Sunday, February 18, 2007

165. இன்று சீன வருடப் பிறப்பு..

இன்று (18/02/07) சீனர்களுக்கு வருடப் பிறப்பு. மலேசியாவில் கொண்டாடப்ப்டும் பெரிய திருவிழாக்களில் இதுவும் ஒன்று.


சீனப் பெருநாள் என்றால் என்ன?

கமாரி (Qamari) சீனக் காலெண்டரின் முதல் நாளில்தான் இந்த பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த கமாரி காலேண்டர் 12 வருடங்களுக்கு ரிபீட் ஆகும். இந்த 12 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு மிருகங்களை சிம்போலாக (Symbol) பயன் படுத்துகின்றனர். அவை:

1- பறக்கும் நாகம் (Dragon)
2- பாம்பு
3- குதிரை
4- ஆடு
5- குரங்கு
6- சேவல்
7- நாய்
8- பன்றி
9- எலி
10- நரி
11- புலி
12- முயல்
இந்த 12 மிருகங்களும் இவர்களது ஆரம்பக் காலத்தில் அன்றாட வாழ்க்கை முறையில் இன்றியமையாதவைகளாகும். அதுவே நாளைடைவில் அவர்களின் சோதிடங்களிலும் அமல் படுத்தப் பட்டது. இப்போது நீங்கள் எந்த வருடம் பிறந்தவர் என்று சொன்னீர்களானால் உங்களுடைய கேரக்டர்களை அந்த வருடத்தின் அதிபதியாய் கருதப்படும் பிருகத்தின் குணத்தை உங்களோடு ஒப்பிட்டு சோதிடம் சொல்வார்கள்.


சீனப் பெருநாளில் போபுலர் ஐதங்கள்:

1- சிங்க நடனம் (Lion Dance)
இரண்டு பேர் ஒரே சிங்க உடையில் இணைந்து ஆடுவார்கள். இவர்களது நடனம் சிங்கத்தின் அசைவுகளைப்போல் இருக்கும். கோங் மற்றும் ட்ரம் இசையை பிண்ணனியை வைத்து இனர்ஜெதிக்-ஆக (energetic) ஆடுவர். இது அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதை குறிக்கின்றது.

2- மண்டரின் ஆரஞ்சு பழம்

சீனப் பெருநாள் என்றால் இந்த பழம் இல்லாமல் ஒரு விழா இல்லை என்று சொல்லலாம். எனக்கே பெட்டி பெட்டியாக என் நண்பர்கள் கொடுப்பார்கள் என்றால் பார்த்துக்குங்களேன்.

3- அங்-பாவ் (Ang Pow)


இது ஒரு சிவப்பு வர்ண என்வெலோப் (envelope). இதில் பணம் இருக்கும். இதை திருமணமானவர்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு சீனப் பெருநாளன்று கொடுப்பார்கள். மற்ற இனத்தவர் இவர்களது வீட்டுக்கு போனாலும் அங் பாவ் கிடைக்கும். அவர்கள் வீட்டில் அலங்காரமாகவும் இவை தொங்கப்ப்ட்டிருக்கும்.

4- பட்டாசு

நீளமான வெடி (பெயர் என்ன என்று தெரியவில்லை).. இதுவும் சிவப்பு வர்ணத்தில்தான் இருக்கும். சத்தமும் பலமாக இருக்கும். சீனப் பெருநாள் முதல் நாளும், சீனப்பெருநாள் அன்றும் இதை கொளுத்தி தள்ளுவார்கள். (ஆனால், மலேசியாவில் இந்த வெடி பேன்(ban) பண்ணிவிட்டார்கள்.)


சீனப் பெருநாள் 15 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது:

சீனப் பெருநாளுக்கு முதல் நாள் (Eve)

இந்த நாள் நாம் கொண்டாடும் போகிப் பெருநாள் போல் கொண்டாடப்படுகிறது. பழையது கழிதல்.. புதியது புகுதல். வீட்டை சுத்தம் படுத்துவதால், கெட்டதை அகற்றி நல்லதை பெற்று அதிர்ஷ்டத்தை வர வைக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர். சில வீடுகளில் இந்த நாளில் துடைப்பங்களையும் வீசிடுவார்கள். வீட்டை சிவப்பு வர்ணங்களில் ஜோடிப்பார்கள்.

அன்றைய இரவில் இவர்களும் இவர்களது சொந்தங்களும் ஒன்று கூடுவார்கள். கோழி, மீன், பன்றி, காய்கரிகள் போன்றிய உணவுகள் அன்றைய இரவு உணவாக சமைக்கப்பட்டிருக்கும். இதுல என்ன ஆச்சர்யப் பட வேண்டிய விஷயம்ன்னா, அவங்க அதை சாப்பிட்டு முடிக்க மாட்டாங்க.. மிச்சம் மீதியை ஃப்ரீசரில் எடுத்து வைப்பாங்க. இப்போது போல எப்போதும் உணவுக்கு பஞ்சம் இருக்கக் கூடாது என்பதே இதற்க்கு காரணம்.

