ரம்ஜான் மாதத்திலிருந்தே அதிகம் பேசப்படும் மூன்று தலைப்புகள்: சிறப்பாக கொண்டாடப்படும் ஹரி ராயா, சாலை விபத்து மற்றும் தேர்தல் எப்போது?. முதல் இரண்டு தலைப்புகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வந்தாலும், மூன்றாவது தலைப்பு இன்னும் அதிகமாக சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
நிறைய பேர் தேர்தல் கூடிய சீக்கிரம் நடக்கும் என்று கணித்திருக்கிறார்கள். சிலர் நவம்பர் ஆரம்பத்தில் என்றும் சிலர் ஏப்ரல் 2008-க்குள் என கணிக்கத்தொடங்கிவிட்டனர். அவர்களின் இந்த கணிப்புக்கு காரணம், தேர்தல் ஏப்ரல் 2008-க்கு பிறகு நடந்தால் அன்வார் இப்ராஹிம் போட்டியில் கலந்துக்கொள்ள முடியுமே!
தேர்தல் சீக்கிரமாய் நடக்க இது ஒரு காரணம் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்த எனக்கு இப்போது பல வேறு காரணங்களும் இதுக்கு காரணமாய் இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறது என்பது என் கருத்து.
அடுத்த தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு 21 மார்ச் 2009 வரை காலக்கெடு இருக்கின்றது. தேற்தல் என்பது 5 வருடத்துக்கு ஒரு முறை நடக்கும். அரசாங்கத்துக்கு அந்த 5 வருடமும் பவர் இருந்தாலும் 36 மாதங்களுக்கு பிறகு எப்போது வேண்டும்னாலும் பார்லிமெண்டை கலைக்கலாம். மக்களும் எப்போது அடுத்த தேர்தல் வரப்போகிறது என்று ஆரவம் காப்பார்கள். ஏனென்றால், வயதான மக்கள் பிரநிதி அடுத்த தேர்தலில் தேர்வு பெறவில்லையென்றாலும் தோற்றுப்போனாலும் அவருக்கு பென்சேன் (pencen) கிடைக்கும்.
பார்லிமெண்ட் கலைக்கப்படும் தேதியை அதிக ஆர்வத்துடன் காத்திருப்பவர்கள் கண்டிப்பாக எதிர் கட்சிகள்தான். அவர்களே பல கணிப்புகளை நடத்த தொடங்கிவிடுவார்கள். இவர்களைத் தவிர்த்து அரசியல் கண்காணிப்பாளர்களும் பல வகை கணிப்புகளை நடத்த தொடங்கிவிடுவார்கள். இந்த தடவையின் பார்லிமெண்ட் கலைப்பும் வெகு விரைவில் தேர்தலும் நடத்த பல காரணங்களை அடுக்கலாம்.
முதலாவதாக, அன்வார் இப்ராஹிம் தேர்தலில் கலந்துக்கொள்ள முடியாமல் இருக்க தடுக்க. காரணம் அவருடைய அளிக்கப்பட்ட அரசியல் தடா ஆர்டர் ஏப்ரல் 2008-உடன் முடிவுக்கு வருகிறது.
இரண்டாவது, பொருட்களின் விலையேற்றத்தினாலும், லஞ்சத்தினாலும், தப்பாக உபயோகிக்கப்பட்ட பவர்ன்னாலும் அரசாங்கத்தினால் தாங்கிக்கொள்ள முடியாத சில பிரச்சனைகள். மூன்றாவது, கடந்த பட்ஜெட் (budget) அறிவிப்பில் அரசாங்க ஊழியருக்கு சம்பள உயர்வு கொடுத்ததில் மக்கள் கண்டிப்பாக அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை. நான்காவது, நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் ரிங்கிட் மதிப்பெண் அதிகரித்ததும் மக்களின் மனதில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது பெட்ரோல் எண்ணை விலையேற்றம் ஒரு முக்கிய காரணம். தேர்தல் நடக்காத வரை பெட்ரோலின் விலையை அனைத்துலக விலைக்கு ஏற்றாற்ப்போல் ஏற்றமுடியாது. இது மக்களுக்கு அதிருப்தி கொண்டுவருமே!
