Friday, February 16, 2007

164. உயிரை தொலைத்தவர் யார்? - பதில்

உயிரை தொலைத்தேன்..
அது உன்னில்தானோ..
இது நான் காணும் கனவோ நிஜமோ..


என்ற ஒரு பாடலை நேற்றைய இடுகையில் சேர்த்திருந்தேன்.

கேட்டவர்கள் எல்லாரும் பாடல் நல்லா இருக்குன்னு சொல்லியிருக்கீங்க..

துர்காதான் இது உள்ளூர் பாடல்ன்னு கண்டுப் பிடிச்சாங்க. அவங்களுக்கு தெரியாம இருக்குமா! அவரும் நம்மூர்வாசிதானே!

ஜி இருக்காரே! அவர் கூகல் கூகினாரோ இல்லை துர்கா கிட்ட கேட்டாரோன்னு தெரியலை.. ஆனால் பாடியவரை பற்றி சரியான தகவலை சொல்லியிருக்கார். அவருக்கு ஒரு பலத்த கைத்தட்டு! (1000 பொற்காசுகள் western union மூலமாக அனுப்பி வைக்கப் பட்டுவிட்டது.. கிடைச்சிருச்சா?)

தல வீட்டுக்கு போய் கேட்டுட்டு சொல்றேன்னாரு.. ஆனா, ஆளையே காணோம்..

சரி, இப்ப யார் இந்த பாடலை பாடினார்ன்னு பார்ப்போம்.. இவர் பெயர் திலீப் வர்மன்.

சசி, சுரேஸ், நெல்சன்.. இவங்க மூன்று பேர் சேர்ந்த குழு Rogkwave.. இவர்கள் 3 ஆல்பங்கள் வெளியிட்டனர்.

1- சுரேஸ் கிஃப்ட் (Suresh's Gift)
2- சங்கீத் (Sangeeth)
3- சங்கே முழங்கு (Sange Muzhangu)

நாலாவது ஆல்பத்தில் சுரேஷும் நெல்சனும் கலந்துக்கவில்லை.. மாறாக சசி தேடிய Replacement-தான் திலீப்..

ஆல்பத்தின் பெயர் நவீனம்.. ஆல்பம் ஹிட்டானது.. காரணம்? வேறு என்ன.. திலீப்பின் குரல்தான் காரணம்.. இந்த ஆல்பத்தில் இவர் பாடிய பாடல்களின் இரண்டையும் இங்கே இணைத்துள்ளேன்.

1- என்னில்
2- இரு கண்கள் (முழு பாடல் என்னிடம் இல்லை)
3- உயிரை

Powered by eSnips.com

ஆனால், இந்த உயிரை தொலைத்தேன் பாடல் இந்த ஆல்பங்களில் வெளியானதல்ல.. இது மலேசிய தெலி மூவி (Tele Movie) காதல் வேண்டும் என்ற படத்தில் இடம் பெற்றது. திலீப் பாடியதே இதில் ப்லஸ் பொய்ண்ட் (Plus Point)..

இவருக்கு எனக்கு பிடித்த உன்னி கிருஷ்னன் குரல்.. அது இன்னொரு ப்லஸ்.. :-P

சரி.. இந்த பாடலின் வரி உங்களுக்கு வேண்டுமா? இதோ பிடிச்சிக்கோங்க:

உயிரை தொலைத்தேன்..
அது உன்னில்தானோ..
இது நான் காணும் கனவோ நிஜமோ..
மீண்டும் உன்னை காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே..
விழியில் விழுந்தால்.. ஆஆஆஆஆ..
என்னில் எனதாய் நானே இல்லை..
எண்ணம் முழுதும் நீதானே
என் கண்ணே..
(உயிரை..)


அன்பே உயிராய் தொடுவேன் உன்னை..
தாலாட்டுதே பார்வைகள்..
(அன்பே..)
உனை சேரும் நாளை..
தினம் ஏங்கினேனே..
நானிங்கு தனியாக அழுதேன்..
விடியும் வரை..
கனவின் நிலை..
உனதாய் இங்கு..
தினம் ஏங்குது..
மனம் உருகிடும்..
நிலை இது..
எந்தன் முதல் முதல் வரும்..
உயிர் காதலில்..
(உயிரை..)


நினைத்தால் இனிக்கும் இளமை நதியே..
உன்னோடு நான் மூழ்கினேன்..
(நினைத்தால்..)
தேடாத நிலையில்..
நோகாத வழியில்..
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்..
(விடியும்...)
(உயிரை..)
ஓஓஓஓஓ....


