Wednesday, February 14, 2007

162. பிப்ரவரி 14 தேதியா!!!

பிப்வரி 14 இன்னைக்கு..

எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது!!! (போச்சா? இதுதான் முடிவா? ஏற்கனவே 4 கண்ணு எனக்கு (specky).. இப்ப என்ன எட்டா?)

கேம்பஸே ர் ரா தெரியுது!!! (அப்பாடா.. atleast இன்னும் நான் கலர் ப்லைண்ட் (colour blind) ஆகலை..)

என்ன கதைன்னு கேட்குறேங்களா? (ஆமா.. நீங்க கேட்காட்டினாலும் நான் சொல்வேனே! இல்லைனா இன்னைக்கு எழுத ஒன்னும் இருக்காதே! :-P)

ப்ளாக்லேயிருந்து ஆரம்பிக்கலாமே:

ஒரு வாரமா நம்ம ப்ளாக் தோழர்கள் "ஏன் ஃபிரண்ட், காதலர் தினம் வருது.. ப்ளாக்கை எடிட் செய்யலையா?"ன்னு கேட்டாங்க..

நான் வேற இப்பத்தான் ஒரு 4 மாசம்மா இங்கு வந்து குப்பை கொட்டுறதுனாலே, எப்போதெல்லாம் சுத்தம் செய்யனும், என்ன செய்யனும்ன்னு ரூல்சஸ் தெரியலை..

உடனே நம்ம தோழர்கள் சொன்னாங்க:

"அது ரொம்ப ஈசி.. முதல்ல உங்க வலையை சிவப்பு அல்லது பிங்குக்கு மாத்துங்க!"

"என் ப்ளாக் சிவப்பாத்தானே இருக்கு?" இது நான்.

"அட.. அப்பன்னா பிங்குக்கு மாறுங்க"

"பிங்க்கா?? அதெல்லாம் ஒரு ரா??.... க்ர்ர்ர்ர்... த்த்தூ...."

"அப்படியெல்லாம் சொல்லப்படாது! நல்லா கேட்டுக்கோ! பிங்க் உனக்கு பிடிக்கலைன்னா உன்னை பெண்கள் லிசஸ்டிலேயே சேர்த்துக்க மாட்டாங்க.. ஆமா!!"

"அட.. இது என்ன கண்டிஷன்? புதுசா இருக்கே! ஓ அதான் திருமதி. சரவணன் பிங்க் கலர் சாரில திருமணம் செஞ்சுக்கிட்டாங்களா?"

"யாருப்பா அது? Mrs. Saravanan?"

"அதான், அடாவடியா துருதுருன்னு நிறைய படத்துல நடிச்சாங்களே! ஜோதிகான்னு கூட சிலர் கூப்பிடறதா நம்ம தலைவருடைய சிட்டுக்குருவி சொல்லிச்சு.."

"Out of topic எல்லாம் போகாதீங்க ஃபிரண்ட். உங்க தெம்ப்லேட் (template) கலர் மாத்த போறீங்களா இல்லையா!!!!"

நண்பர் கடுப்பாக..
நான் "அய்யோ மிரட்டாதீங்க தோழரே! வீராசாமி விமர்சனர்த்தை வலையில் படிச்சு.. பாவம் நான் பயந்து போய்.. இன்னும் அந்த பயத்திலிருந்து மீளவே இல்லை. அதுக்குள்ள இன்னொன்றா? நான் மாத்திருறேங்க.."

அப்புறம் என்ன.. நம்ம ப்ளாக்லேயும் என்னென்னவோ சேர்த்தும்.. சிலவைகளை கழித்தும்.. எனக்கு பிடித்த கலரையும் சேர்த்தேன்.

ஆனாலும் அந்த பிங்க் கலரை போடனும்ன்னு துளி கூட ஞாபகம் இல்லை.. எல்லாமே நீல மயமாக மாறிட்டது.. இப்போ THe WoRLD oF .:: MyFriend::.-இல் நான் ஒருவர் மட்டும் பதிவர் இல்லை.. Official-ஆக இன்னொருவரும் இணைந்திருக்கிறார்..

