Thursday, March 08, 2007

168. எந்த பெண்ணும் விண்வெளியாளராய் ஆகலாம்

"பெண் புத்தி பின் புத்தி.."

"பெட்டை கோழி கூவி பொழுது விடியுமா?"

இப்படியெல்லாம் கேட்டு அடுப்பறையில் அடங்கிய பெண்கள் எனும் காலம் மாறி ஆண்களுக்கு நிகராக ஒவ்வொரு துறையிலும் சாதித்து காட்டுகிறார்கள்.

நேரு, காந்திக்கு நிகரா இந்திரா காந்தி அரசியலில் சாதனை படைத்தார்..
அண்ட்ரி அகாஸ்ஸியை (Andre Agassi) விட பிரமாதமாய் டென்னிஸ் விளையாடினார் ஸ்டெஃபி க்ராஃப் (Steffi Graph)..
கமர்ஷியல் உலகத்தை அப்பாற்ப்பட்ட உலகமான ஆன்மீகத்திலும் சமூக சேவைகளிலும் இவர்களது பணி பிந்தங்கவில்லை. அன்னை தெரசா, சாரதா தேவியைபோல் இன்னமும் ஒருவாகிக் கொண்டேதான் இருக்கிறார்கள்..

ஆனால், இதைதான் விரும்புகிறதா இந்த உலகம்? சாதிக்க துடிக்கும் எத்தனை பேருக்கு இந்த உலகம் முட்டுக் கட்டையாக இருக்கிறது? புன்னகை தேசம் படத்தில் ஒரு வசனம்.

"நாம் அந்த அலைகளை கடற்கரைலிருந்து பார்க்கிறோம். ஆனால், இந்த இளைஞர்கள் (பெண்கள்) அதில் குதித்து நீந்துகிறார்கள். அவர்கள் ஏறும் ஏணியை நாம் கீழே இருந்து கெட்டியா பிடித்தாலே, அந்த நம்பிக்கையில் அவர்கள் உச்சத்தை தொடுவார்கள். ஏன் நாம் அந்த ஏணியை ஆட்டி விட வேண்டும்?" : இது இளைஞர்களுக்கு மட்டும் பொருந்தும் ஒரு வசனங்கள் அல்ல. பெண்களுக்கும் இது தகும்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் யாராவது ஒருவர் ஆதரவு கொடுத்தால், இவர்கள் கண்டிப்பாக சாதிப்பார்கள். இதனால், ஆதரவு இல்லையென்றால் இவர்கள் சாதிக்க மாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. அப்படியும் சிலர் சாதித்திருப்பார்கள். ஆனால் ஆதரவு இருந்தால், இவர்கள் அந்த சாதனையை வெகு சீக்கிரமாகவே செய்துவிடுவார்கள்.

இப்படி உலகமெங்கும் சாதித்த பலரை நாம் அறிந்திருப்போம். இன்றைய நாளில் நான் ஒரு பெண்மணியை இங்கே அறிமுகப்படுத்தலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இவர் பெயர் வனஜா.



இவர் 1971-ஆம் ஆண்டில் கூலிமில் பிறந்தவர். படிப்பிலும் விளையாட்டிலும் சிறு வயதிலிருந்தே அதிக ஆர்வம் காட்டியவர். பெண்ணுக்கும் ஆணுக்கும் வித்தியாசம் என்ன என்று கேட்டவர். சின்ன வயதிலேயே தன் அண்ணன்களுடனும் அண்ணனின் நண்பர்களுடனும் அவர் ஊரில் பந்து விளையாடியவர். அந்த சின்னஞ்சிறு வயதிலேயே ஆண்கள் எதை செய்தாலும், அவை தன்னாலும் செய்யமுடியும் என்று முயற்சி செய்தவர். பலர் "நீ பொண்ணு. அடக்க ஒடுக்கமாய் இரு!"ன்னு தடுத்தனர். அவர் குடும்பமே தடுத்தும் இருகின்றனர். ஆனால், நாளடைவில் இவரது ஆர்வத்தை பார்த்து இவர் குடும்பம் அவருக்கு முழு ஆதரவும் தந்தது.

எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றார். இவரது கனவு உலகம் சுற்ற வேண்டும் என்பதே! இவர் விமானியாக வேண்டும் கனவு கண்டார். அப்பொழுது இருந்த சூழ்நிலையில், அவரது குடும்பம் இவரது படிப்பிற்க்காக அதிக செலவு செய்ய முடியாததால், பொறியியல் துறையில் தன் மேல்கல்வியை தொடர்ந்தார். மலாயா பழ்கலைக்கழகத்தில் 1996-ஆம் ஆண்டு சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியியலாளராய் சேர்ந்தார்.

ஆனாலும், அவர் எப்போதும் போல விளையாட்டிலும், மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தினார். பல பயிற்சிகளை மேற்க்கொண்டார்.

2003-ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கும் மலேசியாவுக்கும் நடந்த ஒரு பேச்சுவார்த்தையில் ரஷ்யா விண்வெளி ப்ராஜெக்ட் 2007 (Russian Space Project 2007)-இல் ஒரு மலேசியரை விண்வெளிக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. மலேசியா இனிமேல் ஒரு விண்வெளி ஆராய்ச்சி கழகம் உருவாக்கி, விண்வெளிக்கு போகுவதற்கு இன்னும் பல வருடங்கள் தேவைப்படும். ஒருவராவது இதில் கலந்துக் கொண்டால், அது மலேசியாவுக்கு ஒரு பலமாக அமையுமென முடிவெடுத்து மலேசியர்களுக்கு அறிவித்தது.