தல யோகி பி & நட்சதிராவின் வல்லவன் பாடல்களை கேட்டிருந்தாரு.. அந்த முழு ஆல்பம் mp3 வடிவில் இங்கே upload செய்துள்ளேன்.. நீங்களும் அந்த பாடல்களை கேட்க விரும்பினால் இங்கே டவுன்லோட் செய்துக்கலாம்.. :-)

37 Comments:

said...

ம்... பாடல்களை ரசித்தேன். அழகான கவிதை வரிகள். அருமையான குரல்
வளம். பாடல்களைக் கேட்கக் கேட்க இனிமையாக இருந்தது.

கலைஞருக்கு என் பாராட்டுக்கள்.
உங்கள் கலைப்பயணம் தொடர என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

Anonymous said...

thank for the great MP3

Anonymous said...

இந்த பாடல்களை நான் கேட்டதே இல்லையே.............

எங்க ஊரில் இந்த பாட்டெல்லாம் கிடைப்பது கிடையாது...........?
(அல்லது நான் தேடுவது இல்லையோ.?)

Dr.sintok

Anonymous said...

"தல யோகி பி & நட்சதிராவின் வல்லவன் பாடல்களை கேட்டிருந்தாரு.. அந்த முழு ஆல்பம் mp3 வடிவில் இங்கே upload செய்துள்ளேன்.. நீங்களும் அந்த பாடல்களை கேட்க விரும்பினால் இங்கே டவுன்லோட் செய்துக்கலாம்.. :-)"

இந்த பாடல்களை எப்படிதான் இரசிப்பதோ....?

என் roommate தினமும் இந்த படல்களை போட்டு என் உயிரை எடுக்கிறான்......:-(

சொந்த சண்டை குடும்ப சண்டை இதை எல்லாம் பாட்டில் போட்டு நம்ம உயிரை எடுக்கிறாற்கள்......:-(

இதில் யோகி பி தங்கையா பத்தி சண்டை வேற......

என்ன கொடுமை யோகி பி :-(

Dr.Sintok

said...

மை பிரண்ட், சத்தியமாக நான் கேட்டிருந்தால் கூட இந்த பாடலின் குரல் கண்டுபிடிக்க முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்ள வேண்டும்.

said...

மை பிரண்ட், எனக்கு தெரிந்தவரை, நீங்கள் எனக்கு அறிமுகமாகும் வரை, இப்படி கலைபயணங்கள் மலேசியாவில் நடக்கிறது என்பது எனக்கு தெரியாத ஒன்று. மேலேசிய மக்களின் வாழ்க்கை பற்றி உங்களின் பதிவுகள் வழியாகத் தான் தெரிந்து கொள்கிறேன்..

said...

இன்னும் தோட்டத்து மக்கள் யாரும் வெளியுலகம் தெரியாமல் வாழ்கின்ற நிலமையை கூட உங்களின் பதிவுகள் வழியாகத் தான் தெரிந்து கொண்டேன்.

வல்லவன் பாடல்களை அனுப்பியதற்கு மிகவும் நன்றி மை பிரண்ட்.

said...

இது போல, மலேசிய மக்களின், கலை, வாழ்க்கை முறை, கொண்டாட்டங்கள் பற்றியெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள். யார் கண்டார்கள்! அப்படி நீங்கள் எழுதி வந்தால் பின்னொரு நாளில் உங்கள் பதிவுகளே, மலேசியாவை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நல்ல கையேடாக அமையலாம்..

இப்போதே உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் மை பிரண்ட்!

said...

அருமையான பாடல்...MP3 க்கும் ஒரு நன்றிங்கோ :-)

said...

// அழகான கவிதை வரிகள். அருமையான குரல்
வளம். பாடல்களைக் கேட்கக் கேட்க இனிமையாக இருந்தது.//

முதல் தடவை நான் இந்த பாடலை ("என்னில்"), நான் தமிழ் சினிமா பாடல் என்றுதான் நினைத்தேன். அவ்வளவு நேர்த்தியாக இசையமைத்து, வரி எழுதி, பாடியுள்ளார்..

said...

// துர்கா said...
thank for the great MP3 //

Welcome Thurgah

said...

// இந்த பாடல்களை நான் கேட்டதே இல்லையே.............

