Saturday, February 03, 2007

159. பெண்: என் கேள்விக்கென்ன பதில்?

தற்செயலாக திவ்யாவின் கலைப்பாடங்களில் பட்டப்படிப்பு படிக்கலாமே என்னும் பதிவை படித்தேன். என்னுள் பல பல கேள்விகள்...

இந்தியாவில் மட்டும்மல்ல.. அனேக நாடுகளில் நம் தமிழினத்தில் பெண்களை சீக்கிரம் திருமணம் செய்து வைக்க நிறைய பெற்றோர்கள் கங்கணம் கட்டி திறீகிறார்கள்.

ஏன்?

1- உங்களுக்கு நாங்கள் என்ன பாரமா?

2- நாங்கள் படிப்பிலும் தொழிலிலும் வெற்றி பெற மாட்டோம் என்று நினைக்கிறீர்களா?

3- சீக்கிரம் திருமணம் புரியாவிட்டால் மற்றவர்கள் குறை சொல்வர் என்றா?

4- மாப்பிள்ளை கிடைக்காதென்றா?

5- உங்களின் கடமைகளை சீக்கிரமே முடிக்க வேண்டும் என்பதாலா?

பிறகு எதற்க்கு சின்ன வயசிலிருந்தே நன்றாக படிக்க வேண்டும், பள்ளியில் முதன்மையாக வரவேண்டும் என்று எங்களை தொல்லை படுத்தினீர்கள்?

பரிட்சையில் புள்ளிகள் குறைந்ததற்க்கு எங்களை பிரம்பு பிய்யும் வரை அடித்தீர்கள்?

உங்களின் அந்த அடியும் கட்டளைகளும்தான் எங்கள் மனதில் தீயானது. படித்து உங்களின் ஆண் பிள்ளகளை விட ஒரு படி மேலே இருக்கவேண்டும் என்ற வெறி..

ஆனாலும் மேல் நிலை கல்வி படிக்கும் போது திரும்பவும் பிரச்சனை.. எங்களின் லட்சியத்தை அடைய விடாமல் செய்யும் உங்களின் இந்த திருமண ஆசை..

எங்களை எங்கள் வழியில் விட்டு பாருங்கள். பல ஆயிரம் சரித்திர பெண்களையும் சாதிக்கும் பெணளையும் நீங்கள் கான்பீர்கள்... அது உங்களுக்கு பெருமை தானே??

பதில் சொல்லுங்கள் என் கேள்விகளுக்கு...

43 Comments:

மு.கார்த்திகேயன் said...

/எங்களை எங்கள் வழியில் விட்டு பாருங்கள். பல ஆயிரம் சரித்திர பெண்களையும் சாதிக்கும் பெணளையும் நீங்கள் கான்பீர்கள்... அது உங்களுக்கு பெருமை தானே??
//

ரொம்ப சூடா இருந்தாலும், நல்ல பதிவு மை பிரண்ட்..

நீங்கள் கேட்பது புரிகிறது.. ஆனால் இருபது வருடங்களுக்கு முன் இருந்த நிலைமை இப்போது இல்லை.. பாரினில் பெண்கள் எல்லாம் நடத்த வந்ததாக பாரதி பாடிய காலத்தையும் இன்று இருக்கும் காட்சிகளையும் பாருங்கள்!!!..

நிச்சயம் பெண் சமுதாயம் முன்னேறிகொண்டு தான் இருக்கிறது மை பிரண்ட்

MyFriend said...

பாரதி பாடிய காலத்தையும் இப்போடைய காலத்ஹையும் பர்த்தால், இப்போது எவ்வளவோ முன்னேற்ற்ம் இருக்கிறது, தலைவரே. அன்று அடுப்பறையில் அட்டும் வைக்கப்பட்ட பெண்கள், வெளியே வந்து பல வருடங்கள் ஆயிட்டது.

ஆனாலும், எங்களுக்கு ஆண்களைப் பல இன்னும் சுதந்திரம் கிடைக்காமல் இருப்பது வருத்தமே! எங்கள் லட்சியங்கள் நிரைவேற வரும் தடைகளில் பாதி நம் வீட்டில் உள்ளவர்களே! (NOT IN ALL HOUSE)

MyFriend said...

