பந்தே ஸ்ரே (Banteay Srei) முதலில் அழைக்கப்பட்டது த்ரீபுவணமஹேஸ்வரா. இதை “பெண்களின் கோட்டை” அல்லது “அழகிய கோட்டை” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் சிற்பங்கள் மிகவும் மென்மையானதக இருப்பதால் இது ஒரு பெண்ணின் கைகளால்தான் செதுக்கப்படமுடியும் என்பது யூகம். கோவிலின் சிறபங்கள் அனைத்தும் இந்து மத கதைகளின் காட்சிகளால் சித்தரிக்கின்றன.
967-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட Banteay Srei ராஜாவுக்காக கட்டப்படாத ஒரே பெரிய கோவில் என்ற பெயரும் உண்டு. அரசர் ராஜேன்ரவர்மனின் மந்திரி யஜ்னவஹாராவால் கட்டப்பட்டது. சிவனுக்காக கட்டப்பட்ட இந்த கோவிலின் வடக்கு பகுதியில் விஷ்ணுவுக்கான கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் கட்டுமானம் தொன்மையான மற்றும் புதுமையான ஒரு கலவையாக உள்ளது. பெரும்பாலும் இது சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டுள்ளது. உறை சுவர்களில் மட்டும் செங்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிவப்பு நிற மணற்கல் இந்த கோவிலுக்கு “பிங்க்” கோவில் என்ற பெயரும் கொடுக்கிறது.
Banteay Srei பார்க்க சிறந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளை. இதன் அமைப்பில் நிழல் விழ வாய்ப்புகள் குறைவு என்பதால், சூரியன் வெப்பத்தில் ஒதுங்க இடம் குறைவு. புகைப்படங்கள் அழகாக இருக்கும். மறக்காமல் உங்கள் கேமராவை எடுத்து செல்லுங்கள்.
இங்கேயும் நீங்கள் நுழைவு சீட்டு வாங்க தேவையில்லை. அங்கோர் நுழைவு சீட்டையே பயன்படுத்தலாம். ஒரு நாள் நுழைவு $20. மூன்று நாள் நுழைவு $40. நீங்கள் இந்த சீட்டை அனைத்து சியம் ரேப் கோவில்களிலும் பயன்படுத்தலாம்.
0 Comments:
Post a Comment