Sunday, November 25, 2007

உன்னை சரணடைந்தேன்..

சேரனின் படத்தில் எப்போதும் ஏதாவது ஒரு பாடல் எப்போதும் முனுமுனுக்க வைக்கிற மாதிரி அமைந்திடும்.. இதோ தவமாய் தவமிருந்து படத்திலிருந்து இந்த ஒரு பாடல்..

பிரசன்னாவின் குரல் இனிமையானது. காதல் வந்து (சரவணா), வெயிலோடு விளையாடி(வெயில்), ராதா காதல் வராதா (நான் அவன் இல்லை) என்ற பாடல்களை கேட்டவர்களுக்கு இவரின் குரலை கண்டிப்பாக பிடித்திருக்கும். கல்யாணி மட்டும் சும்மாவா? காலை அரும்பி (கனா கண்டேன்), சும்ம கிடந்த (தம்பி), கோழி குண்டு (எம்டன் மகன்), ஆசை கனவே (இம்சை அரசன்) , கடவுள் தந்த (மாயாவி) போன்ற பாடல்களையே அவர் குரலால் அழகு படுத்தியவர்.





பாடல்: உன்னை சரணடைந்தேன்
பாடகர்: பிரசன்னா, கல்யாணி
இசை: சபேஷ் - முரளி
படம்: தவமாய் தவமிருந்து


பெ: உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்..
என்னில் உறைந்திருந்தேன்..
உன்னுள்ளே நான் கரைந்தேன்
கண்கள் இமையை விட்டு என்னையே வந்து நிற்க..
ஸ்வாசம் காற்றை விட்டு உன்னையே தேடி செல்ல..
தாயாக மாறிப்போனாயே
வேறாக தாங்கி நின்றாயே
அயராது ஓடி வந்து
இசையாக நீ இருக்க
கண்ணிருடன் மாயத்திலே
காலமெல்லாம் உப்பைப்போல
உந்தனுள்ளே நானிருப்பேனே..
(உன்னை..)

ஆ: தினந்தோறும் சாமிக்கிட்ட
தீராத ஆயுள் கேட்பேன்
நீ பார்க்கும் பார்வைப்போல
பூவெல்லாம் பூக்க கேட்பேன்
நீ நடக்கும் நிலத்தினிலும்
நிம்மதி வளர்த்திடுவேன்
நீ அருந்தும் நீரினிலும்
தாய்மையை தந்திடுவேன்
உன் உலகத்தின் மீது நான் மழையாகுவேன்
உன் விருப்பங்கள் மீது நான் நதியாகுவேன்

ஆ: உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்..
என்னில் உறைந்திருந்தேன்..
உன்னுள்ளே நான் கரைந்தேன்
காதல் என்ற சொல்லில் காதலே இல்லையென்பேன்
வாழும் வாழ்க்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்
சொந்தங்கள் யாவும் ஆனாயே
சோகங்கள் ஆற்றி விட்டாயே
அடைக்காக்கும் தாய்க்குருவி
சிறகாகி நீ அணைக்க
முட்டைக்கூட்டில் ஓடுடைத்து
முட்டி மோதும் குஞ்சைப்போல
தினமும் புதிதாய் நானும் பிறப்பேனே..

இதே இசை வேறொரு வரியில்...



25 Comments:

said...

மீ த பஸ்ட்டு...

said...

ஆமாங்க பாட்டு நல்லா இருக்கும்.

said...

அக்கா பாட்டு நல்லா தான் இருக்கு. தெரிஞ்சிருந்தா நான் முந்திருப்பேன்.

said...

இதே படத்தில் வரும் "ஓரே ஒரு ஊருக்குள்ளே" பாட்டு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.... :)

said...

நல்ல இசையுடன் கூடிய பாடல்.
கேட்டேன் ரசிதத்தேன்......நன்றி...

said...

en fav song too :)) enakku indha paata kettu videola irukkara songa padathula paathappo dint like it that much.. indha songku video illadhadhu varuthamae :(

said...

நல்ல பாடல்.

இதை அந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒரு கிராமிய பாடல்... பாடியது யாருனு தெரியல..

பாத்துட்டு வந்து சொல்லுறேன்...

said...

பாடகர் - ஜெய மூர்த்தி யாம்

said...

excuse me may i come inside??

said...

இதமான பாடல்... படிக்கும் வரிகளோடு கேற்க்கும் போது.. மனம் கொள்ளை போகிறது ஃமைபிரண்டு..
இசையும் இனிமையாக இருக்கில்ல...

said...

அயராது ஓடி வந்து
இசையாக நீ இருக்க

அயராது ஓடும் நெஞ்சில்
இசையாக நீ இருக்க

said...

@ சிவா..