கலந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 11 275. ஒவ்வொரு தேர்வுக்கு பிறகும் இந்த எண்ணிக்கை குறுக குறுக.. 62 பேர் ஆகியது. அதில் இரண்டே பெண்கள். ஒருவர் வனஜா. இன்னொருவர் ஒரு மலாய்க்கார பெண்மணி.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பல தேர்வுகளுக்கு பிறகு 8 பேரே தேர்வு செய்யப்பட்டனர். இதில் வனஜா ஒருவரே பெண். விமானியாகி ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்று கனவு காண்டவர், இப்போது அதையும் தாண்டி இன்னும் மேலே பறக்க வேண்டும் என்ற வெறி. அதுவே 10 000 பேரையும் தாண்டி இந்த 8 பேரில் ஒருவராய் வர முடிந்தது.

மற்றவர்களின் எதிர்ப்புகளைத் தாண்டி இது வரையிலும் வந்த பிறகுதான் அனைவரின் கண்களும் இவர் மேல் பட்டது.அந்த பதினாறு பேரில் ஒரே தமிழராய் இருந்தார். அது நம் சமூகத்துக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாய் எல்லாரும் அவரை பாராட்டினர். பிறகுதான் அவர் அந்த நிலமைக்கு வர காரணங்களும் அவர் பட்ட கஷ்டங்களும் தெரிய வந்தது.

ஒரு விண்வெளி ஆராய்சியாளராய் ஆவது சுலபமல்ல. அதுவும் முதல் மலேசிய விண்வெளியாளராய் ஆவதென்றால் பல நூறு இன்னல்களை தாங்கவேண்டும்.. அவர் கடந்த பல தடைகளில் சில:
அந்த 18 பேருக்கும் கடுமையான பயிற்சிகள் (Survival Training) லூமூட்டில் வழங்கப்பட்டன. இது தொடர்ந்து 35 மணி நேரம் நடந்தது. மீதி 7 ஆண்கள். ஆனதால், இவர் தான் ஒரு பெண் என்றும், அதற்கு தனியாக சில சிறப்பு வசதிகள் வேண்டும் என்றும் அவர் கேட்கவில்லை. விண்வெளியில் எல்லாருமே சமம்தான். இதுவே செய்ய முடியவில்லையென்றால் எங்கு போய் என்ன செய்யமுடியும் என்று மனதுக்குள் நினைத்து, ஆண்கள் என்னென்ன செய்ய முடியுமோ அதெல்லாவற்றையும் தானும் செய்து காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

முதல் நான்கு மணி நேரம் (விடியற்காலையில்) குழு விவாதம் நடைப்பெற்றது. கூடவே தூக்கமின்மான்மையை தாங்கும் சக்தி இவர்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்ற ஒரு சோதனையும் செய்தார்கள். பிறகு இவர்களை ஒரு வேகமாய் செல்லும் கப்பல் (speed boat)-இல் நடு கடலுக்கு கொண்டு சென்றனர். கப்பல் வேகமாய் சென்றுக் கொண்டிருக்கும்போது இவர்களை கடலில் குதிக்கச் சொன்னனர். கப்பல் வேகமாய் சென்றுக்கொண்டிருக்கும்போது கடல் அலைகள் இரண்டு பக்கமும் பிளந்து கொண்டு போகும். அப்போது நாம் கடலில் குதிப்பது ஒரு ஆபத்தான தருணம். இவரும் மற்றவர்களைப்போல் (சிலர் குதிக்க பயப்பட்டனர் என்று இங்கே சொல்லியே ஆகவேண்டும்) குதித்து கடலில் மிதந்து, கடலில் கவிழ்ந்து கிடக்கும் படகை நேராய் நிமிர்த்தி, அதில் ஏறி கடற்கரையை அடைய வேண்டும். பிறகு தன் உடைகளை மாற்றி (மரத்துக்கு பின்னால், இவர் ஒருவரே அங்கே பெண். இவர் மட்டும் அறையில் சென்று மாற்றிக்கொண்டு வந்தாரானால் நேரம் விரயமாகும் என்பதால்), காடு கண்கானித்து (Jungle Tracking) சென்று (திசைமானியும் வரைப்படம் துணையுடன் மட்டும்) மாலை 6 மணிக்கு ஓரிடத்தில் முகாமிட்டனர். ஒரு 20 நிமிட ஓய்வுக்கு பிறகு, இவர்களை ஒரு வண்டியில் ஏற்றி ஒரு இடத்துக்கு கொண்டு சென்று அங்கே இருந்து ஒரு 30 நிமிடங்கள் நடந்தார்கள். அது ஒரு செம்பனைத் தோட்டம். அப்போது மணி இரவு 11.

செம்பனைத்தோட்டத்தில் பாம்புகள் நிறையவே இருக்கும். அதுவும் சில செம்பனைத் தோட்டங்கள் காடுகளுக்கு பக்கத்தில் இருக்கும். அதில் பாம்புகளைத் தவிர்த்து மற்ற பயங்கர காட்டு விளங்குகளும் அதிகம் இருக்கும். அங்கே சாலை விளக்குகள் இருக்காது. ஒரே கும்மிருட்டு. பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. இவரை அந்த கரடு முரடான இடத்தில் படுக்கச்சொன்னார்கள். சில நிமிடங்களில் இவர் யாரோ குறட்டை விடுவது போல குரல் கேட்டது. அப்போதுதான் பக்கத்தில் யாரோ படுத்திருக்கிறார்கள் என்று அவாரல் உணரவே முடிந்தது. யாரோ அவர்களை சுற்றி சுற்றி நடப்பது அவரால் அறிய முடிந்தது.