இந்த காரணங்களினால் தேர்தல் அறிவிப்பு கூடிய சீக்கிரமாய் வெளியாகும் என எதிப்பார்க்கப்பட்டும் எதிர்க்கட்சி கணித்தபடி நவம்பரில் தேர்தல் நடக்காததும் சில குழப்பங்களை கொண்டு வந்துள்ளது. அடுத்து கணிக்கப்பட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் (ஜனவரி - மார்ச்) நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
என்னைப் பொருத்த வரையில் தேர்தலுக்கு அவசரப்படுத்துவது தேவையில்லாத ஒன்று. அடுத்த தேர்தலின் அவசரத்துக்கு மூலக்காரணம் அன்வார்தான் என்றால், தேர்தலை அவசரப்படுத்துவது சரியா? அன்வாரின் அரசியல் மறுப்பிரவேசத்தில் பலருக்கு இருக்கும் பயம் ஏனென்று எனக்கு இன்னமும் புரியவில்லை. இந்த வருடம் பங்காலான் பாசிர், கிளாந்தானிலும் ஈஜோக், சிலாங்கூரிலும் நடந்த தேர்தலுக்கு அந்த மக்கள் பிரநிதிக்காக பிரசாரம் செய்தது அன்வார்தனே? கிளாந்தான் மாநிலத்தையே கைக்குள் போட்டு ஆளும் PAS கட்சிக்கூட அந்த தேர்தலில் ஆபார தோல்வியையே சந்தித்தது என்பதுதானே மறைக்கமுடியாத உண்மை!
பாரிசான் நேஷனல் (ஆளும் கட்சி) தங்களுடைய கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக செய்திருக்கிறோம் என நினைத்தால் இப்படி தனி ஒரு நபருக்காக பயப்படத் தேவையில்லையே! 1999-ஆவது வருடத்தில் எதிர்க்கட்சிகள் அன்வாரின் இமேஜை பயன் படுத்தி ஓட்டு வாங்கினார்கள் என்பது நாமெல்லாம் அறிவோம். ஆனால் காலம் இப்போது நிறைய மாறியிருக்கிறது. ஜெயிலிலிருந்து விடுதலையாகி வந்த அன்வாரிடமே பல மாறுதல்கள் இருக்கிறதே!
கெ-அடிலான் கட்சி என்ற பெயரையே மக்கள் கெ-அடிலான் கட்சி என்ற பெயர் மாற்றம் செய்ததே ஒரு வியக்கத்தக்க செயல் ஆச்சே! ஆதலால்; அடுத்த தேர்தலில் போட்டியிட போறேனா இல்லையா என்பதை அன்வாரே முடிவு பண்ணட்டுமே! டெமோக்ராஸியில் வாழும் நாம் யாரையும் நாம் நினைத்தபடி ஆட்டி வைக்காமல், அவர்களுக்கு எது தேவையோ அதை செய்யட்டுமே!
ஒரு தேர்தலுக்கு செலவாகும் பணமும் மிக அதிகம். அதை இப்படி தேர்தலுக்காக செலவு செய்யாமல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஏதாவது இன்னும் செய்யாமல் இருந்திருந்தால் அதில் கவனத்தை செலுத்தி செய்து முடிப்பதுதான் சிறந்தது. இப்படி மக்களுக்காகவே செயல்ப்பட்டால் மக்கள் எதிர்க்கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்பே இல்லையே!
தேர்தல் ஆணைய குழுவும் இருக்கின்ற இந்த நேரங்களை பயன்படுத்தி தேவையான ஆரய்ச்சிகளை செய்து எது தேவை எது தேவையில்லை என்று முடிவு செய்து ஒரு நல்ல நியாயமான தேர்தலை வழங்க வேண்டும்.
இப்போதுள்ள சூழ்நிலையில் எதிர்கட்சிகள் அரசாங்கத்துக்கு ஒரு போட்டியாகவே கருத முடியாது. என் கண்ணோட்டத்தில் எதிர்க்கட்சிகள் இன்னும் ஒன்று சேரவில்லையே. அவர்களுக்குள்ளேயே பல கலப்புகள் நிகழ்ந்த படிதானே இருக்கின்றது.
ஆதலால், இந்த காலக்கட்டத்தை ஆளும் கட்சி சரியாக பயன்படுத்தி மக்க்ளுக்கு தன் சேவையை தொடர்வதுதான் சிறந்தது. மக்கள் பிரநிதிகள் தன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்து முடிக்க விடுங்கள். இதுவே அடுத்த தேர்தலில் சரியான தலைவரை தேர்ந்தெடுக்க மக்கள் யோசிக்கும் காலமாக அமையும்.
Monday, November 05, 2007
தேர்தல்: அவசரம் தேவையா?
Subscribe to:
Post Comments (Atom)
25 Comments:
//பாரிசான் நேஷனல் (ஆளும் கட்சி) தங்களுடைய கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக செய்திருக்கிறோம் என நினைத்தால் இப்படி தனி ஒரு நபருக்காக பயப்படத் தேவையில்லையே!//
நல்ல கண்ணோட்டம்.
