Wednesday, February 28, 2007

167. எனக்கு தெரிஞ்ச மொழி ஒன்னு உங்க யாருக்குமே தெரியாது!

எது சிறந்தது?


மொழியா வீரமா?


இப்படி என் தோழி கேள்வி கேட்டு, மொழி தான் வென்றது..


ஏன்னா இங்கே மலேசியாவில் மொழி மட்டும்தான் வெளியாகியிருக்கு! பருத்திவீரன் இன்னும் இல்லை..


என்ன இருந்தாலும் மொழி நாங்கள் எதிர்ப்பார்த்த படங்களில் ஒன்றுதான். திடீர் ப்ளான் போட்டோம். கிளம்பினோம்.. அப்போதும் படத்துக்கும் 10 நிமிடம் லேட்டு!!


உள்ளே போகும் போது ஒரு காட்சி.. ஒரு பண்ணையார் வீட்டுப் பெண் கோயிலில் நடந்து போக, அவளிடமிருந்து ஏதோ கீழே விழ, பக்கத்தில் உள்ள பிச்சைக்காரன் அதை எடுத்துக் கொடுக்கிறான். இருவருக்குமிடையே காதல் பூப்பூக்கிறது! உடனே நாம் திரும்பி, நாம் தப்பான தியேட்டரில் புகுந்துவிட்டோம் போல.. எனக்கு தெரிஞ்சு படத்துல இந்த ரெண்டு பேரும் நடிக்கலைன்னு சொல்லி கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.. திடீர்ன்னு பிரகாஷ்ராஜின் சிரிப்பு அலைகள். திரும்பி பார்த்தால் பிரகாஷ் ராஜ் - பிரித்திவிராஜ். அந்த படத்துக்கு ரீரெக்கார்டிங் செய்கிறார்கலாம். திரும்பவும் போய் இருக்கையில் அமர்ந்தோம்.


படத்தின் காமெடி அப்போது வெடிக்க தொடங்கியது (எனக்கு தெரிந்து!).. கிளைமேக்ஸின் முதல் காட்சி வரையிலும் வெடித்துக் கொண்டேதான் இருந்தது.


இவர்கள் குடிப்போகும் அபார்ட்மெண்டில் குடும்பஸ்தனுக்கு மட்டும்தான் வீடு என்று சொல்ல, பிரகாஷ் பிருத்திவியை திருமணம் செய்துக்க சொல்றார். அதற்கு நான் ஒரு பெண்ணை பார்க்கும் போது காமிக் புத்தகத்தில் வருமே அதுபோல என் தலைக்கு மேல் பல்ப் எரியணும், மணி அடிக்கணும்ன்னு சொல்றார். அதே போல், அந்த பல்ப்பும் மணி எப்படி அடிக்கிறது என்பதை அழகாக காட்டியிருக்காங்க.. இதை கிண்டல் பண்ணும் பிரகாஷ்க்கு எப்படி அதே பல்பும் மணியும் அடிக்கின்றது என்பதும் ஸ்வாரஸ்யம். :-))


பிருத்திவி சமீபத்தில் மலயாள படத்துக்குகாக சிறந்த நடிகர் பட்டம் வாங்கியதாக கேள்விப் பட்டேன். இவர் தமிழிலும் வாங்குவார் என்ற நம்பிக்கை இருக்கு. இவர் ஜோ மீது காட்டும் அன்பு, பாசம், காதல்.. பிரகாஷ் மீது வைத்திருக்கும் நட்பு.. மற்றவர்களின் மீது வைத்திருக்கும் மரியாதை, அவர்கள் கஷ்டப்படும்போது பரிதாபப்படும் இவர் மனது... சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாத இவரது கோபம்.. என்று இவருடைய ஒவ்வொரு பரிணாமத்தை பற்றியும் சொல்லிட்டே போகலாம்.