அந்த இரவு குளிரில் அவர் நடுங்க ஆரம்பித்த போது இவர் கையை ஒருவர் பிடித்து இழுத்து ஒருவர் முன் கொண்டு சென்று விட்டார். ஒரு உருவம் வெள்ளையில் போர்த்தியபடி அங்கே உட்கார்ந்திருந்தது. அவர் இவர் முகத்தில் புனித நீரை தெளிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த நபர் இவர் கையை பிடித்து கூட்டிக்கிட்டு போய் ஒரு கயிறில் இவர் கையை வைத்தார். அந்த கயிறை பிடித்து சொந்தமாக செல்ல சொல்லி அவர் கட்டளையிட்டார்.

அந்த கயிறே அப்போழுது அவருடைய வாழ்க்கை.. அந்த இருட்டில் இருந்த ஒரே வெள்ளை புருள் அந்த கயிறு மட்டுமே! அதை தவிர்த்து வேறெதுவும் அவர் கண்களுக்கு தெரியவே இல்லை. நடந்தார்.. நடந்தார்.. நடந்துக்கொண்டே இருந்தார். அங்கே ஒரு உருவம் படுக்கவைக்கப்படிருந்தது. அந்த உருவம் தலை முதல் கால் வரை முழுவதுமாக ஒரு வெள்ளை துணியில் (மலாயில் இதை காயின் காப்பான் (Kain Kapan) என்று சொல்வார்கள்) சுற்றப்பட்டிருந்தது. இஸ்லாமியர்கள் இறந்தால், அவர்களின் உடலை இப்படித்தான் கட்டுவார்கள். இவர் அதன் பக்கத்தில் போனார். அந்த பிணத்தின் மேல் ஒரு காகிதமும் ஒரு பேனாவும் இருந்தது. அதில் அவர் பெயரை எழுத சொல்லி இருந்தது.

சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தார். அவர் கண்களில் பட்ட பொருள்கள் அந்த கயிறும், அந்த பிணமும் மட்டும்தான். ஒரு கையில் அந்த கயிறை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் அவர் பெயரை எழுதினார். அவர் தனது இரண்டாவது "A" எழுதும்போது அவர் தடுமாறி அந்த எழுத்தும் கிறுக்கலைப்போல் ஆனது. ஒரு பிணத்துடன் மட்டுமே அவர் இருப்பதால் ஒரு பயம்தான் காரணம். பிறகு அதே கயிறை பிடித்து நடக்க ஆரம்பித்தார்.

திடீரென்று அவரது கால் மூழ்க ஆரம்பித்தது. முட்டிவரை மூழ்கிவிட்டது. அது ஒரு சதுப்பு நிலம். அந்த கயிறு ஒவ்வொரு தடைகள் இருக்குமிடமும் ஒரு சுறுக்கமிடப்பட்டிருந்தது. அங்கேதான் இவர் பாறை மேலிருந்து விழுந்தார்; இரண்டு முறை அவர் காலணிகளை தொலைத்தார்; அவர் கைகளை அந்த சேற்றில் விட்டு தடவி தேடி கண்டுபிடித்து அணிந்தார். இங்கெ இவருக்கு கிடைத்தவை: கீறல்கள், உமையடிகள், தழும்புகள், ரத்தம் உறிஞ்சிய அட்டைகள். (இவையணைத்தும் மறுநாள் விடிந்ததும்தான் அவரால் பார்க்கமுடிந்தது.)

அந்த சேற்றை தாண்டி சில நேரத்துக்கு பிறகு அந்த கயிறு முடிவடையும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அது ஒரு பள்ளம். நீரோடும் சத்தம் அவரால் கேட்க முடிந்தது. அது ஒரு ஆறு என உணர்ந்தார். அதில் குதித்து தலை முதல் கால் வரை முக்கி எழுந்தார். அந்த இருட்டில் இரு குரல் கேட்டது. அவரது பெயரையும் எண்ணையும் கேட்டனர். இவர் சொன்னதுக்கு பிறகு, இவரை ஒருவர் கைகொடுத்து அந்த ஆறிலிருந்து வெளியேற்றினார். இன்னொரு அரை மணிநேரம் அதே சேற்றில் உட்கார்ந்திருந்தார். (அவர் நண்பர்கள் முடித்து வர காத்திருந்தார்).

எல்லாரும் முடித்த பிரகு, இவர்கள் படகு கப்பலில் ஏறி கப்பல்படை கப்பலுக்கு சென்று, அங்கிருந்து அவர்கள் அறைக்கு திரும்பினர்.

இவையணைத்தும் நம்மால் கேட்கத்தான் முடிந்தது. ஆனால், செய்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. இதை தவிர்த்து எத்தனையோ சோதனைகள் இவர் தாண்டினார். எட்டு பேரிலிருந்து 4 பேரை தேர்வு செய்தனர். இவர் அந்த நாளில் ஒருவர். இவர்கள் நால்வரும் ரஷியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கே பல பயிற்சிகளை மேற்க்கொண்டனர். அப்போதும், அந்த நால்வரில் இவர்தான் முதன்மையாக இருக்கிறார் என்று தகவல் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், ரஷ்ய மொழியை வெகு எளிதாக கற்றுக் கொண்டார் என்றும் தகவல் தெரிந்தது. ஆனால், சில சோதனைக்குப் பிறகு, இவருக்கு பூஜ்யம் புவியீர்ப்பு விசை தேர்வில் இவர் கஷ்டப்பட்டதாலும், இன்னொருவருக்கு மருத்துவ சோதனையில் சில கோளாறு இருப்பதனாலும் நீக்கப் பட்டனர்.

