படத்தை பார்த்தீங்களா?
அர்ஜுனரை போல் படத்தில் நான் குறி வைப்பது ஆர்யாவை அல்ல..
அதோ!
அவர் பின்னால் நிற்கும் ஆட்டோவைதான்..
குருஷேத்ரம் படத்தில் வடிவேலுவின் ஒரு ஜோக்கை பார்த்து இன்னமும் குழம்பிகொண்டு இருக்கிறேன்.
அதாங்க..
கைப்புள்ள வேலை தேடி பட்டணத்துக்கு வருவாரு.. பலர் அவரை ஏமாத்தி பண்ம் பறிப்பாங்க.. (இவரு ரொம்ப நல்லவரு!!! அவ்வ்வ்....)
கைப்புள்ள வேலை தேடி பட்டணத்துக்கு வருவாரு.. பலர் அவரை ஏமாத்தி பண்ம் பறிப்பாங்க.. (இவரு ரொம்ப நல்லவரு!!! அவ்வ்வ்....)
அப்போ ஒருத்தர் "ஷேர் ஆட்டோன்னா 10 பேர் ஏறலாம். எல்லாரும், கொஞ்சம் கொஞ்சம் பணம் தருவாங்க. கடைசி ஆளும் அந்த அட்டோகாரரும் பணத்தை பங்கு போட்டுக்குவாங்க.."ன்னு சொல்லி கைப்புள்ளைய மொத்து மொத்துன்னு அடி வாங்க வைப்பாரே!
எங்க ஊருல ஆட்டோவே இல்லை.. ஆட்டோவை சினிமாவிலும், வலையுலகிலும் பார்த்திருக்கிறேனே தவிர.. நேரடியாக பார்த்ததும் இல்லை.. ஏறியதும் இல்லை..
ஆட்டோ சீட்டை பார்த்தால் மொத்தமே 3 பேர்தான் ஏறமுடியும் போல் இருந்தாலும்,
எப்படிங்க 10 பேர் ஏர்றீங்க?
அந்த ஷேர் ஆட்டோன்னா என்ன?
அது புரியாமல் அந்த ஜோக்குக்கு என்னால் சிரிக்க கூட முடியவில்லை..
யாராவதுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க.. (அது உங்களோட பதிவாய்.. நீளமாய் போட்டாலும் எனக்கு சந்தோஷம்தான்..) ;-)
43 Comments:
அட ஷேர் - ஆட்டோ தெரியாதா,
இந்த படத்துல இருக்கறத விட கொஞ்சம் பெருசா இருக்கும், கொஞ்சம் நீளமாவும் இருக்கும். சீட்ட கொஞ்சம் பின்னாடி தள்ளிவிட்டா, சீட்லயும் அதுக்கு முன்னாடி இருக்குற ஏரியாவுலயும் 8 பேரு உட்காரலாம். அது எவ்ளோ கஷ்டம்னு தினம் போற எனக்கு தான் தெரியும்.
அப்புடியே டிரைவர் சீட்ல இன்னும் ரெண்டு பேர்.
http://www.piaggio.co.za/images/to
p11.jpg."
ஷேர் ஆட்டோவால பல பிரச்சனை, இல்லேன்னாலும் பிரச்சனை
//இந்த படத்துல இருக்கறத விட கொஞ்சம் பெருசா இருக்கும், கொஞ்சம் நீளமாவும் இருக்கும். சீட்ட கொஞ்சம் பின்னாடி தள்ளிவிட்டா, சீட்லயும் அதுக்கு முன்னாடி இருக்குற ஏரியாவுலயும் 8 பேரு உட்காரலாம். //
நீங்க சொல்றதை கேட்டா ஒரு வேன் போல இருக்கு..
ஆனால், நீங்க கொடுத்த படத்தை பார்த்தா.. இதுல எப்படி 11 பேர் ஏற முடியும்ன்னு தோணுது.. தாங்குமா இது?
இப்போதுதான் இந்த ஷேர் ஆட்டோவை முதன்முதலில் பார்க்கிறேன். ;-)
அட என்னங்க ஷேர் ஆட்டோ தெரியாதா..