நம் குடும்ப கொடுக்கும் ஊக்கம்தான் 1000 யானைகளின் பலத்துக்கு சமம். அது ஒன்று போதுமே எங்களுக்கு!

MyFriend said...

நம் குடும்ப கொடுக்கும் ஊக்கம்தான் 1000 யானைகளின் பலத்துக்கு சமம். அது ஒன்று போதுமே எங்களுக்கு!

நாமக்கல் சிபி said...

இப்பொழுதெல்லாம் பெண்கள் மேற்கொண்டு படிக்க வேண்டும், வேலைக்குச் சென்று பிறந்த வீட்டின் பொறுப்பையும் கொஞ்ச காலம் சுமக்கிறேன் என்று பெண்கள் சொல்வதை பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள்.

MyFriend said...

//வேலைக்குச் சென்று பிறந்த வீட்டின் பொறுப்பையும் கொஞ்ச காலம் சுமக்கிறேன் என்று பெண்கள் சொல்வதை பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். //

உண்மைதான்.. அப்போதும் திருமணம் ஒன்ற ஒரு பந்தத்தில் இணைந்துவிட்டு செய் என்றுதானே சொல்கிறார்கள்?

படிப்பதற்க்கு க்ல்வி கடனுதவி எடுத்தும் படிக்கும் எங்களுக்கு, ஒரு நிரந்தரமான வேலை கிடைக்குமுன் திருமணம் செய்து விட்டால், மணமகனும் ஒரு நிரந்தர வேலை இல்லாமல் இருந்தால்.. எப்படி குடும்பத்தை நடத்துவது? எப்போது கடனை அடைப்பது?

இப்போதைக்கு கணவன் மனைவி 2 பேரும் வ்லை செய்தால் மட்டுமே முடியும் என்ற கால கட்டத்தில் இருக்கும்ப்து, சில கணவன்மார்கள் மனைவிகளை வேலை செய்ய அனுமதிப்பதில்லை. (சிலர் மட்டுமே)

பெண் படித்து விட்டு, அட்லீஸ்ட் 2 வருடத்திற்காவது வேலை செய்தால் (திருமணத்துக்கு முன்பு), இவரும் ஒரு நல்ல நிலையில் இருப்பார்.. ம்னைவியை விட கணவன் வயது கூட உள்ளபடியால் அவர் அவளைவிட அதிகம் படித்தவராவோ, வேலை செய்தவராவோ இருப்பார். திரும்ணம் செய்யும்போது இவர்கள் இருவருக்கும் சொந்த சேமிப்பு இருக்கும்... இருவருக்குமே maturity-யும் இருக்கும்..

சீக்கிரம் திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையை பார்த்தப்பின் என்னுடைய கருத்து இது..

சீனு said...

//திரும்ணம் செய்யும்போது இவர்கள் இருவருக்கும் சொந்த சேமிப்பு இருக்கும்... இருவருக்குமே maturity-யும் இருக்கும்..//

ஆனால், அப்படி இருக்கும் இருவருக்குள் தான் விவாகரத்து அதிகம் என்பது ஏன்? (பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம் தான். இருந்தாலும் கேட்கவேண்டும் என்று தோன்றியது).

MyFriend said...

//ஆனால், அப்படி இருக்கும் இருவருக்குள் தான் விவாகரத்து அதிகம் என்பது ஏன்? (பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம் தான். இருந்தாலும் கேட்கவேண்டும் என்று தோன்றியது).
//

நல்ல கேள்விதான்.. ஆனால் அதற்க்கு என்னால் இப்போது பதில் கொடுக்க இயலாது. நான் இன்னும் திருமணம் செய்யவில்லை.

சிலர் இவர்களுக்குள் உள்ள ஈகோ என்று சொல்லலாம்.. ஆனால், இதை தவிர்த்து வேறு காரணங்களுக்கும் இருக்கலாம் என்பது என் கருத்து. வேறு யாருக்காவது தெரிந்தால் இங்கே சொல்லலாம். ;-)

மிதக்கும்வெளி said...