இப்பொழுது மீதி இருவர் இன்னும் ரஷ்யாவில் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். மலேசிய விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷேய்க் முசாப்பார் ஷுகோர், 35. இவர் ஒரு மருத்துவர். பேக்-உப் (Back-up) விண்வெளி வீரராக பாயிஸ் காலிட், 26, ராணுவ பல் மருத்துவர்.

வனஜா அவர்கள் மலேசிய விண்வெளி கழகத்தில் ஆராய்சியாளராய் வேலை செய்கிறார். மலேசியாவில் விண்வெளி அறிவியலை பற்றி கண்காட்சிகளை நடத்துகிறார். தன்னைப் போல் மற்றவர்களும் முன்னேற வேண்டும்; தைரியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இவரைப்போல் எத்தனையோ சாதனை பெண்கள் இருந்தாலும் இன்று இவரைப் பற்றியே பேச வேண்டும் என உள் மனதில் சொன்னதால் எழுதிய ஒரு கட்டுரை. இவரின் வீரம், விவேகம் மற்ற பெண்களும் கடைப்பிடிப்பதால் அவர்கள் வாழ்விலும் ஏதாவது சாதிக்கலாம். இவரது சாதனை மென்மேலும் உயர வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இதை எழுதும்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. வனஜாவும் நம்மைப்போல் ப்ளாக் எழுதுகிறார். அவருடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக்கொள்ள எழுதுகிறார். அவைகளை படிக்க இங்கே (http://angkasawancandidate.blogspot.com/) சொடுக்கவும்.


பெண்கள் தினத்தை முன்னிட்டு மதி கந்தசாமி அவர்கள் 1 வாரத்துக்கு முன்பே பெண் பதிவர்களை அன்புடன் அழைத்து ஒரு பதிவு எழுதச் சொன்னார்.

இது என்னுடைய படைப்பு. அதே போல், இன்று மற்ற பெண் பதிவர்களின் வலைகளிலும் இதை விட அருமையான படைப்புகள் உங்களுக்கு விருந்தாக அமையவிருக்கின்றன.

/******************************
இதுவும் படித்து பாருங்க:
மலேசியா பெண்கள் - துர்கா
*******************************/

62 Comments:

said...

ஒ......... இன்னிக்கு பெண்கள் தினம். வாழ்த்துக்கள். பதிவை பற்றி அப்பால வரேன்

said...

நீங்கள் கூறும் "வனஜா" வை பற்றி ஏற்கனவே படித்து உள்ளேன். வாழ்த்துக்கள். அவர்களை ஒரு உதாரணமாக கூறுவது காலச்சிறந்த ஒன்று தான்.

அவர்களும் பதிவு எழுதுகின்றார்கள் என்பது புது விசயம். தகவலுக்கு நன்றி.

said...

என்னாது நான் மட்டும் தான் கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேன் போல..... உங்களுக்கு இன்னிக்கு நல்ல நேரம் தானா?

said...

சரி இப்ப விசயத்துக்கு வரேன்.

எனக்கு இந்த பெண்கள் தினம் கொண்டாடுவதில் ஒரு மாறுபட்ட கருத்து இருக்குங்க...இதுக்கு மட்டும் இல்ல அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்றவற்றையும் சேர்த்து தான். (காதலர் தினம், நண்பர்கள் தினத்தை விட்டு தள்ளுங்க)

அது என்னங்க தனியா ஒரு நாள் மட்டும் பெண்கள் தினம்......மற்ற நாள் எல்லாம் என்ன ஆண்கள் தினம். நான் குதர்க்கமா பேச வரல. என்ன சொல்ல வரேன் என்பதை புரிஞ்சிப்பீங்க என்று நினைக்கிறேன்.

என்ன பொறுத்த வரைக்கும் பெரும்பாலனா பெண்கள் ஒன்னு இருந்தா அநியாயத்துக்கு inferiority complex la இருக்காங்க, இல்லாட்டி அநியாயத்துக்கு superiority complex la இருக்காங்க. இது தாங்க பிரச்சனையே... இத சரி பண்ணினாலே பல பிரச்சனைகள் சரியாயிடும்.

அடிமைத்தனத்தில் இருக்கும் பெண்கள் மேலும் அடிமைத்தனத்தை நோக்கி தான் போய் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க வேண்டியவர்கள், எது உண்மையான பெண் சுகந்திரம் என்று தெரியாமல் சம்பந்தம் சம்பந்தம் இல்லாத விசயங்களில் தலையிட்டு தங்கள் நேரத்தை வீண் அடித்து கொண்டு இருக்கின்றார்கள்.

said...
This comment has been removed by the author.
said...

//"பெண் புத்தி பின் புத்தி.."//

இதுக்கு உண்மையான அர்த்தமே வேற....

ஆண்கள் பின் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் டக்குனு விசயத்தை முடிவு எடுத்து அதை செயல்ப்படுத்தி விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. இதை செய்தால் பிற்காலத்தில் என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்று ஆராய்ந்து அதற்கு தகுந்துப்படி முடிவு எடுப்பார்கள் என்பதை விளக்க தான்

"பெண் புத்தி பின் புத்தி"

said...

அட்டென்டன்ஸ் மை பிரண்ட்

அப்பால படிச்சிட்டு மீதி

said...

@நாகை சிவா:

வாழ்த்துக்கு நன்றி. முக்கியமா உங்க கருத்துக்களுக்கு நன்றி.

