Sunday, March 25, 2007

173. என் ஞாபக சக்தியை டெஸ்ட் பண்றாங்கப்பா

எல்லாரும் கோழியா மாறுங்கய்யான்னு அபி அப்பா அழைக்கிறார் அழைக்கிறார் அழைக்கிறார்..

நம்மோட மூக்கை தீட்டி யோசிக்க சொல்றார். (எல்லாரும் மூளையைதானே தீட்டுவாங்க???)

அவர் ஒரு சவால் விடுறார். என்னனு?

"நாம படிச்ச பள்ளி, செக்ஷன், வாத்தியார் பெயர்.. எதெல்லாம் கரெக்ட்டா சொல்லனுமாம்"

நல்லா கேக்குறாய்ய்ங்க பாருய்யா டீடேய்ல்லு....

கரெக்ட்டா எழுதினா பரிசு எதுனாச்சும் தருவீங்களா அபி அப்பா?

நோட் மை பாய்ண்ட்டு:

LKG
4 வயது - "5 வயது க்லாஸ்" - டீச்சரோட கையெழுத்து அழகா முட்டை - முட்டையா இருக்கும் - தடிகா பேரு ஞாபகமில்லை
5 வயது - "6 வயது க்லாஸ்" - அதே டீச்சர் - "
6 வயது - "6 வயது க்லாஸ்" - அட, அதே டீச்சர்தாம்ப்பா - "

ஆரம்ப கல்வி
வகுப்பு 1 - Biru (நீலம்) - டீச்சர் குண்டா இருப்பாங்க. க்லாஸ்ல பென்சில், பேனா எல்லாம் விற்ப்பாங்க. ரொம்ப நல்ல டீச்சர். நாங்கெல்லாம் அவங்களை அம்மான்னுதான் கூப்பிடுவோம். - காராக் ஆரம்ப தமிழ்பள்ளி
வகுப்பு 2 - செண்பகம் (Cempaka) - டீச்சர் பெரிய கண்ணாடி ஒன்னு போட்டிருப்பாங்க.அதுக்கு மேலே உன்னும் ஞாபகம் இல்லை - பத்துமலை ஆரம்ப தமிழ்ப்பள்ளி
வகுப்பு 3 - செண்பகம் (Cempaka) - இவங்களை சுத்தமா ஞாபகம் இல்லை. எங்க பக்கத்து க்லாஸ் டீச்சர் பேரு ஞாபகம் இருக்கு. பேரு தெய்வானை டீச்சர் - "
வகுப்பு 4 - செண்பகம் (Cempaka) - இவங்க பேரு ஏதோ சாமி பேரு. என்னனு மறந்துபோச்சு. இவங்க அந்த வருஷம்தான் திருமணம் செய்தாங்க. அந்த வருட இறுதியில் பள்ளி மாற்றலாகி போயிட்டாங்க - "
வகுப்பு 5 - செண்பகம் (Cempaka) - இவங்க பேரும் நான்காம் வகுப்பு டீச்சர் பேரும் ஒன்னுதான். மேலே உள்ளதே ஞாபகம் இல்லை. இது மட்டும் எப்படி தெரியும்? நல்லா கேக்குறீங்கய்யா!!! - "
வகுப்பு 6 - ரோஜா (Ros) - இவங்க பெயர் கலாவதி டீச்சர். ரொம்ப கோபம் வரும் இவங்களுக்கு. - "

(ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே!!!)

