன்னு சொன்னாங்க. என் நண்பர் ஒருவர் அந்த chapter சம்பந்தப்பட்ட கேள்வியய் அவரிடம் போய் கேட்டபோது, அவருக்கு பதிலளிக்க இயலவில்லை. நான் ஏர்கனவே அதை படித்திருந்ததால், அவர் என்னை செய்ய சொன்னார்.

விஷயம் வேரு விதமாக காட்டு தீயய் போல் பறவிடுச்சு. ஒரே தமாஸு!! ஹீ ஹீ ஹீ

5 Comments:

C.M.HANIFF said...

O, neenga oru maths geniusa ;)

said...

நல்ல மலரும் நினைவுகள் மை பிரண்ட்..
இந்த பதிவின் மூலம் அங்கே எப்படி பள்ளிச்சாலைகள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது.. இது போல மலாயின் சிறப்புகள், நம் தமிழர்கள் வாழ்க்கை முறையை பற்றியும் நீங்கள் நிறைய எழுதலாமே..

said...

C.M.HANIFF said...
O, neenga oru maths geniusa ;)


Oru vagaiyil appadiyum sollalam Haniff.. Naan mathsle oralavukku nalla score pannurathukkum oru kaaranam irukku. athai piragu oru pathivule solluren

said...

மு.கார்த்திகேயன் said...
நல்ல மலரும் நினைவுகள் மை பிரண்ட்..
இந்த பதிவின் மூலம் அங்கே எப்படி பள்ளிச்சாலைகள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது.. இது போல மலாயின் சிறப்புகள், நம் தமிழர்கள் வாழ்க்கை முறையை பற்றியும் நீங்கள் நிறைய எழுதலாமே..


நல்ல இடியா கார்த்திக். இங்குள்ள பள்ளிகளைப் பற்றி கண்டிப்பாக எழுதுகிறேன்.

மலேசியாவை பற்றியும் நம் இனத்தவர் பற்றியும் எழுதுவதும் ஒரு நல்ல இடியாதான்..

said...

//
"நீ கணித மேதையாமே! Additional Mathematicsல 100% வாங்கினியாமே! சில நேரம் டீச்சருக்கே தெரியாத கணக்கை நீ செய்வாயாமே! நீ வகுப்புல இருக்கும்போது, நான் ஏதாவது பிழையாய் போதிச்சால், என்னை தனியாக வந்து பார்த்து என்ன தப்புன்னு சொல்லு. எல்லார் முன்னுக்கும் சொல்லிடாதே! எனக்கு அவமானமாக போயிடும்".
//

Buildup??

or real

:-)))))