Sunday, February 18, 2007

166. சீனப் பெருநாளில் நான் வாங்கிக்கிட்ட ஆப்பு!!

சீனப் பெருநாளைப் பற்றி ஒரு போஸ்ட் போட்டிருந்ததை வெட்டி படிச்சிட்டு, இந்த மாதிரி பெருநாளப்போ நீங்க எக்கு தப்பா மாட்டிக்கிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்டார்.. நான் இல்லவே இல்லன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.

பிறகு படுத்துண்டே யோசிக்கறச்சே 8 வருடத்துக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.. இதை வச்சி நீங்க காமெடி கீமடி பண்ண மாட்டீங்களே?? சரி ஃப்ளாஷ்பேக்குக்கு போவோம்.. ப்ளாஷ்பேக் வட்டமெல்லாம் உங்க சொந்த செலவுல போட்டுக்கனும் சொல்லிட்டேன்.... ஆமா!!!


எனக்கு ஒரு பத்து வருஷமா சீன நண்பர்கள் அதிகம்தான். தீபாவளின்னா போதும்.. ஒரு 20 பேர் க்ரூப்பா காலையில் 10 மணிக்கெல்லாம் என் வீட்டு முன்னுக்கு வந்து கூப்பிடுவாங்க. அவர்களை வரவேற்று இடம் பார்த்து உட்கார வைக்கிறது இருக்கே!!! அப்பப்பா.. போதும் போதும்ன்னு ஆயிடும்.. என் வீடே ஒரு சின்ன வீடு!! எல்லாரையும் ஹால் முழுக்க அப்படியே நிரப்பிட்டு...

இட்லி..
தோசை..
வடை..
இடியப்பம்..
கோழிக் கறி...
ஆட்டுக் கறி..
சாம்பார்..ன்னு கொண்டு வந்து ஹாலிலேயே பறிமாறுவேன். இவங்கெல்லாம் கரண்டியிலேயே சாப்பிட்டு பழகிட்டதனாலே கரண்டி கேட்டாங்க.. நான் ஒத்த ஆளா எத்தனை கரண்டிகளைதான் தேடுறது???

திரும்பி வந்து அவர்களிடம், "எங்க கலாச்சாரப்படி இந்த உணவுகளை கையில்தான் சாப்பிடுவோம். கையில சாப்பிட்டா இதோட ருசியே தனி"ன்னு ஒரு பிட்ட போட்டேன்.. அவங்களும் எப்படி சாப்பிடுறதுன்னு கேட்க, நானும் ஒரு இட்லியை என் தட்டில் போட்டு சாப்பிட்டு காட்டினேன்..

காலை பசியாறை சாப்பிட்டுட்டு, மதியம் உணவையும் முடிச்சுட்டுதான் வீட்டுக்கு கிளம்பினாங்க.. போகும்போது என்னிடம் சமயலை பற்றி சூப்பரா பாராட்டினாங்க.. இத்தனைக்கும் இதை எல்லாம் என் அம்மாதான் சமைத்தார்.. ;-) ஆனால், பாராட்டுக்கள் எனக்கே எனக்குதான்.. ;-)

அப்படியே ஒரு மூனு மாதம் பார்வட் (Forward) போங்க.. சீனப் பெருநாள் வந்திருச்சா?

சீனப் பெருநாள் அன்னைக்கு எனக்கு ஒரு கால் (call) வந்தது.
"இன்னைக்கு நாங்கெல்லாம் டின்னருக்கு போறோம்.. நீயும் எங்க கூட வா.. ஜாலியா இருக்கும்"ன்னு என் சீன தோழி சொல்ல.. நமக்குதான் ஓசி சாப்பாடு கிடைச்சா முதல் ஆளா போய் நிப்போம்ல. சரின்னு நானும் ஒத்துக்கிட்டேன். எனக்கு நானே ஆப்பு வச்சிக்க போறேன் எனக்கு அப்ப தெரியாது பாருங்க!!

இரவு ஒரு 7 மணி இருக்கும்.. ஒரு 8 கார்கள் என் வீட்டு முன் வந்து நின்னது. ஏதோ V.I.P. ஏறுவதா ஒரு எஃபெக்ட்டு.. நானும் ஏறி அவங்களோட போனேன். புக்கிட் பிந்தாங்-இல் இருக்கும் ஒரு ரெஸ்ட்ரானுக்கு சென்றார்கள். நான் சீன ஒட்டுக் கடைகளில் சாப்பிட்டிருக்கிறேன். இப்படிப் பட்ட ஒரு இடத்துக்கு அதுவரை சென்றதில்லை.