ஜோதிகாவின் intro சூப்பர். சூர்யா, இனி நீங்க ஜோதிகாவிடம் பழகும்போது கொஞ்சம் தள்ளியே பழகுங்க.. ஹிஹி.. படத்தை பார்ப்பதற்கு முன்னே இவர் deaf & dumbன்னு எனக்கு தெரிஞ்சதாலே எந்த கட்டத்தில் இவர் திரையில் சொல்வார் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தேன். ஆனாலும், இவர் deaf & dumb என்பதை ஒரு கெத்தா தான் சொன்னார். அவருக்குள் உள்ள தன்னம்பிக்கையை அந்த ஒரு விநாடியிலேயே நமக்கெல்லாம் புரிய வைத்துட்டார். ஒரு கட்டத்தில், பிருத்திவி இவருக்கு ஒரு பிண்ணணி குரல் கொடுக்க முயற்சி செய்ய இவர் கடுப்பாக, அதன் காரணமும் சரியென்றே எனக்கு தோணுது. தன் கண்களை இவர் உருட்டி உருட்டி.. முகத்தை ஆட்டி ஆட்டி பேசும் விதம் உண்மையிலேயே இவர் எவ்வளவு ஹோம்வர்க் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.. எல்லாரும் புகழ்ந்து பேசும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் கூட இவர் நன்றாக செய்திருக்கிறார் என்று நான் ஒப்புக் கொள்ளவே இல்லை. மற்றவர்களும் இதை விட நன்றாக செய்திருப்பார்கள் என்று வாதாடினேன். ஆனால், இப்போது சொல்கிறேன்.. இவர் நடிக்காதது, தமிழ் திரையுலகிற்கு ஒரு இழப்புதான். ஒரு அருமையான நடிகையை இழக்கிறோம். :-(


செல்லம் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் காமெடியில் கலக்கியிருக்கார். ஸ்வர்ணமால்யாவிடம் தான் ஒரு CBI எனச் சொல்ல, அவர் நான் எப்படி நம்புறதுன்னு கேட்க.. அதுக்கு இவர் "கூட் குவச்சன்.. நான் இப்படியே நடந்து பொறேன். CBIன்னு கூப்பிடுங்க. நான் திரும்பி பார்ப்பேன்"கிறார். ஒரு கட்டதில் அவர் சீரியஸாக ஒன்னு சொல்ல அது எடுப்படாமல், "எனக்கு காமெடி மட்டும்தான் வருது. சீரியஸா ஒன்னு முயற்சி செய்தா அது வொர்க் அவுட் ஆக மாட்டேங்குது" என்கிறார்.


ஸ்வர்ணமால்யா ஜோதிகாவின் தோழியாக வருகிறார். இவர் பிருத்திவிக்கு sign language கற்றுக் கொடுத்தாரோ இல்லையோ. படம் முடிந்து வெளிவரும்போது ஆடியன்ஸ் கண்டிப்பாக இந்த மொழியை கற்றுக் கொண்டிருப்பார்கள். அவ்வளவு சுலப்மாக கற்றுக் கொடுத்தார். நானே படம் முடிந்து வெளிவரும்போது, அந்த மொழி பெனக்கும் புரிந்தது.


படத்தில் மிக குறைவான கதாபாத்திரங்களை வைத்தே கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். குறிப்பாக சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரம் 'பட்டாபி' பாஸ்கர். படம் ஆரம்பத்தில் ஒரு காமெடியனாக தெரிந்தாலும், போக போக அவரின் சோகங்கள் நம்மையும் வாடுகின்றது. அவரது நடிப்பும்.. சாரி.. அவர் அந்த professor-ஆகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவரை தவிர்த்து ஜோவின் பாட்டி மற்றும் ஜோவின் கார்டியன் குடும்பம் மட்டுமே இதர கதாபாத்திரங்கள்.