சீனப் பெருநாள் (Day 1)

காலையில் இவர்கள் தங்களது முன்னோர்களை வழிப்படுவார்கள். பிறகு இவர்களை விட முதியவர்களை சந்தித்து ஆசி பெருவார்கள். முதியவர்கள் அங்-பாவ் (Angpau) என்று அழைக்கப்படும் சிவப்பு நிற என்வெலப் தருவர்.
சிலர் Lion dance என்றழைக்கப்படும் டான்ஸ் ஆடுபவர்களை அழைப்பார்கள்.

(Day 2)

இது திருமணம் ஆன பெண்களுக்கு முக்கிய நாள். இன்றுதான் திருமணமான பெண்கள் தங்கள் குடும்பத்துடன் அவர்களது பெற்றோர்களின் வீடுகளுக்கு செல்வார்கள். முதல் நாள் எப்படி சிறப்பாக கொண்டாடினார்களோ, அதேபோல் இன்றும் கொண்டாடுவார்கள்.

(Day 3)

இன்று அவர்கள் குடும்பம் இறந்தவர்களுக்கு மரியாதை செய்ய அவர்களின் சமாதிக்கு சென்று வழிப்படுவார்கள். அந்த குடும்பத்தில் யாராவது இறந்து 3 வருடங்கள் ஆகாமல் இருந்திருந்தல், அன்று உறவினர் வீடுகளுக்கு இவர்கள் செல்லக் கூடாது. இது அந்த இறந்தவருக்கு மரியாதை செய்வதில் ஒன்றாக கருதப் படுகிறது.

(Day 7)

இன்றுதான் ஒவ்வொரு சீனர்களுக்கும் ஒரு வயது official-ஆக கூடப்படுகின்றது என்று நம்புகிறார்கள். அதனால் ஒவ்வொரு சீனர்களுக்கும் இன்று பிறந்த நாள். இந்த நாளில் இவர்களும் பெரும்பாலும் அசைவ உணவுகளை உன்பதில்லை. ஆனாலும் இவர்கள் வீடுகளில் இன்று தடபுடலாக விருந்துகள் நடைப்பெறும்.

(Day 15)

சீனப் பெருநாளின் கடைசி நாள். "சாப் கோ மே" (Lantern Festival) என்று அழைக்கப்படும். இதை சீனர் காதலர் தினம் என்று என் நண்பர்கள் சொல்வார்கள். இன்றைய நாள் இரவில் சிறுவர்கள்/ இளைஞர்கள் கண்ணாடி கூண்டு பொருத்தப்பட்ட மண்ணெண்ணய் விளக்குகளை (Lantern) ஏந்தி வீதிகளில் வளம் வருவார்கள். இன்னாளில் சீன கியூபிட் (Chinese Cupid) இரண்டு மனங்களை ஒன்று சேர்க்கும் வேலையை தீவிரமாக செய்யும் என்று இவர்கள் நம்புகின்றனர்.

ஏதோ எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக்கிட்டேன். இங்கு மலேசியாவில் எந்த பெருநாள் கொண்டாடினாலும், எல்லாருமே சேர்ந்து கொண்டாடுவோம்..



Happy Chinese New Year!

Gong Xi Fa Chai!!!

21 Comments:

Anonymous said...

Gong Xi Fa Chai my friend.I got boxes of mandarin oranges and I got no idea how to finish it.Why they cannot give me boxes of ang pow?Hey this year is pig year right.I heard it is golden pig year.

வெட்டிப்பயல் said...

Gong Xi fa Chai

Syam said...

unga friends ellorukum Gong Xi fa Chai enga saarbila sollidunga... :-)

Syam said...

//இது ஒரு சிவப்பு வர்ண என்வெலோப் (envelope). இதில் பணம் இருக்கும்//

athaavathu avanga oor style moi nu solreenga :-)

Anonymous said...

"
1-பறக்கும் நாகம் (Dragon)
2- பாம்பு
3- குதிரை
4- ஆடு
5- குரங்கு
6- சேவல்
7- நாய்
8- பன்றி
9- எலி
10- நரி
11- புலி
12- முயல்
"

இந்த ஆண்டு பன்றி ஆண்டு. இந்த சுற்றின் கடைசி ஆண்டு.




"இந்த 12 மிருகங்களும் இவர்களது ஆரம்பக் காலத்தில் அன்றாட வாழ்க்கை முறையில் இன்றியமையாதவைகளாகும். அதுவே நாளைடைவில் அவர்களின் சோதிடங்களிலும் அமல் படுத்தப் பட்டது. இப்போது நீங்கள் எந்த வருடம் பிறந்தவர் என்று சொன்னீர்களானால் உங்களுடைய கேரக்டர்களை அந்த வருடத்தின் அதிபதியாய் கருதப்படும் பிருகத்தின் குணத்தை உங்களோடு ஒப்பிட்டு சோதிடம் சொல்வார்கள்."