Let me welcome Mr. Siddarth with a big round of applause.... :-D (இவர் பதிவு எழுதினாலும் என் பெயரில்தான் எழுதுவார். அதுனால் எது அவர் எழுதினார்.. எது நான் எழுதினேன் என்ற சின்ன பிள்ள தனமா கேக்கக்கூடாது.. சொல்லிட்டேன் ஆமா!) :-P

அப்புறம் நேற்று செந்தழல் ரவியோட காதலர் தினம்: என்ன உடை - என்ன அர்த்தம் என்பதை படித்தேன். அட ஆமா: ரவி, நீங்க சொன்னது ரைட்தான் போல.. :-P என் ப்ளாக் நீலத்துல இருக்கு.. அப்ப நான் சும்மாத்தானிருக்கிறேன்.. ஃப்ரீரீரீ...

சரி.. இப்போ என்னை சுத்தி நடந்ததை சொல்லுறேன்.. நேற்று ஏதோ கொஞ்சம் ஃப்ரீயாத்தான் இருந்தேன். ஒருத்தி சும்மா இருந்தா எப்படித்தான் மத்தவங்களுக்கு மூக்குல வேர்க்குமோ தெரியாது.. நம்ம நண்பர்கள் எல்லாம் என் ரூம்ல வந்து கூடிட்டாங்க.. ஏதோ மாநாடு நடக்குற ஒரு எஃபேக்ட்டு..

ஒரே தாமாஷ்தான் அதுக்கு பிறகு.. பேசினோம்.. அரட்டை அடிச்சோம்.. கிண்டல் பண்ணோம்.. அப்படியே போயிக்கிட்டே இருந்தது.. திடீர்ன்னு:

"சுட்டும் விழி சுடரே..
சுட்டும் விழி சுடரே..
என் உலகம் உன்னை சு..."


"ஹலோ.."
பார்த்தால் என் தோழியின் கைத்தொலைபேசி ரிங்டோன்..

"Hey, will be back in a while.."ன்னு சொல்லிக்கிட்டே ரூம்மை விட்டு வெளியே போயிட்டாங்க..

சரி ஏதோ பர்சனல் கால்ன்னு நாங்கள் பேச்சை தொடர்ந்தோம்..

"பாக்காதே என்னை பாக்காதே..
கொட்டும் பார்வையாலே என்னை பார்க்.."
வரி முடியறதுக்குள்ளே

இன்னொருத்தவங்க "Urgent.. சீக்கிரமா வந்துடறேன்"ன்னு சொல்லி நழுவிட்டாங்க..

அவங்க பின்னாலேயே இன்னொருத்தவங்க "கீழே வரைக்கும் போயிட்டு வந்துடறேன்"ன்னு நழுவிட்டாங்க..

இன்னொருத்தவங்க இங்க நடக்கிறதையெல்லாம் கவனிக்காமல் மும்முறமா குறுஞ்செய்தி எழுதுறலேயே பிசியா இருந்தாங்க..

நான் அவங்களை கூப்பிட "நீ என்னை ரொம்பவே கிண்டல் பண்ற.. நான் கோபிச்சுகிட்டு போறேன்.."ன்னு கிளம்பிட்டாங்க.

பார்ரா... ரூமை விட்டு வெளியே போறதுக்கு இப்படியும் ஒரு வழியா?

நான் கடுப்பாகி "யார் யார் கிளம்பனும்ன்னு நினைக்கிறீங்களோ, இப்பவே கிளம்பலாம்.. ஒன்னு ஒன்னா கலண்டுக்கிறது நல்லா இல்ல சொல்லிட்டேன்"ன்னேன்..

ஒரு கும்பலா சிலர் எழுந்திருச்சி கிளம்பிட்டாங்க..

அதுலேயும் கடைசியா வெளியானவங்க என் பக்கத்தில வந்து நின்னு என்னை பாவமா பாத்தாங்க.

நான்: என்ன?
அவங்க: எவ்வளவு பேர் வெளியானாலும் நீ தாங்கிகிற.. நீ ரொம்ம்ம்ம்பபப நல்ல்லவ.. அவ்வ்வ்வ்..

சொல்லிக்கிட்டே ஓடிட்டாங்க.. என்னை வெறுப்பேத்துறதுக்குன்னே ஒரு க்ரூப் இப்படி சுத்திக்கிட்டு இருக்கு போல.. என்ன பன்றது.. என் தலைவிதி..