இடைநிலைக் கல்வி
படிவம் 1 - கெம்பாஸ் (Kempas) - இவங்க பேரு ஃபாட்ஜிலின் (Fadzlin) டீச்சர். இவங்க பேரு மறக்காதுப்பா. ஏன்னா இவங்க என் பின் வீட்டுலத்தான் குடியிருக்காங்க.. ஹீஹீ.. - செலாயாங் பாரு 2 இடைநிலைப் பள்ளி
படிவம் 2 - ஜாத்தி (Jati) - இவங்க ஒரு அறிவியல் டீச்சர். அவங்க மகனும் என் க்லாஸ்மேட்தான். எனக்கு பிடிக்காத பாடத்தை சொல்லிக் கொடுத்தனாலே அவங்க பேரும் ஞாபகம் இல்லை. - டாருல் ஏசான் இடைநிலைப் பள்ளி
படிவம் 3 - ஜாத்தி (jati) - இவங்க பேரு சுஸ்லினா (Suzlina) டீச்சர். Oxford Universityலே படிச்சிட்டு வந்து எங்களை இங்கிலீஸ்ல பேச சொல்லி உயிரை வாங்கிட்டாங்க.. ஹ்ம்ம்.. - "
படிவம் 4 - அறிவியல் 1 (Science 1) - இந்த வருடத்துல நிறைய டீச்சருங்க வந்தாங்க.. எல்லாரையும் ஓட ஓட விரட்டிடோம்ல.. ;-) - "
படிவம் 5 - அறிவியல் 1 (Science 1) - இவங்க ஒரு மலாய் டீச்சர். சின்னதா இருப்பாங்க. அந்த வருடம் அவங்க pregnant. (அப்போதும் க்லாஸ்ல நாங்க அராஜகம் பண்ணூவோம்ல.. ) எங்க ரிசால்ட் வந்த ஒரு வாரத்துக்கு முன்தான் அவங்களுக்கு குழந்தை பிறந்தது. - "

அப்புறம் எப்படியோ எனக்கு univeristyலே ஒரு சீட்டு கொடுத்துட்டாங்க. நாமளும் அப்படியே இங்கே வந்து செட்டல் ஆயாச்சு! :-P

இந்த கேள்வி ரொம்ப நல்லாவே இருக்கு அபி அப்பா. இதுவே Tag பண்ணலாமா? வியர்ட் கேம் முடிஞ்சாச்சு! புதுசா இது ஸ்டார்ட் பண்ணிடுவோமா?

நான் Tag பன்ற அந்த அஞ்சு பேரு:
1- போன தடவை மிஸ் ஆகி போன கார்த்திக்
2- காதலை ஆராய்ச்சி செய்யும் CVR
3- சின்ன பையன் ராம்
4- புது மாப்பிள்ளை அம்பி
5- முதல்வர் @ நாட்டாமை ஷாம்

31 Comments:

said...

வெரிகுட் மைஃபிரண்ட்! தமிழ்மணம் கிறுக்கா அலைஞ்சது போதும். இது கூட நல்லா இருக்கு! பேஷ் பேஷ்:-))

said...

//4 வயது - "5 வயது க்லாஸ்" - டீச்சரோட கையெழுத்து அழகா முட்டை - முட்டையா இருக்கும்//

ஒரு வேளை முட்டைதான் போட்டிருப்பாங்களோ?:-))

said...

3rd attendance first ok

said...

//போன தடவை மிஸ் ஆகி போன கார்த்திக்//

கட்டாயம் எழுதுறேன்.. அதுவும் இப்படி கொசுவர்த்தி சுத்துறதுன்ன நமக்கு பிடிச்ச விஷயம்ங்க

said...

ஆரம்பக்கல்வில சென்பகம் டீச்சரை வச்சே எல்லாத்தையும் தப்பிச்சுட்டீங்களோ, மை பிரண்ட்..

said...

இந்த உயிரை தொலைத்தேன் பாடலை எங்கேயாவது இருந்து தரையிறக்கம் செய்ய முடியுமா, மை பிரண்ட்.. அந்த ஆல்ப பாடல்கள் முழுவதும் கிடைக்குமா, மை பிரண்ட்

said...

//கரெக்ட்டா எழுதினா பரிசு எதுனாச்சும் தருவீங்களா அபி அப்பா?//

நீங்க மட்டும் கரெக்டா எழுதி இருந்தால் தொல்ஸ்க்கிட்ட சொல்லி நான் உங்களுக்கு பரிசு வாங்கி தரேன்.

said...

மை பிரண்ட் இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்க கூடாதுங்க....

என்னமோ பதில் சொல்லி இருக்கீங்க...

மொத்தம் 14 க்கு 3 சொல்லி இருக்கீங்க

% போட்டா ரொம்ப கேவலமா இருக்கும் போல... அதனால போடல...

said...

