Wednesday, November 07, 2007

குமரனுடன் சில நிமிடங்கள்...

"அக்கா.. தொந்தரவுக்கு மன்னிக்கவும். எனக்கு ஒரு இரண்டு நிமிடம் கிடைக்குமா?"

ஒரு நிமிடம் என்னை திடுக்கிட வைத்த வார்த்தைகள்..

போன வாரம் இதே நாளில் ஒரு புத்தக கடையில் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தபோது அந்த குரல் என் பக்கத்தில் ஒளித்தது.

இதில் என்ன அப்படி ஆச்சர்யம்.. திகைப்புன்னு நீங்க கேட்கலாம் (கேட்காட்டினாலும் நாங்க சொல்லுவோம்ல.. ) வேலைக்காக நான் தினமும் மலேசியாவின் தலைநகரம் (சுந்தர் சி நடிச்ச படமில்லைங்க) குவாலா லும்புருக்கு பயணம் செய்வேன். எனது பிரயாணத்தில் தினமும் பல நூறு பேரை சந்திக்கிறேன். அதில் பலர் இந்தியர்கள் அல்லது மலேசிய தமிழர்கள் ஆவர்.

இதில் பாதி பேருக்கு தமிழே தெரியாது. மீதி உள்ளவர்களுக்கு தமிழ் தெரிந்தாலும், ஆங்கிலத்திலேயே பேசுவாங்க. எல்லாம் ஸ்டைலும் வெட்கமும்தான் காரணம். நம் தாய் மொழியில் பேச எதற்க்கு வெட்கம் என்று நானே சிலரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன்.

நானே தமிழில் புலவி என்றெல்லாம் சொல்ல வரலைங்க. எனக்கு இருக்கும் தமிழ் அறிவும் கொஞ்சம் கொஞ்சம்தான். நான் தமிழ் பேசும்போதே என்னையும் அறியாமல் மலாயும் ஆங்கிலமும் கலந்து வரும். முடிந்தவரை அப்படி பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

சரி, சொல்ல வந்த விஷயம் வேற.. இப்போ வேற எதையோ பேசிட்டு இருக்கேன் பாருங்க..

கே.எல் பட்டணத்தில் இப்படி தமிழில் பேசி நான் கேட்பது ரொம்ப அபூர்வம்தான். அதுவும் சுத்த தமிழில் அழகாய் ஒரு சின்ன பையனின் குரலில் கேட்டபோது ஒரு வித பூரிப்பும் மகிழ்ச்சியும் கூடி வந்தது. அந்த சந்தோஷம் மிக விரைவிலேயே அழிந்தது.

அந்த குரலை கேட்டு நான் திரும்பியபோது ஒரு 12-13 வயது தமிழ்ப்பையன் கையில் ஒரு சின்ன மூட்டையுடன் என்னைப்பார்த்து நின்றிருந்தான். அரைக்கால் சிலுவாருடன் ஆங்காங்கே கிழிந்த இடத்தில் ஒட்டுப்பட்ட சட்டை அணிந்திருந்தான். பழைய உடை என்றாலும் அது சுத்தமாக இருப்பதை பார்த்ததுமே அவன் மேல் ஒரு மரியாதை வந்தது. போட்டிருப்பது புதியதா பழையதா என்பதை பார்ப்பதைவிட அதை எப்படி பாதுக்காக்கிறார்கள் என்பதுதானே சிறந்த் விஷயம்?

"என்ன தம்பி?" நான் வாயை திறந்தேன். வார்த்தையிலேயே பரிவும் சேர்ந்து தம்பி என்ற பாசமும் ஒட்டிக்கொண்டது.

"அக்கா, நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்க்கா. வீட்டுல ரொம்ப கஷ்டம். நான் படிக்கணும். அதுக்கு பணமில்லை" என்றூ சொல்லிக்கொண்டே தன் மூட்டையில் கை விட்டான்..

இவன் பிச்சை எடுக்கும் எண்ணம் கொண்டவன் இல்லை என்பது தெளிவாக புரிந்தது எனக்கு. மனதில் தன்னம்பிக்கையும் நிறைய இருப்பதும் ஓரளவு அவன் முகத்தில் என்னால் கண்டறிய முடிந்தது. அந்த மூட்டையிலிருந்து ஒரு பொருளை எடுத்து காட்டினான்.

"அக்கா, இது நானே செதுக்கியது. Candle Stand. பாருங்க. பிடிச்சிருந்தா வாங்குங்க. RM10தான். என் படிப்புக்கு உதவியா இருக்கும்" என என் கிட்டே நீட்டினான்.

அதை நான் வாங்கிப்பார்த்தேன். சொந்தமாக செய்த வேலைப்பாடு தெரிந்தது. அந்த பையன் உண்மையிலேயே டேலண்டட். ரொம்ப அழகாய் செதுக்கப்படிருந்தது. ஆனால், அது எனக்கு பயன்படாது என்று தோன்றியது.

"தம்பி, எனக்கிது தேவைப்படாதுப்பா. பரவாயில்லை.. இந்த 10 வெள்ளியை வச்சுக்கோ. அக்காவுடைய கிஃப்ட்டா இருக்கட்டும்."

"வேணாம்க்கா." என்று கொஞ்சம் தயங்கினான்.

நான் வற்ப்புறுத்தி அவனின் சட்டை பாக்கேட்டில் திணித்தேன்.

அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் குரல் கேட்டது. அவருக்கு ஒரு 30-35 வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன். அந்த கடையில புத்தகம் வாங்க வந்தவர் போல. நான் அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்ததும் அவர்,

"இந்த மாதிரி பையனுங்களையெல்லாம் நம்பாதீங்கம்மா.. எங்கே இருந்து திருடிட்டு வந்தானோ தெரியலை. 10 வெள்ளின்னு சொல்றான்.. நீங்க வேற சும்மாவே காசு கொடுக்குறீங்க. அப்புறம் தம், தண்ணீன்னு குடிச்சு கூத்தடிக்காமல் என்ன பண்ணுவாங்க??"