சரி போனால் போகட்டும் போடான்னு சொல்லிட்டு மிச்சம் இருக்கிற கூட்டணிய எண்ணினா... 1... Count again.. 1....அடப் பாவமே! என்னையும் சேர்த்து மொத்தமே 2 பேர்தான்...

என் தோழி: "கவலைப் படாதே! நான் இருக்கிறேன்.. எல்லாருக்குமே பார்த்னர் இருக்கு.. காதலர் தினம் கொண்டாட கிளம்பிட்டாங்க.. நமக்குதான் இல்லையே.. நீ உன் நண்பர்கள் நல்லா கவிதை கதையெல்லாம் எழுதியிருக்காங்கன்னு சொன்னியே.. வா.. நாம் அதையெல்லாம் படிக்க...."

"காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்..
கரையில் வந்த பின்னும் நான் விழுந்தேன்.."

இது அவளுடைய குறுஞ்செய்தி ரிங்டோன்..

"ஏய்.. இது காதல் வைத்து படல்தானே.. வரிகள் நல்லா இருக்கு"ன்னு நான் சொன்னேன்..

பதிலுக்கு அவள் : "அந்த படம் என் கிட்ட இருக்கு.. நான் போய் எடுத்துட்டு வரேன்"ன்னு சொல்லி ஒரே ஓட்டமா ஓடிட்டாள்..

அப்போ புரிஞ்சுக்கிட்டேன்.. இவளும் எஸ்கேப்ன்னு..
என்னங்க பன்றது.. எல்லாரும் ரெண்டு ரெண்டா சுத்துறாங்க..
நான் இன்னும் தனி ஆள்தான்.. சரி.. நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் நினைச்சிகிட்டு டவுன்லோட் பண்ணி வைத்திருந்த தீபாவளி படத்தை தனிமையில் உட்கார்ந்து பார்த்தேன்.

எல்லாரும் சொல்றதை போல நானும் என் பங்குக்கு வாழ்த்து சொல்லிகிறேன்:

காதலர்களாய் சுற்றுபவர்களுக்கு : "காதலர் தின வாழ்த்துக்கள்!"

ஒற்றையாய் இருப்பவர்களுக்கு : (பெப்சி உமா தோனில்) நான் என்னங்க சொல்ல போறேன்.. பலர் வருஷ கணக்கில முயற்சி ஷெய்திருப்பீங்க.. ஆனா லைன் (பொண்ணு / பையன்) கிடைச்சிருக்காது. சிலர் இன்னைக்குதான் முயச்ஷித்திருபீர்கள். உடனே கிடைத்திருக்கும். வருசத்துல 365 நாள் இருக்குங்க.. முயற்சி பண்ணுங்க.

(இது என்னுடய குரலில்) காதலர்கள் ஏன் காதலர் தினத்தை ஸ்பெஷலா கொண்டாடுறாங்கன்னு தெரியுமா? வருசத்துல 365 நாட்கள்ல 364 நாட்கள் எதுவும் ஸ்பெஷலா நடக்கததுனால இந்த ஒரு நாள ஸ்பெஷலா ஆக்கிகிட்டாங்க.. அப்ப காதலர் இல்லாதவங்களுக்கு 365 நாட்களும் ஸ்பெஷலான நாட்கள்தானே!! (அப்படின்னு நாமலே நினைச்சு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்..)

ஒற்றையாய் சுற்றும் அன்பர்களுக்கு "அன்பர் தின வாழ்த்துக்கள்!"

37 Comments:

ஜி said...

//என் ப்ளாக் நீலத்துல இருக்கு.. அப்ப நான் சும்மாத்தானிருக்கிறேன்.. ஃப்ரீரீரீ...//

அவரு இன்னொன்னு சொல்ல மிஸ் பண்ணிட்டாரு... நீலம்னா, நான் ஃப்ரீ... யாரு வெணும்னாலும் ட்ரை பண்ணலாம்னு அர்த்தம்...

நீங்க வேற ஃபிரீன்னு போட்டிருக்கீங்க... சீக்கிரத்துலேயே, அந்த வலையில் விழ வாழ்த்துக்கள்...

இங்கேயும் அன்பர்கள் தின வாழ்த்துக்கள்தான்.. :(((

CVR said...

Happy single's day!! [:P]

Unknown said...