இங்க இருக்குல இதவிட கொஞ்சம் பெரிசா மூன்றரை பேர் உக்காரமாதிரி எதித்எதித்தாப்ல 2 சீட் இருக்கும். கொஞ்சம் அஜஸ்ட் பண்ணா 8பேர் மொத்தமா பின்பக்கத்துல உக்காரலாம். அப்புறம் டிரைவர் இருக்குற முன்பகுதில டிரைவரையும் சேர்த்து 4 பேர் இடிச்சுட்டு உக்காரலாம். 3 பேர் பின் பக்கம் வாசலையும் ,ஜன்னலையும் புட்போர்டு போடலாம். மொத்தம் எவ்வளவு வருதுனு நீங்களே கவுண்ட் பண்ணிக்கங்க.
//மொத்தம் எவ்வளவு வருதுனு நீங்களே கவுண்ட் பண்ணிக்கங்க. //
விட்டா மொத்தம் 20 பேர் கூட ஏறலாம் போல இருக்கு???
இத கேக்குறீங்களே... நீங்க கொடுத்திருக்குற படத்துல உள்ள ஆட்டோலையே ஹைதராபாத்ல ஏழு பேர ஏத்திட்டுப் போவான். பின்னால் சீட்ல மூனு பேரு. டிரைவரோட ரெண்டு சைட்லையும் ஒருத்தர். அதுக்கப்புறம் டிரைவர் சீட் பக்கத்துலேயே ஒரு கட்டையை வச்சிருப்பானுங்க. அதுல ஒருத்தர் :))
மை பிரண்ட், அட்டென்டன்ஸ்.. தூக்கம் வருகிறது.. நாளை வந்து படிச்சு பின்னூட்டமிடுறேன்
//ஜி said...
இத கேக்குறீங்களே... //
அடடா.. எல்லாருமே ஆட்டோவில் பயணம் செய்திருகீங்களா?
//தூக்கம் வருகிறது.. நாளை வந்து படிச்சு பின்னூட்டமிடுறேன் //
மெதுவா வந்து பின்னூட்டம் போடுங்கள் தலைவரே.. ;-)
//விட்டா மொத்தம் 20 பேர் கூட ஏறலாம் போல இருக்கு???//
தமிழ்நாட்டுல கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரி ஆளிலாத லெவல்கிராஸிங்க கடக்க முயற்சிபண்ணி ஒரு ஷேர் ஆட்டோ விபத்து ஆனது. அங்க இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியுமா?.
The image in the link given by Mr. Venkatraman is not a share auto. Thats a different version of the normal auto made by Garuda greaves, a diesel based motor. Share auto is difft,
see below
"http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Share_auto.jpg/200px-Share_auto.jpg"
Share auto patri teriyaathu, aanal
"shake" auto teriyum, auto vil ponaaley body ellam shake taan ;)
//தமிழ்நாட்டுல கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரி ஆளிலாத லெவல்கிராஸிங்க கடக்க முயற்சிபண்ணி ஒரு ஷேர் ஆட்டோ விபத்து ஆனது. அங்க இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியுமா?. //
உண்மையாவா?
இதை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்..
எத்தனை பேர் இந்த ஷேர் ஆட்டோவில் பயணித்தார்கள்?
//"http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Share_auto.jpg/200px-Share_auto.jpg" //
அட.. இது மலேசியாவில் உள்ள பள்ளிகூட பேருந்துவை போலவே இருக்கே!!!
இதோ! இதை பாருங்கள்..
http://www.veelzijdigmaleisie.nl/pics/penang-schoolbus.jpg
//c.m.haniff said...
Share auto patri teriyaathu, aanal
"shake" auto teriyum, auto vil ponaaley body ellam shake taan ;)
//
ஹனிஃப்,
இதை பற்றியும் கேள்வி பட்டிருக்கிறேன்.. ;-)
//மதுசூதனன் said...
ஷேர் ஆட்டோ தெரியாம என்ன புள்ளப்பா நீயி? //
எங்க ஊரில் ஆட்டோவே இல்லை.. அப்புறம் எப்படி ஷேர் ஆட்டோவை பார்க்கிறது, மதுசூனன்? :-)
மை பிரண்ட், தங்களுக்காக விளக்குகிறேன்..