அவரின் அந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் ஆத்திரம் கொடுத்தது. சிறுவனின் முகம் சுறுங்கியிருந்தது. அந்த பையனின் சந்தோஷத்தை திரும்ப கொண்டு வருவதுக்கும், இவன் அப்படிப்பட்ட சிறுவன் இல்லை என்று அந்த பெரியவரிடம் உணர்த்துவதுக்கும் திரும்ப அவனிடம் பேச்சு கொடுத்தேன்.

"தம்பி உன் பேர் என்னப்பா? என்ன படிக்கிறே?"

"அக்கா, என் பேரு குமரன். ஆறாம் வகுப்பு படிக்கிறேன்."

"படிச்சு பெரிய ஆள் ஆனதும் என்னவா ஆகப்போற?"

"நான் இஞ்சினியராகணும்ங்கிறது அப்பாவோட ஆசை. அவரோட ஆசை நிறைவேற்றனும்ங்கிறது என்னுடைய லட்சியம்." அவனுடைய கண்ணில் சாதிக்கணும்ங்கிற வெறி தெரிந்தது.

"வீட்டுல எத்தனை பேரு? அம்ம அப்பா என்ன பண்றாங்க?"

"எனக்கு ஒரே ஒரு தங்கச்சி. இப்போதான் 7 வயசு. அப்பா இருக்கிற வரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டாரு. அவர் இறந்துட்டாரு. அம்மாதான் ஆங்க்கங்கே வேலை செய்து கொஞ்சம் காசு சேர்த்து என்னை படிக்க வச்சாங்க. இப்போ அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. வேலைக்கு போய் 1 வாரம் ஆச்சு. அதான் இப்போ நானும் வேலைக்கு போறேன்க்கா" அந்த சிறூவன் சொல்லும்போதே கண்ணில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

அதற்க்கு மேல் என்னாலையும் பேச முடியவில்லை.

"அக்கா. இன்னைக்கு நிறைய பேர் இந்த ஏரியாவுக்கு வந்திருக்காங்க. எல்லாரும் தீபாவளி ஷாப்பிங் வந்திருக்காங்க. அவங்க கிட்டேயும் நான் என் பொருளை விற்கணும்க்கா. நான் கிளம்புரேண்க்கா. ரொம்ப நன்றி" என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய மூட்டையை கையில் ஏந்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அவன் நடந்து போவதையும், அங்கு ஷாப்பிங் செய்துக்கொண்டிருக்கும் சிலரிடம் பேசுவதையும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். சிலர் அவனிடம் பரிவுடன் பேசுவதும் சிலர் அவனை விரட்டுவதுமாய் இருந்தாலும் மான்ம் தளராமல் அடுத்தவர்களை சந்தித்தான் குமரன்.

"அண்ணே, அவன் சாதிப்பான் ஒரு நாள்.." என்று என் பக்கத்தில் இருந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு புத்த்கங்கள் வாங்கிவிட்டு ரயில் நிலையத்தை நோக்கி நடந்தேன்.

வழியில் ஒரு அம்மா ஓரத்தில் உட்கார்ந்து இருந்தாங்க. கையில் குமரன் காட்டிய அந்த மெழுகுவர்த்தி சிலை வத்திருந்தார். உடம்பு சரியில்லாமல் இருப்பது அவர் முகம் காட்டிக்கொடுத்தது. நான் என் நடையை தொடர்ந்தேன். சிறிது தூரம் சென்ற பிறகு, திடீரென்று திரும்பி பார்த்தேன். குமரன் அந்த அம்மாவை எழுந்திரிக்க உதவி செய்து ரெண்டு பேரும் ஒன்றாய் நடந்து போனார்கள். அவர்தான் குமரன் சொல்லிய அவர் நோய்வாய்ப்பட்ட அம்மாவாக இருக்குமோ என்று தோணியது.

திரும்பி அந்த சாலை முழுவதும் பார்த்தேன். பெரியவர்களிலிருந்து சிறியவர்கள் வரை குதூகலமாக சந்தோஷத்துடன் ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்தார்கள். நாமெல்லாம் சந்தோஷமாய் புத்தாடையுடன், நல்ல உணவுடன் சொந்தபந்தங்களுடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடபோகிறோம். ஆனால், இப்படியும் சிலர் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனரே! அவர்களுக்கு இந்த மாதிரி தீபாவளி, பொங்கல் என்ற விழாக்கள் எப்படி இருக்குமோ! atleast ஒரு வேளை உணவாவது வயிறு நிறைய மனசு நிறைய சாப்பிடும்படி அமையுமா?

நண்பர்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த
தீபாளி ல்வாழ்த்துக்ள்.....

வீண் விரயம் செய்வதாய் இருந்தால் அதை இவர்களுக்காக செலவழிக்கலாமே?

67 Comments:

Baby Pavan said...

நண்பர்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....

வீண் விரயம் செய்வதாய் இருந்தால் அதை இவர்களுக்காக செலவழிக்கலாமே?

ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்.....

Baby Pavan said...

சூப்பர் அக்கா, நானும் உங்க மாதிரி தான்.... பாருங்க www.focpune.blogspot.com , I am also a volunteer.

கோபிநாத் said...

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ;)

கோபிநாத் said...

அந்த சிறுவனோட வலியை உணர்ந்து எழுதியிருக்க...பாராட்டுக்கள் :)

இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவு தேவைதான்.

\\அதற்க்கு மேல் என்னாலையும் பேச முடியவில்லை.\\

பதிவை படிக்கும் அனைவருக்கும் இதே நிலை தான் வரும்!.

ஜி said...

ரொம்ப நல்ல கருத்தும்மா... எல்லாருமே இவ்வளவுதானேன்னு செலவு பண்றத கொஞ்சமா கொறச்சி அதுல இருந்து கொடுத்தாலே எக்கச்சக்க பேர் நல்லா வாழ்வாங்க...

குமரனுக்கும், அனைத்து மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்....

துளசி கோபால் said...

சொன்னது ரொம்பச் சரி.

பண்டிகைன்னு மட்டுமில்லை, அப்பப்ப மனசுலெ தோணும்போது உடனே உதவி செஞ்சுரணும்.