கூட்டாளிகள் இருக்கும் தைரியத்தில் அவங்களோட சேர்ந்துக்கிட்டு உள்ளே சென்றேன். 30 பேர் உட்காருவதற்காக ஏற்கனவே என் தோழி ரிசர்வ் செய்திருந்தாள். நாங்கள் உட்கார்ந்ததும் வேய்டர் போய் (Waiter Boy) ஒவ்வொருவருக்கும் மெனு கார்ட் கொடுத்தான். எல்லாருமே அதை திறந்து பார்க்க தொடங்கினாங்க.. ஆசை யாரை விட்டது.. நானும் திறந்து பார்த்தேன்.

ஆஹா.. ஆப்பு நம்பர் ஒன் வைச்சுட்டான்யா வைச்சுட்டான்.. மெனு கார்ட்டில் எல்லாமே கோடு கோடா எழுதியிருக்கு. எல்லாமே மேண்டரின்ல எழுதியிருக்கு!! ஒரே குழப்பாமாய் இருக்க.. எனக்கு எதுத்தாப்புல உட்கார்ந்திருந்த நண்பனை பார்த்தேன். அவன் சீனனாய் இருந்தாலும் மேண்ட்ரின் படிக்கத் தெரியாது.. ஆனால் அவனும் தீவிரமாய் அந்த மெனுவை முன்னும் பின்னும் திருப்பிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தால் மெனுவை படிக்கத் தெரிந்தவன் போலத்தான் இருந்தது.

கொஞ்ச நேரத்தில் வேய்டர் போய் ஆர்டர் எடுக்க தொடங்கினான்..
ஒவ்வொருத்தராய் அவர்களோட ஆர்டரை கொடுக்க தொடங்கினாங்க.. எல்லாமே மேண்டரின் மொழியில்தான். ஏதோ ஆங்கிலத்தில் ஓர்டர் பன்னாலும் நம் காதில் விழுந்தால் அதுவே கப்புன்னு புடிச்சி நாமும் ஓர்டர் செய்யலாம்ன்னு காதை தீட்டி வச்சுகிட்டு கேட்டேன்.

என்ன சொல்லுராங்கன்னு புரியல.. ஆனால், கடைசியில "சு (shi) சு"ன்னு சொன்னாங்க.. பதிலுக்கு அந்த வேய்டர் போய்யும் "சு"ன்னு சொன்னான்..

எனக்கு தெரிஞ்சதெல்லாம் "இ"(Ee), "ஏ"(Er), "சன்"(San), "சு"(Si) ன்னு 1, 2, 3 மேண்டரினில் சொல்வது.. இப்படியே யோசிச்சுட்டு இருக்க, என்னுடைய தேர்ன் (turn) வந்தது.. வேய்டர் போய் என்னிடம் கேட்க, நான்,

"இ ஏ சன் சு"ன்னு சொல்ல..

அவன் திரும்பி "சு??" முழிக்க..

நானும் "யெஸ், சு"ன்னு சொல்ல, கடையே அதிர என் நண்பர்கள் சிரிச்சாங்க..

என் தோழன், "அனு, அவனுக்கு மேண்டரின் தெரியும்.. நீ அவனுக்கு 1 2 3 சொல்லி தரியா?"ன்னு கேட்டான்.

அடடா.. இப்படி நம்மளை வைச்சு காமெடி பண்ற நிலமை வந்திருச்சேன்னு மனசுக்குள்ள நினைச்சிட்டு "What I meant ந்as Set No. 4"ன்னு சொல்லி சமாளிச்சேன்..

வேய்டர் போயிட்டான்.. ஆனால், என் நண்பர்களோட சிரிப்பு மட்டும் அடங்கல..

அப்பத்தான் தெரிஞ்சது.. அவங்க சொன்ன "சு".. ஆமாண்ணு அர்த்தமாம்.. நான் ஏதோ 4-ன்னுதான் சொல்றாங்கன்னு நினைச்சிக்கிட்டேன்.. எல்லாம் ட்ரான்ஸ்மிஷன் (transmission) கோளாரு.. :-P

அது மட்டுமில்லை.. அந்த மெனு 2 மொழியில இருக்கு.. முதல் 6 பக்கம் மேண்டரினிலும், கடைசி 6 பக்கம் ஆங்கிலத்திலும் இருந்திருக்கு.. யாருமே என் கிட்டே சொல்லவே இல்லை.. இப்படி எததனை கடையிலடா கிளம்பியிருக்கீங்க????

திடீன்னு, என் பக்கத்துல உட்கார்ந்திருந்த தோழி "ஏய், நீ என்ன செட் ஓர்டர் பண்ணுன?"ன்னு கேட்டாள்..

