அட.. ரெண்டுக்கு விமர்சனம் போட ப்ளாக் திறந்தா, இது 119-ஆவது போஸ்ட்..
1+1+9 = 11
1+1=2
இதுலகூட ரெண்டுன்னுதான் வருது.. ;-)
குஷ்பு தயாரிப்பில், கண்வர் சுந்தர். சி இயக்கிய படம் ரெண்டு. வெள்ளித்திரைக்கு வந்து இரண்டு நாளில் வரி விலக்குக்காக "இரண்டு"ன்னு பெயர் மாற்றம் காணப்பட்டது..
சுந்தர். சி படம்ன்னாலே காமெடி கலந்த மசாலா படம்ன்னு எல்லாருக்குமே தெரியும். இந்த படமும் அதே! அதே!
மாதவன் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஒருவருக்கு ரீமா சென்.. இன்னொருவருக்கு புதுமுகம் அனுஷ்கா..
படத்தில் சீரியலாக கொலை விழுகிறது. ஒவ்வொருவரையும் கொல்வதுக்கு முன்பே கொலை நடக்க இருக்கும் தேதியும் நேரத்தையும் போலிஸுக்கு கொடுக்கப்படுகிறது. கொலையாளனை கண்டுபிடிக்கும் பொறுப்பு பாக்யராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த சமயத்தில் "வரட்டா வரட்டா"ன்னு கேட்டுக்கிட்டே திரையில் வராரு மாதவன் @ சீனு. சீனு கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு தன் தாய்மாமனிடம் வேலை சேர வருகிறார். மாமாவாக வடிவேலு. மாயாஜால வித்தை காட்டும் கரிகாலனாக கலக்கிட்டார் போங்க! ஒவ்வொரு தடவையும் மேஜிக் செய்யுறேன்ன்னு அடி வாங்குகிறார்.மாமாவின் பிஸினெஸ் சூடுப்பிடிக்காததற்க்கு இன்னொரு காரணம், ரீமா சென்னின் கடல் கன்னிங்கிர பேர்ல போட்டிருக்கும் கூடாரம்தான். சீனு வந்ததும் வராததுமாக, தன் மாமாவின் பிஸினெஸை டெவெலப் பன்றதாக சொல்லி அவர் ஏறி வந்த ஆட்டோவையே கடன் வைக்கிறார். அட்டோகாரரும் அங்கேயே டேரா போடுறார்.
மாதவன் கொடுக்கும் ஒவ்வொரு ஐடியாவும் சொதப்பல ஆக..மாதவனோ ரீமா சென் மீது காதல் வயப்படுகிறார். ரீமா-மீது காதலாய் இருக்கும் மணிவண்ணனை அடித்து துவைக்கும் போது ரீமக்கும் காதல் பத்திக்குது.
இந்த சமயத்தில் மாதவன் ரீமாவின் முறைமாமனை கொலை செய்வதை ரீமாவும், பாக்யராஜும் பார்க்க.. அடுத்த சீன்லேயே அவர் ஜெயிலுக்கு போகிறார். அடித்து விசாரித்தும் மாதவன் தான் கொலை செய்யவில்லை என்று சொல்ல.. அங்கே வடிவேலு வந்து ஒரு மேஜிக் செய்ய மாதவன் தப்பிக்கிறார்.
அதே நேரத்தில் பாக்யராஜ் கொலை செய்பவன் குருடனாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடிக்கிறார். கண்ணன் என்ற இன்னொரு மாதவன் தன் ஃப்ளாஷ்பெக்கை சீனுக்கு சொல்கிறார். கத கேட்டதும், சீனு, வடிவேலு, ரீமாவும் அந்த கடசி கொலையை செய்ய உதவுகிறார்கள்.