ஒன்னுமெ புரியல....ஆனா வித்யா கலைவாணி அக்கா நல்ல கண்ணோட்டம்னு சொன்னதுக்காக நானும் ரிப்பிட்டெய் போட்டுக்கரென்.
அங்கும் அப்படி தான் போல..
//ஒரு தேர்தலுக்கு செலவாகும் பணமும் மிக அதிகம். அதை இப்படி தேர்தலுக்காக செலவு செய்யாமல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஏதாவது இன்னும் செய்யாமல் இருந்திருந்தால் அதில் கவனத்தை செலுத்தி செய்து முடிப்பதுதான் சிறந்தது. இப்படி மக்களுக்காகவே செயல்ப்பட்டால் மக்கள் எதிர்க்கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்பே இல்லையே!//
அதை அவங்க என்னிக்கு செய்து இருக்காங்க...
அரசியல் என்பது எல்லா இடத்திலும் இப்படி தான் இருக்கும் போல..;))
\\ஒரு தேர்தலுக்கு செலவாகும் பணமும் மிக அதிகம். அதை இப்படி தேர்தலுக்காக செலவு செய்யாமல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஏதாவது இன்னும் செய்யாமல் இருந்திருந்தால் அதில் கவனத்தை செலுத்தி செய்து முடிப்பதுதான் சிறந்தது. இப்படி மக்களுக்காகவே செயல்ப்பட்டால் மக்கள் எதிர்க்கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்பே இல்லையே!\\
இதை படிச்சவுடன் சிரிப்பு தான் வருது...ஏன்னா இங்கையும் அதே நிலை தான் ;)
ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசியல்ன்னு போட்டிருக்கலாமுங்க..
நானும் யாரு இந்த அன்வரு.. அது என்ன PSA கட்சி.. ஒரு வேள நாமதா ஒரு பத்து வருஷம் ஏதாவது கோமாவில இருந்துட்டோமோ?..இந்தியாவுல நமக்கு தெரியாம என்னன்னவோ நடக்குது ?இன்னெல்லாம் ரொம்ப கொழம்பிப்போயிட்டேன்.ஹிஹி...
Baby Pavanனுக்கு ஒரு ரிரிரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேடேடேடேடேடேடேடேடே.....
இந்த நீளம் போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா?..ஹா..ஹா..
ரசிகன்
\\ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசியல்ன்னு போட்டிருக்கலாமுங்க..
ரீப்பிட்டே!!!
//ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசியல்ன்னு போட்டிருக்கலாமுங்க..//
ரிப்பீட்டேய்!...
மகாதீருக்குப் பிறகு வந்த பதாவியால் மாகாண அரசியலையும், சீனர்களின் ஆதிக்கத்தையும், அரசுத்துறைகளில் லஞ்சங்களையும் தடுக்க இயலவில்லை. மேலும் மலேசிய ரிங்கிட் மதிப்பும் உலகச் சந்தையில் குறைந்து விட்டது. எனவே ஒரு ஆட்சி மாற்றம் தேவை தானே. ஆனாலும் அதற்கு அன்வர் தகுதியானவர் இல்லை. அவருடைய தற்போதைய தகுதி "என்னை பழி வாங்கி விட்டார்கள்" எனபது தான்.
வழுத்தவர் இருக்க இளைத்தவர் என்ன செய்ய முடியும். எப்பொழுதும் அரசாங்கத்தில் எதிர்கட்சிக்கு பலம் இருக்க வேண்டும் என்றால் குறைத்தது 25% ஆட்சியில் இருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டிலோ 15% மட்டுமே இருக்கிறார்கள். சுதந்திர காலத்திலிருந்து ஒரு எதிர்கட்சியும் ஆட்சிக்கு வரவில்லை. தொடந்து ஜெய்பதற்கு இந்த அஸ்திவாரம் போதாதா? பாரிசான் தற்சமயம் 85% ஆட்சியில் உள்ளது. அதிர்வரும் தேர்தலில் இந்த சதவீதம் சற்று குறையலாம். ஆனால் அன்வார் இபுராகிம் தேர்தலில் நின்றாலும் நிற்காவிட்டாலும் வெற்றி என்னவோ பாரிசானுக்குதான். * படாவி பிரதமர் ஆன உடன் அன்வார் விடுதலை செய்யபட்டார். அவர் அப்துல்லாவை எந்த அளவிற்கு எதிர்பார் என்பது சந்தேகமே. எது எப்படியானாலும்... எதிர்வரும் தேர்தலில் எதிர்கட்சிகளின் கை சற்று ஓங்கினால் சில திருப்பங்களை எதிர்பார்கலாம். மற்றபடி மனதிற்குள் என்போதும் போல் சிரித்துக் கொண்டிருக்க வேண்டிதான். நண்பர்கள் அனைவருக்கும் இன்ப தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்பா ரசிகா!