//அது என்னங்க தனியா ஒரு நாள் மட்டும் பெண்கள் தினம்......மற்ற நாள் எல்லாம் என்ன ஆண்கள் தினம். //
இதுல நானும் உங்களைப்போல்தான் யோசிக்கிறேன். எனக்கும் வருஷத்துல ஒரு நிகழ்வு ஒரு நாளைக்கு கொண்டாடணும்ன்றதுல்ல உடன்பாடு இல்லைததான்.

வருஷத்தில் வரும் 365 நாட்களுமே நமக்கு சாதகமாகவும் வெற்றியை நோக்கி போகவும் புதிதாக ஏதாவது கற்றுகொள்ளவும் பயபடித்திக்க வேண்டும் என்பதே என் ஆசை.. இன்னைக்கு இந்த நாள்.. நாளைக்கு அந்த நாள் என்று யோசிக்க டைம் எங்கங்க இருக்கு? ;-)

//பெரும்பாலனா பெண்கள் ஒன்னு இருந்தா அநியாயத்துக்கு inferiority complex la இருக்காங்க, இல்லாட்டி அநியாயத்துக்கு superiority complex la இருக்காங்க. //
சிவா, இப்ப இல்லைங்க.. எல்லாரும் முன்னேறிட்டு இருக்காங்க.. ;-) (என்னைப் போல.. ஹிஹிஹி..) வனஜாவைப் போல.. :-)

"பெண் புத்தி பின் புத்தி"க்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை.. இன்றைக்கு ஒன்று புதிததாய் கற்றுக் கொண்டேன்.. ;-)

said...

//அட்டென்டன்ஸ் மை பிரண்ட்

அப்பால படிச்சிட்டு மீதி //
தல வந்தாச்சு.. கச்சேரி கலை கட்டப் போகுது!!! ஹிஹிஹி...

said...

மைபிரண்ட்,

ரொம்ப நீளமான பதிவா இருந்தாலும் பொறுமையா படிச்சிட்டேன்....

வனஜா போற்றுதலுக்கு உரியவரே.....

said...

கொஞ்சம் சின்னதா இருந்திருக்கலாமோ???

இங்க இன்னும் மகளிர் தினம் ஆரம்பிக்கல... இருந்தாலும் உங்களுக்கு முன் வாழ்த்துக்கள் :))))

said...

வனஜாவைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி...

என்னைப் பொறுத்தவரைக்கும்
சாதனைப் படைக்கத் துடிக்கும்
மக்களுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. பெண்ணா இருந்தா சில சமூக இடர்களை தகர்த்தெறிய இன்னும் கொஞ்சம் முயற்சி வேண்டும்.

அழகானப் படைப்பு. துர்காவும் அருமையா பதிவுப் போட்டுருந்தாங்க...

உங்களிருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் :)))

said...

முதலில் பெண்கள் தின வாழ்த்துக்கள்..
:-)

said...

நம்ம பங்காளி புலிக்குட்டி சொன்னதுதான் என்னுடய அபிப்பிராயமும்.... :-)

said...

வனஜா அவர்கள் கடுமையான உழைப்புக்கு ஒரு அருமையான உதாரணம்...அவங்கள பாத்து பெண்கள் மட்டும் இல்ல ஆண்களும் பாடம் கத்துக்க வேண்டும்...

said...

வனஜாவைப் பற்றி அறிந்தேன் , நன்றிகள்.
உங்கள் படைப்புக்களில் ஆரம்பத்தோடு ஒப்பிடும் போது ஒரு முதிர்ச்சி தெரிகின்றது. வாழ்த்துக்கள்

said...

உள்ளேன் தோழி...இப்போதைக்கு பெண்கள் தின வாழ்த்துக்கள்....பிறகு வருகிறேன்...

Anonymous said...

மை ஃபிரண்ட் நல்ல அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்.இதை பூங்காவிற்கு அனுப்ப முயற்சி பண்ணுங்கள்.

said...

@இராம்:மைபிரண்ட்,

//வனஜா போற்றுதலுக்கு உரியவரே..... //
avarum ithai padiththu santhoshappaduvaar endu ninaikkiren.. ;-)

@ஜி - Z :
//கொஞ்சம் சின்னதா இருந்திருக்கலாமோ???//
2 pathivaa pOddurikkalaamo??

//அழகானப் படைப்பு. துர்காவும் அருமையா பதிவுப் போட்டுருந்தாங்க...//
aamaam Ji. Thurgah sirappaaka ezuthiyirukkiRaar.. :-)

@Syam:
//அவங்கள பாத்து பெண்கள் மட்டும் இல்ல ஆண்களும் பாடம் கத்துக்க வேண்டும்... //
kadcile ithaipaththi ethavathu puthu aalosanai vazangka poreenggalaa? seythaal nallathuthaane?? ;-)

@கானா பிரபா:
//உங்கள் படைப்புக்களில் ஆரம்பத்தோடு ஒப்பிடும் போது ஒரு முதிர்ச்சி தெரிகின்றது. வாழ்த்துக்கள் //
en ezuththil munnerram iruppathai unarthiyathukku nandri Pirabaa. menmelum nalla padiyaa ezutha muyarchikkiren. :-)

@கோபிநாத்:
schoolle attandance correct-aa podduddu cut adippeenggalo??

@துர்கா:

vaangka Thurgah. unggalaithaan ethirppaarthen.. naan sonnathu nadanthathaa??

said...

துர்கா கிட்ட என்ன சொன்னீங்க என்ன நடந்துச்சு?

நன்றி... மாற்றத்துக்கு... :-)

said...

தோழி சூப்பரான பதிவு....