நான் சேவல் ஆண்டு........ நீங்க எந்த ஆண்டு?

Dr.Sintok

மு.கார்த்திகேயன் said...

Gong Xi fa Chai !

சீன புத்தாண்டு வாழ்த்துக்கள் மை பிரண்ட்..

ஒரு விழாவை பற்றிய அழகான விளக்கங்கள்.. நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன் மை பிரண்ட்!

MyFriend said...

@Thurgah:
Gong Xi fa Chai.

என்னிடம் உள்ள மேண்டரின் எல்லாம் மற்றவர்களுக்கு கொஞ்சம் கொஞமா பபகிர்ந்து கொடுத்தாச்சு.. ;-)
இப்ப காலி :-P

ஆம். இது பன்றி வருடம்தான்.. தங்க பன்றி.. :-P

MyFriend said...

@Vetti:

Gong Xi Fa Chai too.. ;-)

MyFriend said...

@Syam: நண்பர்களுக்குமா? சரி இப்பவே சொல்லிடுறேன்.. உங்க பெயரில் ..;-)

MyFriend said...

@Syam..
//athaavathu avanga oor style moi nu solreenga :-) //

அதே அதே!!!

MyFriend said...

@Dr. Sintok:
//நான் சேவல் ஆண்டு........ நீங்க எந்த ஆண்டு?//

நான் எலி.. இந்த சுற்றின் முதல் மிருகம்.. ;-)
அடுத்த வருடம் எங்களுடையதுதான்.. :-D

MyFriend said...

@M. Karthik:

// ஒரு விழாவை பற்றிய அழகான விளக்கங்கள்.. நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன் மை பிரண்ட்! //

மிக்க மகிழ்ச்சி தலைவரே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

My friend!

92 ல்; என் திருமணம் சிங்கப்பூரில் நடந்த போது; நான் சீனப் புதுவருட காலத்தில்(பெப்ருவரி 15-ஏப்ரில் 05) அங்கே இருந்தேன். ஒரே கொண்டாட்டம் தான் . அ௯ந்த வருடம் என்ன மிருகம் என ஞாபகம் இல்லை.

கோபிநாத் said...

தோழி
உங்களுக்கும் நண்பர்களுக்கும் சீன புத்தாண்டு வாழ்த்துக்கள்...

ம்ம்ம்..15 நாள்..கலக்கல் தான்

அருமையாக எழுதியிருக்கிங்க....

MyFriend said...

@யோகன்:

1992 - குரங்கு வருடம் யோகன். ;-)

திருமணம் செய்ய சிங்கப்பூர் வந்தீங்களா? மனைவி சிங்கப்பூரரா?

MyFriend said...

@கோபிநாத்

//உங்களுக்கும் நண்பர்களுக்கும் சீன புத்தாண்டு வாழ்த்துக்கள்...//

Gong Xi Fa Chai

// அருமையாக எழுதியிருக்கிங்க.... //

ச்சீ போங்க.. வெட்கமா இருக்கு!! :-P

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இல்லை! என் மனைவியும் ஈழம் தான்; ஆனால் நான் ஒரு அரசியல் அகதியாக இருந்ததால்; இலங்கை போகமுடியாதல், சில இலகுவான நடைமுறைகளுக்கு சிங்கப்பூர் இலகுவாக அமைந்ததால்; அங்கு வந்து;செய்தேன். சிங்கப்பூரில் என் தம்பியின் நண்பர் குடும்பம் இருந்து; மிக உதவி செய்தார்கள்(சிங்கப்பூர்த் தமிழர்).
சட்டத்தை மதிக்கும் மிகச் சிறந்த நாடு.மறக்கமுடியாத நாடு.என் குடும்பத்தினரும் முதல் முதல் பார்த்த வெளிநாடு.
அப்போதுதான் இந்தக் கொண்டாட்டமெல்லாம் ரசித்தேன். சிரங்கூன் அம்மன் கோவிலருகில் தங்கியிருந்தோம்.மறக்கமுடியாத நாட்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by a blog administrator.
MyFriend said...

@யோகன்:
//நான் ஒரு அரசியல் அகதியாக இருந்ததால்; இலங்கை போகமுடியாதல்,//

அரசியல் அகதின்னா என்னனு எனக்கு புரியலை யோகன்.. :-(

//சட்டத்தை மதிக்கும் மிகச் சிறந்த நாடு.மறக்கமுடியாத நாடு.//

ஆமாம்.. சட்டத்தை அவர்கள் ரொம்பவும் கடடைப்பிடிப்பர். ;-) உங்கள் திருமணமும் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாய் இருக்க காரணமாய் இருந்த சிங்கப்பூரை மறக்க முடியுமா? ;-)

MyFriend said...

@யோகன்:

Noted. ill contct you by email. and your comments removed as you wished. ;-)

Anonymous said...

Tnx for the info ;-)