முஸ்தபா! முஸ்தபா!
டோண்ட் வொர்ரி முஸ்தபா! பாடுல்ல யாரு அந்த முஸ்தபா?னு கேட்டு இருக்கியா?
சரோஜ்ஜா சாமான் நிக்காலோ! வுல யாரு அந்த சரோஜ்ஜா?
என்ன சாமான்?னு தான் கேட்டு இருக்கியா?
ஏதோ என் அருமை தங்கை கஷ்டப்பட்டு மொக்கை போடாம உருப்படியா ஒன்னு டிரை பண்ணி இருக்கா.
பதிவு போட்ட அனுபவிக்கனும். ஆராயகூடாது. :p
இலவசம் எல்லாம் அங்க கிடையாதா? என்னா ஊரு போங்க:)
@வித்யா கலைவாணி:
//நல்ல கண்ணோட்டம்.//
நன்றியக்கா. :-)
//மகாதீருக்குப் பிறகு வந்த பதாவியால் மாகாண அரசியலையும், சீனர்களின் ஆதிக்கத்தையும், அரசுத்துறைகளில் லஞ்சங்களையும் தடுக்க இயலவில்லை. மேலும் மலேசிய ரிங்கிட் மதிப்பும் உலகச் சந்தையில் குறைந்து விட்டது. எனவே ஒரு ஆட்சி மாற்றம் தேவை தானே. ஆனாலும் அதற்கு அன்வர் தகுதியானவர் இல்லை. அவருடைய தற்போதைய தகுதி "என்னை பழி வாங்கி விட்டார்கள்" எனபது தான்.//
யக்கா.. நீங்க உண்மையிலேயே எந்த ஊருலதான் இருக்கீங்க? இவ்வளோ GK தெரிஞ்சுவச்சிருக்கீங்களே.. க்ரேட். ;-)
@Baby Pavan:
//ஒன்னுமெ புரியல....ஆனா வித்யா கலைவாணி அக்கா நல்ல கண்ணோட்டம்னு சொன்னதுக்காக நானும் ரிப்பிட்டெய் போட்டுக்கரென்.//
பவன் தம்பி.. நல்லா ரிப்பீட்டே போடுற. ;-)
@நாகை சிவா:
//அங்கும் அப்படி தான் போல..//
எல்லா இடத்துலேயும் இப்படித்தான் போல. ;-)
//அதை அவங்க என்னிக்கு செய்து இருக்காங்க...//
:-P
@கோபிநாத் said...
//இதை படிச்சவுடன் சிரிப்பு தான் வருது...ஏன்னா இங்கையும் அதே நிலை தான் ;)//
அண்ணே, ஷார்ஜாவிலும் இப்படிதானா?
@ரசிகன்:
//ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசியல்ன்னு போட்டிருக்கலாமுங்க..
நானும் யாரு இந்த அன்வரு.. அது என்ன PSA கட்சி.. ஒரு வேள நாமதா ஒரு பத்து வருஷம் ஏதாவது கோமாவில இருந்துட்டோமோ?..இந்தியாவுல நமக்கு தெரியாம என்னன்னவோ நடக்குது ?இன்னெல்லாம் ரொம்ப கொழம்பிப்போயிட்டேன்.ஹிஹி...//
ஆமா.. அதுவும் ரைட்டுதான்.. ஆனால், உங்களுக்கு புரியாத மாதிரி எழுதணும்ங்கிறதுதானே என் டார்கேட். :-P
//Baby Pavanனுக்கு ஒரு ரிரிரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேடேடேடேடேடேடேடேடே.....
இந்த நீளம் போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா?..ஹா..ஹா..//
பத்தாது.. இன்னும் கொஞ்சம் நீட்டா... ;-)
@Divya:
//\\ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசியல்ன்னு போட்டிருக்கலாமுங்க..