நான் சிரிச்சிக்கிட்டே "Set No.4"ன்னு சொல்ல..

ஆச்சர்யமாய், "ஏய், நீ தவளை சாப்பிடுவேன்னு சொல்லவே இல்லையே!! அன்னைக்கு BBQ நைட்ல அதை தொடவே இல்லையே????"ன்னு கேட்டாள்..

எனக்கு தூக்கி வாறி போட்டது.. என்னது?? நான் ஓர்டர் பண்ணது தவளை பிரட்டலா??? தலையே சுற்றியது..

"பரவாயில்லை.. நான் போய் கேன்சல் பண்ணிட்டு வேறு ஏதாவது ஓர்டர் பண்ணூறேன்.. என்ன வேணூம்?"ன்னு என் மேல் அக்கரை உள்ள தோழன் எழுந்திருச்சிக்கிட்டே கேட்டான்..

இன்னொரு ரிஸ்க் எடுக்க விரும்பாமல், ஏதாவது சாப்பிடும் மாதிரி ஓர்டர் பண்ணுப்பான்னு சொல்லிட்டேன்..

சாப்பாடும் வந்தது.. ஏதோ ஒரு வித மீதான் வந்தது. தவளையோட இது எவ்வளவோ பரவாயில்லைன்னு நினைச்சிக்கிட்டே கரண்டியை தேடினேன். ரெண்டு குச்சிதான் வந்தது.

நானும் அதில் சாப்பிட முயற்சி செய்தேன். எவ்வளவு நேரம்தான் நானும் சாப்பிடுவது போலவே நடிக்கிறது??

"எனக்கு இதுல சப்பிட தெரியாது, எனக்கு கரண்டி வேணும்"ன்னு பக்கதுல உட்கார்ந்திருந்த தோழியிடம் முணுமுணுத்தேன். அவளோ, இன்னைக்கு நீதான் எங்களுக்கு காமெடி ட்ராக்ங்குற மாதிரியே இன்னொரு முறை வேகமாய் சிரிக்க, மற்றவர்களும் என்னனு கேட்டு திரும்ப சிரிக்க.. அய்யோ பாவம்ங்கிற நிலமைதான் எனக்கு.. :-(

பிறகு இவங்களே சொப் ஸ்டிக் (Chop Stick) எனப்படும் அந்த குச்சியை பயன்படுத்துவது எப்படின்னு சொல்லிக் கொடுத்தாங்க.. நானும் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்ய, அந்த மீ என் வாயுள்ளே போறதுக்கு பதிலா என் சட்டை மேலே விழ.. அது இன்னொரு காமெடியாய் போச்சு.. ஒவ்வொருத்தவங்களா என் பக்கதுல வந்து குச்சியை பிடிச்சு பிடிச்சு சொல்லிக் கொடுத்தாங்க.. இந்த மரமண்டைக்குதான் ஏறவே இல்லையே!!!!

பிறகு அவங்களே போய் கடைக்காரணிடம் கரண்டியை கேட்க, அந்த கடையில் கரண்டியே இல்லையாம்.. என் நண்பன் என் மேல் பரிதாபப் பட்டு, பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கேட்க்கு போய் பிளாஸ்டிக் கரண்டி வாங்கிட்டு வர்ர நிலைமை ஆயிடுச்சு.. கரண்டி வந்தப்புறம்தான் ஒழுங்காய் சாப்பிட ஆரம்பித்தேன்..

சாப்பிட்டுட்டு அரட்டை அடிக்கும்போது, ஒரு நண்பன் "வாங்க.. அப்படியே வால்கிங் (walking) போயிட்டு.. சப்பருக்கு (supper) இன்னொரு கடைக்கு போவோம்"ன்னு ஐடியா கொடுத்தான்..

நான் "அய்யோ! ஆளை விடுங்கடா சாமி.. இப்படியே நான் ரோட்டுல நடந்தேனா 2-3 வயசு குழந்தைங்க கூட என்னை பார்த்து கிண்டல் பண்ண ஆரம்பித்திடும்.. சட்டை அவ்வளவு அழகாய் இருக்கு!!!! இதுல உங்களுக்கு வாக்கிங் போயிட்டு இன்னொரு கடை வேறையா???? என்னை வீட்டுல விட்டுட்டு நீங்க எங்க வேணூம்ன்னாலும் போங்கடா சாமிங்களா!!!"ன்னு சொல்ல..

ஒரு நண்பன் என்னை வீட்டில் விட சம்மதித்து, நாங்கள் இருவரும் மட்டும் கலண்டுக்கிட்டோம்.. மத்தவங்க அப்படியே வால்கிங் போயிட்டு சப்பர் முடிச்சிட்டுதான் வீடு திரும்பினாங்க..