சேம்பலுக்கு ரெண்டு காட்சிகள். தன் தம்பியின் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டதும் கல்யாணம் ஆகி 6 வயதில் ஒரு பொண்ணை வைத்திருக்கும் இவர் பெசுவது:
சந்தானம்: (தேவதர்ஷினி கணவரை பார்த்து) பப்பு, அதான் சொல்லிட்டாங்கல்ல.. போய் ஒரு நல்ல மாப்பிள்ளையா பாரு!(தேவதர்ஷினியை பார்த்து) அண்ணி, உங்களுக்கு கல்யாணம் ஆகி 6 வயசுல ஒரு குழந்தையே இருக்கு!
தே.த: எனக்கா?????
ச: பின்னே? கிழவனுக்க்கா?
-----
தே.த: எங்கடா போன? ஆளையே காணோம்?
----
இப்படி இவங்க பன்ற ஒவ்வொன்னும் ரசிக்க வைக்குது. புதுமுகம் அனுஷ்கா அழகு. மாதவன்-அனுஷ்கா காதல் ஒரு நாளிலேயே அரம்பித்து வளர்ந்து மறுநாளே முடியவது வருத்தத்தை அளிக்கிறது.
ஒவ்வொருவரும் இறக்கும் அந்த காட்சியில் நம்மை அறியாமலேயே நம் கண்களின் ஓரத்தில் சின்ன ஈரம். அந்த சம்வத்தில் தன் கண்ணை இழந்து குருடனாகும் கண்ணன் அ.க்.அ மாதவன் ஒவ்வொருவரையும் பழி வாங்கி அந்த உண்மையை வெளிகொண்டு வருகிறார்.
மாதவன் காமெடி, காதல், அக்க்ஷன்னு எல்லாத்திலும் கலக்கிட்டாரு..
பாக்யராஜ் ரோல் பெரிசா செய்யப் போறார்ன்னு எதிர்பார்க்க வச்சு ஏதும் செய்யாதது வருத்தத்தை தருது.
இந்த வார இறுதியில் நீங்கள் படம் பார்க்கனும்ன்னு நினைச்சீங்கன்னா இந்த படத்தை பார்க்கலாம்.
7 Comments:
மை பிரண்ட், ரஜினியின் நான் சிகப்பு மனிதன், முரளியின் இரவுச் சூரியன் ரெண்டு படக்கதையையும் கலந்து ரெண்டுன்னு கொடுத்திருக்காங்க.. அதனால தானோ என்னவோ படத்துக்கு ரெண்டு..சாரி..சாரி..இரண்டு பேர் வச்சிருக்காங்க
ithukkum..namma thaan first commenytaa?
அதே அதே!! படத்தில் நிறைய இடத்தில் வேறு படங்களின் சாயல்கள் இருக்கு..
நீங்க first-தான்!!!
Unga posta padichadhey padatha paatha effect kuduthuduchu.. 2nd time padatha poi paakanuma? Seri madhavanukkaga povom :)
//G3 said...
Unga posta padichadhey padatha paatha effect kuduthuduchu.. 2nd time padatha poi paakanuma? Seri madhavanukkaga povom :) //
romba NallavE ice vakkireengga G3.. hehehe..
unge blogle puthu post cheekkiramaa pOdungga. waiting!!!
Nalla vimarsanam,rendu padam paarthen oru thadavai ;) ;) ;)
//c.m.haniff said...
Nalla vimarsanam,rendu padam paarthen oru thadavai ;) ;) ;) //
innoru murai paarththeengganna rendaakidumE!!
தோழி,
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க தோழி. நான் ஏற்கனவே படம் பார்த்துட்டேன், இருந்தாலும் நீங்க என்ன எழுதியிருக்கீங்கனு படிச்சேன். ஒரு படம் பார்க்கிற உணர்வ குடுக்குது உங்க விமர்சனம். ஆமா எப்பிடிங்க இவ்வளவு நீளமா எழுதுறீங்க, அதுவும் நிறைய படம் எல்லாம் போட்டு?
Post a Comment