//5 வயது - "6 வயது க்லாஸ்" - அதே டீச்சர் - "
6 வயது - "6 வயது க்லாஸ்" - அட, அதே டீச்சர்தாம்ப்பா - "//

6 வது வகுப்ப இரண்டு வருசம் படிச்சிங்களா... பரவாயில்லை, அப்பவே கோட் அடிச்சு, அஸ்திவாரத்தை பலமா போட்டு இருக்கீங்க.....

said...

//வெரிகுட் மைஃபிரண்ட்! தமிழ்மணம் கிறுக்கா அலைஞ்சது போதும்.//

அதுக்குதானே இது! ;-)

//ஒரு வேளை முட்டைதான் போட்டிருப்பாங்களோ?:-)) //
ரெண்டு முட்டை.. அதுக்கு முன்னே ஒன்னு = 100 :-D

---------------------------------
@My days(Gops):

attendance noted Gops.

---------------------------------
@மு.கார்த்திகேயன்:

//கட்டாயம் எழுதுறேன்.. அதுவும் இப்படி கொசுவர்த்தி சுத்துறதுன்ன நமக்கு பிடிச்ச விஷயம்ங்க //

கொசுவர்த்தியை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு எங்களுக்கும் தெரியுமே! ;-)

said...

@மு.கார்த்திகேயன்:

//ஆரம்பக்கல்வில சென்பகம் டீச்சரை வச்சே எல்லாத்தையும் தப்பிச்சுட்டீங்களோ//

ஆஹா தல.. தப்பா ஆயிடுச்சே! அது என் வகுப்பு செக்ஷன் பேரு.

ஆரம்பப் பள்ளி ஒரு பள்ளில படிக்கிறப்போ அங்கே செக்ஷன் பேரு கலர்ல வச்சாங்க.. நீலம், சிவப்பு, பச்சைன்னு

இன்னொரு ஸ்கூலுக்கு மாறி வந்தபோது அங்கே ரோஜா, மல்லிகை, செண்பகம், தாமரைன்னு வச்சிருந்தாங்க

இடைநிலைப்பள்ளில ஜாத்தி, டாமார், மேராந்தி, கெம்பாஸ்ன்னு மரங்களின் பேரா வச்சாங்க..

இதுல எந்த டீச்சர் பேரும் ஒளிஞிருக்கவில்லை தலைவா! :-)

said...

@மு.கார்த்திகேயன்:

//இந்த உயிரை தொலைத்தேன் பாடலை எங்கேயாவது இருந்து தரையிறக்கம் செய்ய முடியுமா, மை பிரண்ட்.. //

நான் இதை எழுதும்போது நீங்க இந்த பாடலைதான் கேட்டுக்கிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். :-)

இந்த படத்துல மொத்தமே ஒரு பாட்டுதான். அதுவும் சூப்பர் ஹிட். :-)

---------------------------------
@நாகை சிவா:

//நீங்க மட்டும் கரெக்டா எழுதி இருந்தால் தொல்ஸ்க்கிட்ட சொல்லி நான் உங்களுக்கு பரிசு வாங்கி தரேன். //

நன்றி புலி

//மை பிரண்ட் இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்க கூடாதுங்க....//

இதைதான் முன்னவே சொல்லியிருந்தேனே! எல்லாம் என் அப்பா கொடுத்த மேமோரி ப்லஸ்ஸும் எப் அம்மா கொடுத்த வல்லாறை கீரையின் மகிமைதான்.. :-D

//மொத்தம் 14 க்கு 3 சொல்லி இருக்கீங்க

% போட்டா ரொம்ப கேவலமா இருக்கும் போல... அதனால போடல... //

அப்படி இப்படின்னு ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை போட்டாச்சுல.. ;-)
இப்படித்தான் ஸ்கூலிலேயும் மார்க் வாங்கினேன். பிள்ளை கஷ்டப்பட்டு நிறைய எழுதியிருக்குன்னு சொல்லி டீச்சர் மார்க் போட்டுடுவாங்க. :-)

//6 வது வகுப்ப இரண்டு வருசம் படிச்சிங்களா... பரவாயில்லை, அப்பவே கோட் அடிச்சு, அஸ்திவாரத்தை பலமா போட்டு இருக்கீங்க..... //

எங்க புலி.. ரெண்டாவது வருஷம் படிக்கிறதுனால நாமதான் ராணின்னு பார்த்தா, கேள்வி கேட்கும் நேரத்துல மட்டும் டீச்சர் என்னை ஒதுக்கி வச்சிடுவங்க. இல்லைன்னா நான் பதில் சொல்லிடுவேன்னு அவங்களுக்கு பயம். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு அப்போ! :-(

said...