அன்பர் தின வாழ்த்துக்கள்!!! :-)

கலர் கலரா பதிவு போட்றதுங்கறதுன்னா இதுதானா? ;-)

வெங்கட்ராமன் said...

இந்த பிப்ரவரி 14 கூத்தெல்லாம் கொஞ்சநாளா தான் நடக்குது.

காதலர் தினத்தால காதல் வளருதோ இல்லையோ, பல நிறுவனங்களில் வியாபாரம் தான் வளருது.
அவிங்களால வற்ற பிரச்சனை தான் இதெல்லாம்

/*****************************
பாரதி கண்ணம்மா, வடிவேலு ஸ்டைல்ல.

பாரதி நாடு கெட்டு நாசாமா போயிக்கிட்டு இருக்கு . . . .
*****************************/

வெங்கட்ராமன் said...

இது என் கவிதை காதல் பற்றி. . . .


பெரும்பாலானோருக்கு காதல் வருவதே இல்லை,
வந்ததாகவே அவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள் . . . . !!!!!!!!!

Anonymous said...

:-)

Dr.Sintok

Anonymous said...

"டவுன்லோட் பண்ணி வைத்திருந்த தீபாவளி படத்தை தனிமையில் உட்கார்ந்து பார்த்தேன்."

படம் எப்படி?

நீங்கள் எந்த தளத்தில் டவுன்லோட் பண்ணினீங்க?

Dr.Sintok

மு.கார்த்திகேயன் said...

மை பிரண்ட்,

ஜி சொல்றதை நானும் வழி மொழியிறேன்.. புளுஉங்கோவா நீங்க இருக்கிறதால சீகிரம் ஒரு பாய் பிரண்ட் அமயக் கடவது..

என்ன இருந்தாலும், இந்த காதலர் தினத்துக்கு நீங்களும், நம்ம கட்சிங்கிறதால (கட்சில, இப்போதைக்கு நான், ஜி மற்றும் ட்ரீம்ஸ்),

அன்பர் தின வாழ்த்துக்கள் மை பிரண்ட்

மு.கார்த்திகேயன் said...

அப்படி இந்த காதலட் தினத்திலேயே ஏதாவது அமைஞ்சிருந்தாலும் சொல்லுங்க..ஹிஹி.. வாழ்த்தை கரெக்டா சொல்லோனும்ல, மை பிரண்ட்

MyFriend said...

//அவரு இன்னொன்னு சொல்ல மிஸ் பண்ணிட்டாரு... நீலம்னா, நான் ஃப்ரீ... யாரு வெணும்னாலும் ட்ரை பண்ணலாம்னு அர்த்தம்...//

இது வேறையா? எத்தனை பேரு இப்படி வதந்தியை கிளப்ப கிளம்பிட்டீங்க? :-P

//சீக்கிரத்துலேயே, அந்த வலையில் விழ வாழ்த்துக்கள்...//
என்ன ஒரு அக்கறை.. :-)

MyFriend said...

// Happy single's day!! //

same to you CVR. :-D

MyFriend said...

// கலர் கலரா பதிவு போட்றதுங்கறதுன்னா இதுதானா? ;-) //

வித விதமா போஸ்ட் போட முடியவில்லை அருள்.. அதான் கலர் கலரா போடுகிறேன். ;-)

MyFriend said...

//காதலர் தினத்தால காதல் வளருதோ இல்லையோ, பல நிறுவனங்களில் வியாபாரம் தான் வளருது.//

ஆமாம் வெங்கட். இந்த தேதியில பையன்கள்தான் பாவம்.. அப்பாவியா ஷாப்பிங் செண்டர்ஸ்ல உட்கார்ந்திருக்க, பொண்ணுங்களெல்லாம் அவர்கள் பாக்கெட்டை காலி பண்ணிருவாங்கல்ல.. அதான் நிறுவனங்கள் அந்த ஓஃபர் இந்த ஓஃபர்ன்னு போட்டு தள்ளுராங்க..

MyFriend said...

// பெரும்பாலானோருக்கு காதல் வருவதே இல்லை,
வந்ததாகவே அவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள் . . . . !!!!!!!!! //

அப்படி போடுங்க வெங்கட். சரியான வரி..

MyFriend said...