வீடு வந்ததும் வீட்டுல உள்ளவங்க என் சட்டையை பார்த்துட்டு நான் சாப்பிடத்தான் போனேன்னா, இல்லை அங்கே போய் மாவாட்டி சமைச்சிட்டு வந்தேன்னான்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. அந்த இன்சிடனை இப்போது நினைச்சாலும் சிரிப்புதான் வருது..

அதுக்கப்புறம் என்னுடைய இரண்டு தோழிகள் சொப் ஸ்டிக் வாங்கி கொடுத்து வகுப்பில் டீச்சர் இல்லாத சமயங்களில் அதை எப்படி உபயோகிப்பதுன்னு சொல்லி கொடுத்தாங்க.. ஆனால், இப்போது வரைக்கும் அந்த சொப் ஸ்டிக் நமக்கு எட்டாத தூரத்தில்தான் இருக்கு!!! கையில் சாப்பிடுவதுதான் பெஸ்ட்டுன்னு தோணுது!!!

59 Comments:

Anonymous said...

my friend you too ah?ennakum eppadi thaan chop stickoda sandai.But it happened in school and my whole school uniform was stained and the whole school laughed at me.My story more sad right.But now I am chopstick expert.My friend ,my chinese friends taught me one new thing that is O Ai Nii .hehe.

said...

எதுக்கும் இன்னுமொறு முறை கேட்டுப்பாருங்க அவங்க கிட்ட, நீங்க சாப்பிட்டது பாம்பு பெரட்டலா இருக்கப்போவுது!!!!

said...

:) good post..keep up a good job

said...

@Thurgah:
//my friend you too ah?//

Same blood! hehe..

//my whole school uniform was stained and the whole school laughed at me.//

அட கடவுளே!!

//O Ai Nii//

எனக்கு இதுக்கு அர்த்தம் தெரியுமே!! infact, அதுக்கப்புறம் கொஞ்சம் மேண்டரின் கத்துக்கிட்டேன்.. ;-)

:-P உங்க நண்பர்கள் உங்களை காதலிக்கிறாங்க.. ;-)

said...

@அபி அப்பா:

ஏங்க பீதிய கிளப்புறீங்க.. :-P
இப்பவே toilet போணும்போல ஆயிடுச்சு! :-P

said...

@திருக்குமரன்:

நன்றி திரு. ;-)

said...

ஹிஹிஹி...ம்ம்ம்...
எப்படியே சாப்பிட்டிங்களே...

நாமக்கும் கைதாங்க சரியாவரும்....

said...

@கோபிநாத்:

// நாமக்கும் கைதாங்க சரியாவரும்.... //

Same Pinch.. ;-)

said...

ஹ ஹஹா
நல்லா நகைசுவையாய் எழுதியிருக்கீங்க மை ஃப்ரண்ட்.
இதனால தான் நமக்கேன் வம்புன்னு நான் இந்திய உணவு மட்டுமே சாப்பிடறது!! :-)

said...

@CVR:

//ஹ ஹஹா
நல்லா நகைசுவையாய் எழுதியிருக்கீங்க மை ஃப்ரண்ட்.//

வாய் விட்டு சிரிச்சீங்களா? இது்தான் எனக்கும் வேண்டும்ம்.. ;-)

//இதனால தான் நமக்கேன் வம்புன்னு நான் இந்திய உணவு மட்டுமே சாப்பிடறது!! :-) //

ஓ.. இதுனாலத்தான் என் தோழி ஒருத்தி எங்க கூப்பிட்டாலும் தமிழர் உணவகத்துக்கு மட்டும்தான் செல்வேன் என்று அடம் பிடிக்கிறாளா??

said...

இங்க அமெரிக்காலகூட சோத்தாங்கைல கத்திய பிடி.. பீச்சாங்கைல திரிசூலக் கரண்டிய பிடின்னு கடிய கெளப்புவானுங்க...

'ஏன் டா பீச்சாங்கைல சாப்ட்டா ஆண்டவன் கோச்சிக்க மாட்டானா'ன்னு சொன்னா ஒரு மாதிரியா பாக்குறானுங்க...

said...

:)

நல்ல அனுபவம்!

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

said...

இப்பெல்லாம் சுலபமா பயன்படுத்தும் சொப்ஸ்டிக் வந்துருச்சு பார்க்கலையா?

ஒரு ப்ளாஸ்டிக் வட்டம் ரெண்டு குச்சியையும் இணைச்சிருக்கு.
அந்த வட்டத்தைக் கையில் மறைச்சுக்கிட்டு அப்படியே ஒரு 'கெத்தா' நாமும்
குச்சியில் சாப்புடலாமெ மை ஃப்ரெண்ட்.:-))))

said...