//டீச்சர் பெரிய கண்ணாடி ஒன்னு போட்டிருப்பாங்க.//

ஹலோ,
தமிழ் படமெல்லாம் பாத்ததில்லயா?
டீச்சர்னாவே அவங்க கண்ணாடி போட்டுருப்பாங்க, வெயிலே அடிக்கலன்னாலும் குடை பிடிச்சிகிட்டு போவாங்க, டீச்சர் பின்னாடி வாத்தியாருங்க சுத்துவாங்க இதெல்லாம் ஜகஜம்.

நேத்து என்ன சாப்பிட்டமின்னு ஞாபகம் இல்ல இதுல ஒண்ணாப்பு வாத்தியார் பேரு இதெல்லாம் ஓவருங்க ப்ரெண்ட்.

said...

//சின்ன பையன் ராம்//

யோவ் ராம்
எவ்வளவுய்யா காசு குடுத்த இதுக்கு??

said...

மை ஃபிரண்ட் இது என்ன புது ஆட்டமா??

\\டீச்சர் குண்டா இருப்பாங்க. க்லாஸ்ல பென்சில், பேனா எல்லாம் விற்ப்பாங்க. \\

ரொம்ப விபரமான டீச்சர் போல ;-))

said...

பதிவு ழுழுக்க கடலோர கவிதைகள் சத்யராஜ் மாதிரி டீச்சர்...டீச்சர்.. டீச்சர்.... சொல்லியிருக்கிங்க ;-)))

said...

\\ சின்ன பையன் ராம்\\

ராம்ண்ணே ரொம்ப...... ஆசை தான் உனக்கு ;-)))

said...

Hi My friend,
First time to ur blog through Ji's Blog...

Hmmm nalla gyabaga sakthi nga ungalukku:)

said...

//இதுல எந்த டீச்சர் பேரும் ஒளிஞிருக்கவில்லை தலைவா!//

அப்போ டேக்-படி நீங்க டீச்சர் பேரை சொல்லலையா.. ஹிஹிஹி

said...

(ஆரம்பப் பள்ளி ஒரு பள்ளில படிக்கிறப்போ அங்கே செக்ஷன் பேரு கலர்ல வச்சாங்க.. நீலம், சிவப்பு, பச்சைன்னு

இன்னொரு ஸ்கூலுக்கு மாறி வந்தபோது அங்கே ரோஜா, மல்லிகை, செண்பகம், தாமரைன்னு வச்சிருந்தாங்க

இடைநிலைப்பள்ளில ஜாத்தி, டாமார், மேராந்தி, கெம்பாஸ்ன்னு மரங்களின் பேரா வச்சாங்க..)

அட..அப்படியா!!! இது நல்லாருக்கே..

(யோவ் ராம்
எவ்வளவுய்யா காசு குடுத்த இதுக்கு??)

தம்பி எல்லாம் பொன்ஸ் கிட்ட சார்ஜ் பண்ண பணம் தான் விளம்பரமா போவுது :)

said...

yamma my friend sister, officela bayangara biji. ippudi homework ellam vera kudukareengale! avvvvvvvvvv :)

kozhanthailenthe memory plus saaptutu vareengala? :)

will try out when time permits.

said...

Unga photo romba cute ah irukunga My friend..

KG padikkum poadhu yeduthadha?

said...

//3- சின்ன பையன் ராம்//

ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லே தாயி... :(

//(யோவ் ராம்
எவ்வளவுய்யா காசு குடுத்த இதுக்கு??)

தம்பி எல்லாம் பொன்ஸ் கிட்ட சார்ஜ் பண்ண பணம் தான் விளம்பரமா போவுது :) //

இரகசியம் பூராவும் இப்பிடி வெளியாகிருச்சு :((

said...

அட நம்மளயும் டேக் பண்ணி இருக்கீங்களா...இவ்வளவு பேர எல்லாம் எனக்கு நியாபகம் இல்லீங்க...
:-)

said...