அப்புறமுன்னு நினைக்கக்கூடாது.

வித்யா கலைவாணி said...

நல்ல பதிவுக்கா. நிறைய வளம் இருக்கிற உங்க நாட்ல இது மாதிரி பார்க்க கஷ்டமா தான் இருக்கு. மாதம் 190$ க்கு குறைவா சம்பாதிக்கிறவங்க மலேய மக்கள் 8.3 சதமும், இந்திய மக்கள் 2.9 சதமும், சீனர்கள் 0.6 இருக்காங்களாம். அரசும் பல உதவிகளைச் செய்தாம். ஆனா மக்களும் முயற்சி செய்யனும்ல. அப்புறம் 'எங்க மக்கள் முட்டாள்களோ, பலவீனர்களோ இல்லை'னு பிரதமர் சொல்ல வேண்டி வருது.
"
"
"
" சரி அதை விடுங்க. இந்த நல்ல நேரத்தில எல்லாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஜே கே | J K said...

நல்ல பதிவு.

வலியை உணர்ந்து எழுதியுள்ளீர்கள்.

இது போல் இன்னும் எத்தனையோ சிறுவர்கள். அதே சமயம் அந்த பெரியவர் சொன்னது போலும் எத்தனையோ பேர்.

CVR said...

///பண்டிகைன்னு மட்டுமில்லை, அப்பப்ப மனசுலெ தோணும்போது உடனே உதவி செஞ்சுரணும்./////
BINGO!!!!

Good post!! :-)

cheena (சீனா) said...

சில சமயங்களில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். உடனே செய்துவிட வேண்டும். சில காரணங்களினால் தள்ளிப் போட வேண்டி வந்தால், என்னுடைய அனுபவத்தில் அது நடை பெறாது என அடித்துச் சொல்வேன். உதவி கேடு வருபவர்களுக்கு உதவி செய்வது என் முடிவு எடுப்பது ( தவறான முடிவாக இருந்தாலும்) அந்தந்த சூழ்நிலைகளைப் பொறுத்தது. அதிகம் ஆராயக் கூடாது. அனுபவத்தைக் கொண்டு தகுதியை தீர்மானிக்க வேண்டும்.

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

cheena (சீனா) said...

சில சமயங்களில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். உடனே செய்துவிட வேண்டும். சில காரணங்களினால் தள்ளிப் போட வேண்டி வந்தால், என்னுடைய அனுபவத்தில் அது நடை பெறாது என அடித்துச் சொல்வேன். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வது என் முடிவு எடுப்பது ( தவறான முடிவாக இருந்தாலும்) அந்தந்த சூழ்நிலைகளைப் பொறுத்தது. அதிகம் ஆராயக் கூடாது. அனுபவத்தைக் கொண்டு தகுதியை தீர்மானிக்க வேண்டும்.

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

வெட்டிப்பயல் said...

நல்ல பதிவு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மூன்று சுடிதார் எடுக்கும் அளவுக்கு ஒரு சுடிதார் ப்ராண்டட்க்ம்பெனியோடது..
மூன்று சட்டை எடுக்கும் அளவுக்கு ஒரு ப்ராண்டட் சர்ட் என்று எடுத்து விட்டு நாம் ஏழை சிலருக்கு புதுச்சட்டைக்கு காசு கொடுக்காம என்ன தீபாவளி ...அப்பத்தான மனசு நிறைஞ்ச தீபாவளியா இருக்கும்..

எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..
நல்ல மெஸேஜ்..க்ரேட்.

TBCD said...

சமூகப் போராளி மை பிரண்டு...வாழ்க வாழ்க....

Unknown said...

உண்மையிலே இது உனக்கு ரியலி ஹேப்பி தீபாவளி தான்..நல்ல காரியம் செய்துருக்க வாழ்த்துக்கள்.. அந்த தம்பி குமரன் சாதிக்கவும் நம் வாழ்த்துக்கள் அவனோடு இருக்கடும் ...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

குசும்பன் said...

"இந்த மாதிரி பையனுங்களையெல்லாம் நம்பாதீங்கம்மா.. எங்கே இருந்து திருடிட்டு வந்தானோ தெரியலை. 10 வெள்ளின்னு சொல்றான்.. நீங்க வேற சும்மாவே காசு கொடுக்குறீங்க. அப்புறம் தம், தண்ணீன்னு குடிச்சு கூத்தடிக்காமல் என்ன பண்ணுவாங்க??"///


உதவி செய்யும் பொழுது இது போல அறிவுரை செய்யும் நண்பர்களிடம் முடிஞ்சா நீ செய், இல்லையா மூடிக்கிட்டு போ ஏன் அடுத்தவன் செய்வதையும் கெடுக்கிறாய் என்று சொல்வேன்.

நீங்கள் மிகவும் அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

மங்களூர் சிவா said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....

நல்ல பதிவு. இது மை ப்ரெண்ட் எழுதினதான்னு டவுட்டே வந்திடிச்சு

:-)))))))

நிலா said...

தீபாவளி வாழ்த்துக்கள கனத்த மனசோட சொல்ல வெச்சுட்டீங்க மை பிரெண்ட் அக்கா.வாழ்த்துக்கள்

நிலா said...

//சில சமயங்களில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். உடனே செய்துவிட வேண்டும். சில காரணங்களினால் தள்ளிப் போட வேண்டி வந்தால், என்னுடைய அனுபவத்தில் அது நடை பெறாது என அடித்துச் சொல்வேன். உதவி கேடு வருபவர்களுக்கு உதவி செய்வது என் முடிவு எடுப்பது ( தவறான முடிவாக இருந்தாலும்)//

சீனா சார் சொல்றது முழுக்க உண்மை,ரொம்பல்லாம் யோசிச்சா யாருகும் உதவியே பண்ண முடியாது, இடயில ஒன்னு ரெண்டு பேரு ஏமத்தினாலும் பராவாயில்லைதான்

நிலா said...