ரீப்பிட்டே!!!//
அம்மணி, எங்களோட நல்லாவே ஐக்கியமாயிட்டீங்க.. ;-) நல்லாவே ரிப்பீட்டே போடுறீங்க. வெல்கம். :-)
@J K:
//
//ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசியல்ன்னு போட்டிருக்கலாமுங்க..//
ரிப்பீட்டேய்!...//
ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டே... :-)
@P.A.விக்னேஷ்வரன்:
//வழுத்தவர் இருக்க இளைத்தவர் என்ன செய்ய முடியும். எப்பொழுதும் அரசாங்கத்தில் எதிர்கட்சிக்கு பலம் இருக்க வேண்டும் என்றால் குறைத்தது 25% ஆட்சியில் இருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டிலோ 15% மட்டுமே இருக்கிறார்கள். சுதந்திர காலத்திலிருந்து ஒரு எதிர்கட்சியும் ஆட்சிக்கு வரவில்லை. தொடந்து ஜெய்பதற்கு இந்த அஸ்திவாரம் போதாதா? பாரிசான் தற்சமயம் 85% ஆட்சியில் உள்ளது. அதிர்வரும் தேர்தலில் இந்த சதவீதம் சற்று குறையலாம். ஆனால் அன்வார் இபுராகிம் தேர்தலில் நின்றாலும் நிற்காவிட்டாலும் வெற்றி என்னவோ பாரிசானுக்குதான். * படாவி பிரதமர் ஆன உடன் அன்வார் விடுதலை செய்யபட்டார். அவர் அப்துல்லாவை எந்த அளவிற்கு எதிர்பார் என்பது சந்தேகமே. எது எப்படியானாலும்... எதிர்வரும் தேர்தலில் எதிர்கட்சிகளின் கை சற்று ஓங்கினால் சில திருப்பங்களை எதிர்பார்கலாம். மற்றபடி மனதிற்குள் என்போதும் போல் சிரித்துக் கொண்டிருக்க வேண்டிதான். நண்பர்கள் அனைவருக்கும் இன்ப தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//
யப்பா விக்னேஷா.. உண்மையாளுமே மலேசியாவைப்பற்றி எழுத நீதான்ப்பா சிறந்த ஆள். எப்படி சூப்பரா மூச்சுவிடாமல் சொல்லியிருக்கீங்க. :-)
ஆமாம்.. படாவி அன்வாரின் கேஸ் மேலே ஒரு அக்கறையும் எடுத்துக்க வில்லை. இதுவே கடந்த தேர்தலில் பாரிசான் நேஷினலுக்கு எதிர்ப்பார்த்ததை விட அதிக ஓட்டுக்கள் கிடைக்க காரணமாக கூட இருந்தது. நம்ப முடியாது. திரும்ப BNல அன்வாரை சேர்த்தாலும் சேர்க்கலாம். :-P
@ambi:
//என்பா ரசிகா!
முஸ்தபா! முஸ்தபா!
டோண்ட் வொர்ரி முஸ்தபா! பாடுல்ல யாரு அந்த முஸ்தபா?னு கேட்டு இருக்கியா?
சரோஜ்ஜா சாமான் நிக்காலோ! வுல யாரு அந்த சரோஜ்ஜா?
என்ன சாமான்?னு தான் கேட்டு இருக்கியா?
ஏதோ என் அருமை தங்கை கஷ்டப்பட்டு மொக்கை போடாம உருப்படியா ஒன்னு டிரை பண்ணி இருக்கா.
பதிவு போட்ட அனுபவிக்கனும். ஆராயகூடாது. :p//
அண்ணே.. ஜூப்பர்ண்ணே.. எப்படின்னே இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.. தங்கச்சிக்கு சப்போர்ட்டா இருக்கும் அண்ணன் அம்பிக்கு பேங்கலூர்ல ஒரு சிலை வைப்போமாக. :-)
@குசும்பன்:
//இலவசம் எல்லாம் அங்க கிடையாதா? என்னா ஊரு போங்க:)//
கொத்தனாரை எல்லாம் கூப்பிடுறீங்களே குசும்பா. :-)))
Hello dear,
Vandhuten naan :)
Nice post...
Nalave ezhudhreenga...
Cheers,
Marutham.
Deepavali nal vaazhthukkal
//யக்கா.. நீங்க உண்மையிலேயே எந்த ஊருலதான் இருக்கீங்க? இவ்வளோ GK தெரிஞ்சுவச்சிருக்கீங்களே.. க்ரேட். ;-)//
ஆமா என்ன சொன்னீங்க
அப்ரா & .:: மை ஃபிரண்ட் ::. அக்கா நம்ம குட்டிஸ் பதிவுல ஒரு பதிவு பொடுங்க அப்ப தான் http://www.thamizmanam.com/ ல செர்க்க முடியும்...
Diwali Wishes solla vandhen,
ebba...onume puriyala. Arasiyal pathi yagapatta matters eduthu vitrukeenga. nadathunga.
happy diwali 2 u!
_ k mami
Post a Comment