நியாயமான கேள்விகள்

பிரசாத் said...

the main cause for divorce is EGO. man thinks he is superior to the woman in every aspects,(but in reality it is not so, nowadays girls are the topppers in competitive exams school public exams etc. the male ego refuses to accept the reality and totreat their couterparts at par.

Arunkumar said...

நல்ல பதிவு தோழியே.நீங்க கேக்குறது சரி தான். ஆனா கண்டிப்பா இந்த நிலை மாறிவருகிறது என்பதுதான் உண்மை. திருமணத்திற்கும் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் பெற்றோர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

மாசிலா said...

ஏந்தாங்க இந்த மாதியான எரிச்சலான கேள்வி? ரொம்ப சுலபமா கேட்டுவிட்டீங்க. இதுக்கு பதில் சொல்றது யாரு? என்னத்த சொல்றது? எப்படி? போட்டு குழப்பாதீங்க!

உங்களால் முடிந்தால், சமுதாய மனநிலை ஓட்டம், கட்டுப்பாடு, கோட்பாடு, சம்பிரதாயம், சாங்கியம், என்னங்கள், எதிர்பார்ப்புகள், கனவுகள்,நினைப்புகள் போன்ற அனைத்தையும் உடத்து எறிந்துவிட்டு ஒரு வீரத்திருமகளாக வெற்றியுடன் புது உலகம் படையுங்கள். உங்களை வாழ்த்த வருபவர்களில் முதல் ஆளாக நானாகவே இருப்பேன்!

விடுதலை என்பது கேட்டு பெறும் பிச்சை போன்றது அல்ல. போரிட்டு மீட்பதே விடுதலை. பெண்கள் சுதந்திரத்திற்கான இது ஒரு நல்ல ஆக்கப்போர். வாழ்த்துகிறேன்.

ஒரு நல்ல பதிவு. மிகவும் தேவையானது.

சீனு said...

//போரிட்டு மீட்பதே விடுதலை. பெண்கள் சுதந்திரத்திற்கான இது ஒரு நல்ல ஆக்கப்போர்.//

ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை.

மாசிலா said...

//உங்களால் முடிந்தால், சமுதாய மனநிலை ஓட்டம், கட்டுப்பாடு, கோட்பாடு, சம்பிரதாயம், சாங்கியம், என்னங்கள், எதிர்பார்ப்புகள், கனவுகள்,நினைப்புகள் போன்ற அனைத்தையும் உடத்து எறிந்துவிட்டு ஒரு வீரத்திருமகளாக வெற்றியுடன் புது உலகம் படையுங்கள்.//

இது உங்களால் முடியும்!

MyFriend said...

//மிதக்கும் வெளி said...
நியாயமான கேள்விகள் //

நன்றி..

MyFriend said...

//பிரசாத் said...
the main cause for divorce is EGO. man thinks he is superior to the woman in every aspects,(but in reality it is not so, nowadays girls are the topppers in competitive exams school public exams etc. the male ego refuses to accept the reality and totreat their couterparts at par. //

Thanks for your view of opinions Prasad. Yes, I agree too.

MyFriend said...

//Arunkumar said...
நல்ல பதிவு தோழியே.நீங்க கேக்குறது சரி தான். ஆனா கண்டிப்பா இந்த நிலை மாறிவருகிறது என்பதுதான் உண்மை. திருமணத்திற்கும் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் பெற்றோர்கள் அதிகம் இருக்கிறார்கள். //

நன்றி அருண். :-)

MyFriend said...

//மாசிலா ஸைட்...
ஏந்தாங்க இந்த மாதியான எரிச்சலான கேள்வி? ரொம்ப சுலபமா கேட்டுவிட்டீங்க. இதுக்கு பதில் சொல்றது யாரு? என்னத்த சொல்றது? எப்படி? போட்டு குழப்பாதீங்க! //

திவ்யாவின் அந்த பதிவை படித்ததும் எனக்கெழுந்த கேள்வி.. அதுதான் கேட்டுவிட்டேன். கேள்வி எரிச்சலூட்டியிருந்தால் மன்னிக்கவும் மாசிலா.