வனஜா உண்மையிலேயே போற்றுதலுக்குரியவர். அவருடைய விடாமுயற்ச்சிகள் நமக்கு பல பாடங்களை கற்றுக் கொடுக்கின்றது. அவர் மேலும் பல சாதனைகள் செய்து வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

said...

உண்மையில் உங்களின் வரிகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது. மிக நேர்த்தியாக வனஜாவை பற்றி சொல்லியிருக்கின்றீர்கள். மேலும் பல வித்தியாசமான படைப்புகள் அளிக்குமாறு கேட்டு கொள்கின்றேன்...

வாழ்த்துக்கள் :))

said...

\\@கோபிநாத்:
schoolle attandance correct-aa podduddu cut adippeenggalo??\\

அட.....எப்படி கண்டுப்புடுச்சிங்க ;)))

அது ஒரு cut காலம்...

said...

superb MyFriend. Happy Women's day nu oru varila sollama ivlo azhuthama solli irukkinga.. Oru penna irundhu padikka romba perumaya irukku.

Vanajava pathi ivloooo(!) detailed a sonnadhukku thanks.


//அண்ட்ரி அகாஸ்ஸியை (Andre Agassi) விட பிரமாதமாய் டென்னிஸ் விளையாடினார் ஸ்டெஃபி க்ராஃப் (Steffi Graph)..//
idha naan marukkaren :):) Andre Agassi kku equal a vilayadinarnu vena sollalam..

said...

sema inspirational post for women's day....periya aalungala mattume example kaatama...pudiya oru pennai patri sonnadhu super...

said...

Happy Women's day to u

said...

ரொம்ப பெருசா இருக்கு my friend. அப்பறமா படிக்கிறேன். attendance குறிச்சி வச்சிக்குங்க :-)

Anonymous said...

Neenda arumaiyaana pathivu, my friend ;-)

said...

எனக்கு பேச்சே வரலை! நீங்கள் எழுதிய விதமும் சரி, வனஜா அவர்களின் மன உறுதியும் சரி

மனதால் மட்டுமல்ல, உடலாலும் இப்போ பெண்கள் பலம் பெறுகிறார்கள்!என் படிக்கும் போது பரதி கனவு அதி தொலைவில் இல்லை! என தெரிகிறது.

இதை போல பல கிரிஜாக்களும் (வனஜா-கிரிஜா ஹிஹி) முன்னுக்கு வர வேண்டும். :)

அவர்களும் பதிவு எழுதுகின்றார்கள் என்பது புது விசயம். தகவலுக்கு நன்றி. :)

எலே! அங்கே என்ன வெட்டிப்பேச்சு! போயி வனஜா அக்கா பிளாகுல போயி போடுங்கல ஆளுக்கு நாலு கமண்டு! :)

said...

//idha naan marukkaren :):) Andre Agassi kku equal a vilayadinarnu vena sollalam..
//

@priya, ohh! apdi pogutha kadhai. he hee :)
eley! podungada phona Bay areavukku!

said...

@my friend, That Zero gravity test is really a tough one. What they will do is, will ask U to travel in a lift as high as possible. At one stage they will stop the lift and and all of a sudden lift will come down with full speed.

your blood pressure will shoot up like anything. Uffffffff! really a tough one.

said...

That should be பாரதி! sorry typo!

@பாரதி, தல! மனிச்சுகோங்க! :)

said...

Hello My Friend...
enga paathaalum unga peruthaan irukuthu... :))
Pons - valaicharam
Usha - Nunippul

vaazthukkaL... innum menmelum pukazadaiya vaazthukkal

said...

//idha naan marukkaren :):) Andre Agassi kku equal a vilayadinarnu vena sollalam.. //

ஆகாஸி நல்ல ஆட்டக்காரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு பிடித்த ஆட்டக்காரரும் கூட. இருந்தாலும் பட்டங்கள், ரேங்கிங் என்று கணக்கு எடுத்து பார்த்தால் ஸ்டேபி தான் டாப்பு....

Anonymous said...

இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/03/09/manamirundhal/

said...

My friend!
வனஜாவின் சாதனை மனவுறுதி பாராட்டுக்குரியதே!! அதை தொகுத்துத் தந்த உங்கள் எழுத்து;ஒரே மூச்சில் படிக்கவைத்தது.பாராட்டுக்கள் உங்களுக்கும்!
அது சரி! பெண்களால் முடியாதென யார் கூறியது. அனுமதித்தால் அவர்களால் எதுவும் செய்யமுடியும்

said...

மை பிரண்ட், எல்லோரும் வந்து கும்மியடிச்சுட்டு போயிட்டாங்க போல.. இதோ இது நம்ம நேரம்

said...

என்னடா இவ்வளவு நாட்களாய் பதிவு ஒன்றும் போடலைனு பாத்த, ஒரு அருமையான கட்டுரை பரிமாறியிருக்கீங்க.. அதுவும் பெண்கள் தின ஸ்பெசலா..

said...

எப்பா.. என்ன ஒரு கஷ்டமான சோதனைகள்.. ஒவ்வொன்றையும் படிக்கும் போதே என்னைச் சுற்றி அப்படி ஒரு சூழ்நிலை உருவாகி, எனக்குள் பயமும் படபடப்பும் ராக்கெட் வேகத்தில் ஏறியது..

இந்த தேர்வுகுழுவினரால் சில காரணங்களால் தவிர்க்கப்பட்டிருந்தாலும் அடுக்களை சட்டிகளுக்கு நடுவில் வாழ்ந்து பழகிவிட்ட ஆயிரகண்ணக்கான பெண்களுக்கு நடுவே இவர் ஒரு அபூர்வ பெண்!