ஷேர் ஆட்டோ என்பது வேனை விட சிறியதாகவும் ஆட்டோவை விட சற்றுப் பெரியதாகவும் இருக்கும். கிட்ட தட்ட ஒரு ஆறு பேர் அமர்ந்து செல்லலாம்.. ஆனால் ஓட்டுபவரின் இரண்டு பக்கமும் ஒரு ஆள் ஏற்றி உள்ளேயும் ஒரு ஏழு பேரையும் இப்போது இருக்கும் ஆட்டோக்கள் சுமந்து செல்கின்றன.. பார்க்கையில் மூட்டையில் அமுக்கிய புளிகள் போல மனிதர்கள் தெரிவார்கள். பின்னால் சாதாரண ஆட்டோவில் இருப்பதை விட சற்று அகண்ட இருக்கைகள் இருக்கும். அதற்கு முன்னடி, டிரைவரின் பின்னால் எக்ஸ்ட்ராவாக சில ஆட்டோக்களில் சீட் இருக்கும். சென்னையை ஒரு முறை வலம் வந்தால் கிட்டதட்ட ஒரு ஐநூரு ஷேர் ஆட்டோக்களை பார்க்கலாம்.. காலையில் அலுவலகத்துக்கு அவசரமாய் செல்ல இது போன்ற ஷேர் ஆட்டோக்கள் தான் உதவுகின்றன. மக்களின் தவிர்க்க முடியாத வாகனமாய் இது மாறி வருகிறது. ஆட்டோவில் ஒரு இடத்திற்கு செல்ல முப்பது ரூபாய் தரவேண்டும் என்றால் இதில் மற்றவரோடு பயணிப்பதால் ஐந்து ரூபாயே போதும் என்பது இதன் மிகப் பெரும் பலம்
சமீபத்தில் நடந்த விபத்தில், அந்த ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 16. அனைவரும் பள்ளிச் சிறார்கள் என்று நினைக்கிறேன்
ஏதோ புரிந்த மாதிரி இருக்கிறதா, மை பிரண்ட்
மை பிரண்ட், தங்களுக்காக விளக்குகிறேன்..
ஷேர் ஆட்டோ என்பது வேனை விட சிறியதாகவும் ஆட்டோவை விட சற்றுப் பெரியதாகவும் இருக்கும். கிட்ட தட்ட ஒரு ஆறு பேர் அமர்ந்து செல்லலாம்.. ஆனால் ஓட்டுபவரின் இரண்டு பக்கமும் ஒரு ஆள் ஏற்றி உள்ளேயும் ஒரு ஏழு பேரையும் இப்போது இருக்கும் ஆட்டோக்கள் சுமந்து செல்கின்றன.. பார்க்கையில் மூட்டையில் அமுக்கிய புளிகள் போல மனிதர்கள் தெரிவார்கள். பின்னால் சாதாரண ஆட்டோவில் இருப்பதை விட சற்று அகண்ட இருக்கைகள் இருக்கும். அதற்கு முன்னடி, டிரைவரின் பின்னால் எக்ஸ்ட்ராவாக சில ஆட்டோக்களில் சீட் இருக்கும். சென்னையை ஒரு முறை வலம் வந்தால் கிட்டதட்ட ஒரு ஐநூரு ஷேர் ஆட்டோக்களை பார்க்கலாம்.. காலையில் அலுவலகத்துக்கு அவசரமாய் செல்ல இது போன்ற ஷேர் ஆட்டோக்கள் தான் உதவுகின்றன. மக்களின் தவிர்க்க முடியாத வாகனமாய் இது மாறி வருகிறது. ஆட்டோவில் ஒரு இடத்திற்கு செல்ல முப்பது ரூபாய் தரவேண்டும் என்றால் இதில் மற்றவரோடு பயணிப்பதால் ஐந்து ரூபாயே போதும் என்பது இதன் மிகப் பெரும் பலம்
சமீபத்தில் நடந்த விபத்தில், அந்த ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 16. அனைவரும் பள்ளிச் சிறார்கள் என்று நினைக்கிறேன்
ஏதோ புரிந்த மாதிரி இருக்கிறதா, மை பிரண்ட்
தலைவரே,
விளக்கமாக சொன்னீர்கள். இப்போது விவரமாக புரிகிறது. கட்டணத்தை பகிர்ந்து கொள்வதனால்தான் இதுக்கு ஷேர் ஆட்டோ என்ற பெயரோ!