என்னடா எல்லாமே காமெடி காமெடின்னு சொல்றேனே. செண்டிமெண்ட் இல்லையான்னு கேட்கறீங்களா? இருக்குங்க.. எப்படி இல்லாமல் போகும். படத்தின் இன்னொரு ப்லஸ் இதுதானே! ஆனால் பரணி இவைகளை அழகாய் லிஸ்ட் போட்டு காட்டிட்டாரு பரணி. இவர் சொன்ன அந்தந்த காட்சிகள் என்னையும் மிகவும் பாதித்த காட்சிகள். அதை அவர் அழகாய் இங்கே சொன்ன் பிறகு நான் அதை திரும்பவும் எழுத வேண்டாம்ன்னு நினைக்கிறேன். அதுவும், பிருத்திவி ஜோதிகாவும் இசையை உணர வேண்டும் என்று அவருடைய கைகளை ஸ்பீக்கர்களில் வைக்கும் காட்சி இருக்கே!! அப்பப்பா!! அருமை அருமை!


இசையை பற்றி சொல்லியே ஆகணும் இங்கே! தேவையே இல்லாத இடத்தில், அர்த்தமே இல்லாத பாடல்களை போடும் படங்களுக்கு நடுவே, அர்த்தமுள்ள பாடல்களை தேவை படும் இடத்தில் சரியாக தொகுக்கப்பட்டதுக்கு ஒரு சபாஷ்.. பாடசில இடங்களில் இசையே இல்லாமல் மௌனம் காப்பதும் ஒரு மொழி. அதுக்கு இன்னொரு சபாஷ்!


சம்பாதித்த பணங்களை திரும்பவும் அதிலேயே போட்டு ரிஸ்க் எடுப்பவர் ஒருவர் கமல் என்றால் இன்னொருவர் பிரகாஷ்தான். இவரின் நாம், கண்ட நாள் முதல், அழகிய தீயே மற்றும் மற்றவைகள்.. தமிழ் திரையுலகின் அடுத்த பரிணாமத்திற்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எடுக்கப் பட்டு நன்றாக ஓடாமல் இவர் கையை சுட்டுக் கொண்டதே மிச்சம். ஆனாலும், இவர் தைரியமாக மொழியை எடுத்திருக்கிறார். இவர் மென்மேலும் நல்ல படங்களை எடுக்க வேண்டுமானால், நாம்தான் மொழியை போன்ற படங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். சண்டை, ரத்தம் போன்ற படங்களுக்கு நடுவில் ஒரு இதமான ஆனால் கனமான படம் பார்த்த திருப்தி.

ஒரு புது மொழியையும் கற்றுக் கொண்ட திருப்தி!

44 Comments:

Anonymous said...

Innum padam paarkavillai, ungal vimarsanam paditha pinn padam paarka aavalai irukku ;-)

said...

my friend!
எனக்கு இந்த மொழி தெரியல! தெரிந்தபின் கூறுகிறேன். விமர்சனம் படித்தால் படம் பார்த்த திருப்தி தராது.

said...

ஆகப் படம் பார்க்கலாம்ன்னு சொல்லுறீங்க ரைட்டா!!!!

Anonymous said...

அனு அப்படினா இந்த படத்தை download பண்ணி பார்க்கலாம் என்று சொல்கின்றீர்கள்.பார்த்துட்ட போச்சு.30 மேல் பின்னூட்டம் வரதுன்னு சொல்கின்றார்கள்.ஆகவே ஒன்றோடு முடித்துக் கொள்கின்றேன்.

said...

//சம்பாதித்த பணங்களை திரும்பவும் அதிலேயே போட்டு ரிஸ்க் எடுப்பவர் ஒருவர் கமல் என்றால் இன்னொருவர் பிரகாஷ்தான்.//
well said!
so will try to see this movie.
also radha mohan and prakash are thick friends.

said...

மைஃபிரன்ட்!! படம் நல்லாயிருக்குன்னு சொல்றீங்க. இன்னைக்கே பாத்துடறேன்.

சரி சரி இன்னும் 25தான் பாக்கி! நா ஒன்னே ஒன்னு சாப்பிட்டு கெளம்புறேன்!!

said...