அருமையான அனுபவ பதிவு மை பிரண்ட்.. இது மாதிரி பல தடவை ஆப்புல ஆகப்பட்ட குரங்கா எல்லாம் நான் முழிச்சிருக்கேன்..

உங்க நிலைமைய நினச்சா, படிச்சவுடன் சிரிப்பு தான் வந்தது மை பிரண்ட்

said...

@ஜி - Z:

//'ஏன் டா பீச்சாங்கைல சாப்ட்டா ஆண்டவன் கோச்சிக்க மாட்டானா'ன்னு சொன்னா ஒரு மாதிரியா பாக்குறானுங்க... //

ஆஹா.. உண்மை உண்மை.. :-)

said...

@நாமக்கல் சிபி:

// நல்ல அனுபவம்! //

;-) நன்றி..

said...

@துளசி கோபால்:

// இப்பெல்லாம் சுலபமா பயன்படுத்தும் சொப்ஸ்டிக் வந்துருச்சு பார்க்கலையா? //

அதையும் try பண்ணியாச்சு துளசி.. அப்போதும் எனக்கு problemதான்..
:-(
அந்த வட்டத்துக்குள்ள் ஒழுங்காய் பிடிக்க தெரியல..

said...

@மு.கார்த்திகேயன்:

// அருமையான அனுபவ பதிவு மை பிரண்ட்.. இது மாதிரி பல தடவை ஆப்புல ஆகப்பட்ட குரங்கா எல்லாம் நான் முழிச்சிருக்கேன்..//

:-))) கொஞ்சம் அந்த கதைகளை அவிழ்த்து விடுங்க தலைவரே! ;-)

// உங்க நிலைமைய நினச்சா, படிச்சவுடன் சிரிப்பு தான் வந்தது மை பிரண்ட் //

நானே இப்ப இதை நினைச்சாலும் சிரிச்சிக்கிட்டுதான் இருக்கேன்.. ;-)

said...

my friend,
நமக்கெல்லாம் இந்த குச்சி வெச்சி சாப்பிட்டா 4 நாள் ஆகும் சாப்பிட்டு முடிக்க...

இங்க நாங்க போயிருந்த ரெஸ்டாரெண்ட்ல நம்மல பார்த்தவுடனே ஃபோர்க் கொடுத்துட்டான்...

ரொம்ப நல்லவனா இருப்பான் போல :-)

said...

ஏனோ!! இந்த குச்சி அவ்வளவாக என்னை மிரட்டவில்லை..

said...

//இப்படி எததனை கடையிலடா கிளம்பியிருக்கீங்க????
//
ROTFL :) sema comedy. sorry sirikkama irukka mudiyala. enakkum intha exp nadanthrukku. intha kuchi vechu saapdarathu ellam waste. summa kaiyala oru kattu katrathu thaan taste. :)

said...

//இரவு ஒரு 7 மணி இருக்கும்.. ஒரு 8 கார்கள் என் வீட்டு முன் வந்து நின்னது. ஏதோ V.I.P. ஏறுவதா ஒரு எஃபெக்ட்டு.. //

தோடா!

//ஆச்சர்யமாய், "ஏய், நீ தவளை சாப்பிடுவேன்னு சொல்லவே இல்லையே!! அன்னைக்கு BBQ நைட்ல அதை தொடவே இல்லையே????"ன்னு கேட்டாள்..
//

தவளை கறியா! உவ்வ்வேவேவே!

said...

//வீடு வந்ததும் வீட்டுல உள்ளவங்க என் சட்டையை பார்த்துட்டு நான் சாப்பிடத்தான் போனேன்னா, இல்லை அங்கே போய் மாவாட்டி சமைச்சிட்டு வந்தேன்னான்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க//

ஆமா மை பிரண்ட்! ரொம்ப நாளா ஒரு சந்தேகம்! அங்கே பில்லுக்கு பணம் கொடுக்கலைனா மாவாட்ட விடுவாங்களா (அங்க அப்படி ஏதும் இருக்கா) இல்லை டின்னு கட்டிடுவாங்களா மை பிரண்ட்!

எப்படிடா கார்த்தி உனக்கு மட்டும் இப்படி எல்லாம் சந்தேகம் வருது!

said...

/**************************
கையில் சாப்பிடுவதுதான் பெஸ்ட்டுன்னு தோணுது!!!
**************************/


ரிப்பீட்டே. . . ..

நல்ல நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.

Anonymous said...

Nalla anubavam, rusichu , rasichu eshuti irukeenga ;-)

Anonymous said...