//உங்களால் முடிந்தால், சமுதாய மனநிலை ஓட்டம், கட்டுப்பாடு, கோட்பாடு, சம்பிரதாயம், சாங்கியம், என்னங்கள், எதிர்பார்ப்புகள், கனவுகள்,நினைப்புகள் போன்ற அனைத்தையும் உடத்து எறிந்துவிட்டு ஒரு வீரத்திருமகளாக வெற்றியுடன் புது உலகம் படையுங்கள். உங்களை வாழ்த்த வருபவர்களில் முதல் ஆளாக நானாகவே இருப்பேன்!//

சரித்திரம் படைக்க முடியாவிட்டாலும், நான் ஆசைப்பட்ட அந்த லட்சியத்தை அடையாத வரையிலும் வீட்டின் எதிர்ப்புகளை எதிர்க்கொண்டு இருப்பேன். அடைந்தே தீர்வேன்.. ;-)

MyFriend said...

//ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. //

ஆனால், சில ஆண்கள் பெண்களின் லட்சியத்தை அடைய உதவி செய்யவும் செய்கிறார்கள். அவர்களை போல் எல்லாரும் இருந்தால் நல்லதே!

MyFriend said...

//இது உங்களால் முடியும்! //

தங்களின் நம்பிக்கைக்கு நன்றி, மாசிலா. :-)

சீனு said...

//அவர்களை போல் எல்லாரும் இருந்தால் நல்லதே!//

அது தான் இருக்கமாட்டார்கள் என்று சொல்கிறேன். இப்பொழுது அவர்களுக்கு முன்பை விட சுதந்திரம் இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், இது எவ்வளவு நாட்கள். இன்னும் 50 ஆண்டுகளில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்...

MyFriend said...

// இது எவ்வளவு நாட்கள். இன்னும் 50 ஆண்டுகளில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்...//

தவறாமல் வருகை தரும் சீனுவுக்கு நன்றி.. நீங்கள் சொல்வது 100% உண்மை.

அத மாற்றம் positive-ஆ இருந்தால் பெண்களுக்கு நன்று.. :-)

சீனு said...
This comment has been removed by the author.
Syam said...

நச் நச் னு இருக்கு உங்க ஒரு ஒரு கேள்வியும்...

Syam said...

//நாங்கள் படிப்பிலும் தொழிலிலும் வெற்றி பெற மாட்டோம் என்று நினைக்கிறீர்களா//

பின்ன எப்ப பாத்தாலும் நீங்கதான் படிப்பிலயும் சரி,வேலைலயும் சரி முதல் இடத்துல இருக்கீங்க...நாங்க எல்லாம் என்ன பண்றது :-)

MyFriend said...

//Syam said...
நச் நச் னு இருக்கு உங்க ஒரு ஒரு கேள்வியும்... //

:-)

MyFriend said...

//பின்ன எப்ப பாத்தாலும் நீங்கதான் படிப்பிலயும் சரி,வேலைலயும் சரி முதல் இடத்துல இருக்கீங்க...நாங்க எல்லாம் என்ன பண்றது :-) //

ஹா ஹா ஹா... இது நல்லா இருக்கு.. ;-)

கோபிநாத் said...

நல்ல பதிவு தோழி

உங்கள் கேள்விகளில் நியாம் உள்ளது.
ஆனால் இதற்கு பதில்கள் சொல்வது கடினம்...

ஆனால் இந்த நிலை இப்போது இல்லை என்பது தான் உண்மை...
(என் கருத்து)

கோபிநாத் said...

\\சரித்திரம் படைக்க முடியாவிட்டாலும், நான் ஆசைப்பட்ட அந்த லட்சியத்தை அடையாத வரையிலும் வீட்டின் எதிர்ப்புகளை எதிர்க்கொண்டு இருப்பேன். அடைந்தே தீர்வேன்.. ;-)\\

உங்கள் ஆசைகள் அனைத்தும் அடைந்திட என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள்..

Ram Ravishankar said...