யம்மாடியோவ்!!! 16 பேரா? இங்கே (மலேசியாவில்) ஆட்களை ஏற்றும் வேன்களில் மொத்தமே 14 பேரை மட்டுமே ஏற்றப்படும்..
நன்றி தலைவரே..
எனக்கொரு கேள்வி..
நீங்கள் சொல்வதைக் கேட்டால்..
அஞ்சலி நாடகத்தில் மல்லிகாவின் முறைப்பையன் ஓட்டும் அந்த வாகனம் நீங்கள் சொல்வதைப் போன்றுதான் இருந்தது. அதுதான் ஷேர் ஆட்டோவா?
/ஷேர் ஆட்டோ தெரியாம என்ன புள்ளப்பா நீயி? //
இந்தப் பின்னூட்டம் நானிடவில்லை. என் பெய்ரில் உள்ள போலியிட்டது. எனவே இதை அழுத்துவிடுமாறு வேண்டுகிறேன் நண்பரே.
// இந்தப் பின்னூட்டம் நானிடவில்லை. என் பெய்ரில் உள்ள போலியிட்டது. எனவே இதை அழுத்துவிடுமாறு வேண்டுகிறேன் நண்பரே. //
அழித்துவிட்டேன் நண்பரே!
//
ஆட்டோவை சினிமாவிலும், வலையுலகிலும் பார்த்திருக்கிறேனே தவிர.. நேரடியாக பார்த்ததும் இல்லை.. ஏறியதும் இல்லை..
//
நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப் பட்டவர் :)
தலைவர் தெளிவா சொல்லீட்டாரு. நான் Hyderabadல இருந்தப்போ போயிற்கேன். நார்மல் ஆட்டோவ ஷேர் ஆட்டோவா மாத்தி அதுல ஜி சொன்ன மாதிரி ட்ரைவர் சீட் பக்கத்துல ஒரு கட்டைய போட்டு ஒரு பத்து பேற உள்ள உக்கார வச்சிடுவாங்க..
நூடுல்ஸா தான் வெளிய வரனும் :(
//நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப் பட்டவர் :) //
ஹா ஹா.. அவ்வளவு நல்ல விஷயமா இது?
//நூடுல்ஸா தான் வெளிய வரனும் :( //
இதெல்லாம் நான் ஒரு நாள் அனுபவிக்கனுமே!!
இதுக்காகவே இந்தியா வரணும் போல இருக்கு.. ;-)
//இதுக்காகவே இந்தியா வரணும் போல இருக்கு.. /
கட்டாயம் இந்தியா வரணும் மை பிரண்ட்..
வரவேற்க தயாராக இருக்கிறோம்.. ஆனால் என்ன நாங்களும் அயல் நாட்டில்.. அங்க நாங்க வந்த பிறகு வாங்களேன்
http://chennapattinam.blogspot.com/2006/10/blog-post_27.html
இங்க பாருங்க மை ஃப்ரென்ட்!
My friend
நமக்கும் இது பற்றித் தெரியாதுங்க!
கேட்டவுடன் போலியின் பின்னூட்டத்தை அழித்தமைக்கு நன்றி. :)
நிறைய பேர் ஷேர் ஆட்டோ பத்தி உண்மையான தகவல் சொல்லிட்டதால...கவுண்டமனி என்ன சொல்லி இருப்பாருனு யோசிச்சேன்...