மீ என்டு சொல்றியளே, என்னன்னு யாருக்காவது புரியுதான்னுதான் தெரியலை. மீ எண்டால் தமிழில்(??) நாங்க நூடுல்ஸ் என்று சொல்லுவம். மலேசியாவில் இருந்து கொண்டு குச்சி பிடிக்கத் தெரியாதன்டு சொல்றியளே. பொய்தானே சொல்றியள். இந்தியாவிலிருந்து வந்த பொடியன்கள் எல்லாம் எங்கொண்டு கத்துக் கொண்டவன்கள். ஒழுங்கா குச்சி பிடிச்சி உண்ணுகிறவன்கள். நீங்க தெரியாதன்று கதக்கிறியள். எங்கட காதுகளுக்கு சிறு பிராயத்திலேயே காது குத்திப்பிட்டவர்கள். ஓம்.

said...

உங்க அனுபவம் சூப்பர்.. Saturday அன்னைக்கு உங்களுக்கு உச்சத்துல இருந்துர்க்கு போல :)

//
"ஏய், நீ தவளை சாப்பிடுவேன்னு சொல்லவே இல்லையே!
//
ROTFL :)

மத்த போஸ்ட் எல்லாம் அப்பறமா படிக்கிறேன் :)

said...

//
intha kuchi vechu saapdarathu ellam waste. summa kaiyala oru kattu katrathu thaan taste. :)
//
super ambi..
LOL :)

said...

apdiye unga perayum makkalukku sollitinga.. very gud :)

said...

@வெட்டிப்பயல்:

// நமக்கெல்லாம் இந்த குச்சி வெச்சி சாப்பிட்டா 4 நாள் ஆகும் சாப்பிட்டு முடிக்க...//

எனக்கு மட்டும் அன்னைக்கு கரண்டி கொடுக்கலன்னா, எனக்கும் எதே நிலமைதான்!!! :-P

said...

@வடுவூர் குமார்:

//ஏனோ!! இந்த குச்சி அவ்வளவாக என்னை மிரட்டவில்லை.. //

உங்களுக்கு பழக்கமாயிடுச்சா?

said...

@ambi:

// ROTFL :) sema comedy. sorry sirikkama irukka mudiyala.//

செம்ம காமெடி பண்ற அம்பியே சொல்லியாச்சுன்னா அப்ப நான் பாஸ்தான். :-)

//intha kuchi vechu saapdarathu ellam waste. summa kaiyala oru kattu katrathu thaan taste. :)//

ரைட்டா சொன்னீங்க அம்பி. ;-)

said...

@மு.கார்த்திகேயன்:

// தவளை கறியா! உவ்வ்வேவேவே! //

:-P

said...

@மு.கார்த்திகேயன்:

// ஆமா மை பிரண்ட்! ரொம்ப நாளா ஒரு சந்தேகம்! அங்கே பில்லுக்கு பணம் கொடுக்கலைனா மாவாட்ட விடுவாங்களா (அங்க அப்படி ஏதும் இருக்கா) இல்லை டின்னு கட்டிடுவாங்களா மை பிரண்ட்!//

இங்க மாவாட்டுறதெல்லாம் நடக்காத ஒன்னு. எல்லாமே மேஷி்ன் தான்..

பாத்திரம் கழுவ முக்கால் வாசி கடையில ஒரு இந்தோனிசியாகாரியை வைச்சிருப்பாங்க ஏற்கனவே!

காசு இல்லையா!!! நம்ம கதை அம்பேல்தான்.. டின்னு கட்டிடுவாங்க!!
சோ, காசு இருக்கான்னு செக் பண்ணிட்டு ஓர்டர் பண்ணுங்க தல.. :-)

// எப்படிடா கார்த்தி உனக்கு மட்டும் இப்படி எல்லாம் சந்தேகம் வருது! //

'தல' ஆச்சே! ;-)

said...

@வெங்கட்ராமன்:

// நல்ல நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள். //

நன்றி வெங்கட்.. ;-)

said...

@c.m.haniff:

// Nalla anubavam, rusichu , rasichu eshuti irukeenga ;-) //

ஆமாம் ஹனிஃப். ;-)

said...

@Anonymous:

//மீ என்டு சொல்றியளே, என்னன்னு யாருக்காவது புரியுதான்னுதான் தெரியலை. மீ எண்டால் தமிழில்(??) நாங்க நூடுல்ஸ் என்று சொல்லுவம். //

ஆஹா.. இங்கே மீ மீ-ன்னு சொல்லியே எல்லாருக்கும் பழக்கம் ஆச்சு! நூடுல்ஸ் தழில் என்னனு சொல்றது சார்? கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.. ;-)

// மலேசியாவில் இருந்து கொண்டு குச்சி பிடிக்கத் தெரியாதன்டு சொல்றியளே. பொய்தானே சொல்றியள். //

எனக்கு இன்னும் பழக்கம் ஆகலைங்க. இப்பல்லாம் எங்க போனாலும் கரண்டி கேட்டுடுவேன் ரிஸ்க் எடுக்கவில்லை.. :-P

said...