Super-a review ezhudhi irukeenga.....padam pudichi irukunu ketkaradhe ennaku santhosama iruku :)

said...

ellarum indha padatha paarkanum..prakashraj vitta panatha ellam eduthu adutha padam produce pannanum.....heard that prithivi is hero on prakashraj's next production also :)

said...

prakashraj swarnamaalya kitta CBI solra scene super....avar adhaye follow panni avanga kitta kalyanam pannikarayanu ketkara scenum, adhan follow-um...super :)

said...

Aaang..solla maranthutene...thanks for that vilambaram....innaki andha pakka traffic konjam eerumnu nenaikaren :)

said...

மை ஃபிரண்ட், நானும் படம் பார்த்தேன், அதைப் பற்றி இன்றுதான் விமர்சன பதிவு கூட எழுதினேன், அங்கு வந்த பொன்ஸ் அக்கா தான் உங்களின் இந்தப் பதிவு பற்றி சொன்னார்(இலவச விளம்பரம்:)))

நீங்கள் குறிப்பிட்டது போல் படத்தின் காமெடி அருமை, தனியாக காமெடி டிராக் எழுதாமல், கதையுடன் ஒன்றிய காமெடி அருமை!

//சம்பாதித்த பணங்களை திரும்பவும் அதிலேயே போட்டு ரிஸ்க் எடுப்பவர் ஒருவர் கமல் என்றால் இன்னொருவர் பிரகாஷ்தான்//

நானும் கேள்விப்பட்டிருகிறேன்! நல்ல விமர்சனம், விரைவில் உங்களிடமிருந்து வீரத்தை எதிர்பார்க்கிறேன்:))

அன்புடன்...
சரவணன்.

said...

நண்பரே ஒரு co-insidence கவனித்தீர்களா?
நான் உங்களுக்கு பின்னூட்டம் டைப் செய்து அனுப்பிக் கொண்டிருக்கும் போதே எனக்கு ஒரு பின்னூட்டம் வருகின்றது உங்களிடமிருந்து! ( ஒரே திரைவிமர்சனத்திற்கு)

உங்களின் பதிவின் பெயர் மை ஃபிரண்ட், எனது பதிவின் பெயர் உங்கள் நண்பன்,

அன்புடன்...
சரவணன்.

said...

mothalla Attendance friend

appaala padichchittu commenturen

said...

@C.M Haniff:
Vaangga haniff.. konja naala aalaiye kaanom? marra postukkalum padiccidu sollungga. ;-)

@Johan-paris:
Neengga padaththai theatherle paarkkanum.. athuthaan en vendukol. ;-)

@Dev:
Kandippaa...

@Thurgah:
vidiya vidiya raamayanam kedduddu seethai Ramanukku chiththappanaannu kedkura maathiri irukku Thurgah. :-P
Johorle paarkka mudiyalainna, Singapore poi paarkkalame?? ;-)

@Ambi:
ambi anna, supportkku nandri.. ;-)

@Abi Appa:
Abiyaiyum kooddiddu ponga moviekku.. :-D

@Bharani:
Yeah. Naanum kelvippadden.. Pruthivi is hero again for Prakash's next movie. ;-D
nalla padam.. nalla vimarsanam.. athaan link seythen.. unge trailer super. ;-)

@Ungkal Nanban @ Saravanan:
Aaha, pons akka ennai paRRi vilambaram kodukkuraanggala? aacharyamaai irukke!

athethaan naanum solla vanthen. naan comments podduddu varren, ungekidde irunthu comments varuthu.. aacharyam @ coincidence number 1

athukku naan reply pannumpothu, ungekide irunthu reply comments.. 2nd coincidence..

3rd coincidence: neengga sonnathupole, namma nickkkukkum orrumai. ungal nanban - my friend.. :-D Oru new friend, ivvalavu orrumaiyudan paarkka makizci.. ini. ipppothume intha kooddani thodaraddum. :-)

@M.karthik:
Thale, methuvaa padicciddu vanthu oru coments posungga.

ada.. nammaloda 30-ai thaanddiducchaa? hmm.. illai illai.. :-P

said...