//வித்யா கலைவாணி said...
நல்ல பதிவுக்கா. நிறைய வளம் இருக்கிற உங்க நாட்ல இது மாதிரி பார்க்க கஷ்டமா தான் இருக்கு. மாதம் 190$ க்கு குறைவா சம்பாதிக்கிறவங்க மலேய மக்கள் 8.3 சதமும், இந்திய மக்கள் 2.9 சதமும், சீனர்கள் 0.6 இருக்காங்களாம்.//

வர வர நம்ம கலைவாணிக்கா லேடி விஜயகாந்தாவே மாறிகிட்டு இருக்காங்க,

ambi said...

தெளிவா அழகா சொல்லி இருக்க. வெரி குட். எதிர்காலத்துல குமரன் பெரிய ஆள் ஆகி, உன்னைய கார்ல வந்து பாக்க போறான் பாரு. :)))

@cheena, சீனா அண்ணே/அக்கா, நீங்க இவ்ளோ படிச்சு இருக்கீங்களா? எனக்கு கூட தல தீபாவளி செலவு இருக்கு. எங்க, டக்குனு என் அக்கவுண்டுக்கு லம்ப்பா ஒரு அம்வுண்ட் வெட்டி விடுங்க பார்ப்போம். :p

ambi said...

//வர வர நம்ம கலைவாணிக்கா லேடி விஜயகாந்தாவே மாறிகிட்டு இருக்காங்க,//

@nila, அந்த ஏய்!னு நாக்க கடிச்சுகிட்டு சொல்ற எபக்டோட இந்த வசனத்தை அக்கா சொல்லி இருந்தா எப்படி இருக்கும்? :p

வித்யா கலைவாணி said...

//ambi said...
//வர வர நம்ம கலைவாணிக்கா லேடி விஜயகாந்தாவே மாறிகிட்டு இருக்காங்க,// @nila, அந்த ஏய்!னு நாக்க கடிச்சுகிட்டு சொல்ற எபக்டோட இந்த வசனத்தை அக்கா சொல்லி இருந்தா எப்படி இருக்கும்? :p//
நிலா, அம்பி சார், இன்னைக்கு நானா கிடைச்சேன்.

Baby Pavan said...

அக்கா உங்க புது கட்சிக்கு கோ.ப.செ ஜாயின் பண்ண நான் ரெடி...

Baby Pavan said...

நீங்க எங்க போட்டி, பெரியகுளமா இல்ல விஜயகாந் மாதிரி வெற எங்காவதா...

வல்லிசிம்ஹன் said...

மை ஃப்ரண்ட்,
நெகிழ்ச்சியான பதிவு.
கை கொடுக்க நீளும் போது கொடுத்து விடவேண்டும்.
கொடுப்பதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காது.

நினைத்து ஆராய்ச்சி செய்து கொடுப்பது சில சமயம் நடை பெறாமலேயே [போய் விடும்.

நல் தீபாவளி வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

//சமூகப் போராளி மை பிரண்டு...வாழ்க வாழ்க....//
ரிப்பிட்டெய் ;)

தீபாவளி வாழ்த்துக்கள்

ரசிகன் said...

நல்ல சிந்தனை..
தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

நாமக்கல் சிபி said...

//வீண் விரயம் செய்வதாய் இருந்தால் அதை இவர்களுக்காக செலவழிக்கலாமே?//

ரிப்பீட்டேய்!

நல்ல சிந்தனை!

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

நல்ல சிந்தனையுடன் கூடிய வாழ்த்துக்கள் :)

நீங்கள் அந்த பொருளை வாங்கி இருக்க வேண்டும் என்பது என் நிலை.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

குமரன் (Kumaran) said...

தீபாவளித் திருநாளுக்குப் பொருத்தமான சிந்தனை. இதே போன்ற சில எண்ணங்களை நான் முன்பு எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

http://koodal1.blogspot.com/2005/10/blog-post_24.html

http://koodal1.blogspot.com/2005/11/58.html

அது சரி... இது என்ன கூத்து?

//அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் குரல் கேட்டது. அவருக்கு ஒரு 30-35 வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன். அந்த கடையில புத்தகம் வாங்க வந்தவர் போல. நான் அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்ததும் அவர்,

"இந்த மாதிரி பையனுங்களையெல்லாம் நம்பாதீங்கம்மா.. எங்கே இருந்து திருடிட்டு வந்தானோ தெரியலை. 10 வெள்ளின்னு சொல்றான்.. நீங்க வேற சும்மாவே காசு கொடுக்குறீங்க. அப்புறம் தம், தண்ணீன்னு குடிச்சு கூத்தடிக்காமல் என்ன பண்ணுவாங்க??"

அவரின் அந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் ஆத்திரம் கொடுத்தது. சிறுவனின் முகம் சுறுங்கியிருந்தது. அந்த பையனின் சந்தோஷத்தை திரும்ப கொண்டு வருவதுக்கும், இவன் அப்படிப்பட்ட சிறுவன் இல்லை என்று அந்த பெரியவரிடம் உணர்த்துவதுக்கும் திரும்ப அவனிடம் பேச்சு கொடுத்தேன்.
//

30 - 35 வயது என்றால் பெரியவரா? நல்லா இருங்க. -)

- குமரன் கதையைப் படிக்க வந்த ஒரு குமரப் 'பெரியவர்'

வவ்வால் said...

உங்க ஊரிலும் அப்படித்தானா, இங்கே எல்லாம் இப்படி பசங்க கேட்பது அதிகம்,அதில் பெரும்பாலோர் ஏமாற்றுக்காரர்கள் தான் என்பது வருத்தமான விஷயம். அநேகமாக அப்படி சொன்ன அந்த பெரியவர் சென்னையிலிருந்து சமிபமாக தான் அங்கு வந்திருப்பார் என நினைக்கிறேன்.

ஏதோ உங்க ஊர் பையன் நிசமாவே படிக்கும் ஆர்வத்தில் இருக்கிறான் போலும், நல்ல விஷயம் தான்.