@Arunkumar:

// உங்க அனுபவம் சூப்பர்.. Saturday அன்னைக்கு உங்களுக்கு உச்சத்துல இருந்துர்க்கு போல :)//

ஹாஹாஹா..
இனி எப்போதும் இதுபோல இருந்தால் நல்லது. :-P

//மத்த போஸ்ட் எல்லாம் அப்பறமா படிக்கிறேன் :) //

சரி.. மெதுவா படிச்சுட்டு வாங்க.. ;-)

said...

@Arunkumar:

//apdiye unga perayum makkalukku sollitinga.. very gud :) //

ஏற்கனவே பல பேர் இதை கண்டுபிடிச்சிட்டாங்க அருண். நீங்க கொஞ்சம் லேட்.. :-P

said...

ROTFL...நீங்களூம் செம காமெடியாதான் எழுதறீங்க...நீங்க அவங்கள கைல சாப்பிட சொன்னதுக்கு...உங்களுக்கு சாப் ஸ்டிக் கொடுத்து ஆப்படிச்சுட்டாங்களா :-)

Anonymous said...

தோழி,

என்னங்க இதுக்கெல்லாம் போயி வருத்தப்பட்டுக்கிட்டு. குச்சி வச்சு சாப்ட தெரியலீன்னா என்ன? கையால சாப்பிடுறதுதான் அழகு. நாமெல்லாம் யாரு, குலாப் ஜாமூனயும், ஐஸ்க்ரீமயும் கையால பெசஞ்சு சாப்பிடறவிய்ங்க இல்லயா.

said...

ROFTL :) nijamave nalla comedy. ungalukkaga supermarket poi fork vangi kuduthirukkare unga friend. Naanum chop stick try panni sari varala.

Anu - enakku romba pidichirukku unga per.

said...

மை பிரண்ட், நீங்க வாங்குன ஆப்பு பல பேரை உங்க வலைப்பக்கம் இழுத்து வந்திருக்கு போல..

மக்களே, இவ்வளவு பேருக்கு சந்தோசமா :-)

said...

@Syam:

//நீங்களூம் செம காமெடியாதான் எழுதறீங்க...நீங்க அவங்கள கைல சாப்பிட சொன்னதுக்கு...உங்களுக்கு சாப் ஸ்டிக் கொடுத்து ஆப்படிச்சுட்டாங்களா :-) //

நாட்டாமை தீர்ப்பை கரெக்ட்டா சொல்லிட்டாரு! ;-)

அவங்க என்னை ஆப்படிக்கத்தான் கூப்பிட்டாங்களா இல்லை பாசத்தோடுதான் கூப்பிட்டாங்களன்னு இன்ன வரைக்கும் தெரியலை.. பாசம்ன்னுதான் நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன்.

அதுக்கப்புறம் நங்க westernக்குதான் அடிக்கடி போறது! :-P

said...

@நான்:

// நாமெல்லாம் யாரு, குலாப் ஜாமூனயும், ஐஸ்க்ரீமயும் கையால பெசஞ்சு சாப்பிடறவிய்ங்க இல்லயா. //

எனக்கு ஒரு 5 வயசு இருக்கும்போது, ஏன் நம்ம சோறு சாப்பிடுற மாதிரி ஐஸ்க்ரீம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி, அப்படியும் சாப்பிட்டிருக்கேன் நான்.. :-)

said...

@Priya:

//ROFTL :) nijamave nalla comedy. //

;-)

//Naanum chop stick try panni sari varala. //

கைதான் பெஸ்ட்டு.. இல்லையா பிரியா?

// Anu - enakku romba pidichirukku unga per. //

பரவாயில்லையே! நீங்களும் கண்டுபிடிச்சிட்டீங்களே!

said...

@மு.கார்த்திகேயன்:

//மை பிரண்ட், நீங்க வாங்குன ஆப்பு பல பேரை உங்க வலைப்பக்கம் இழுத்து வந்திருக்கு போல..

மக்களே, இவ்வளவு பேருக்கு சந்தோசமா :-) //

என் கதையும் வடிவேலு கதையா ஆயிடுச்சு!! அவர் அடி வாங்கி அடி வாங்கியே ஹீரோ ஆயிட்டார்.. நான் ஆப்பு வாங்க ஆரம்பிச்சதால மக்களும் என் ப்ளாக்குக்கு வந்துருக்காக! :-P

said...

arumai arumai padithen suvaithen

ennum eluthugga padikka aavaludan
rahini

said...