எங்க ஊரில் இந்த பாட்டெல்லாம் கிடைப்பது கிடையாது...........?
(அல்லது நான் தேடுவது இல்லையோ.?)

Dr.sintok //

சிந்தோக், நீங்க மலேசியரா?
நீங்கள் மலேசியர் அல்லது சிங்கப்பூரரா இருந்ததால் இந்த பாடல்களை கேட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கு.

இப்போது நிறைய மலேசிய தமிழ் பாடல்கள் கடல் தாண்டி இந்தியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவிலும் விற்க்கப்படுகின்றன.

said...

// என் roommate தினமும் இந்த படல்களை போட்டு என் உயிரை எடுக்கிறான்......:-(//
:-P

// சொந்த சண்டை குடும்ப சண்டை இதை எல்லாம் பாட்டில் போட்டு நம்ம உயிரை எடுக்கிறாற்கள்......:-(//

ஆமாம், சக்ராசோனிக்கிடம் இவர்களுக்கு இருக்கும் விரோதத்தை இப்படி வெளிச்சம் போட்டு காட்டியிருக்கக் கூடாது. பதிலுக்கும் அவர்களும் இப்படி செய்திருக்கிறார்கள். இப்படி பட்டவர்களால்தான், உள்நாட்டு மக்களின் ஆதரவுகள் குறைகிறது.

// இதில் யோகி பி தங்கையா பத்தி சண்டை வேற......

என்ன கொடுமை யோகி பி :-(//

:-P ஆமாங்க.. அது ஒரு பெரிய கதை.. :-)))) இதெல்லாம் தேவையா இவங்களுக்கு????

said...

// மு.கார்த்திகேயன் said...
மை பிரண்ட், சத்தியமாக நான் கேட்டிருந்தால் கூட இந்த பாடலின் குரல் கண்டுபிடிக்க முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்ள வேண்டும். //

தலைவரே, இவ்வளவு சீக்கிரமா give up பண்ணிட்டீங்களே!

said...

// மு.கார்த்திகேயன் said...
இப்படி கலைபயணங்கள் மலேசியாவில் நடக்கிறது என்பது எனக்கு தெரியாத ஒன்று. //

இனி 29" இன்சி ஸ்க்ரீன் போட்டு காட்டிடுறேன். ;-)

// மேலேசிய மக்களின் வாழ்க்கை பற்றி உங்களின் பதிவுகள் வழியாகத் தான் தெரிந்து கொள்கிறேன்.. //

வேறு யாரும் மலேசியாவிலிருந்து தமிழில் எழுதாமல் இருப்பதும் ஒரு காரணம்தான்.. :-(

said...

// வல்லவன் பாடல்களை அனுப்பியதற்கு மிகவும் நன்றி மை பிரண்ட். //

You are welcome.. ;-)

said...

// மு.கார்த்திகேயன் said...
யார் கண்டார்கள்! அப்படி நீங்கள் எழுதி வந்தால் பின்னொரு நாளில் உங்கள் பதிவுகளே, மலேசியாவை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நல்ல கையேடாக அமையலாம்..//

அட அட அட.. என்ன அற்புதமான வார்த்தைகள்! நான் கூட இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நினைச்சி பார்த்ததுகூட இல்லை.. ;-)

// இப்போதே உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் மை பிரண்ட்! //

நன்றி தலைவரே!

said...

// Syam said...
அருமையான பாடல்...MP3 க்கும் ஒரு நன்றிங்கோ :-) //

நாட்டாமை அய்யா, உங்க நன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.. ;-)

said...

//1000 பொற்காசுகள் western union மூலமாக அனுப்பி வைக்கப் பட்டுவிட்டது.. கிடைச்சிருச்சா//

ayyato innum varaliye... tracking number anuppi vainga....

Anonymous said...

"சிந்தோக், நீங்க மலேசியரா?"

http://ms.wikipedia.org/wiki/Sintok_(UUM)


"இந்த பாடல்களை கேட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கு."

நான் மலேசிய radio கேட்பது அறிது.....ஆகையால் இந்த பாடல்களை தவரவிட்டு விட்டேண்:-(

Dr.Sintok

Anonymous said...