இங்கே பல கல்லூரி மாணவர்கள்/மாணவிகள் போல இருப்பவர்கள் பொருட்களை எடுத்து வந்து பார்ட் டைம் வேலை செய்து சம்பாதிக்கிறேன் என்று விற்கிறார்கள்,சென்னைவாசிகள் அப்படி நிறைய பேரைப்பார்த்திருப்பார்கள். அப்பொருட்கள் மகா மட்டம், நானும் பிச்சை எடுக்காமலே விற்பனை செய்கிறார்களே ஊக்குவிப்போம் என வாங்கி பல முறை ஏமாந்து விட்டேன். ஒரு காஸ் அடுப்பு பற்ற வைக்கும் லைட்டர் 150 ரூபாய் என சொன்னார்கள் , சரி அந்த பையனுக்கு உதவியாக இருக்கட்டும் என வாங்கினேன் ,(வீட்டில் லைட்டர் இருக்கும் போது இது எதுக்கு, அதுவும் 50 rs, தான் இருக்கும் அதிக விலைன்னு திட்டு வாங்கியது தனிக்கதை) 4 ,5 நாட்களுக்கு பிறகு அது வேலை செய்யவே இல்லை :-((

இதை விட பேருந்துக்கு காசு இல்லை என்ரு சொல்லி ஒருத்தன் காசு வாங்கிக்கொண்டு நான் போன வைன் ஷாப்பிலே தண்ணி அடிக்க வந்தான் அது தான் கொடுமை!

சரி எல்லாம் காந்தி கணக்கு என்று விட்டாச்சு.

உதவி செய்யும் உங்கள் எண்ணத்தை தவறாக சொல்லவில்லை. ஆனால் எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை என் அனுபவத்திலிருந்து சொன்னேன்!

வவ்வால் said...

//குமரன் கதையைப் படிக்க வந்த ஒரு குமரப் 'பெரியவர்'//

ஹே..ஹே ...குமரன் நான் கூட உங்களைப்பற்றிய ஏதோ கதை என்று தான் வந்தேன் (ஏமாற்றிவிட்டார்கள்) ஆனாலும் ஒரு நல்ல "கருத்து"சொன்னதால் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டேன் :-))

இராம்/Raam said...

நல்ல பதிவு.... :)

MyFriend said...

@Baby Pavan:

//சூப்பர் அக்கா, நானும் உங்க மாதிரி தான்.... பாருங்க www.focpune.blogspot.com , I am also a volunteer.//

வாழ்த்துக்கள்டா தம்பி. நீ கொடுத்த லிங்கை தட்டிப்பார்க்கிறேன். ;-)

@கோபிநாத் said...

//அந்த சிறுவனோட வலியை உணர்ந்து எழுதியிருக்க...பாராட்டுக்கள் :)

நன்றிண்ணே. :-)

//இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவு தேவைதான்.

\\அதற்க்கு மேல் என்னாலையும் பேச முடியவில்லை.\\

பதிவை படிக்கும் அனைவருக்கும் இதே நிலை தான் வரும்!.//

இன்னொரு நன்றி. :-)

MyFriend said...

@ஜி:

//ரொம்ப நல்ல கருத்தும்மா... //

நீங்க சொன்னா சரிதான் சின்னண்ணே. :-)

//எல்லாருமே இவ்வளவுதானேன்னு செலவு பண்றத கொஞ்சமா கொறச்சி அதுல இருந்து கொடுத்தாலே எக்கச்சக்க பேர் நல்லா வாழ்வாங்க... //

சரியா சொன்னீங்க. :-)

@துளசி கோபால்:

//சொன்னது ரொம்பச் சரி.

பண்டிகைன்னு மட்டுமில்லை, அப்பப்ப மனசுலெ தோணும்போது உடனே உதவி செஞ்சுரணும்.

அப்புறமுன்னு நினைக்கக்கூடாது.//

ம்ம்.. சரியா சொன்னீங்க.. எப்போதும் இதே மனப்பான்மையில் இருக்கணும்ங்கிறதுதான் எனது ஆசையும் கூட. ;-)

MyFriend said...

@வித்யா கலைவாணி said...

//நல்ல பதிவுக்கா.//

யக்கா.. என்னை போய் அக்கான்னு கூப்பிடுறீங்களே? :-P

// நிறைய வளம் இருக்கிற உங்க நாட்ல இது மாதிரி பார்க்க கஷ்டமா தான் இருக்கு. //

இப்படிப்பட்ட சம்பவங்கள் ரொம்ப குறைவுதான்..

//மாதம் 190$ க்கு குறைவா சம்பாதிக்கிறவங்க மலேய மக்கள் 8.3 சதமும், இந்திய மக்கள் 2.9 சதமும், சீனர்கள் 0.6 இருக்காங்களாம். அரசும் பல உதவிகளைச் செய்தாம். ஆனா மக்களும் முயற்சி செய்யனும்ல. அப்புறம் 'எங்க மக்கள் முட்டாள்களோ, பலவீனர்களோ இல்லை'னு பிரதமர் சொல்ல வேண்டி வருது.//

எனக்கு ஒன்னு புரியல.. நீங்க பிறவிலேயே அறிவாளியா பிறந்தீங்களா? இல்ல நடுவுல வந்ததா இது? புள்ளி விவரத்துலேயும் மற்ற நாடை பற்றியும் நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்களே! எனக்கு கூட தெரியாத தகவல் இது.. ;)


// சரி அதை விடுங்க. இந்த நல்ல நேரத்தில எல்லாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள். :-)

MyFriend said...

@J K:

//நல்ல பதிவு.//

நன்றி JK.

//வலியை உணர்ந்து எழுதியுள்ளீர்கள்.

இது போல் இன்னும் எத்தனையோ சிறுவர்கள். அதே சமயம் அந்த பெரியவர் சொன்னது போலும் எத்தனையோ பேர்.//

ம்ம். உண்மைதான்.. :-(

MyFriend said...

@CVR:

//Good post!! :-)//

நன்றி விஞ்ஞானி. :-)

MyFriend said...

@cheena (சீனா):

சி//ல சமயங்களில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். உடனே செய்துவிட வேண்டும். சில காரணங்களினால் தள்ளிப் போட வேண்டி வந்தால், என்னுடைய அனுபவத்தில் அது நடை பெறாது என அடித்துச் சொல்வேன். உதவி கேடு வருபவர்களுக்கு உதவி செய்வது என் முடிவு எடுப்பது ( தவறான முடிவாக இருந்தாலும்) அந்தந்த சூழ்நிலைகளைப் பொறுத்தது. அதிகம் ஆராயக் கூடாது. அனுபவத்தைக் கொண்டு தகுதியை தீர்மானிக்க வேண்டும்.