அடே ஆரன் தலையா...எல்லா ஆட்டோலயும் உக்கார பெஞ்சுதான் இருக்கும் அதுக்கு பதிலா சேர் போட்டு இருந்தா அதுதான் சேர் ஆட்டோ :-)
//இதுக்காகவே இந்தியா வரணும் போல இருக்கு//
எப்போ வறீங்கனு மட்டும் சொல்லுங்க...கட் அவுட் வெச்சு..மேல தாளத்தோட வரவேற்புக்கு ஏற்பாடு பண்ணிடலாம் நம்ம அம்பி செலவுல
:-)
// வரவேற்க தயாராக இருக்கிறோம்.. ஆனால் என்ன நாங்களும் அயல் நாட்டில்.. அங்க நாங்க வந்த பிறகு வாங்களேன் //
நல்ல ஐடியாதான்.. நானும் கண்டிப்பாக இப்போதே வர முடியாதுதான்.. இன்னும் 2-3 வருடங்களுக்கு பிறௌதான்.. செலவுக்கு பணம் சேர்க்கனும் அல்லவா!! ;-)
we the people,
நீங்கள் கொடுத்த இந்த சுட்டி ரொம்பவே உபயோகமா இருந்துச்சி.
புள்ளி விவரங்களோட, ஒவ்வொன்றையும் விளாவாறியா எழுதியிருக்கீர்கள். ;-) நன்றி..
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
My friend
நமக்கும் இது பற்றித் தெரியாதுங்க! //
அதான் நமக்காகவே நம் நண்பர்கள் இந்த ஆட்டோக்களை பற்றி நிறைய எழுதிருக்கார்களே!! நாம் இதை படித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க யோகன். :-)
//மதுசூதனன் said...
கேட்டவுடன் போலியின் பின்னூட்டத்தை அழித்தமைக்கு நன்றி. :) //
:-)
//கவுண்டமனி என்ன சொல்லி இருப்பாருனு யோசிச்சேன்...//
நாட்டாமை,
அப்படியே கைப்புள்ள ஸ்டைலிலும் சொல்லிடுங்க.. ;-)
//எப்போ வறீங்கனு மட்டும் சொல்லுங்க...கட் அவுட் வெச்சு..மேல தாளத்தோட வரவேற்புக்கு ஏற்பாடு பண்ணிடலாம் நம்ம அம்பி செலவுல
:-) //
ஆஹா...
நான் என்ன அரசியல்வாதியா?
சரி ஓகே.. அரசியவாதிகளைப்போல் சொன்னதை அப்படியே மறந்துவிட கூடாது.. ஓகே.. நான் இந்தியா வரும்போது இதெல்லம் தடப் புடலா செய்துடனும்.. சரியா? ஹீ ஹீ ஹீ.
\\காலையில் அலுவலகத்துக்கு அவசரமாய் செல்ல இது போன்ற ஷேர் ஆட்டோக்கள் தான் உதவுகின்றன. மக்களின் தவிர்க்க முடியாத வாகனமாய் இது மாறி வருகிறது. ஆட்டோவில் ஒரு இடத்திற்கு செல்ல முப்பது ரூபாய் தரவேண்டும் என்றால் இதில் மற்றவரோடு பயணிப்பதால் ஐந்து ரூபாயே போதும் என்பது இதன் மிகப் பெரும் பலம்\\
"தல" நல்லா விளக்கிருக்கிங்க...
மக்கள் தொகை மிகுந்த நகரங்களில் இந்த ஆட்டோகள் நிறைய இருக்கின்றது. இந்த ஷேர் ஆட்டோகள் தான் பெரிதும் உதவுகின்றன. பஸ்கள் இல்லேன்னாலும், இரவு நேரங்களிலும் இதில் தான் பயணம் செய்திருக்கிறேன்.
//"தல" நல்லா விளக்கிருக்கிங்க...//
நம்ம தலைவர்தான் எல்லா கேள்விகளுக்கும் டக் டக்கன்னு பதில் சொல்பவராச்சே! ;-)
என் தோழி,
//
ஆட்டோவை சினிமாவிலும், வலையுலகிலும் பார்த்திருக்கிறேனே தவிர.. நேரடியாக பார்த்ததும் இல்லை.. ஏறியதும் இல்லை..
//
தப்பிச்சீங்க, குடுத்து வச்சவங்க நீங்க :-)
//தப்பிச்சீங்க, குடுத்து வச்சவங்க நீங்க :-) //
:-P
Post a Comment