// :-)

Dr.Sintok //

சிரிக்கிற மாதிரி இருக்கா சிந்தோக்? படிச்சு சிறிச்சிருந்தீங்கன்னா எனக்கும் சந்தோஷம்.. :-)

MyFriend said...

//நீங்கள் எந்த தளத்தில் டவுன்லோட் பண்ணினீங்க?//

இந்தாங்க பிடிங்க:
http://sweetmiche.com

MyFriend said...

//புளுஉங்கோவா நீங்க இருக்கிறதால சீகிரம் ஒரு பாய் பிரண்ட் அமயக் கடவது..//

ஆசை தோசை அப்பளம் வடை.. :-P

// இந்த காதலர் தினத்துக்கு நீங்களும், நம்ம கட்சிங்கிறதால (கட்சில, இப்போதைக்கு நான், ஜி மற்றும் ட்ரீம்ஸ்), //

இது என்ன கட்சி? எப்போ ஸ்டார்ட் பண்ணினீங்க? ஓ! இது தனியா இருக்கிறவங்க சேர்ந்து உருவாக்கின கட்சியா?

MyFriend said...

// அப்படி இந்த காதலட் தினத்திலேயே ஏதாவது அமைஞ்சிருந்தாலும் சொல்லுங்க..ஹிஹி.. வாழ்த்தை கரெக்டா சொல்லோனும்ல, மை பிரண்ட் //

அமைஞ்சிட்டா கண்டிப்பா ஒரு ஸ்பெஷல் பதிவா போட்டுடுவோம்.. ;-)

சினேகிதி said...

\\நான்: என்ன?
அவங்க: எவ்வளவு பேர் வெளியானாலும் நீ தாங்கிகிற.. நீ ரொம்ம்ம்ம்பபப நல்ல்லவ.. அவ்வ்வ்வ்..\\

vadivelluva vida nenega solrapa innum nalla iruku:-)
pepsi umava vida neenga sonathu nalla iruku!

Anonymous said...

என் இனிய தோழி,
//எவ்வளவு பேர் வெளியானாலும் நீ தாங்கிகிற.. நீ ரொம்ம்ம்ம்பபப நல்ல்லவ.. அவ்வ்வ்வ்..//
தோழி, சரியான sense of humor உங்களுக்கு, வாழ்த்துக்கள்.

//டவுன்லோட் பண்ணி வைத்திருந்த தீபாவளி படத்தை தனிமையில் உட்கார்ந்து பார்த்தேன்.//
படம் எப்பிடிங்க இருக்குது?

வாலன்டைன்ஸ்டேங்கிற பேருல கெட்ட அளப்பரய குடுக்குறாய்ங்க, கடுப்ப வேற கெளப்புராய்ங்க. அட எனக்காவது ஒன்னு மாட்டுதா, அதுங்கெடயாது, இன்னிக்குனு பாத்து புளூ சட்ட, புளூ பேன்டு, புளூ பேனானு 'மேன் இன் புளூ' கணக்கா போனா, பாக்குற பிகர் எல்லாம் அங்கிள்னு சொல்லி பீதிய கெளப்புராய்ங்க. என்னமோ போங்க தோழி.

இராம்/Raam said...

பிரண்ட்டு,

உங்களுக்கும் சேம் பிஞ்ச்'ஆ.....???

MyFriend said...

வாங்க சினேகிதி

//vadivelluva vida nenega solrapa innum nalla iruku:-)//

அட ஆமாவா? வடிவேலுவை வெட்டிக்க முடியுமா? அவரு போடி லாங்குவேஜே தனி அழகுதான்.. ;-)

MyFriend said...

//தோழி, சரியான sense of humor உங்களுக்கு, வாழ்த்துக்கள்.//
ஆஹா... உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி..

//படம் எப்பிடிங்க இருக்குது?//
படம் பார்த்து நொந்துட்டேன். நிறைய இடத்துல லாஜிக் இடிக்குது.. ரோட்டுல வேகமாய் வரும் லாரில அடிப்பட்டு ரவி பொழச்சிக்கிறதுதான் முதல் சீன்.
கடைசி சீனில், ரவி வயிற்றில் கத்தி குத்துப் பட்டு மருத்துவமனையில் ஆப்பரேஷன் பண்ணப்ப்பட்ட பிறகு, அவர் அப்ப போன் பன்னினதும், அலேக்கா எழுந்து சர்வ சாதாரணமாய் நடக்குறது ஏத்துக்க முடியல..