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.//

நல்ல தகவல். அதிலும் இந்த திருக்குறள் அருமை. நன்றி சீனா. :-)

MyFriend said...

@வெட்டிப்பயல்:

//நல்ல பதிவு...//

நன்றி வெட்டிண்ணே. :-)

MyFriend said...

@delphine:

//its really painful to read...//

கேட்கும் காதுகளை விட பார்த்த கண்களுக்கு வலி அதிகம். :-(

MyFriend said...

@முத்துலெட்சுமி:

//மூன்று சுடிதார் எடுக்கும் அளவுக்கு ஒரு சுடிதார் ப்ராண்டட்க்ம்பெனியோடது..
மூன்று சட்டை எடுக்கும் அளவுக்கு ஒரு ப்ராண்டட் சர்ட் என்று எடுத்து விட்டு நாம் ஏழை சிலருக்கு புதுச்சட்டைக்கு காசு கொடுக்காம என்ன தீபாவளி ...அப்பத்தான மனசு நிறைஞ்ச தீபாவளியா இருக்கும்..//

நல்ல இல்லத்து அரசின்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க அக்கா. :-)

//எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..
நல்ல மெஸேஜ்..க்ரேட்.//

தீபாவளி வாழ்த்துக்கள் & நன்றி.

MyFriend said...

@TBCD:

//சமூகப் போராளி மை பிரண்டு...வாழ்க வாழ்க....//

ஏனைய்யா உங்களுக்கு இந்த கொலவெறி? :-P

MyFriend said...

@தேவ் | Dev:

//உண்மையிலே இது உனக்கு ரியலி ஹேப்பி தீபாவளி தான்..நல்ல காரியம் செய்துருக்க வாழ்த்துக்கள்.. அந்த தம்பி குமரன் சாதிக்கவும் நம் வாழ்த்துக்கள் அவனோடு இருக்கடும் ...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//

நன்றிண்ணே. & தீபாவளி வாழ்த்துக்கள்.

Divya said...

\\நான் இஞ்சினியராகணும்ங்கிறது அப்பாவோட ஆசை. அவரோட ஆசை நிறைவேற்றனும்ங்கிறது என்னுடைய லட்சியம்." அவனுடைய கண்ணில் சாதிக்கணும்ங்கிற வெறி தெரிந்தது.\\

உழைத்து முன்னேற நினைக்கும் குமரனின் லட்சியம் நிறைவேர இறைவனை வேண்டுகிறேன்!

சிந்திக்க வைத்த அருமையான பதிவு !

Santhosh said...

எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இங்க சென்னையில் கூட இந்த மாதிரி பசங்க ரொம்ப சாதாரணம். சிக்னலில் வந்து Buds,வண்டி துடைக்கும் துணி முதலியவற்றை விற்பார்கள். ஒரு முறை ஒருவனுக்கு எனக்கு வேண்டாம் காசை மட்டும் வைத்துக்கொள் அப்படின்னு குடுத்தேன், அதுக்கு அவன் சார் நான் பிச்சைக்காரன் இல்ல வேணா வாங்கிக்கோங்க இல்லாடி விடுங்க இது மாதிரி பிச்சை போட்டு என்னை கெடுத்துடாதிங்கன்னு சொல்லிட்டு போயிட்டான். எவ்வுளவு உண்மையான வார்த்தைகள் :)).. நம்மிள் எவ்வுளவு பேர் இது மாதிரியானவர்களை பார்க்கிறேன், முடிந்த வரையில் இவர்களுக்கு உதவி செய்யலாமே?

MyFriend said...

@குசும்பன் said...

//"இந்த மாதிரி பையனுங்களையெல்லாம் நம்பாதீங்கம்மா.. எங்கே இருந்து திருடிட்டு வந்தானோ தெரியலை. 10 வெள்ளின்னு சொல்றான்.. நீங்க வேற சும்மாவே காசு கொடுக்குறீங்க. அப்புறம் தம், தண்ணீன்னு குடிச்சு கூத்தடிக்காமல் என்ன பண்ணுவாங்க??"///


உதவி செய்யும் பொழுது இது போல அறிவுரை செய்யும் நண்பர்களிடம் முடிஞ்சா நீ செய், இல்லையா மூடிக்கிட்டு போ ஏன் அடுத்தவன் செய்வதையும் கெடுக்கிறாய் என்று சொல்வேன். //

ம்ம்.. சொல்லலாம்.. ஆனால், ஏன் நாம் அவர்களிடம் சண்டை போடணும் என்று விட்டுவிடுவேன் நான். :-)

//நீங்கள் மிகவும் அழகாக எழுதி இருக்கிறீர்கள்.//

நான் கூட நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்ல வர்றீங்கன்னு நெனச்சேன். :-P

MyFriend said...

@மங்களூர் சிவா:

//தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....//

உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் சிவா..

//நல்ல பதிவு. இது மை ப்ரெண்ட் எழுதினதான்னு டவுட்டே வந்திடிச்சு

:-)))))))//

நல்ல ஒரு கேள்விதான் / டவுட்டுதான். ஆனால் என்ன பண்றது? நீங்க நம்பிதான் ஆகணும். :-P

MyFriend said...

@வேதா said...

//பிறருக்கு கொடுப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சியே அடங்கியிருக்கிறது. நம்மால இயன்றதை செய்வோம் :)

தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனு :)//

சரியா சொன்னீங்க வேதா. தீபாவளி வாழ்த்துக்கள். :-)

MyFriend said...

