Monday, December 11, 2006

129. போலிங்கில் ஹட்ரிக்.. பூப்பந்தில் ஒன்று..


டோஹாவில் ஏற்கனவே போலிங்கில் வாங்கிய இரண்டு தங்கத்தை பற்றி எழுதின பதிவுகள் இதோ!

டோஹாவில் முதல் தங்கம்
டோஹாவில் மலேசியாவின் இரண்டவது தங்கம்..

வெள்ளியன்று மேலும் ஒரு தங்கத்தை ஐந்து பேர் கொண்ட குலு விளையாட்டில் வாகை சூடினர் மலேசியா போலிங் ராணியர்கள்!

ஏஸ்தேர், ஷேரோன், வென்டி, சன்ட்ரா, மற்றும் ஷாலின் இதில் பங்கேற்றனர். 6,314 பின்களை கீழே தள்ளி இவர்கள் முதல் இடத்தை கைப்பற்றினர். தென்கொரியா 6,239 பின்களை கீழே தள்ளி இரண்டம் இடத்தை பிடித்தாலும், இந்த குழு மிகவும் கடுமையான போட்டியை கொடுத்தது என்றெ சொல்லலாம்.


இதே நாளில், எஸ்தெர் சீயா "ஆல் இவேந்த்" போட்டியில் வெள்ளியும் வென்றார். பயிற்சியாளர் ஹொல்லோவே சீயாவின் மகலான இவர் இரண்டு தங்கம் மற்றும் மூன்று வெள்ளியை இப்போது கையில் வைத்துள்ளார். ஹட்ரிக் அடித்த போலிங்கை தொடர்ந்து கூ கியென் கியாட் மற்றும் தன் பூன் ஹியோங் பேட்மின்டன் இரட்டையர் பிரிவில் தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.

சான் சொங் மிங் அடிப்பட்டிருந்ததால் கடைசி நிமிடத்தில், இவர்களை களம் இறக்கியிருந்தார் பயிற்சியாளர் கிம் ஹோக். இவர்கள் ஜெயிப்பார்கள் என்று யாரும் நினைக்காத ஒரு தருணத்தில், இவர்கள் கடைசி சுற்றுக்கு தேர்வானதும், எல்லாருடைய கண்களும் இவர்கள் மீது பட்டது.

இந்த பிரிவின் தங்கத்தை வெல்வதற்க்கு 36 வருடமாக காத்திருந்தோம்ன்னு சொல்லலாம். இந்த தங்கத்தை வெறும் 27 நிமிடத்திலேயே இவர்கள் சுலபமாக வென்றது ஒரு அதிசயமே!!!

ஆக மொத்ததில் இப்போது மலேசியா 4 தங்கங்களை வென்று 11-வது இடத்தில் இருக்கின்றது. மலேசியா போலே!!!


இந்தியாவை பற்றியும் சில தகவல்கள்:

1- இந்தியா இப்போது 6 தங்கங்களை வென்று ஏழாவது இடத்தில் உள்ளது.

2- சானியா மிர்சா தென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிருதி சுற்றுக்கு தேர்வானார். இவர் தென்கொரியா யூ மியை தோற்கடித்து முன்னேறினார். இப்பிரிவில் இவர் வெல்வதுக்கு வாய்ப்புகள் அதிகம் என்று கணிப்புகள் கூறுகின்றன.


3- டோஹாவில் இந்திய வீராங்கனைகள் கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள். பூசானில் நடந்த ஆசிய விளையாட்டுபோட்டியில் கலந்துகொண்ட வீராங்கனைகளின் முயற்ச்சிக்கும் டோஹாவில் கலந்துகொண்டோரின் முயற்சிக்கும் நிரைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். எது எப்படியோ.. இந்த ஸ்பீரிட்(spirit) இன்னும் நிரைய பதக்கங்களை குவிக்க என் வாழ்த்துக்கள்...

4 Comments:

Anonymous said...

ஜாதிவெறி பிடித்த டோண்டு பதிவில் பின்னூட்டம் இட வேண்டாம். தாக்கப்படக் கூடும். இது உங்களுக்கு முதல் எச்சரிக்கை.

அன்புடன்,
போலிடோண்டு.

said...

//ஜாதிவெறி பிடித்த டோண்டு பதிவில் பின்னூட்டம் இட வேண்டாம். தாக்கப்படக் கூடும். இது உங்களுக்கு முதல் எச்சரிக்கை.

அன்புடன்,
போலிடோண்டு. //

உங்க அறிவுரைக்கு நன்றி. ;-)

Anonymous said...

"ஆக மொத்ததில் இப்போது மலேசியா 4 தங்கங்களை வென்று 11-வது இடத்தில் இருக்கின்றது. மலேசியா போலே!!!"

மலேசியாவின் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது........

malaysia memang boleh lahhhhhhhhhhhhh....!

DR.sintok

said...

//"ஆக மொத்ததில் இப்போது மலேசியா 4 தங்கங்களை வென்று 11-வது இடத்தில் இருக்கின்றது. மலேசியா போலே!!!"

DR.sintok //

ஆமாம்.. மலேசியா போலே டாக்டர் சிந்தோக்