பெரிய சல்யூட் உங்களுக்கு வனஜா!

said...

எப்படி ஒருவரை பற்றி எங்களுக்கெல்லாம் சொன்ன உங்களுக்கு நன்றி மை பிரண்ட்!


நான் சொன்னது போல நீங்கள் இன்னும் பல மலேசியா பொக்கிஷங்களை எழுதலாம்.. இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் இந்திராவையே சொல்லிக்கொண்டிருப்பது பெண்கள் தினத்தில்

said...

சிவா.. பட்டையை கிளப்புறியேப்பா.. அதுவும் அந்த பழமொழி விளக்கம் அருமை! இது போல பல பழமொழிகளுக்கு அர்த்தம் தெரியாமலே நாம் பயன்படுத்துறோம் என்பது உண்மை!

said...

ada womens day annaiku postineengala...anyway blated womens day da..namaku ellam endrendrum womens day as everyday is ours...

so ennoda periya post pottu asathirukka...vanaja pathi ippo than padikaren..she is really great ma..

said...

43 ingaium vandhuten naaaan..

said...

44 u c enga katchi kolgai'ey

said...

44 u c enga katchi kolgai'ey

said...

46 // பெட்டை கோழி கூவி பொழுது விடியுமா?"//

poludhu vidincha thaaaan koli'ey kooovum ....adhu endha koli'a irrundhaaalum... so

said...

47 full postaium padikala...

said...

48 namma nokkam thaan first..

said...

49 but kandipaaa post'a padipen...

said...

50 oru filter kaapi plz...

said...

கோப்ஸ்.. இது நியாயமே இல்லை.. எல்லாப் பக்கமும் போய் இப்படி 50 அடிச்சா நாங்க என்ன பண்றது?

said...

ennanga atchu andha puthu post..thookiteengala...epdiyo naan black la vaangi padichuten :-)

said...

@நாகை சிவா:
//துர்கா கிட்ட என்ன சொன்னீங்க என்ன நடந்துச்சு?//
அது எங்களுக்குள் உள்ள ரகசியம் புலி.. ;-)
---------------------------------
@கோபிநாத்:
//தோழி சூப்பரான பதிவு....//
நன்றி கோபி. ;-)

//உண்மையில் உங்களின் வரிகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது. மிக நேர்த்தியாக வனஜாவை பற்றி சொல்லியிருக்கின்றீர்கள். மேலும் பல வித்தியாசமான படைப்புகள் அளிக்குமாறு கேட்டு கொள்கின்றேன்...//
உங்கள் அளவு கடந்த பாசத்துக்கு நன்றி கோபி. முயற்சிக்கிறேன். ;-)
----------------------------------
@Priya:
//superb MyFriend. Happy Women's day nu oru varila sollama ivlo azhuthama solli irukkinga.. Oru penna irundhu padikka romba perumaya irukku.//
பாராட்டுக்கு நன்றி பிரியா.

//Vanajava pathi ivloooo(!) detailed a sonnadhukku thanks.//
ரொம்ப நீளமா இருக்குன்னு நாசுக்கா சொல்லிட்டீங்க.. ;-)

// Andre Agassi kku equal a vilayadinarnu vena sollalam..//
அடடெ, இப்போது இவரை விட நல்ல திறமையாய் விளையாட நிறைய பேர் வந்துட்டாங்களே! நீங்க இன்னும் அகாஸ்ஸி கட்சிதானா?
---------------------------------
@Bharani:
//periya aalungala mattume example kaatama...pudiya oru pennai patri sonnadhu super...//
வித்தியாசமாய் இருக்கட்டுமே என்றுதான் இவரை தேர்ஃதெடுத்தேன். இவரை பற்றி எழுதணும்ன்னு ரொம்ப நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பத்தான் நிறைவேறியது. ;-)

said...

@C.M.HANIFF:
//Neenda arumaiyaana pathivu, my friend ;-)//
நன்றி நண்பரே!
--------------------------------
@Ambi:
//எனக்கு பேச்சே வரலை! நீங்கள் எழுதிய விதமும் சரி, வனஜா அவர்களின் மன உறுதியும் சரி //
வாரேவா.. நன்றி அம்பி.. ;-)

//படிக்கும் போது பரதி கனவு அதி தொலைவில் இல்லை! என தெரிகிறது.//
உண்மைதான் அம்பி.

//இதை போல பல கிரிஜாக்களும் (வனஜா-கிரிஜா ஹிஹி) முன்னுக்கு வர வேண்டும். :)//
அப்போதும் உங்களுக்கு வனஜா கிரிஜா சீரியல் ஞாபகம்தானா? ஹிஹிஹி...

//எலே! அங்கே என்ன வெட்டிப்பேச்சு! போயி வனஜா அக்கா பிளாகுல போயி போடுங்கல ஆளுக்கு நாலு கமண்டு! :)//
ஆமாம். வாங்க எல்லாரும் போய் வாழ்த்திட்டு வரலாம்.. அம்பி தலைமைல..