@rahini:

//arumai arumai padithen suvaithen

ennum eluthugga padikka aavaludan
rahini //

வாங்க ராஹினி.. படிச்சு ரசிச்சீங்களா? மகிழ்ச்சி.. :-)

OMG.. என்ன இத்தனை ப்ளாக் வச்சிருக்கீங்க! எப்படி மேய்ண்டேய்ன் பண்றீங்க? எனக்கு ஒன்னு மேய்ண்டேய்ன் பண்றதுக்கே இங்க நேரம் பற்றாக்குறை.. ;-)

said...

Wow.. Me the 50th comment.

said...

முதல் முறை 50 பின்னூட்டங்கள்..

எட்டுவதற்கான இடங்கள் தூரமாய் இருந்தாலும் நாம் முன்னேறுகிறோம் என்பதை ஊருக்கு மௌனமாகச் சொல்வது தான் இது போன்ற மைல்கல்கள்..

இன்னும் பல தூரங்கள் நடந்து பிளாக் உலகில் முன்னேற வாழ்த்துக்கள் மை பிரண்ட்

said...

@மு.கார்த்திகேயன்:
//Wow.. Me the 50th comment. //

Yes. at last mine reach 50.. :-P

said...

@மு.கார்த்திகேயன்:

// இன்னும் பல தூரங்கள் நடந்து பிளாக் உலகில் முன்னேற வாழ்த்துக்கள் மை பிரண்ட் //

உங்கள் வாழ்த்து நீங்கள் எழுதும் கவிதைகளைப்போலவே இருக்கு. ;-) உங்களைப் போல் ப்ளாக்கர் நண்பர்கள்தானே என்னை கைப்பிடித்து நடக்க சொல்லி தருகிறீர்கள்! அதனாலத்தானே நானும் ஓரளவு கற்றுக் கொண்டேன்! நன்றி நண்பர்களே! ;-)

said...

தொட்டுவிடும் தூரம் தான் நிலவு
என்று இப்போது ஆனாலும்
முதல் முறை ஆம்ஸ்ட்ராங்க் கால் பதித்த போது
அது தொடாத தூரம் தான்...

ஏறி விடும் தூரம் தான்
இமயச் சிகரம் என்றாலும்
டென்சிங் தான் அதற்கு முதல்வன்..

பதினாறு முறையும்
கஜினிக்கு அது இயலாத காரியம்
அடுத்ததில் வென்றானே
அதில் தான் எத்தனை ஆனந்தம்..

வலிகளில் விளைவது தான் எல்லாமே..
இப்போது ஆப்பில் விளைந்ததிந்த ஆப்பிள்..

வாழ்த்துக்கள் மை பிரண்ட்..

said...

@ மு.கார்த்திகேயன்

3 கமெண்ட்ஸ் தொடர்ச்சியா போட்டுடீங்க.. கவிதையும் சூப்பர். உங்களுக்கு ஒரு Nasi Lemak பார்சல் பண்ணிடுறேன். சாப்பிடுவீங்கதானே?

said...

செய்தித் துறை அமைச்சர் : 'மலேசியா' மை பிரண்ட்

தோழி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

said...

@கோபிநாத்:

//செய்தித் துறை அமைச்சர் : 'மலேசியா' மை பிரண்ட்

தோழி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...//

என்னடா நம்ம ப்ளாக் இன்னைக்கு பளிச் பளிச்ன்னு இருக்குன்னு வந்து பார்த்தா, தெரியுது உங்க பின்னூட்டம்.. :-) நன்றி..

said...

/ஒரு Nasi Lemak பார்சல் பண்ணிடுறேன். சாப்பிடுவீங்கதானே?
//

பிரண்ட், முதல்ல அப்படின்னா என்னன்னு சொல்லுங்க.. உங்களுக்கு கொடுத்த மாதிரி இது ஏதும் குழப்படியான ஐடமா?

said...

நல்ல ஆப்பாக தான் வாங்கி இருக்கீங்க. இது போல பல ஆப்புகள் நமக்கும் இருக்கு.

நீங்க சொன்ன மாதிரி அந்த குச்சிய வச்சுக்கிட்டு நானும் பல தடவை முயற்சி பண்ணிட்டு அந்த பழம் ரொம்பவே உறைக்கும் என்று விட்டு விட்டேன். (புளிப்பு எனக்கு பிடிக்கும்)

கையில் சாப்பிடுவது தான் பெஸ்ட்