உங்க விமர்சனத்தப் பாக்க ஆரம்பிச்சேன்.... ராதா மோகன் பட்ம்ங்றதால ஏற்கனவே படம் பாக்கணும்னு முடிவு பண்ணிருந்தேன். அதுனால ஆரம்பத்துலேயே கட் பண்ணி விமர்சனத்தப் படிக்கல. படத்தப் பாத்துட்டுத்தான் படிக்கணும்.

முப்பதுல ஒன்ன வேஸ்ட் பண்ணனும்ல.. அதான் இந்தப் பின்னூட்டம் :))

said...

// துர்கா said...
அனு அப்படினா இந்த படத்தை download பண்ணி பார்க்கலாம் என்று சொல்கின்றீர்கள்.//

என்ன இது துர்கா.. நீங்க மலேசியாலத்தானே இருக்கீங்க... படமும் அங்க ரிலீஸ் ஆகியிருக்குது...
இப்படி நல்லப் படத்த டவுண்லோட் பண்ணிப் பாக்கப் போறீங்களா?

மலேசியா போலிஸ்ல உங்களப் புடிச்சிக் கொடுக்கணும் ;)))))

[இன்னொன்னும் அழிஞ்சுது]

said...

அருமையான விமர்சனம்.. சும்மா படத்தின் கதையை சொல்லிவிட்டு விமர்சனம் என்று சொல்லும் பல பேர் மத்தியில் காட்சிகளையும் அதன் சுவாரஸ்யங்களையும் சொல்லுவது மை பிரண்ட், கலக்கல்

said...

ஏற்கனவே பரணி எழுதிய பதிவை படித்துவிட்டு என் இதயத்தில் மயிலிறகு ஏற்றியது போல் ஒரு சுமை, படத்தை இவ்வளவு நாளாக பார்க்கவில்லையே என்று. இப்போது உங்களுடைய விமர்சனமும் சில மயிலிறகை மனசுக்குள் ஏற்றி, வள்ளுவன் சொன்னது போல லேசான மயிலிறகும் வண்டியின் அச்சாணியை உடைகும் என்பது போல, என் மனசை தாக்குது..

said...

மை பிரண்ட், சீக்கிரம் பார்க்கவேண்டும் மொழி..சே சே உணரவேண்டும் மொழி

அருமையான விமர்சனதிற்கு ஒரு சபாஷ் மை பிரண்ட்

said...

oru 20 :)

said...

மை பிரண்ட், ஜோதிகாவின் நடிப்பை பற்றி நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.. சந்திரமுகியை விட இந்த படம் அவர்கள் நடிப்பின் உச்சத்தை சொல்லும்..ம்ம்ம்.. சூர்யா இனிமேல் ஹோம் வொர்க் செய்ய வீட்ல நல்லதொரு டீச்சர் ரெடி..

மை பிரண்ட், நிச்சயம் ஒரு நல்ல நடிகை வெளியேறியது தமிழ் திரையுலகிற்கு பெருத்த பின்னடைவு.. நல்ல மருமகள் கொண்டது தமிழ்நாட்டிற்கு நல்ல விஷயம்

said...

oh! Neengalum pathuttingala? Ippa dhan Bharani blog la idha pathi padichen. Neenga kadhai solli irukkara madhiri irukkaradhala naan padikkala (yeah.. I'm kiddish - don't wanna hear the story before I watch the movie :))

said...

பிரகாஷ்ராஜ் பற்றி சொல்லவே வேண்டாம்.. எந்த வேடம் கொடுத்தாலும் பின்னி பெடலெடுப்பவர்.. இதிலும் நிரூபித்திருக்கிறார்.

பிரித்திவிராஜ்.. நீங்கள் சொன்னது போல மலையாள படதிற்காக (எப்படி..அந்த ஏரியாவையும் கலக்குறீங்கப்பா) விருது வாங்கினவர் தான்.. நல்லா பண்ணி இருக்கார்னு நினைக்கிறேன்.. படம் பார்த்துட்டு சொல்றேன் மை பிரண்ட்..

said...