மாம்ஸ் என்னாது இது? யாரு வீட்டுக்குபோனாலும்..இம்புட்டு.. பயபக்தியா கேக்கரீங்களே..
நாங்கள்லாம் உள்ள இருக்கோமில்ல.. சொம்மா தகிறியமா தாவி உள்ள குதிங்க...
[ரொம்ப பிரச்சனையாயிட்டாக்கா.. மாட்டிவிட ஆள் கொறையுதில்ல..ஹிஹி..:))) ]

said...

எனக்கும் இது ரொம்ப பிடிச்ச பாட்டு!!
பதிவிட்டதற்கு நன்றி!! :-)

said...

// CVR said...

எனக்கும் இது ரொம்ப பிடிச்ச பாட்டு!!
பதிவிட்டதற்கு நன்றி!! :-)//

தோடா... மாமே.. நாமெல்லாம் இப்பிடியே ஏத்தி விட்டுத்தான் ,ஒழுங்கா.. மொக்க போட்டுக்கினிருந்த ஃமைபிரண்டு ,இப்பெல்லாம் உருப்படியான பதிவராயிட்டாய்ங்க.. அப்பறம் போரடிக்கும்போது கும்மியடிக்க எடம் இல்லாம போயிடுச்சுன்னாக்கா.. உங்க வீட்டுக்கு வந்திருவோம்..ஜாக்கிரதை..ஹிஹி...

said...

//வெயிலோடு விளையாடி(வெயில்), //

இந்த பாடல் பாடியது திப்பு அல்லவா? ஒழுங்கா தப்பு! தப்பு!னு கன்னத்துல(உன் கன்னத்துல தான்) போட்டுக்கோ! :))

*ahem, பாட்டு எல்லாம் நல்லா தான் இருக்கு, இப்ப தீடிர்னு இங்கு பதிவிட காரணம்? (சித்து தான்!னு அல்வா குடுக்க கூடாது, எமக்கு குடுத்து தான் பழக்கம், வாங்கறத்துக்கு சிவா, சீவிஆர், ரசிகன்னு நிறைய பேர் இருக்காக) :))

said...

ஹிஹி, ஜொள்ள மறந்திட்டேன், பத்மப்ரியா படத்தை போட்டதுக்கு ரெம்ப டேங்கிஸ் :p

said...

// ambi said...

வாங்கறத்துக்கு சிவா, சீவிஆர், ரசிகன்னு நிறைய பேர் இருக்காக) :))//

ஹலோ.. அம்பி.. நாங்கள்லாம் அப்பிடியே.. இந்த கையில ஃபிரியா வாங்கி அந்த கையில பாதி வெலைக்கி வித்துபுடுவோமுன்னு தெரியாதா?..ஹிஹி...

said...

// ambi said...

// பத்மப்ரியா படத்தை போட்டதுக்கு ரெம்ப டேங்கிஸ் :p//
பாத்துங்க.. ஏற்க்கனவே மழைக்காலம்,ரொம்ப வழியுது..வழுக்கப்போவுது..:))))))))))))

Anonymous said...

Avan avan, urumaikaga rottula adivankuran, neenga inga sugama pattu kellunga.

Ungalla polla mealthattu makkal irukurathunala - mattra malaysian indian kasta paduran.

rottula adivangalanallum, oru chinnatha atha pathi pathivu pottu irukalam - oru vella thanmanam thaduthuchooo...

said...

Konjam late thaan! nalla paadal. ithe padathula

naane tholaintha kadhai ... appadinu onnu irukku. athuvum supera irukum kelunga!

said...

அருமையான பதிவு, அருமையான பாடல்.

said...

@ambi :
//வெயிலோடு விளையாடி(வெயில்), //

இந்த பாடல் பாடியது திப்பு அல்லவா? ஒழுங்கா தப்பு! தப்பு!னு கன்னத்துல(உன் கன்னத்துல தான்) போட்டுக்கோ! :))

MyFriend is rite, Veyilodu is a chorus song sung by Prasanna, Tippu ,kailash Kher and Jassie Gift.
So, 'thappu thappu'nu neenga kanathula pottukonga papom.!

said...

adhenna song posta irukku blogsville la ?

anga g3 vijay tv title song podraanga, neenga movie song podreenga.
enna nadakudhu inga.

said...

எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இது, மை பிரண்ட்..

பாடல் வரிகளை இது போல எழுதி வைத்துகொள்ள வேண்டுமென்று நினைத்திருந்தேன்.. நீங்கள் அதை செய்தி எனக்கு உதவி பண்ணிட்டீங்க

said...

ஆமா, உண்மையிலே மலேசியாவில் என்ன நடக்கிறது தமிழர்களுக்கு எதிராக.. கொஞ்சம் அதை பற்றி சொல்லக் கூடாதா.. நெஞ்சம் பதைபதைக்கிறது வரும் செய்திகளை கேட்பதால்