"வேறு யாரும் மலேசியாவிலிருந்து தமிழில் எழுதாமல் இருப்பதும் ஒரு காரணம்தான்.. :-( "

உங்களைப் போல் பினாங்கை சேர்ந்த சுபா என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு எழுது வந்தார்.
http://subaillam.blogdrive.com/

அவருக்கு பிறகு உங்கள் பதிவைதான் மலேசியாவில் இருந்து நான் படித்தது.(இந்தியாவில் இருந்து வேலைக்காக இங்கு வரும் சிலர் வலைபதியவும் செய்தனர்.)


Dr.Sintok

Anonymous said...

Anu, A different Voice, just refresh my Fav. SPB's "Minnale " Song from "May Maadham" composed by AR Rehman.

said...

//ayyato innum varaliye... tracking number anuppi vainga.... //

-P இன்னேரம் வந்து சேர்ந்திருக்கும்.. நல்லா பாருங்க..:-D

said...

//sekali gus mengisytiharkan Sintok sebagai kawasan hitam.//

சிந்தோக், அப்ப நீங்க கருப்பு இடத்தின் ராஜான்னு சொல்லுங்க.. ;-)
எப்படி உங்களுக்கு சிந்தோக்ன்னு பெயர் வைக்கனும்ன்னு தோணிச்சு?

//நான் மலேசிய radio கேட்பது அறிது.....ஆகையால் இந்த பாடல்களை தவரவிட்டு விட்டேண்:-(//

பரவாயில்லை சிந்தோக்.. எனக்கு இடைக்கும் பாடல்களை அப்லோட் செய்கிறேன்.. ;-)

said...

//உங்களைப் போல் பினாங்கை சேர்ந்த சுபா என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு எழுது வந்தார். //

சுபாவின் பதிவுகள் அருமையா இருக்கு. நன்றி சிந்தோக்.. ;-)

said...

// Balu said...
Anu, A different Voice, just refresh my Fav. SPB's "Minnale " Song from "May Maadham" composed by AR Rehman. //

வாங்க பாலா..

உங்களுக்கு ரொம்ப பிடித்த பாலாவையே நினைவு படுத்தியிருக்குனா, இந்த குரலுக்கு அவ்வளவு பவர் இருக்குன்னு சொல்லுங்க.. ;-)

said...

Helo!
Very, very nice
Tank you

said...

அழகான பாட்டுக்கள்!!
நன்றி மை ஃப்ரண்ட்!! :-)

said...

//மு.கார்த்திகேயன் said...
யார் கண்டார்கள்! அப்படி நீங்கள் எழுதி வந்தால் பின்னொரு நாளில் உங்கள் பதிவுகளே, மலேசியாவை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நல்ல கையேடாக அமையலாம்..//
கார்திகேயனின் கருத்துக்களை நான் முற்றிலும் ஆதரிக்கிறேன்!!!
வளர்க உங்கள் கலை சேவை!! :-)

said...

//david santos said...
Helo!
Very, very nice
Tank you //

Welcome David.

said...

// CVR said...
அழகான பாட்டுக்கள்!!
நன்றி மை ஃப்ரண்ட்!! :-) //

;-)

said...

// CVR said...
அழகான பாட்டுக்கள்!!
நன்றி மை ஃப்ரண்ட்!! :-) //

உங்கள் வாழ்த்துக்களுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி.. :-)

Anonymous said...

I agree there is a power(or something more than that which cant be described by Text), but FYI, kind info, SPB ya ennaku ninaivupaduthangamra avaisyam illa, because HE ALWAYS IN MY SOUL, and I mentioned about the TUNE, not the TONE!!!!!!!!!

said...

@Balu:

//I mentioned about the TUNE, not the TONE!!!!!!!!!//

;-)

said...

மிக அழகான பாட்டுங்க !! அப்படியே தூக்கிட்டு போய்டுச்சு என்னை ! :)))))) பாட்டு கொடுத்த ப்ரெண்டுக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஒ..... :)))))))))

said...

//மிக அழகான பாட்டுங்க !! அப்படியே தூக்கிட்டு போய்டுச்சு என்னை ! :)))))) பாட்டு கொடுத்த ப்ரெண்டுக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஒ..... :)))))))))//

நானும் அதே!

Anonymous said...

'உயிரைத் தொலைத்தேன்' பாடல் அருமை... சாலையில் பயணிக்கும் போதும் ...மாலையில் தூங்கும் போதும்...அருமை...

இதே போன்ற மற்றுமொரு பாடல்... செல்வா இசைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது... 'உன் விழியில் என் உருவம் பார்த்துவிட்டேன்' கேட்டுப்பாருங்களேன்....