"ஆனாலும், எங்களுக்கு ஆண்களைப் பல இன்னும் சுதந்திரம் கிடைக்காமல் இருப்பது வருத்தமே!"

Hmm .. "who" should give women freedom? Why would women think they have not been "given" freedom? Why blame and who is being blamed? I could never understrand!

MyFriend said...

//உங்கள் கேள்விகளில் நியாம் உள்ளது.
ஆனால் இதற்கு பதில்கள் சொல்வது கடினம்...//

:-)

//ஆனால் இந்த நிலை இப்போது இல்லை என்பது தான் உண்மை...
(என் கருத்து) //

ஆமாம் கோபி.

MyFriend said...

//உங்கள் ஆசைகள் அனைத்தும் அடைந்திட என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள்.. //

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.. இதுவே என் தூண்டுதலாக இருக்கும். ;-)

MyFriend said...

//Hmm .. "who" should give women freedom? Why would women think they have not been "given" freedom? Why blame and who is being blamed? I could never understrand! //

உங்களுக்கு கருத்துக்களுக்கு நன்றி..

இது மற்றவர்களை சுட்டி காட்ட அல்ல.. ஒரு பெண்ணின் ஆதங்கம் மட்டுமே. இந்த தடையை தகர்தெறிந்து வர வேண்டும் என ஒரு பதிவு.. ;-)

ஜி said...

ரொம்ப சூடா இருக்கீங்க போலிருக்குது ஃப்ரெண்ட்...

முன்னால பெண்களை பதினைந்து, பதினெட்டு வயதிலேயே திருமணம் செஞ்சி வச்சிருவாங்க. அந்த நிலை மாறி இப்ப இருபத்து ஒன்று முதல் இருபத்தைந்துன்னு முன்னேறி இருக்காங்க.. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்...

ஜி said...

என்னோட தங்கை படிக்கணும்னு ஆசைப் பட்டபோது கூட சொந்தக்காரவங்கெல்லாம் ஏற்கனவே அவளுக்கு வரதட்சணை எக்கச்சக்கம் கொடுத்துக் கல்யாணம் பண்ணனும். அப்படி இருக்கும் போது எதுக்கு அவள காசு செலவு பண்ணி படிக்க வைக்கிறீங்கன்னு கேட்டாங்க... ஆனா நாங்க படிக்க வைக்கிறோம்...

ஒரு புறிதல் இல்லாமல் போனதுதான் இவ்வளவு பிரச்சனைக்குக் காரணம்...

ஜி said...

அப்புறம்.. இவ்வளவு நாள் ஆளையே காணோம்...

k4karthik said...

ஸ்ஸ்ஸப்பா.... ரொம்ப சூடா இருக்கு உங்க போஸ்ட்...

MyFriend said...

//இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்... //

இதுதான் என் நம்பிக்கையும் ஜி..

MyFriend said...

// ஜி said...
அப்புறம்.. இவ்வளவு நாள் ஆளையே காணோம்... //

Busy-தான் காரணம்..:-)

MyFriend said...

// k4karthik said...
ஸ்ஸ்ஸப்பா.... ரொம்ப சூடா இருக்கு உங்க போஸ்ட்... //

சூடு கொஞ்சம் அதிகம்தான்.. இப்போது இருக்கும் temperature போலவே.. ;-)

வெங்கட்ராமன் said...

பேஷன் (?), மாடலிங், அறை குறை ஆடை என்று இல்லாமல், ஆக்கப்பூர்வமான வழியில் சென்றால் பெண்சமுதாயத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு.

MyFriend said...

//வெங்கட்ராமன் said...
பேஷன் (?), மாடலிங், அறை குறை ஆடை என்று இல்லாமல், ஆக்கப்பூர்வமான வழியில் சென்றால் பெண்சமுதாயத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு. //

நான் இதை ஆமோதிக்கிறேன்.. ;-)

Divya said...

மிகவும் தெளிவா, நியாயமான கேள்விகளை கேட்டு அசர வைச்சிருகிறீங்க, சூப்பர்!!

என் பதிவினை மேற்கோள் காட்டி எழுதியது பார்க்க சந்தோஷமாக இருந்தது.