உங்களுக்கு அநியாயத்துக்கு ஞாபக சக்தி போல....:-)

said...

@தம்பி said...

//ஹலோ,
தமிழ் படமெல்லாம் பாத்ததில்லயா?
டீச்சர்னாவே அவங்க கண்ணாடி போட்டுருப்பாங்க, வெயிலே அடிக்கலன்னாலும் குடை பிடிச்சிகிட்டு போவாங்க, டீச்சர் பின்னாடி வாத்தியாருங்க சுத்துவாங்க இதெல்லாம் ஜகஜம்.//

அது தமிழ்நாட்டுல மட்டும்தான் போல தம்பி. இங்க எல்லாம் அப்படி இல்லை. இங்கே கொஞ்சம் வந்து எட்டி பார்த்துட்டு போங்க. ;-)

//யோவ் ராம்
எவ்வளவுய்யா காசு குடுத்த இதுக்கு??//

இதுக்கு எதுக்கய்யா காசு? ராயலு சின்ன பையந்தான். ;-)

-----------------------------------
@கோபிநாத் said...

//மை ஃபிரண்ட் இது என்ன புது ஆட்டமா??//

எல்லாம் அபி அப்பா ஆரம்பிச்சு வச்சதுதான். ;-)

//\\டீச்சர் குண்டா இருப்பாங்க. க்லாஸ்ல பென்சில், பேனா எல்லாம் விற்ப்பாங்க. \\

ரொம்ப விபரமான டீச்சர் போல ;-))//

ரொம்பவே விவரமானவங்க.. ;-)

said...

@ராஜி said...

//Hi My friend,
First time to ur blog through Ji's Blog...//

வாங்க ராஜி. இனி பிண்ணிடலாம். :-)

//Hmmm nalla gyabaga sakthi nga ungalukku:)//

வாழ்த்துக்கு நன்றி ராஜி. :-)

---------------------------------
@மு.கார்த்திகேயன் said...
////இதுல எந்த டீச்சர் பேரும் ஒளிஞிருக்கவில்லை தலைவா!//

அப்போ டேக்-படி நீங்க டீச்சர் பேரை சொல்லலையா.. ஹிஹிஹி//

ஹாஹா..அது தெரிஞ்சிருந்தாதான் பிண்ணியிருப்போம்ல..

said...

@அய்யனார் said...

//அட..அப்படியா!!! இது நல்லாருக்கே..//

வாங்க அய்யனார். :-)

//தம்பி எல்லாம் பொன்ஸ் கிட்ட சார்ஜ் பண்ண பணம் தான் விளம்பரமா போவுது :)//

ராமு பையா, இதை பத்தி நீர் எங்கிட்ட சொல்லவே இல்லையே!

-----------------------------------
@ambi:

//yamma my friend sister, officela bayangara biji. ippudi homework ellam vera kudukareengale! avvvvvvvvvv :)//

நீங்க பிஜியோ பிஜின்னு தெரியும். :-D
இருந்தாலும் கொஞ்சம் மனசு வச்சி எழுதி முடிச்சிடுங்கப்பா
;-)

//kozhanthailenthe memory plus saaptutu vareengala? :)//

அதுதான் என் ஞாபக சக்தியை பார்த்தாலே தெரியுமே! ;-)

said...

@Syam said...

//அட நம்மளயும் டேக் பண்ணி இருக்கீங்களா...இவ்வளவு பேர எல்லாம் எனக்கு நியாபகம் இல்லீங்க...
:-)//

நீங்க எழுதறதே பக்கா காமேடியா இருக்குமே! அதுக்குதான் உங்களை டேக் பண்ணியிருக்கோமாக்கும். :-)

//உங்களுக்கு அநியாயத்துக்கு ஞாபக சக்தி போல....:-)
//

டாங்க்ஸு பார் தி காம்பிலிமெண்ட். ;-)

Anonymous said...

மறக்க வேண்டியவார்களை மறந்து விட்டேன்.எல்லாரும் என்னை மாதிரி இருக்கமாட்டீங்களா.ஒரு சந்தேகம் தமிழ் பள்ளியில் எல்லாம் வகுப்பு பெயர் பூவாகதான் இருக்குமோ?

Anonymous said...

tago tag pola?? :)