ஆபாசம் இல்லாமல் இரைச்சல் இல்லாமல் நல்ல படங்களை தர முடியும் என்று மறுபடியும் காட்டியிருக்கிறார் ராதா மோஹன்.. வெல்டன் மோஹன்..

said...

//நிச்சயம் ஒரு நல்ல நடிகை வெளியேறியது தமிழ் திரையுலகிற்கு பெருத்த பின்னடைவு.. //

correct... acting um ella profession madhiri dhannu solra actresses ellam en kalyanathu appuram matha professionals madhiri continue panna mattengaranga???

said...

ஆக மொத்ததில் மொழிக்கு நீங்க கியாரண்டி என்று சொல்லுறீங்க. தரையிறக்கம் செய்ய ஆவண செய்ய வேண்டியது தான்.

1. பச்சைக்கிளி
2. பருத்தி வீரன்
3. மொழி

லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது.

said...

நான் கூட நீங்க சீன மொழி பத்தி சொல்றீங்களோனு நினைச்சேன் :-)

said...

பரணி யும் அது தான் சொல்றார்...நீங்களும் அது தான் சொல்றீங்க...என்னமோ போங்க :-)

said...

Nicely written!! :-)

said...

கடைசிப் பின்னூட்டம்.. தமிழ்மணத்துல இருந்து வெளியேற :))))

said...

தோழி நல்ல விமர்சனம்...

பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் எல்லா படங்களும் அருமையான படங்கள் தான்.

said...

\\அவருக்குள் உள்ள தன்னம்பிக்கையை அந்த ஒரு விநாடியிலேயே நமக்கெல்லாம் புரிய வைத்துட்டார். ஒரு கட்டத்தில், பிருத்திவி இவருக்கு ஒரு பிண்ணணி குரல் கொடுக்க முயற்சி செய்ய இவர் கடுப்பாக, அதன் காரணமும் சரியென்றே எனக்கு தோணுது. \\

உண்மைதான் அதனை நேரில் கண்டுகொண்டுயிருக்கிறேன்....எனக்கு இங்கு ஒரு அருமையான நண்பன் கிடைத்திருக்கிறான். அவனின் தைரியமும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் பார்த்து பார்த்து வியந்து கொண்டுயிருக்கிறேன்...

said...

அட முப்பது தாண்டியும், முன்னாடி தெரியறீங்க,

பின்னூட்டங்களைப் பார்க்கையில நல்ல விமரிசனம் பண்ணியிருப்பது போல் தெரிகிறது, படம் பார்க்கணும்ங்கிறதால, விமரிசனம் படிக்கல.

said...

\\sign language கற்றுக் கொடுத்தாரோ இல்லையோ. படம் முடிந்து வெளிவரும்போது ஆடியன்ஸ் கண்டிப்பாக இந்த மொழியை கற்றுக் கொண்டிருப்பார்கள். \\

இந்த மொழியில் பல வகைகள் உண்டு....UK, USன்னு...

நம்ம பய எனக்கு UK sign language கற்றுக் கொடுத்தான்...இப்ப நாங்க ரெண்டு பேரும் அந்த மொழியில தான் பேசி கொண்டுயிருக்கிறோம்.

(சாரி..தோழி...34 வது...)

said...

/********************
இவர் மென்மேலும் நல்ல படங்களை எடுக்க வேண்டுமானால், நாம்தான் மொழியை போன்ற படங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
********************/

ரிப்பீட்டே. . . .

பருத்தி வீரன் தான் லிஸ்ட்ல முதலில் இருக்கு, அதுக்கு டிக்கெட் கிடைக்கலேன்னா மொழி பார்த்துட வேண்டியது தான் இந்த வாரம்.

said...

நான் பார்க்க அதிகம் ஆர்வம் காட்டும் படம்,முன்னோட்டம் தந்தமைக்கு நன்றி ;-)

said...