@நிலா:

//தீபாவளி வாழ்த்துக்கள கனத்த மனசோட சொல்ல வெச்சுட்டீங்க மை பிரெண்ட் அக்கா.வாழ்த்துக்கள்//

பாரத்தை கொஞ்சம் சைட்ல இறக்கி வச்சிட்டு சொல்லும்மா வாழ்த்தை. ;-)

//சீனா சார் சொல்றது முழுக்க உண்மை,ரொம்பல்லாம் யோசிச்சா யாருகும் உதவியே பண்ண முடியாது, இடயில ஒன்னு ரெண்டு பேரு ஏமத்தினாலும் பராவாயில்லைதான்//

இந்த சின்ன வயசிலேயே என்னமா யோசிக்கிற.. நல்லா வருவேம்மா நீ. :-)

//
//வித்யா கலைவாணி said...
நல்ல பதிவுக்கா. நிறைய வளம் இருக்கிற உங்க நாட்ல இது மாதிரி பார்க்க கஷ்டமா தான் இருக்கு. மாதம் 190$ க்கு குறைவா சம்பாதிக்கிறவங்க மலேய மக்கள் 8.3 சதமும், இந்திய மக்கள் 2.9 சதமும், சீனர்கள் 0.6 இருக்காங்களாம்.//

வர வர நம்ம கலைவாணிக்கா லேடி விஜயகாந்தாவே மாறிகிட்டு இருக்காங்க,//

நிலாக்குட்டி, நான் நெனச்சேன். நீ சொலிட்டே. இனி வித்யாக்கா officially லேடி விஜயகாந்த் என அழைக்கப்படுவார்.. :-))

MyFriend said...

@ambi said...

//தெளிவா அழகா சொல்லி இருக்க. வெரி குட். எதிர்காலத்துல குமரன் பெரிய ஆள் ஆகி, உன்னைய கார்ல வந்து பாக்க போறான் பாரு. :)))
//

அண்ணே, நீங்க இன்னும் மாமியார் வீட்டுக்கு போகலை?

வாழ்த்துக்கு நன்றிண்ணே. :-)

//@cheena, சீனா அண்ணே/அக்கா, நீங்க இவ்ளோ படிச்சு இருக்கீங்களா? எனக்கு கூட தல தீபாவளி செலவு இருக்கு. எங்க, டக்குனு என் அக்கவுண்டுக்கு லம்ப்பா ஒரு அம்வுண்ட் வெட்டி விடுங்க பார்ப்போம். :p//

சீனா, அண்ணன் அக்கவுண்டுக்கு லம்ப்பா ஒரு அமௌண்ட் வெட்டும்போது, அப்படியே எனக்கும் கொஞ்சம் பார்த்து போட்டுக்கொடுங்க. :-)))

//@nila, அந்த ஏய்!னு நாக்க கடிச்சுகிட்டு சொல்ற எபக்டோட இந்த வசனத்தை அக்கா சொல்லி இருந்தா எப்படி இருக்கும்? :p//

அட.. இது அசல் லேடி விஜகாந்த்தான். :-P

MyFriend said...

@வித்யா கலைவாணி:

//நிலா, அம்பி சார், இன்னைக்கு நானா கிடைச்சேன்.//

லேடி விஜயகாந்த் ஆகிட்டீங்கல்லா. இனி எல்லா இடத்துலேயும் உங்க பேரு பட்டையை கிளப்பும் பாருங்க. :-P

MyFriend said...

@Baby Pavan:


//அக்கா உங்க புது கட்சிக்கு கோ.ப.செ ஜாயின் பண்ண நான் ரெடி...//

தம்பி என்ன கட்சிப்பா இது?

//Baby Pavan said...
நீங்க எங்க போட்டி, பெரியகுளமா இல்ல விஜயகாந் மாதிரி வெற எங்காவதா...
///

ஹாஹாஹா.. அப்படி போடுடா ராசா. :-))

MyFriend said...

@வல்லிசிம்ஹன்:

//மை ஃப்ரண்ட்,
நெகிழ்ச்சியான பதிவு.
கை கொடுக்க நீளும் போது கொடுத்து விடவேண்டும்.
கொடுப்பதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காது.//

வாங்க மேடம். நன்றி. :-)

//நினைத்து ஆராய்ச்சி செய்து கொடுப்பது சில சமயம் நடை பெறாமலேயே [போய் விடும்.//

ஹ்ம்ம்.. ரைட் ரைட்.. :-)

//நல் தீபாவளி வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும் என் உள்ளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள். :-)

MyFriend said...

@கானா பிரபா:

////சமூகப் போராளி மை பிரண்டு...வாழ்க வாழ்க....//
ரிப்பிட்டெய் ;)//

ஆஹா.. நீங்களுமா? :-P

//தீபாவளி வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா..

MyFriend said...

@ரசிகன்:

//நல்ல சிந்தனை..
தீபாவளி நல்வாழ்த்துக்கள்..//

நன்றி ரசிகா. :-)

MyFriend said...

@நாமக்கல் சிபி said...

////வீண் விரயம் செய்வதாய் இருந்தால் அதை இவர்களுக்காக செலவழிக்கலாமே?//

ரிப்பீட்டேய்!

நல்ல சிந்தனை!

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!//

நன்றி & வாழ்த்துக்கள் அண்ணா. :-)

MyFriend said...

@நாகை சிவா:

//நல்ல சிந்தனையுடன் கூடிய வாழ்த்துக்கள் :)//

நன்றி புலிண்ணே.

//நீங்கள் அந்த பொருளை வாங்கி இருக்க வேண்டும் என்பது என் நிலை.//

ஹ்ம்.. அந்த சம்பவத்துக்கு பிறகு நானும் அதேத்தான் நெனச்சேன். :-( குமரன் ஞாபகமா வச்சிருந்திருக்கலாம்.

//இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)//

ரிப்பீட்டே...

MyFriend said...

@குமரன் (Kumaran):

//தீபாவளித் திருநாளுக்குப் பொருத்தமான சிந்தனை. இதே போன்ற சில எண்ணங்களை நான் முன்பு எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

http://koodal1.blogspot.com/2005/10/blog-post_24.html

http://koodal1.blogspot.com/2005/11/58.html///

நன்றி அண்ணே.. கண்டிப்பா இந்த பதிவுகளை வந்து படிக்கிறேன்.:-)

//அது சரி... இது என்ன கூத்து?

//அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் குரல் கேட்டது. அவருக்கு ஒரு 30-35 வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன். அந்த கடையில புத்தகம் வாங்க வந்தவர் போல. நான் அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்ததும் அவர்,

"இந்த மாதிரி பையனுங்களையெல்லாம் நம்பாதீங்கம்மா.. எங்கே இருந்து திருடிட்டு வந்தானோ தெரியலை. 10 வெள்ளின்னு சொல்றான்.. நீங்க வேற சும்மாவே காசு கொடுக்குறீங்க. அப்புறம் தம், தண்ணீன்னு குடிச்சு கூத்தடிக்காமல் என்ன பண்ணுவாங்க??"

அவரின் அந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் ஆத்திரம் கொடுத்தது. சிறுவனின் முகம் சுறுங்கியிருந்தது. அந்த பையனின் சந்தோஷத்தை திரும்ப கொண்டு வருவதுக்கும், இவன் அப்படிப்பட்ட சிறுவன் இல்லை என்று அந்த பெரியவரிடம் உணர்த்துவதுக்கும் திரும்ப அவனிடம் பேச்சு கொடுத்தேன்.
//

30 - 35 வயது என்றால் பெரியவரா? நல்லா இருங்க. -)//

ஹீஹீ.. சின்ன குழந்தை எங்களுக்கெல்லாம் 30-35 வயதானவர்கள் பெரியவர்கள்தானே? ;-)

//- குமரன் கதையைப் படிக்க வந்த ஒரு குமரப் 'பெரியவர்'//

ஆஹா.. தெரியாமல் அண்ணான்னு கூப்பிட்டேனே! பரவாலை.. இப்போ மாத்திடுறேன். அங்கிள். :-))

MyFriend said...

@வவ்வால் said...

வாங்க வவ்வால். நீண்ட பின்னூட்டத்துக்கு முதலில் ஒரு நன்றி. :-)

//உதவி செய்யும் உங்கள் எண்ணத்தை தவறாக சொல்லவில்லை. ஆனால் எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை என் அனுபவத்திலிருந்து சொன்னேன்!//

எல்லா இடத்துலேயும் நல்லது கெட்டது ரெண்டுமே இருக்கே.. யிங் & யாங் போல. :-) நீங்க சொன்னதுபோல் சில சமயம் அது காந்தி கணக்குதான். :-))

//ஹே..ஹே ...குமரன் நான் கூட உங்களைப்பற்றிய ஏதோ கதை என்று தான் வந்தேன் (ஏமாற்றிவிட்டார்கள்) ஆனாலும் ஒரு நல்ல "கருத்து"சொன்னதால் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டேன் :-))//

ஹீஹீ.. குமரன் என்று தலைப்பில் எழுதியது இப்படியெல்லாம் வாசகர்களை கொண்டு வரும்ன்னு முன்னாடியே தெரியாமல் போச்சே. :-P

MyFriend said...

@இராம்/Raam:

//நல்ல பதிவு.... :)//

நன்றிண்ணே. :-)

MyFriend said...

@Divya:

//உழைத்து முன்னேற நினைக்கும் குமரனின் லட்சியம் நிறைவேர இறைவனை வேண்டுகிறேன்!

சிந்திக்க வைத்த அருமையான பதிவு !//

வாங்க திவ்யா.. நன்றீ திவ்யா.. தீபாவளி வாழ்த்துக்கள் திவ்யா.. (காதல் கொண்டேன்ல தனுஷ் பேசுற மாதிரியே இருக்குல்ல?? :-P)

MyFriend said...

@சந்தோஷ்:

//எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இங்க சென்னையில் கூட இந்த மாதிரி பசங்க ரொம்ப சாதாரணம். சிக்னலில் வந்து Buds,வண்டி துடைக்கும் துணி முதலியவற்றை விற்பார்கள். ஒரு முறை ஒருவனுக்கு எனக்கு வேண்டாம் காசை மட்டும் வைத்துக்கொள் அப்படின்னு குடுத்தேன், அதுக்கு அவன் சார் நான் பிச்சைக்காரன் இல்ல வேணா வாங்கிக்கோங்க இல்லாடி விடுங்க இது மாதிரி பிச்சை போட்டு என்னை கெடுத்துடாதிங்கன்னு சொல்லிட்டு போயிட்டான். எவ்வுளவு உண்மையான வார்த்தைகள் :)).. நம்மிள் எவ்வுளவு பேர் இது மாதிரியானவர்களை பார்க்கிறேன், முடிந்த வரையில் இவர்களுக்கு உதவி செய்யலாமே?
//

சந்தோஷ், நீங்க சொல்றது 100% சரி. ஒவ்வொருத்தரும் தன் பங்குக்கு கொஞ்சம் கொஞ்சம் செய்தல், அது நாளைடைவில பெரிஅ வெற்றியை கொண்டு வரும்.

தீபாவளி வாழ்த்துக்கள் சந்தோஷ். ;-)

cheena (சீனா) said...

என்னுடைய மறு மொழியிலிருக்கும் வரிகளைப் பாராட்டி எழுதிய நண்பர்களுக்கு நன்றி.

குமரன், தங்களுடைய இரண்டாவது சுட்டி வேலை செய்ய வில்லையே

அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்

குமரன் (Kumaran) said...

http://koodal1.blogspot.com/2005/11/58.html

இந்தச் சுட்டியைக் கட் & பேஸ்ட் செய்து பாருங்கள். படிக்க முடிகிறது. இயலவில்லை என்றால் சுட்டியை மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

Unknown said...

டீவி பொட்டிய தொறந்தா, இந்தக் காவி பார்ட்டிகளின் 'அருளுரை' தாங்கமுடியல.

இங்கே நீங்க ஒரு அருமையான, நெகிழ்ச்சியான பதிவ போட்டுருக்கீங்க.
அந்தக் குமரன் படித்து நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள்.

பண்டிகை மட்டும் இல்லாமல், முடிந்தவரையில் பிறருக்கு உதவுவது என்பது ரொம்ப நல்ல விசயம்தான். போகும்போது எல்லாத்தையும் அள்ளிகிட்டா போக போறோம்?

உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.