இதை கேட்டே படம் எப்படி இருக்கும்ன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்குமே?

MyFriend said...

//அட எனக்காவது ஒன்னு மாட்டுதா, அதுங்கெடயாது, இன்னிக்குனு பாத்து புளூ சட்ட, புளூ பேன்டு, புளூ பேனானு 'மேன் இன் புளூ' கணக்கா போனா, பாக்குற பிகர் எல்லாம் அங்கிள்னு சொல்லி பீதிய கெளப்புராய்ங்க. என்னமோ போங்க தோழி.
//

ஆல் இன் ப்ளூவா போனீங்களே! டை அடிக்க மறந்துட்டீங்க பாத்தீங்களா!!!

அதான் பொண்ணுங்க எல்லாம் அங்கள்ன்னு கூப்பிட்டிருக்காங்க.. ;-) (சும்மா.. ஜோக்.. :-P)

MyFriend said...

//உங்களுக்கும் சேம் பிஞ்ச்'ஆ.....??? //

அதே அதே!! ;-)

Anonymous said...

அன்பர்கள் தின வாழ்த்துக்கள் என் தோழி.எல்லாரும் காதலர் தின வாழ்த்துக்கள் என்று கடுப்புகளை கிளப்பி கிட்டு இருக்காங்க.நீங்களும் நானும் ஒரே கட்சி.சரி யாரவது நம் கையில் மட்டும் வரை I am single,and loving it என்று மனதை தேற்றி கொள்வோம்.

Unknown said...

ஸ்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆஆ கண்ணைக் கட்டுதே... :)

நெல்லை சிவா said...

செம கலருங்க..எதப் பார்க்கிறது..எதை விடுறதுன்னே தெரியல.. :)) அன்பர்தின வாழ்த்துக்கள்..அன்பர்கள் வாழ்க..அன்பும் வாழ்க..

புதிய நண்பருக்கும் வாழ்த்துக்கள்!

Anonymous said...

Vaashthukkal my friend , superb :-)

MyFriend said...

// நீங்களும் நானும் ஒரே கட்சி.சரி யாரவது நம் கையில் மட்டும் வரை I am single,and loving it என்று மனதை தேற்றி கொள்வோம். //

ஆமாம் துர்கா.. இது நாம் பேசி ஒரு முடிவுக்கு வந்த விஷயமாச்சே! ;-)

MyFriend said...

// ஸ்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆஆ கண்ணைக் கட்டுதே... :) //

:-))

MyFriend said...

// நெல்லை சிவா said...
செம கலருங்க..எதப் பார்க்கிறது..எதை விடுறதுன்னே தெரியல.. :))//

கலர் கொஞ்சம் அதிகமோ? குறைக்கனுமா?

// புதிய நண்பருக்கும் வாழ்த்துக்கள்! //

சித்துக்கு தானே? ரொம்ப சந்தோஷப்பட்டார் சிவா.. நீங்க மட்டும்தான் அவரின் வருகைக்கு ஆதரவு தந்திருக்கீங்க.. மத்தவங்க தரலைன்னு ஒரே புலம்பல்.. :-(

MyFriend said...

// c.m.haniff said...
Vaashthukkal my friend , superb :-)
//

நன்றி ஹனிஃப். ;-)

CVR said...

BTW,
How did you assume that iam a single?? :P

MyFriend said...

// CVR said...
BTW,
How did you assume that iam a single?? :P
//

அய்யோ, தப்பா சொல்லிட்டேனா? வாய் நழுவி கையில் விழுந்திருச்சு போல.. ;-) அதான் அப்படி டைப் செய்துட்டேன். அப்போ, உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன். ;-)

CVR said...

how did you assume-nu dhaane keattean!!
aana naan single illainu sollaliye!!

ha ha ha!!
andha single's day wish stays intact!! :-)
no need to change! :-)

கோபிநாத் said...

\என்ன இருந்தாலும், இந்த காதலர் தினத்துக்கு நீங்களும், நம்ம கட்சிங்கிறதால (கட்சில, இப்போதைக்கு நான், ஜி மற்றும் ட்ரீம்ஸ்), \\

தலைவா நானு :(((

தோழி அன்பர்கள் தின வாழ்த்துக்கள்...