Monday, December 25, 2006

142. சிகரம் தொட்ட பெண்மணி இவர்..

நான் படித்ததில் சுட்டது இது. ஒரு வார நாளிதலில் இந்திரா காந்தியைப் பற்றி படித்தேன். சாதித்த சில பெண்களில் இவரும் ஒருவர். இவரைப் பற்றி நான் படித்ததை உங்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன்.


ஒரு முயல்குட்டி மாதிரி ஆனந்த பவன் மாளிகையில் துள்ளியோடி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி இந்திராவுக்கு சுதந்திரதாகவும் தேசிய இயக்கியப் பற்றும் இயவதலிலேயே ஏற்பட்டது வியப்பல்ல. காந்தி தொடங்கி தாகூர் வரை அவரது தந்தையின் அத்தனை நண்பர்களோடும் அவருக்கு இளவயதிலேயே அறிமுகமிருந்தது ஒரு பெரிய வரம்.

அவருக்கு சரித்திரப்படியில் ஆர்வம் இருந்தது. எழுத்தாளராக வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனால், அரசியல்வாதியாவோம் அன்றோ, ஆட்சியைப் பிடிப்போம் என்றோ அந்த வயதுகளில் அவரே நினைத்துப் பார்த்ததில்லை. தென்னாப்பிரிக்காவில் அடிமைகளுக்கு வேலையாக காங்கிரசின் தீவிர உறுப்பினராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டு போராட்டங்களுக்காக வீதியில் இறங்கி விட்டார்.

ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராகத் தீவிரப்பணிகள், மறு பக்கம் தந்தை நேருவின் உதவியாளர் மாதிரியே செயல்பட்டு அரசியல் பணிகள். இன்னொரு பக்கம், இளவயதுத் தோழர் ஃபேரோஸ் காந்தியுடன் தீவிரக்காதல் என்று காலில் சக்கரம் கட்டி கொண்டிருந்த இந்திராவை அப்போது எல்லாருமே வியப்பாகப் பார்த்தார்கள்.

நேரு பழமைவாதி இல்லை. காதல் விரோதியும் இல்லை. ஆனால் அது நிஜமான காதல்தானா என்று அவர் கவலைப்பட்டார். முடிவில் இந்திராவின் காதல்தான் வென்றது. காந்தியடிகள் ஆசியுடன் இந்திரா ஃபெரோஸ் திருமணம் 1941-இல் நடந்தது. அந்தக் கால கட்டத்தில் சீர்திருத்தத் திருமணங்கள் அப்படியொன்றும் அதிகரித்திருக்கவில்லை. அந்தத் திருமணத்தை கண்டித்து நேருவின் ஆனந்தபவன் வீட்டுக்கு நூற்றுக் கணக்கான தந்திகள் வந்தன.

ஒரு மாபெரும் தேசியத் தலைவரின் மகளை மணந்ததன் மூலம் ஃபெரோஸுக்குக் குட்டி குட்டியாக நிறைய தர்மசங்கடங்கள் உண்டாகத் தொடங்கின. அவர் னேஷனல் ஹேரோல்டு என்கிற பத்திரிக்கையில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தார். அரசியல் ஆர்வமும் வந்தது. காங்கிரஸ் உறுப்பினர்தான் என்றாலும் சொஷலிசத்தில் மிகத் தீவிரமாக ஆர்வம் காட்டினார். இந்திராவோ, இருபத்தி நாலு மணிநேரமும் தந்தையின் நிழல் மாதிரி கூடவே இருக்க வேண்டியிருந்தது. அதற்காக ஒரு மாப்பிள்ளை எத்தனை காலத்துக்கு தான் மாமனார் வீட்டிலேயே தங்க முடியும்? இங்கேதான் சிக்கல் வரத் தொடங்கியது. ஃபெரோஸ், தனியே ஓர் அறை எடுத்துக்கொண்டு வசிக்கத் தொடங்கினார். இந்திரா தந்தையுடனேயே தங்கினார்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்திரா அநேகமாக நேருவுடன் அவர் போன அனைத்து இடங்களுமே வெளிநாடுகள்.இதனால் குடும்ப விரிசல் அதிகரித்தது. நேருவின் மகளாக இருப்பதுதான் தன் பெரிய பாரம் என்று இந்திரா நினைத்த நேரம் அது. ஆனால், தூக்கி தள்ளிவைக்கக் கூடிய பாரமா அது! வேறு யாருக்குக் கிடைக்கும் அப்படியொரு வாய்ப்பு! ஆகவே மிக முக்கியமான தொரு முடிவை அவர் அப்போது எடுக்கவேண்டி இருந்தது. கணவரா? தந்தையா?


தொடரும்..

2 Comments:

Anonymous said...

Arumaiyaana thodar my friend ;)

said...

//C.M.HANIFF said...
Arumaiyaana thodar my friend ;) //

Nandri. Innum oru paguthi maddumthaan baakki..