என் இனிய தோழி,

மொழிய தைரியமா பாக்கலாம்னு சொல்றீங்க, பாத்துருவோம்.

நான் வீரன பாத்துட்டேன், இங்க பாருங்க http://naanengiranaan.blogspot.com/2007/02/blog-post_25.html

said...

@ ஜி - Z:

படத்தை பார்த்துட்டு கண்டிப்பா விமர்சனம் எழுதனும் நீங்க.. ;-)

//மலேசியா போலிஸ்ல உங்களப் புடிச்சிக் கொடுக்கணும் ;)))))//
மலேசியா - சிங்கப்பூர்ன்னு ரெண்டு பக்கமும் துர்காவை வலைவீசி தேடிக்கிட்டுதான் இருக்காங்க.. ;-)

@M. Karthikeyan:
//சும்மா படத்தின் கதையை சொல்லிவிட்டு விமர்சனம் என்று சொல்லும் பல பேர் மத்தியில் காட்சிகளையும் அதன் சுவாரஸ்யங்களையும் சொல்லுவது மை பிரண்ட், கலக்கல் //

தல, உங்க பாசத்துக்கு அளவே இல்லை. ;)
நன்றி..

said...

@Priya:

//oh! Neengalum pathuttingala?//
ஆமாம். பார்த்தாச்ஷு! நீங்களும் பார்த்துட்டு சொல்லுங்க.. ;-)

@நாகை சிவா:
//ஆக மொத்ததில் மொழிக்கு நீங்க கியாரண்டி என்று சொல்லுறீங்க. //
ஆமா சிவா. நான் கியாரண்டி.. தாராளமாக பாருங்க.. ;-)

@Syam:
//நான் கூட நீங்க சீன மொழி பத்தி சொல்றீங்களோனு நினைச்சேன் :-) //
அதுவும் கத்துக்கிட்டேன். வேணூம்ன்னா "எனக்கு தெரிஞ்ச மொழி ஒன்னு உங்க யாருக்குமே தெரியாது Part II"ன்னு எழுதலாம்.. :-)))

said...

@CVR said...
//Nicely written!! :-) //

Thanks CVR. :-)

@ஜி - Z said...
//கடைசிப் பின்னூட்டம்.. தமிழ்மணத்துல இருந்து வெளியேற :)))) //

யாரை நீங்க விட்டு வச்சிருக்கீங்க.. ஹிஹிஹி..

@கோபிநாத் said...
//தோழி நல்ல விமர்சனம்...//
நன்றி கோபி. :-)

@நெல்லை சிவா said...
//அட முப்பது தாண்டியும், முன்னாடி தெரியறீங்க, //

ஆஹா.. இது சூப்பர் சிவா.. ;-)

said...

@வெங்கட்ராமன் said...

//டிக்கெட் கிடைக்கலேன்னா மொழி பார்த்துட வேண்டியது தான் இந்த வாரம். //

மிஸ் பண்ணாமல் பார்த்துடுங்க வெங்கட். ;-)

@கானா பிரபா said...
//நான் பார்க்க அதிகம் ஆர்வம் காட்டும் படம்,முன்னோட்டம் தந்தமைக்கு நன்றி ;-) //
முதல் வருகைக்கு நன்றி பிரபா. வாழ்த்துக்கும் நன்றி.. :-)

@நான் said...

//நான் வீரன பாத்துட்டேன், இங்க பாருங்க //
இதோ வந்து பார்க்கிறேன்.. :-)

said...

கண்டிப்பாக சிடியில் பார்க்கமாட்டேன்..!ஜோவுக்காக தியேட்டரில் தான் ..!
அருமையான் விமர்சனம்!
நானானி

said...

கண்டிப்பாக சிடியில் பார்க்கமாட்டேன்..!ஜோவுக்காக தியேட்டரில் தான் ..!
அருமையான் விமர்சனம்!
நானானி

said...

romba nalla ezhudi erukkenga.. and yes i luved that movie.. oru nalla kavithai paticha madhiri azhagana katchiya partha thripti:)