//That Zero gravity test is really a tough one//
ஒரு நேர்காணலில் அவர் இதைப் பற்றி விளக்கினார். அது எவ்வளவு கஷ்டம் என்று அப்பொதே எனக்கு தோண்றியது. உங்க விளக்கத்துக்கும் நன்றி அம்பி. :-)
---------------------------------
@ஜி - Z:
//enga paathaalum unga peruthaan irukuthu... :))
Pons - valaicharam
Usha - Nunippul

vaazthukkaL... innum menmelum pukazadaiya vaazthukkal//
அது பெண்கள் கணக்கெடுப்பு.. அதனாலேதான்.. ஹிஹிஹி..
வாழ்த்துக்கு நன்றி.. :-)
----------------------------------
@Dubukku:
//இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/03/09/manamirundhal///

இதைப் பார்த்தேன் டுபுக்கு. நன்றி.. :-)
--------------------------------
@யோகன் பாரிஸ்(Johan-Paris):

//அதை தொகுத்துத் தந்த உங்கள் எழுத்து;ஒரே மூச்சில் படிக்கவைத்தது.பாராட்டுக்கள் உங்களுக்கும்!//
வாவ்.. நன்றி.. ;-)
---------------------------------
@மு.கார்த்திகேயன்:
//மை பிரண்ட், எல்லோரும் வந்து கும்மியடிச்சுட்டு போயிட்டாங்க போல.. இதோ இது நம்ம நேரம்//
ஆமாம்.. இது தனியா உங்களுக்கு ஒதுக்கி வச்ச நேரம்.. ;-)

//என்னடா இவ்வளவு நாட்களாய் பதிவு ஒன்றும் போடலைனு பாத்த, ஒரு அருமையான கட்டுரை பரிமாறியிருக்கீங்க.. அதுவும் பெண்கள் தின ஸ்பெசலா..//
எழுதி நாலு நாலா பத்திர படுத்தி வச்சிருந்தேண்.. சூடு தணிய.. ஹாஹாஹா.. பிறகுதான் வெளியிட்டேன்.. ;-)

said...

@மு.கார்த்திகேயன்:
//நான் சொன்னது போல நீங்கள் இன்னும் பல மலேசியா பொக்கிஷங்களை எழுதலாம்.. //
அதற்கும் வழி செய்தாச்சு.. கூடிய சீக்கிரத்திலேயே அதற்க்காக ஒரு அறிவிப்பு வெளியிடப்படும்.. செய்தி துறை அமைச்சராய் உருப்படியாய் ஏதாவது செய்யனும்ல.. ;-)

//அதுவும் அந்த பழமொழி விளக்கம் அருமை!//
சிவா இதுலெல்லாம் சூப்பர்.. ;-)
----------------------------------
@ramya:
//ada womens day annaiku postineengala...anyway blated womens day da..namaku ellam endrendrum womens day as everyday is ours...//
சரியா சொன்னீங்க.. ;-)
-----------------------------------
@My days(Gops):
//poludhu vidincha thaaaan koli'ey kooovum ....adhu endha koli'a irrundhaaalum... //
என்ன ஒரு தத்துவம்.. ;-)

50 அடிச்ச கோப்ஸ்க்கு ஃபில்டர் காப்பி அனுப்பி வச்சாசு.. கிடைச்சதா?
---------------------------------
@மு.கார்த்திகேயன்:
//கோப்ஸ்.. இது நியாயமே இல்லை.. எல்லாப் பக்கமும் போய் இப்படி 50 அடிச்சா நாங்க என்ன பண்றது?//
தல, உங்களுக்கு சான்ஸே இல்லை. அவரு இதை ஒரு வேலையால பார்க்குறாரு.. நமக்கெல்லாம் நோ சான்ஸ்.. ;-)
----------------------------------
@Syam:
//ennanga atchu andha puthu post..thookiteengala...epdiyo naan black la vaangi padichuten :-)//
எந்த போஸ்ட் நாட்டாமை? இன்னும் நான் ஒன்னும் எழுதவே இல்லையே!!! அதுக்குள்ள திருட்டு விசிடி வெளியாச்சா? So fast!!!!

said...

ஆஹா! நா லேட்டா? அதுக்குள்ள புலி பூந்து விளயாடிடுச்சே! 2 நாள் நம்ம சர்வர் டவுன். அதுக்குள்ள என்னென்ன நடக்குது இங்க!

said...

மலெஷிய பெண்களின் திறமைகள் பற்றிய இந்த பதிவு மிக்க அருமை. உஷா மேடம் பாராட்டினாங்கன்னா சும்மாவா?

said...

வந்ததுக்கு என் பங்கு மொய் வச்சிட்டு போகிறேன் மைஃபிரண்ட்:-)

said...

ஒரு 60 ஆக்கிட்டு போகவா? அனுமதி please

said...

அப்பாடா 60 அடித்து first class வாங்கிய சகோதரி வாழ்க!

said...

ஆண்களுக்கு உடல் பலம்..ஆனால்
பெண்களுக்கு மனோபலம் ஜாஸ்தி!!
வனஜாவின் சாதனைகள் தொடரட்டும்! வாழ்த்துக்கள்!!!

said...

@அபி அப்பா:
//ஆஹா! நா லேட்டா? //

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வந்திருக்கீங்களே! ;-)

//அதுக்குள்ள புலி பூந்து விளயாடிடுச்சே! //
புலி இந்த ஆணிகளை கரெக்ட்டா புடிங்கிடும் ஹீஹீ..

//ஒரு 60 ஆக்கிட்டு போகவா? அனுமதி please//
permission granted.. ;-)

//மலெஷிய பெண்களின் திறமைகள் பற்றிய இந்த பதிவு மிக்க அருமை. உஷா மேடம் பாராட்டினாங்கன்னா சும்மாவா?//
நன்றிங்க அபி அப்பா.. :-)

@நானானி:
//ஆண்களுக்கு உடல் பலம்..ஆனால்
பெண்களுக்கு மனோபலம் ஜாஸ்தி!!
வனஜாவின் சாதனைகள் தொடரட்டும்! வாழ்த்துக்கள்!!!//
நன்றி.. அவருடைய ப்ளாக்கையும் போய் பாருங்க.. ;-)